Showing posts with label பேய். Show all posts
Showing posts with label பேய். Show all posts
Saturday, July 11, 2015
"கார்த்தி, எங்கேயாவது கல்லறைக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோமா"
"எதுக்குடா கணேஷ்"
"இப்போதைய டிரென்ட், சுடுகாட்டில இல்லாட்டி கல்லறையில போய் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால போடுறதுதான்"
என் அறைத்தோழன் கணேஷ், தீவிர சமூக ஊடக வெறியன். காட்டாற்று வெள்ளம்போல சமூக ஊடகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இவன் காரண காரியமே ஆராயாமல் அதை செய்வான். கேள்வி கேட்டால் "இதான் நண்பா , இப்போதைய டிரென்டு" என்பது அவனது பதிலாக இருக்கும். சென்ற ஆண்டு, குளிரடிக்கிற நள்ளிரவில் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், என் மேலேயும் ஊற்றி ஐஸ் பக்கெட் சாலெஞ் என்றான். ஒரு வாரம் காய்ச்சலடித்து கிடந்தது நான் மட்டுமே.
"நான் வரலடா கணேஷ், எனக்கு இது தேவையில்லாத விஷப்பரிட்சையா தோணுது, எனக்கு அடுத்தவாரம் கான்பரன்ஸ் பேப்பருக்கு டெட்லைன் வேற இருக்கு, ஒரு சூப்பர் ரெபரன்ஸ் பேப்பர் புடிச்சிட்டா அதை வச்சி என் பேப்பரை முடிச்சுடுவேன், சோ டைமில்லை"
"கான்பரன்ஸ் கீன்பரன்ஸெல்லாம் கதைவிடாத, பகுத்தறிவு பேசுற உனக்கு பேய் வந்து கடிச்சி சாப்புட்டுறும்னு பயம் கார்த்தி "
"நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்" என்ற நடிகர் வடிவேலுவின் மனக்குரல்தான் எனக்கும் கேட்டது.
நான் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், கடவுளிடம் இல்லாத பயம் எனக்கு பேய்கள் மேல் உண்டு. காரணம் மிகவும் எளிமையானது. இல்லை என்று நினைக்கும் கடவுள் வந்துவிட்டால் கூட நல்லம்சமாகத்தான் இருக்கப்போகின்றது. பேய் இல்லை என்று நினைத்து வம்பு பேசி, ஒருவேளை அது உண்மையாகவே வந்துவிட்டால் என்ன செய்வது. அதனால் நான் வரவில்லை என்று மறுத்தேன்.
"போடா பயந்தாங்குளி, நீ வரலேன்னாலும் நான் போகப்போறேன்"
இப்பொழுது எனக்கு அடுத்த பயம். ரோம் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பெரிய ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எங்களது வீடு. கால்நடை தூரத்தில் எங்களது ஆய்வகமிருப்பதால் இவ்வளவு தள்ளி வீடு எடுத்திருக்கிறோம். இவனும் இரவில் கிளம்பிப்போய்விட்டால் எனக்கு தனியே இருக்க பயம். இவன் இஷ்டத்திற்கு கல்லறைக்குப்போய் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் பேய்களை தட்டி எழுப்பிவிட்டு வீடுவரை கூட்டிவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அபத்தமான பயம் வேறு.
