Showing posts with label வீடியோக்கள்/Videos. Show all posts
Showing posts with label வீடியோக்கள்/Videos. Show all posts

Saturday, August 14, 2010

நாக்ருதனா திரன்னனா நா


இளையராஜா, தனது கர்நாடக சங்கீத குருவான டி.வி.கோபாலகிருஷ்ணனை டிக் டிக் டிக் திரைப்படத்தில் கதையின் மூன்று நாயகிகளையும் ஒரே காட்சியில் நீச்சலுடைகளில் மிதக்கவிட்ட இது ஒரு நிலாக்காலம் பாடலின் இடையில் வரும் மாதவியின் நாட்டியத்திற்கு நாக்ருதனா திரன்னன வரிகளைப் பாடச் சொல்லி இருக்கும்பொழுது , அது பிற்காலத்தில் ஜொள்ளுக்கான இசையாக மாறி விடும் என நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரலை பிற்பாடு அந்தி மழை பொழிகிறது இடையினில் பயன்படுத்தி இருப்பார்

அமெரிக்க ஜனாதிபதியின் நெஞ்சினில் பாய்ந்த குண்டை எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் பிற்பாடு பாதுகாப்பு கருவிகளில் முக்கியமான ஒன்றாக மாறியதைப்போல நாக்ருதனா மெட்டும் எதிர்பாராத விதத்தில் பிரபல்யம் அடைந்தது.




80 களின் மத்தியில் பக்யராஜின் (டிக்டிக்டிக் படத்திற்கு திரைக்கதை பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது) இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் , நாயகன் வேறு பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம், இளையராஜா இந்த மெட்டை பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் மச்சமுள்ள ஆளுட பாடலின் இடையிலும் சேர்த்து இருப்பார்.





கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவரான வைபவ் பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம் வரும் இசைக்கோர்வையாக மீள்பதிவு செய்யப்பட்டு இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைபேசி அழைப்பு மணியாக ஆகிவிட்டது.




கடைசியாக ஆன்மீகக் கதவுகளைத் திறந்து கடலைக் காற்றாய் இந்த 30 வினாடிகள் ஓடும் நாக்ருதனா திரன்னனா நா வரிகள் நான்காவது முறை நக்கீரனின் பார்வையால் ஜென்ம சாபலயம் அடைந்தது.

Monday, July 06, 2009

உரிமை இழந்தோம் ....உடமையும் இழந்தோம் ... உணர்வை இழக்கலாமா !!!



சோர்ந்து போய் இருக்கும் தருணங்களில் இந்தப்பாடலை ஒருமுறைக் கேட்டுப்பாருங்கள். சோர்வு , வருத்தம், கவலை, வேதனை என எல்லாம் விலகி உத்வேகம் வரும். P.B சீனிவாஸ் மற்றும் ஆபாவாணன் குழுவினருடன் பாட மனோஜ் கியானின் இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் ஊமை விழிகள் என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களில் முக்கியமான ஒன்று என சொல்லலாம்.

இந்த அருமையானப் பாடலை எழுதியவர் ஆபாவாணன்.

Saturday, May 16, 2009

வாழ்த்துகள் ஜே.கே.ரித்தீஷ்

திரைப்பட நடிகர் ஜே.கே.ரித்தீஷ் இராமநாதபுரம் தொகுதியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Friday, December 21, 2007

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற - கோங்குர தோட்ட காடா - மெட்டு ஒன்று பாடற்கள் இரண்டு- வீடியோ

2004 ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், பாடலைப் பாடியிருப்பவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மாலதி.
அமர்க்களமான இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பவர்கள் ரவிதேஜா மற்றும் புன்னகை இளவரசி சினேகா.



இதே மெட்டில் அமைந்த பாடல், தமிழிலும் அதே இசைக்கூட்டணியில் மாயாவி படத்தில் வெளி வந்தது. தமிழில் இந்த மெட்டுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா.




