Saturday, September 29, 2007

கருப்பின் அழகு - ஸ்வப்னகூடு (மலையாளம்)

வழக்கமான மலையாளத் திரைப்படங்களில் வரும் பாடல்களைக் காட்டிலும் இந்த பாடல் வித்தியாசமானது. மென்மையாக, அதே சமயத்தில் வேகமான தாளத்துடன் அமைந்துள்ள இப்பாடல் "ஸ்வப்னக்கூடு" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்விராஜ், குஞ்சாக்கோபோபன்,ஜெயசூரியா , மீராஜாஸ்மின் மற்றும் பாவனா நடித்துள்ள இப்படத்திற்கு இசை மோகன் சிதாரா. படத்தை இயக்கியவர் கமல்.



இந்தப் பாடலில் நடித்துள்ள நடிகர்களில் குஞ்சாக்கோபோபனைத் தவிர மற்றவர்கள் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமனாவர்களே .. குஞ்சாக்கோபோபன் காதலுக்கு மரியாதை மலையாள மூலத்தில் நடித்தவர்.

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

இந்தப் படம் தமிழிலும் மூன்றாம் பிறை 2006 ன்னு ரிலீஸ் ஆச்சு. வழக்கமான மூக்கோண காதல். :)) இந்தப் பாடல் தவிர இன்னொரு பாடல் "இஷ்டமில்லடா" அதுவும் நல்லா இருக்கும் :))

said...

ஜி,
இந்தப் படம் தமிழிலும் வெளியானதா? புதிய செய்தி. நன்றி
ஆமாம் இஷ்டமில்லடா பாடலும் அருமையா இருக்கும். மீரா ஜாஸ்மின் பிரித்வி கெமிஸ்ட்ரியும் நல்லா இருக்கும்.

said...

சூப்பர் பாட்டு... நன்றி. படம் பார்த்திருக்கேன்.. சுமார் தான்...

//மீரா ஜாஸ்மின் பிரித்வி கெமிஸ்ட்ரியும் நல்லா இருக்கும்.//

இஷ்டமில்லடா பாட்டா? அது கெமிஸ்ட்ரி இல்லை... பயாலஜி :-)

அபிஅப்பா said...

வணக்கம்! நீங்க புதுசா முயற்சி எடுத்தது சரிதான், ஆனா என்னை பொருத்தவரை ஒரு ந்ல்ல எழுத்தாளரை நீங்களே கட்டி போட்ட மாதிரி! சத்தியமே சொல்றேன் உங்க போஸ்ட் நாங்க யாருமே படிக்க்க முடியலை!ஏன் ஏன் சும்மா புதுசா புதுச்சா முடிவெடுக்காதீங்க! உங்க புது வலை பதிவு கொடுமை கொடுமயிலும் கொடுமை