"கணேஷா, நாம போய் போட்டோ எடுத்து, அந்த போட்டோவில் பேய் பிசாசு தெரிஞ்சுட்டா , வேண்டாம்டா பிளீஸ்"
"கார்த்தி, வெறும் டுபாக்கூர் போட்டோஷாப்பையெல்லாம் நம்புறீயா , நீயெல்லாம் என்ன சயின்டுஸ்டு, , பேயும் கிடையாது பிசாசும் கிடையாதுன்னு நாம நிருபிக்கிறோம். "
"பொதச்ச பின்னாடி எரிச்ச பின்னாடி திரும்பிப்பார்க்காம போற இந்தியா மாதிரி இங்கே கிடையாது , இவனுங்க கல்லறைக்கு உரிய மரியாதை செய்றவனுங்க , நாம போய் விளையாட்டா கல்லறை மேல நின்னு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டால், அவமரியாதை செஞ்சுட்டோம்னு எவனாவது வீடு பூந்து அடிக்கப்போறான்டா.. மோர் ஓவர், கல்லறை மேல நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறது , செத்தவங்களை நிஜமாலுமே அவமானப்படுத்துறதுதான்"
" நோ நோ உன்னோட பயத்தை எதுக்கு சென்டிமென்ட் போட்டு மறைக்கிற, இனிமே பகுத்தறிவுன்னு எதுவும் பேசாதே , ஷேம் ஷேம் பப்பி ஷேம்"
"இது சென்டிமென்ட் கிடையாது, வெறுமனே இல்லைன்னு நிராகரிப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை, லாஜிக்கலா யோசிக்கிறதும் பகுத்தறிவுதான்.எதுக்காக அனாவசிய ரிஸ்க் எடுக்கனும், நாம இருக்கிற ஏரியா ஒரு காலத்துல மாபியா மீட்டிங் பாயின்ட், செத்துப்போனவங்களை இங்கே இருக்கிற கல்லறையிலத்தான் புதைச்சிருப்பானுங்க , நாம போட்டோ எடுக்கிற சமாதிக்காரன் மாபியாக்காரனுங்களுக்கு சொந்தக்காரனா இருந்தால் என்ன பண்றது,. கல்லறைத்தோட்டம் போதை மருந்து அடிக்ட், டிரக்ஸ் வாங்குறவன் விக்கிறவன் எல்லாம் ஒன்னு கூடுற இடம்னு வேற படிச்சிருக்கேன்.. பிரச்சினையாயிடும்னு தோனுது "
"இந்த நொரநாட்டியமெல்லாம் வேனாம், வரியா இல்லியா"
"வரேன் ஒரு கண்டிஷன் கணேஷ், கல்லறையில இருக்கிற ஆட்களோட பேர் வராதபடி போட்டோ எடுக்கனும் சரியா "
"ஓகே டன்"
இங்கே தனியாக இருப்பதைவிட கல்லறைத்தோட்டத்தில் துணையுடன் இருப்பது பரவாயில்லை என்பதால் கணேஷுடன் கிளம்பினேன்.
நள்ளிரவில், தேய்பிறை வெளிச்சத்தில் நடக்கும்பொழுது நேரம் ,மற்றவர்களைக் காட்டிலும் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் அவரோட சார்பியல் கோட்பாட்டில் சொல்லியிருப்பாரோ. குறைந்த தூரத்தை கடக்க ஏதோ பலமணிநேரம் எடுத்துக்கொண்டதைப்போல ஓர் அசதி .ஒரு வழியாக ஒரு கல்லறைத்தோட்டம் தென்பட்டது.
உள்ளே நுழைந்தோம். முதல் கல்லறை கிறிஸ்டியானோ எர்பானி. கல்லறையின் மேல் நாங்களிருவரும் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டோம். எடுத்து முடித்தவுடன் எடுத்த படத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். பேய் பிசாசு எதுவுமில்லை. அடுத்தது பவுல் ராபின்சன் , பின்னர் யோனஸ் வில்லியம்சன் நான்கவது கல்லறையில் இருந்த பெயரைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆர்.எஸ்.சுவாமிநாதன் என்றிருந்தது.