நன்றி : www.youtube.com

Wednesday, November 21, 2007

அணில் கும்ப்ளேவும் பெரோஷா கோட்லா மைதானமும்

அணில் கும்ப்ளே தனக்கு பிடித்தமான மைதானமான தில்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார். 1999 ஆம் ஆண்டு இங்கு தான் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப்ளே இங்கு ஐந்து டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி மொத்தம் 48 விக்கெட்டுகளை
வீழ்த்தியுள்ளார். இந்த ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தரப் போட்டி ஒன்றில் அணில்கும்ப்ளே இங்கு சதம் ஒன்று அடித்துள்ளது மேலும் ஒரு சுவாரசியமான விசயம்.

அணில் கும்ப்ளேவின் பத்துக்குப் பத்து வீடியோ இங்கே


இந்தியா இங்கு மொத்தம் 28 ஆட்டங்களில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1952 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் ஆன டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசிவிக்கெட்டிற்கு இணையாக ஹெமு அதிகாரி மற்றும் குலாம் அகமது ஆடி எடுத்த 109 ரன்கள் இன்றளவும் இந்திய சாதனையாகும்.

விபரமான ஸ்கோர் கார்டுக்கு இங்கு சொடுக்கவும்

இங்கு தான் சுனில் கவாஸ்கர் டான் பிராட் மேனின் அதிக சதங்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.

1883 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு வெலிங்டன் பெவிலியன் என அழைக்கப்பட்ட இந்த மைதானம் துக்ளக் வம்சாவளி அரசரான பெரோஷா பெயரைக் கொண்டு தற்போது அழைக்கப்படுகிறது. டெஸ்ட் ஆட்டங்களில் இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளனர். இந்த முறையும் புது கேப்டன் தலைமையில் சிறப்பாக ஆடுவார்கள் என வாழ்த்துவோம்.

Tuesday, November 20, 2007

மௌனராகம் - கார்த்திக் - ரேவதி காட்சிகள்

தொலைக்காட்சி ஓடைகளில் மௌனராகம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும்பொழுதும் கார்த்திக்-ரேவதி வரும் காட்சிகளைப் பார்க்காமல் விடுவதே இல்லை. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை.



ஒரு காட்சியில் மணிரத்னம் "continuity" யைத் தவற விட்டு இருப்பார். ரேவதி பயணம் செய்யும் பேருந்தை தொடர்ந்து வரும் கார்த்திக் லேசாக தாடி வைத்திருப்பார். ஆனால் பேருந்துக்குள் வரும்பொழுது முழுக்க சவரம் செய்யப்பட்டு பளபளப்பான முகத்தோடு வருவார். Frame by frame ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து இருந்து இருக்கலாம்.

கடலைக் கொறித்துக்கொண்டே கார்த்திக் பின்னோக்கி நடந்து வரும் காட்சி, அதே வசனங்களுடன் மணிரத்னத்தின் முதல்படமான அனில்கபூர் நடித்த பல்லவி அனுபல்லவியிலும் இடம்பெற்றிருக்கும். (கன்னடப் படமான இது, பின்பு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது)

கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமவுலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை.


படத்தை யுடியூப் தளத்தில் வலையேற்றி வைத்திருந்த பால்ஸ்055 க்கு நன்றி

Thursday, November 01, 2007

புண்ய பூமி நா தேசம் - தெலுங்கு பாடல், என்.டி.ஆர் கட்டபொம்மனாக

என்.டி.ராமாராவ் தனது உணர்ச்சிப்பிரவாகமான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். தமிழகத்தில் கிருஷணர் , ராமர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இவர்தான்.


மேஜர் சந்திரகாந்த் என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. இதில் ராமாராவ் வரலாற்று நாயகர்களாக தோன்றி இருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வருகிறார்.
வரி வட்டி வசனமும் பாடலின் இடையில் வரும்.

இந்த படம் ராமாராவின் கடைசிபடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலுக்கு இசை : கீரவாணி(நம்ம ஊரில் மரகதமணி)

நன்றி: நந்தமூரி ரசிகர்கள் இணையதளம்

Saturday, October 27, 2007

பறவையே எங்கு இருக்கிறாய் - "கற்றது தமிழ்" படத்தில் இருந்து ஒரு பாடற்காட்சி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.முழுபடத்தின் தரத்தை இந்த ஒருபாடலின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் வகையில், காட்சியமைப்பு , நாயகன் நாயகியின் உண்ர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்கள்,அதை படம் பிடித்தவிதம் இசையமைப்பு, இசைக்கான வரிகள் இவையனைத்தையும் அருமையாக திரையில் கொடுத்தமைக்காக "கற்றது தமிழ்" படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்



