அஹங்காரே நகரே , அட்டகாசமான சிங்களப்பாடல்
பாடற்தொகுப்பு : திவ்யபுரா(All my life)
பாடல் அமைப்பு ; ரணிது லங்கேஜ் , இராஜ் வீரரத்னே
2004 ஆம் ஆண்டில் வெளிவந்து, இலங்கையில் இளம் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்ட இந்த பாடல் பிபிசி யின் அதிகாரப்பூர்வ ஆசிய இசைப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டது. எம்.டிவி இந்தியா , வீ சேனல், ஜீ மியுசிக் சேனல்களின் வாயிலாக இந்தியாவில் ஒளிபரப்பு செய்யபட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றது, தமிழ் இடம்பெறும் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் , எஸ்,எஸ் மியுசிக் சேனலில் இந்த பாடலைப் பார்த்து இருக்கலாம்.
இந்த பாடல் தான் ரனிது மற்றும் இராஜ் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இசை மொழிகளைக் கடந்தது. அதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்
நன்றி : www.youtube.com மற்றும் இந்தப்பாடலை வலை ஏற்றி வைத்து இருந்த kumaranworld
5 பின்னூட்டங்கள்/Comments:
மிகவும் நல்ல பாடல். கொஞ்சக்காலம் ஸ்ரீ லங்காவைக் கட்டிப்போட்டபாடல் எனலாம். நீங்கள் போஸ்ட் பண்ணிய பாடல் ரீமிக்ஸ் இதன் ஒரிஜினல் இன்னமும் நல்லாக இருக்கும். இராஜ்யின் ஆல்பத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையானவை.
வினையூக்கி!
அட்டகாசமான சிங்களப் பாடல் என்றதும், ஆச்சரியப்பட்டுவிட்டு கேட்போமெனக் கேட்டேன். அவர்கள் எந்த நாளும் சுட்டவர்கள் தான் ,அந்த நாளில் ஹிந்தி,தமிழ் இப்போ சர்வலோகமும், எல்லோரும் போல்
சிங்களப் பாடல்களுக்கென்றே சில ரியுன் உள்ளது.
அவர்கள் ரசனை வித்யாசமானது.
அவர்கள் சுட்டார்கள்,நாம் தமிழர் அந்த அளவும் செய்யவில்லை. தென்னகப் பாடல்களை வைத்தே காலத்தை ஓட்டினோம்,ஓட்டுகிறோம்.
ஆம், வாந்தியத்தேவன் இராஜ், ரணிது பாடல்களை யூடியுப் தளத்தில் கேட்டுவருகின்றேன்/அனைத்தும் அருமையாக இருக்கிறது.
யோகன் சார், ஆமாம் சிங்களப்பாடல்களுக்கென தனித்தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பாடலை எப்படி எனது கணினிக்குத் தரவிறகக்ஞ் செய்யலாம்?
ஸ்ரீரங்கன் சார், youtube video தளத்திலிருந்து, தரவிறக்க வீடியோவின் யூஆரெல்லை தரவிறக்கம் செய்ய உதவும் இந்த தளத்தில்
கொடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த பிறகு .flv என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு
VLC பிளேயரை டவுன்லோடு செய்து கொண்டு பார்க்கலாம் நான் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். உங்கள் மின்னாஞ்சல் முகவரி தாருங்கள். அனுப்பி வைக்கின்றேன்.
Post a Comment