"கணேஷ், என்னமோ தப்பா படுது, இட்டாலியன் கத்தோலிக்க கல்லறையில எப்படிடா சுவாமிநாதன், வேண்டாம்டா போயிடுவோம்"
"கார்த்தி, பயப்படாதே. செகன்ட் வேர்ட் வார் அப்போ, நிறைய பிரிட்டீஷ் இன்டியன் சோல்ஜர்ஸ் பாசிஸ்டுகளை எதிர்த்து சண்டை போட்டாங்க , அதுல செத்தவங்களை நிறைய இடத்தில் பொதச்சி மரியாதை செஞ்சாங்க , பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் கூடத்தான் இத்தாலியன் நேம்ஸ் கிடையாது .. கூல் கூல் நண்பா"
சுவாமிநாதன் கல்லறையில் ஏறி நின்று எடுக்கும்பொழுது என் காலணிகளை கழட்டிக்கொண்டேன். பயம் தானாகவே மரியாதை கொடுக்க வைத்தது.
வந்த வழியே வீடுவந்து சேர்ந்தோம். நிபந்தனையின் படி கல்லறையில் பெயர் தெரிந்த படங்களை கணேஷ் முற்றிலுமாக அழித்துவிட்டு எஞ்சியப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் தரவேற்றினான். இத்தாலிய விடியற்காலை, இந்தியாவில் பரபரப்பான நேரமென்பதால் விருப்பங்களும் கருத்துகளும் பகிர்வுகளும் அள்ளின. கணேஷ் நிம்மதியாக தூங்கினான்.
என்னால் தூங்க இயலவில்லை. ஆங்கிலேய, அமெரிக்க , இந்தியப் பெயர்கள் எப்படி கல்லறையில்.. எனக்கு இரண்டாம் உலகப்போர் போர்வீரர் கல்லறைத்தோட்டத்தைப்பற்றி வரலாற்று சுவாரசியம் தொற்றிக்கொண்டது. முற்றிலும் விடிந்ததும் , முந்தைய நள்ளிரவு நடந்த அதே பாதையில் கல்லறைத்தோட்டத்தை தேடிப்போனேன். 10 - 12 கிலோமீட்டர்கள் நடந்தும் என்னால் அந்த கல்லறைத் தோட்டத்தை கண்டே பிடிக்கமுடியவில்லை. பாதை மாறி வந்துவிட்டோமா .. இல்லையே சரியான பாதைதான் என்று எனக்குள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கார் வந்து என்னருகில் நின்றது.
"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கார்த்தி" என்று ஆங்கிலத்தில் கேட்டார் என் பேராசிரியர்.
"ஒன்றுமில்லை, ஆராய்ச்சித்தாள் வேலை நகரவில்லை, ஒரு மாற்றத்திற்காக இங்கு நடந்து வந்தேன்"
"சரி , வண்டியில் ஏறு"
வண்டியில் ஏறிய பின்னர்
"இங்கே அருகில் ஏதேனும் கல்லறைத்தோட்டமிருக்கிறதா ? குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மறைந்த பிரிட்டீஷ் அமெரிக்க வீரர்களின் கல்லறைத்தோட்டம்"
"35 ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். இந்த சாலையில் கல்லறை எதுவும் கிடையாதே. நிச்சயமாக போர்வீரர்களின் கல்லறை இங்கு கிடையவே கிடையாது... அது சரி, உனது கருத்தரங்க ஆராய்ச்சித்தாளுக்கான நல்லதொரு தரவை காலையில் கண்டுபிடித்துவிட்டேன் உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் , படித்துப்பார்"
எனது நினைவுகள் அந்த இல்லாத கல்லறைத்தோட்டத்தின் மேலேயே இருந்தபோதும் அனிச்சையாக எனது திறன்பேசியில் கணக்கைத் திறந்து பேராசிரியரின் மின்னஞ்சலில் இணைப்பை வாசிக்க ஆரம்பித்தேன். அந்த ஆராய்ச்சித்தாளின் ஆசிரியர்களின் பெயர் வரிசைக் கிரமமாக கிறிஸ்டியானோ எர்பானி, பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் , ஆர்.எஸ்.சுவாமிநாதன்.