பாடலை யூடியூப் தளத்தில் ஏற்றி வைத்திருந்த "இசைத்திரு" விற்கு நன்றி

Thursday, October 25, 2007

அசாருதீன் - டெண்டுல்கர் ஜோடி ஆட்டம், கேப்டவுன் டெஸ்ட் , வீடியோ

முகமது அசாருதீன் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்தியாவை மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் வழிநடத்தி சென்றவர். இவரின் ஆட்டத்தை காண்பதே அந்தக்கால கட்டங்களில் அலாதியான அனுபவம். தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக கேப்டவுனில் இவர் ஆடிய அசூர ஆட்டத்தை இந்த வீடியோவில் காணலாம். 58/5 என்ற நிலையில் இருந்து இந்திய அணியை இவரும் டெண்டுல்கரும் மீட்டெடுப்பர். 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அசார் மின்னல் வேகத்தில் ரன்கள் குவித்திருப்பார். குலுஸ்னர் மேல் தனி பாசம் வைத்து அவரை சிறப்பாகக் கவனித்து இருப்பார். இதே டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் தொடா கனேஷின் பந்துகளில் தொடர்ச்சியாக குலுஸ்னர் 3 பவுண்டரிகள் அடித்து சதமடித்து இருப்பார். அவர் மூன்று அடித்தால் நாங்க ஐந்தாக அடிப்போம் என்று கவாஸ்கரின் வர்ணனையை கவனிக்கலாம்.



பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அசார் ஆட்டமிழந்த போது , டெண்டுல்கர் தனது சிறப்பான ஆட்டத்தால் சதமும் அடித்து பாலோஆனில் இருந்து மீட்டெடுப்பார். 26 பவுண்டரிகளுடன் டெண்டுல்கர் 169 ரன் எடுத்து ஒரு அருமையான கேட்சினால் ஆட்டமிழக்கப்பட்டிருப்பார்.



டெண்டுல்கரின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம்.
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்ற போதும் அசாருதீன் - டெண்டுல்கரின் இந்த இணையாட்டம் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கும்

நன்றி : www.youtube.com

Saturday, October 20, 2007

ஜாகிர்கான், முரளிகார்த்திக் வெற்றி பார்ட்னர்ஷிப், - வீடியோ

வெற்றிக்கு இன்னும் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ,பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிகார்த்திக் ஜாகிர்கானுடன் இணைந்து இந்தியாவை ஆறுதல் வெற்றி அடைய செய்தார்.



இவர்கள் ஆடிய ஆட்டம் சில வருடங்களுக்கு முன்னர் பெங்களூரில் ஜவஹல் ஸ்ரீநாத்தும் அனில் கும்ப்ளே 9வது விக்கெட்டுக்கு இதேபோல் 50 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற செய்ததை நினைவுப் படுத்தியது.



பிரெட் லீ ஜாகிர் கானை வம்பிழுக்க , ஜாகிர் கான் அடுத்த பந்தை தேர்ந்த பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு செலுத்தும் காட்சியும் உண்டு.



வர்ணனையாளார் சிவராமகிருஷ்ணன் , நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் , என்று அந்த பெங்களூர் ஆட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.



வெற்றிகான ரன்களை அடிக்கும் வீடியோ கீழே



நன்றி : http://www.crickethighlights.info/

Wednesday, October 17, 2007

மும்பை வான்கடே மைதானமும் , முரளி கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய அணியும்


முரளி கார்த்திக் , ரயில்வே அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடிய இவர், 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக முதன்முறையாக பன்னாட்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோது, அவருக்கு இடது கைசுழற்பந்து பந்து வீச்சாளர்களின் இருந்த மேல் நம்பிக்கையின்மையினால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் சோர்வடையாமல் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணம் 2004 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வந்தது, முதற் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட்டுக்களயும் வீழ்த்தி இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட வீடியோ இதோ



இன்று, மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்துவிட்டார் முரளி கார்த்திக். இந்த முறை ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி ஒருநாள்போட்டியில் ஆறுதல் வெற்றி அடையக் காரணமாய் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுவிட்டார். பாராட்டுக்கள் முரளி கார்த்திக்


Monday, October 15, 2007

கன்னடம் - தமிழ் - ஹிந்தி - இளையராஜா

இசையை எந்த மொழி வடிவில் கேட்டாலும் இதயத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். அதிலும் இளையராஜாவின் இசையை சொல்லவே வேண்டாம். இந்த குறிப்பிட்ட இசை வடிவமைப்பு மூன்று மொழிகளில் வெளிவந்து மூன்றிலும் சக்கைப் போடு போட்டது.

1980 ஆம் ஆண்டு வெளிவந்த "கீதா" என்ற கன்னடப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த "ஜோதியளி" எனத்தொடங்கும் இந்த பாடல் கன்னட ரசிகர்களால் பெரிதும் இன்றும் விரும்பிக் கேட்கபடும் பாடல்.




எஸ்.பி.பி ஜானகி இருவரின் குரலுக்கு வாயசைத்து நடித்து இருப்பவர்கள் சங்கர்நாக், அக்ஷதாராவ்.

1984 ஆம் ஆண்டு, மணிவண்னன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்திற்கு இளையராஜா இதே மெட்டைப் பயன்படுத்தி விழியிலே எனத்தொடங்கும் பாடலை அமைத்திருப்பார். அதே எஸ்.பி.பி ஜானகி குரலுக்கு வாயசைத்து நடித்தவர்கள் மோகன் நளினி.





முதன் முறையாக இசையமைத்து 27 வருடங்களுக்குப் பிறகு இதே பாடல், பல விளம்பரப் படங்களை இயக்கிப் புகழ் பெற்ற பாலகிருஷணன் என்ற பால்கி இயக்கிய சீனிகம் என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் , தபு நடிக்க ஸ்ரேயா கோஷலின் குரலில் மீண்டும் இசை ரசிகர்களின் செவிகளில் தவழத்தொடங்கியது. மெட்டை மாற்றாமல் ஆனால் புதிய பின்னணியை சேர்த்து இளையராஜா இந்தப்பாடலை அட்டகாசப்படுத்தி இருப்பார்.



"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!!" என ஒரு பாடலில் இளையராஜா வருவார். பழைய ராகங்களை அதன் சுவை மாறாமல் மறு அவதாரம் தருவதும் பெரிய விசயமே. இளையராஜாவின் காலத்தில் நாமும் இருப்பது நமக்குப் பெருமையே

தமிழ் கன்னட வீடியோக்களை வலையேற்றி வைத்திருந்த vasanthfriend அவர்களுக்கு நன்றி

ஹிந்திப்பாடலுக்கா veerpradeep அவர்களுக்கு நன்றி

Saturday, October 06, 2007

அஹங்காரே நகரே , அட்டகாசமான சிங்களப்பாடல்



பாடற்தொகுப்பு : திவ்யபுரா(All my life)
பாடல் அமைப்பு ; ரணிது லங்கேஜ் , இராஜ் வீரரத்னே

2004 ஆம் ஆண்டில் வெளிவந்து, இலங்கையில் இளம் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்ட இந்த பாடல் பிபிசி யின் அதிகாரப்பூர்வ ஆசிய இசைப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டது. எம்.டிவி இந்தியா , வீ சேனல், ஜீ மியுசிக் சேனல்களின் வாயிலாக இந்தியாவில் ஒளிபரப்பு செய்யபட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றது, தமிழ் இடம்பெறும் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் , எஸ்,எஸ் மியுசிக் சேனலில் இந்த பாடலைப் பார்த்து இருக்கலாம்.
இந்த பாடல் தான் ரனிது மற்றும் இராஜ் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இசை மொழிகளைக் கடந்தது. அதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்

நன்றி : www.youtube.com மற்றும் இந்தப்பாடலை வலை ஏற்றி வைத்து இருந்த kumaranworld

Saturday, September 29, 2007

கருப்பின் அழகு - ஸ்வப்னகூடு (மலையாளம்)

வழக்கமான மலையாளத் திரைப்படங்களில் வரும் பாடல்களைக் காட்டிலும் இந்த பாடல் வித்தியாசமானது. மென்மையாக, அதே சமயத்தில் வேகமான தாளத்துடன் அமைந்துள்ள இப்பாடல் "ஸ்வப்னக்கூடு" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்விராஜ், குஞ்சாக்கோபோபன்,ஜெயசூரியா , மீராஜாஸ்மின் மற்றும் பாவனா நடித்துள்ள இப்படத்திற்கு இசை மோகன் சிதாரா. படத்தை இயக்கியவர் கமல்.