***********************************************************************************************************************
Sunday, August 24, 2014
தற்கொலை - சிறுகதை
சென்ற ஒளி ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஒளி ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. அதற்கு நான் தான் முக்கிய காரணம். வீம்புக்கு தற்கொலை செய்ய நினைப்பவர்களை பேயாகவும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மனசாட்சியாகவும் பயமுறுத்தி வாழவைக்கும் தெய்வம் நான்.
தற்கொலைகளைத் தடுப்பது பெரும்பாலும் எளிது. தற்கொலை செய்துகொள்ள நினைப்பவரின் பிரிவை யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களின் நினைவைத் தூண்டிவிட்டால் போதும். ஆனால்இவனின் மனதை மாற்ற கடைசி ஒரு மணி நேரமாக முயற்சிக்கின்றேன்.இவனோ சாவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.
"காதலின் தீபம் ஒன்று " பாடல் தொலைக்காட்சியில்
"எளவெடுத்த இந்த பாட்டால என் லைஃபே போச்சு" தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்தான்.
"சாவதை விட வாழ்வது எளிது" இவன் முன்னர் தோன்றினேன்.
"நோ இட்ஸ் எ ப்ரீடம்"
"மிகப்பெரிய பிரச்சினைகள் விடுதலை என்று நாம் எதை நினைக்கின்றோமோ அந்த விடுதலை கிடைத்த பின்னர்தான் வரும்"
"ஹூ ஆர் யூ , எப்படி என் வீட்டிற்குள் வந்தாய் "
"பேரண்டங்களின் தற்கொலை தடுப்பு காவலன்"
"செம ஜோக் மச்சி, சாவப்போறதுக்கு முன்ன ஒரு காமெடி பீஸை பார்க்கனும்னு என் தலைவிதி..." சில நொடிகள் அமைதிக்குப் பின்னர்
"திருடனா நீ , இந்தா நான் செத்த பிறகு இந்த வீட்டில இருக்கிற அத்தனையும் உனக்குத்தான் எடுத்துட்டுப் போய் நீயாவது நல்லா இரு" இரண்டாவது தூக்க மாத்திரையை எடுத்து போட்டான்.
"விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே நான் மனிதர்களின் தற்கொலை எண்ணங்களை மாற்றுபவன், இப்பேரண்டங்களின் காவலர்களின் ஒருவன் "
"ஓகே ஒகே , ஏன் தற்கொலையை தடுக்கவேண்டும், நான் செத்துப் போவதால் இந்த யுனிவர்சுக்கு என்ன நஷ்டம் " நக்கலாய் ஓரச்சிரிப்பு சிரித்தபடி மூன்றாவது மாத்திரையை எடுத்தான்.
"அதை சொல்ல முடியாது. ஆனால் நீ எந்த எந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றாயோ அவை ஒருபோதும் மாறாது , இன்னும் அதிகமாகத்தான் ஆகும் "
"ஒ , மை டியர் திருடன், அந்த பிராபளம்ஸை நான் பார்க்க வேண்டியதில்லையே "
"நீங்கள் பார்ப்பீர்கள் அனுபவிப்பீர்கள் "
"என்ன, ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாய் அலைவேன்னு சொல்றியா"
"இல்லை இல்லை. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது , அதுதான் இப்பேரண்டத்தின் விதி " நான் சொல்லி முடிப்பதற்குள் ஆறேழு மாத்திரைகளை எடுத்துஇவன் சாப்பிட்டிருந்தான்.
தற்கொலை தடுப்பு முயற்சி தோல்வி அடைந்த கவலையை விட, தற்கொலையில் இறந்துப் போகப் போகின்ற இவனுக்காக நான் ஒரு பிரதி பேரண்டத்தை உருவாக்கவேண்டுமே என்ற கவலை எனக்கு . தற்கொலையில் இறக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பேராண்டத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் , ஆற்றல் சேமிப்பிற்காகத்தான் நான் தற்கொலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றேன் . இவன் உயிருக்குப் போராடும் அந்த சொற்ப நேரத்திற்குள் பிரதிகளை உருவாக்கி , இதே நேர பரிமாணத்தில் இவனை அங்கு வாழவைக்க வேண்டும்.
ஆம் தற்கொலையில் இறப்பவர்கள் , நீங்கள் நினைப்பதைப் போல இறந்து விடுவதில்லை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை அதே மனிதர்கள் , அதே உணர்வுகள் , இன்னும் கடுமையான சூழலுடன் இணைப் பேரண்டத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும். இங்கு இறந்த இவன் இணை பேரண்டத்தில் தூங்கி எழுவதைப் போல சாதரணமாக இன்று எழுவான், ஆனால் புதிய உலகில் இங்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு பிரச்சினைகள் இவனுக்காக காத்திருக்கின்றன. இங்கு ஓடிப்போன காதலி அங்கு இவனுக்கு கிடைப்பாள். ஆனால் மனைவியான பின்னர் ஓடிப்போவாள். மறுபடியும் தற்கொலை செய்துகொண்டால், இன்னும் அதிகப் பிரச்சினைகளுடன் அதே வாழ்க்கையை மற்றுமோர் உலகில் வாழ்ந்தாகவேண்டும்.
உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கின்றனவா? இருந்தால் தொலைத்துவிடுங்கள். எனக்கும் வேலை மிச்சம், ஆற்றலும் மிச்சம். எல்லாவற்றையும் விட உங்களுக்கான பிரச்சினைகளை இங்கேயே அனுபவித்து இயற்கையாக விடுதலையானால் என்னைப் போல ஆகலாம். இப்பேரணடங்களின் காவலர்களில் ஒருவனாக .. இபேரண்டத்தின் ஆற்றலாக. ஆவீர்களா!!! .

எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:01 AM
வகைகள்: அறிவியல் புனைவு, சமூகம், சிறுகதை, பேய்
Sunday, May 11, 2014
யாமிருக்க பயமே - திரைப்பார்வை
பேயால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? என்ற கேள்வி பேய்ப்படங்களை, முகத்தை மறைத்துக் கொண்டு விரலிடுக்கில் பார்க்கும்பொழுது எல்லாம் தோன்றும். கொல்லப்பட்டவர்கள் பேயாக வந்து , கெட்டப் பேயை அழித்தால் என்ன என்று கூட நினைப்பேன்? ராம்கோபால் வர்மாவின் ஒரு பேய்ப்படத்தில், தன் பிணத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பேயை , கொன்ற பேய் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்லும்.
மங்காத்தா படத்தில் 'திருஷ்டிக்கு" வரும் திரிஷாவைத் தவிர எல்லோரும் ஒன்று கெட்டவர்கள் அல்லது ரொம்பக் கெட்டவர்கள். வில்ல நாயகனாக வரும் அஜீத்திற்கு எந்தவிதமான சென்டிமென்ட் பிளாஷ்பேக்கும் வைக்காமல், கெட்டவன்னா கெட்டவன்தான் என்றிருக்கும்.
"யாமிருக்க பயமே" திரைப்படத்திலும் பேய் என்றால் பேய். கொடூரமான பேய். முனி, காஞ்சனா போன்ற நகைச்சுவைப் பேய்ப்படங்களில் வரும் பேய்களைப் போல இதில் வரும் பேய்க்கு சென்டிமென்ட் பின்கதை எல்லாம் கிடையாது. நல்ல நோக்கத்திற்கான பழிவாங்கல் எல்லாம் கிடையாது. பயங்கரமான பேயினால் கொல்லப்பட்டவர்கள் பேயானாலும், இந்த பவர்புல் பேயை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எவ்வளவு நகைச்சுவையுடன் சொல்லமுடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கின்றார்கள்.