இந்தப் பாடலில் நடித்துள்ள நடிகர்களில் குஞ்சாக்கோபோபனைத் தவிர மற்றவர்கள் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமனாவர்களே .. குஞ்சாக்கோபோபன் காதலுக்கு மரியாதை மலையாள மூலத்தில் நடித்தவர்.

Wednesday, September 26, 2007

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் - வட்டத்துக்குள் சதுரம்

இளையராஜாவின் இசையில் எழுபதுகளில் வெளியான "வட்டத்துக்குள் சதுரம்" என்ற படத்திலிருந்து இந்த பாடல் நட்பினை போற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் சிறந்த பாடல்களுள் இதையும் ஒன்றாகச் சொல்லலாம்


சிறு வயது சுமித்ரா , லதாவாக வரும் அந்த இரு குட்டி பெண்களும் அழகாக நடித்து இருப்பனர்.ஒரு குழந்தை "சிந்து பைரவியில் " நடித்த ராசி என்று நினனக்கிறேன். இன்னொருவர் "சுவரில்லாத சித்திரங்களில்" நடித்த சுமதி யா?!! சரியாக தெரியவில்லை.
ஆமாம் இந்த பாடலை பாடியவர்கள் யார்? யாரேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்


நன்றி : www.youtube.com

Tuesday, September 25, 2007

மடை திறந்து பாடல் - நிழல்கள் , அசலும் நகலும்

அசல்




நகல்



வெளிகண்ட நாதரின் நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்! படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, September 24, 2007

மீண்டும் மிசாபுல் ஹக் பாகிஸ்தானின் "குளூஸ்னர்" ஆனார்

T20 சாம்பியன்ஸிப் முதல் சுற்றில் இந்தியாவுடன் ஆன ஆட்டத்தில் , பாகிஸ்தான் வெற்றி பெற 15 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய கடினமான நிலையில் இருந்து மீட்டெடுத்து 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ,

கடைசி பந்தில் மிசாபுல் ஹக் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.


இறுதி போட்டியில் , 24 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையிலிருந்து மீண்டும் ஒரு முறை அணியை மீட்டெடுத்து வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார், மிசாபுல் ஹக். 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த போது விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே ஸ்கூப் செய்ததால் மேல் எழும்பிய பந்து சரியாக ஸ்ரீசாந்த் கையில் வந்து விழுந்தது. இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது.

ஒரு முறை அல்ல, இருமுறை பாகிஸ்தானின் "குளூஸ்னர்" ஆனார் மிசாபுல் ஹக்.

மலரும் நினைவுகள் லான்ஸ் குளூஸ்னர் 1999 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில்

Thursday, September 20, 2007

நாங்க ஏண்டா நடுச்சாமத்தில சுடுகாட்டுக்குப் போவனும் - வடிவேலு காமெடி



நள்ளிரவு நேரம், கல்லறையில் நண்பனுடன் - சிறுகதை யை படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, September 19, 2007

ஐந்து வாங்கினார் ஆறாக திருப்பிக் கொடுத்தார் - யுவராஜ் சிங் (வீடியோ)

ஐந்தாக வாங்கியது டிமிட்ரி மசாக்கரனஸிடம்



ஆறாக திருப்பிக் கொடுத்தது ஸ்டூவர்ட் பிராடிடம்



நன்றி : ESPN தொலைக்காட்சி மற்றும் youtube தளம்

Tuesday, September 11, 2007

அமேரிக்கா அமேரிக்கா ..அமேரிக்கான்னா வார் கண்ணா வாரு - வீடியோ



தமிழகத்தில் 80 களில் பிரபலமாய் இருந்த சுராங்கனி சுராங்கனி பாடலின் மெட்டில் அமேரிக்காவின் ராணுவ , அரசியல் நடவடிக்கைகளை கிண்டல் செய்யும் ஒரு பாடலின் வீடியோ
நன்றி : www.youtube.com

அண்மையில் எழுதப்பட்ட கதை : கிருஷ்ணமூர்த்தியுடன் கடவுள்