ஒரு திகில் முடிச்சை அவிழ்க்கையில் ஒன்று அதிர்ச்சி இருக்கும் அல்லது உப்புசப்பில்லாத ஆன்டி -கிளைமேக்ஸாக இருக்கும். ஆனால், இதில் இணை-கதாநாயகன் கருணாகரனின் மறுப்பக்கம் தெரியவரும்பொழுது பயத்தை மறந்து வெடித்துச் சிரிப்பீர்கள்.
எவ்வளவு சுமாராக காட்சியமைக்கப்பட்டிருந்தாலும் , கொலைக்காட்சிகள் அனுதாபத்தைத் தரும். ஆனால் இதில் வரும் கொலைக்காட்சிகள் குரூரத்தை மீறி உங்களை சிரிக்க வைக்கும்.
படத்தில் , "பேய் இருக்கு ஆனால் இல்லை" என்று ஏமாற்றவெல்லாம் இல்லை. பேய் பங்களாதான். ஒன்றிற்குப் பல பேய்கள் இருக்கின்றன. மங்காத்தா படத்தில் வலியவன் வெல்வான் என்பதைப்போல், இதிலும் பேய்தான் ஜெயிக்கின்றது. 'தர்மம் தானே' வெல்லவேண்டும் என்றெல்லாம் உங்களை யோசிக்க வைக்காமல் சிரித்துக் கொண்டே , வெளியே அனுப்பியதில்தான் இயக்குநரின் வெற்றி இருக்கின்றது.
அளவான கவர்ச்சி, அடபோடவைக்கும் அடல்ட் காமெடி, உண்மையிலேயேத் திகிலூட்டும் இரண்டாம் பாதி, கடைசிவரை விடாது கருப்பாய் இருக்கும் நகைச்சுவை ஆகியன உங்கள் நேரத்திற்கும் காசிற்கும் பொழுதுபோக்காய் ஈடு செய்யும்.
யாமிருக்க பயமே - பயந்து பயந்து சிரிக்க !!
திரைப்பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=7utXPKENd-s
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:34 PM
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள், திரைப்பார்வை, பேய்
Saturday, October 20, 2012
நான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை
”அம்மு அந்தக் கண்ணாடியைப் பார்க்காதே, நம்மளைத் தவிர வேற யாரோ இந்த ரூம்ல வேற யாரோ இருக்காங்க”
ஒவ்வொரு காதலுக்கும் ஒரு துருப்புச்சீட்டு, இப்பொழுது எல்லாம் அம்முவை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவது, பேய்களைப் பற்றிய புனைவுகளே !!
”அம்மு, நேத்து நைட், ஒரு பேய் உன்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன், கையில பெரிய கோடாரி, கருப்புக் கோட்டு போட்டுக்கிட்டு”
“நீ வந்து என்னைக் காப்பாத்தினியா”
“உன்னைத் துரத்துனதைப்பார்த்தேன், பேய் உன் பக்கத்தில வர்றப்ப கனவு கலைஞ்சிடுச்சு”
பேய்க்கதைகளில் என்னை நாயகனாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான பேய்ப்படங்களில் வரும் நாயகர்கள், பாரதிராஜா படத்தில் வரும் நடிகர் ராஜாவைப் போன்றவர்கள்தாம்.
அம்முவிற்கு படிப்பில் இருக்கும் ஆளுமை க்கு நேர் எதிர்பதம் அவளின் பயந்த சுபாவம். நூடுல்ஸ் மாதிரி குழப்பமா இருக்கிற அல்காரிதத்தைக் கூட நுனி முதல் அடிவரை , அரைநொடியில் புரிந்து கொண்டு, அட்டகாசமா நிரலி எழுதுபவளுக்கு இந்த பேய் மாதிரியான அமானுஷ்ய விசயங்கள்னா ஒரு திகில். அதனால, அம்முவை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்ய வளையம் இருப்பதைப்போலத் தோற்றத்தை உருவாக்கி , நான் மட்டும் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறேன்.
”நீ சொல்லுறது எல்லாம் ஏற்கனவே நிஜமாவே நடந்துட்டு இருக்கோன்னு பயமா இருக்கு கார்த்தி”,
கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்பொழுது, சிறிய காட்டுப்பாதையைக் கடந்தாகவேண்டும். ஒரு நாள் அம்முவுடன் கைக்கோர்த்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கே யாருமே இல்லாத பொழுதும்,அவளின் கையை விட்டுவிட்டு, இல்லாத ஒன்றை துரத்திப்போய் இரண்டு நிமிடங்கள் கழித்து அம்முவிடம் வந்து
“என்னோட கனவில் வந்த பேய் , அங்க நின்னு உன்னைப்பார்த்துச்சுடா குட்டி, போய் விரட்டிட்டேன்”
அம்முவிற்கு பேய் பயம் காட்டுவதற்காகவே, ஆங்கில, கொரிய , தமிழ், இந்தி என திகில் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, பி.டி.சாமியில் இருந்து இணையத்தில் எழுதும் கத்துக்குட்டி பேய் எழுத்தாளர்கள் வரை படித்ததில் எனதுப் புனைவுகள் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த்து, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மாறியது.
“நாலடி தாண்டா அம்மு இருக்கு, மூக்கு மட்டும் கூர்மையா, மனுஷரூபத்தில, கைக்குப்பதிலா பெரிய ரெக்கை”
என நான் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நான் வர்ணித்த அதே உருவம், தூரத்தில் சிறிய விண்கலம் மாதிரி வாகனத்துடன் நின்று கொண்டிருக்க, அம்மு என் கையை உதறிவிட்டு, அதை நோக்கி ஓட, நான் திகிலிலும் பயத்திலும் மூர்ச்சையானேன். ஆழ்மனதில், நான் அம்முவிடம் சொன்ன கதைகளில் இல்லாத தொடர்ச்சி, இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
---
பிற்சேர்க்கை - இதைத் திகில் கதையாகவும் படிக்கலாம். ஓர் உருவகக்கதையாகவும் படிக்கலாம். காதலிக்கு சொல்லுகின்ற பேய்க்கதைகள் ---| ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க பிரயத்தனங்கள், எதை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கின்றோமோ அதுவே பாதகமாவது, கடைசியில் ஏலியன் போல எவனாவது வந்துத் தூக்கிகொண்டு போய்விட, எல்லாம் புரிந்து கொள்ளும்பொழுது டூ லேட்

Sunday, May 15, 2011
பின் தொடரும் பேய் - சிறுகதை
நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு ... பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான்.
சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
“ஹூ ஆர் யூ ... வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன்.
அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியுடன் அப்படியே பின்னோக்கிப்போனான். வேகமாக நகர நகர அவனும் பின்னோடிப்போய் சுவற்றில் மறைந்துப்போனான். இல்லை இல்லை போனது, இது பேய் ... திரும்ப என் அறைக்கு வர, உருவமும் சுவற்றைக் கிழித்துக்கொண்டு அதே தூர இடைவெளியுடன் மீண்டும் வந்தது.
நான் வேகமாக ஓடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, உருவமும் என்னைப் பின் தொடர்ந்தது. நான் நின்றால் அதுவும் நின்றது. நான் அதை நோக்கிப்போனால் அது என்னைவிட்டு நகர ஆரம்பித்தது. பாதகமான பேய் இருக்கும் எனப் பார்த்தால் விளையாட்டு காண்பிக்கிறதே !!
சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என மீண்டும் வீட்டிற்கே வந்தேன். படுக்கை அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். அந்த உருவம் நல்ல வேளை உள்ளே வரவில்லை. பயம் தூக்கத்தை விரட்டினாலும், அசதி இரட்டிப்பான தூக்கத்தைக் கொண்டு வந்தது.
மறுநாள் காலை படுக்கை அறையின் கதவைத் திறக்க அதே இடத்தில் அந்த உருவம் இருந்தது. நள்ளிரவிலேயே பேயைச் சமாளித்தாகிவிட்டது. பகலிலா தொந்தரவு செய்யப்போகின்றது, என சிரித்து வைத்தேன். பேயும் சிரித்தது. கண்டிப்பாக பிரமை இல்லை.
”பேர் என்ன, ஊர் என்ன என்ன வேண்டும்” ம்ஹூம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. நான்கு பிரெட் துண்டுகள், கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பியதும் கதவைக் கிழித்துக்கொண்டு அந்தப் பேய் என்னைப்பின் தொடர்ந்தது.
பேருந்து, பின்னர் ரயில் என பயணச்சீட்டு இல்லாமல் அதுவும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இது சிரிப்புப் பேயாக இருக்கும் என கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போனது.
அலுவலகத்தில் எனக்கு 20 அடிகள் தள்ளி நின்று கொண்டே இருந்தது. அலுவலக நண்பனிடம் , பேய் இருந்த இடத்தைச் சுட்டி அங்கு யாரேனும் நிற்கிறார்களா எனப்பாரேன் எனக்கேட்டேன். அவன் என்னை ஒரு தினுசாக “லூஸாப்பா நீ” என்ற வகையில் முறைத்துவிட்டுப்போனான்.
வீட்டிற்கு பேயுடன் திரும்பினேன். பிறரின் தனிமையை மதிக்கும் நாகரிகமான ஸ்காண்டிநேவியர்களின் குணம் அப்படியே இந்தப் பேயிற்கும் இருந்தது. படுக்கை அறையிற்கோ குளியல் அறைக்கோ நுழைவது இல்லை. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு செல்லுங்கள் என்னும் வகையிலேயே அடுத்தப் பத்து நாட்களுக்கு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. இது என்னடா இழவு என , தமிழ்நாட்டிற்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து சேர்ந்தேன். சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும், விமானத்திலும், பின் சென்னையில் என்னுடைய டாக்ஸியிலும் பேயின் பயணம் தொடர்ந்தது.
சென்னை வீட்டில் தொந்தரவுகள் இல்லாத போதிலும், எதற்கு ஒரு மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விடுவது என முடிவு செய்தேன்.
“தொடர்ந்து பிம்பங்கள் வருவது ஒரு விதமான ஹாலுசினேசன், நீங்கள் பார்த்து, உங்களைப் பாதித்த உருவங்கள் தெரிவது போல இருப்பது இயல்பானது”
“இல்லை டாக்டர், இப்பொழுது கூட உங்கள் மருத்துவமனையின் வரவேற்பறையில் தான் இருக்கின்றது”
என்னைப் படுக்கவைத்து ஆழ்ந்த மனநிலையில் ஏதோ ஏதோ முயற்சி செய்து, நான் பார்த்த ஒரு படு பயங்கரமான பழைய ஸ்விடீஷ் திகில் படத்தில் வந்த வில்லனின் உருவம் தான் அந்த பேயாக எனக்குத் தெரிகின்றது என முடிவு செய்தார். அந்தப் படத்தை அவரும் பார்த்து இருப்பதாகவும் சொன்னார்.
காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதால், அந்த பிரமை என்னை விட்டு விலகி விடும் என என்னை ஆறுதல்படுத்திவிட்டு என்னை வழியனுப்பினார். வெளியில் அந்த பேய் இன்னும் உட்கார்ந்து இருந்தது. என்னை நோக்கி வருவது போல வந்து என்னைக் கடந்துப் போய் அந்த மனநல மருத்துவரின் அறைக்குள் நுழைந்தது. உள்ளே ஸ்விடிஷில் ஒரு ஆண் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:32 AM
6
பின்னூட்டங்கள்/Comments
Subscribe to:
Posts (Atom)