Friday, September 28, 2007

சத்தம் போடாதே - திரைப்பார்வை

இயக்குனர் வசந்தை ஒரு விசயத்துக்காக நிச்சயம் பாராட்டலாம். கதைக்களம் எப்படி பட்டதாக இருந்தாலும், அவரின் பெரும்பாலான படங்களில், சமூகத்திற்காக சமூக அக்கறையுடன் செயற்படும் அமைப்புகளை பற்றி தனது படத்தின் கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக உறுத்தல் இன்றி சொல்லிவிடுவார். இந்த படத்திலும் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" என்ற ஒரு தன்னார்வ அமைப்பை பற்றி சொல்லியுள்ளார். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு தொடர்ச்சியான கலந்தாய்வுகள் மூலமாக அவர்களின் வாழ்க்கையை செம்மையாக்கும் பணியை செய்து வரும் அமைப்புதான் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" . இந்த அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.எவ்வளவு கடினப்பட்டு எடுக்கப்படும் பிரச்சாரப் படங்களை விட, வெகுசன ஊடகமான திரைப்படங்களில் இப்படி வசனங்களின் வாயிலாகவும், காட்சி அமைப்பின் வாயிலாகவும் கதை ஓட்டத்துடன் சொல்லும்போது இந்த மாதிரியான அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு மக்களை எளிதாகச் சென்றடையும். இதை தனது ஒவ்வொரு படத்திலும் செய்து வரும் வசந்த் தொடர்ந்து செய்வார் என நம்பலாம்.

படத்தில் கவர்ந்த இன்னொரு விசயம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மறுகல்யாணம் செய்வதை விட தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருப்பது.பான்யன் அமைப்பை பற்றிக்கூட இயக்குனர் சொல்லி இருப்பார்.
சரி படத்திற்கு வருவோம். வசந்த் ஒரு நல்ல "ஒளியும் ஒலியும் டைரக்டர்" என்று கல்லூரிக் காலத்தில் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். அவரின் எல்லாபடங்களிலும் பாடற்காட்சிகளை பிரமாதமாக காட்சியமைப்பு செய்திருப்பார். இந்த படத்திலும் முதற்பாதியில் வரும் மூன்று பாடல் காட்சிகளும் டிபிகல் வசந்த் பாடற்காட்சிகள். அதிலும் பிருத்விராஜின் அறிமுகப் பாடல் காட்சியில் குட்டி குட்டி குழந்தைகளுடன் "அழகு குட்டி செல்லம்" என ஆடுவது ஏக அருமை.இரண்டாவது பாதியில் வரும் இரண்டு "திணிப்பு பாடற்களும்" படத்திற்கு திருஷ்டி.

இன்னொரு விசயம் ஏனைய வசந்தின் படங்களைப் போல இதிலும் படம் பார்த்த பிறகு ஏதோ மிஸ் ஆகுதே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இந்த படத்தில் அவரின் முந்தையப் படங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே!!! வசந்த் போன்ற இயக்குனர்கள் "திரில்லர்" வகைப் படங்களை எடுக்கும்போது "லாஜிக்கை" நிறைய இடங்களில் இடிக்க வைப்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாது.

நிதின்சத்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று , பிருத்விராஜை மணந்துகொள்ளும் பத்மபிரியாவை "பொசசிவ்" நிதின்சத்யா கடத்திசெல்கிறார்.பிருத்விராஜ், தன் மனைவி பத்மபிரியாவை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் யாரையும் குறை சொல்லமுடியாது. எல்லோரும் நன்றாகவே நடித்து உள்ளனர். மேல்தட்டு ஜெண்டில்மேன் இளைஞர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சுவாமிக்கு பிறகு பிரித்விராஜுக்கு அழகாக பொருந்துகிறது. வசனங்களில் மலையாள உச்சரிப்பு இருந்தாலும் அதுவும் ரசிக்கும்படியாக உள்ளது. காபி ஷாப்பில் அவர் பத்மபிரியாவுக்கு கைநடுக்கத்தைப் போக்க வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கும் காட்சி குட்டிக்கவிதை.

படம் பார்ப்பவர்களுக்கு நிதின்சத்யா கதாபாத்திரத்தின் மேல் பரிதாபமோ, ஆத்திரமோ ஏற்பட வைக்காதது, இரண்டாம் பாதி திரைக்கதையின் பலவீனமே. நாசர், சுஹாசின், ஸ்ரீமன் ஆகியோர் சில காட்சிகளில் வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா திரில்லர் வகைபடம் என்று அதிகமாக உழைத்திருப்பது பிண்ணனி இசையில் தெரிகிறது. விக்ரமன் படங்களுக்கு விக்ரமனே இசை அமைக்கிறாரோ என்று நினைக்க வைக்கும். அதுபோல வசந்தின் படங்களில் வசந்த் தான் ஒளிப்பதிவோ என்று தோன்றும். தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு மீண்டும் வசந்தின் ஸ்டைலை திரையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. சதிஷ் குரேசாவாவின் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதற்பாதியை நிச்சயம் ரசிக்கலாம். கியரண்டி கலகலப்பு.
இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்களின் விருப்பம், நிறைய திரைக்கதை சறுக்கல்கள் வசந்த் திரில்லர் கதைக்களத்துக்கான ஹோம் வொர்க் செய்யவில்லையோ!!!.

வசந்த், இந்த படத்தில் முதற்பாதியில் வருவதைபோல ஒரு அழகான மென்மையான காதல் கதைக்களத்துடன் உங்களிடமிருந்து அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம்.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

apart from keladi kanmani all vasanth films are waste. songs are the only saving grace in his films. a psuedo intellctualism always reflect in his films.

said...

படம் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் எடுத்த படம் மாதிரியா இருந்துச்சு?? படு மொக்கை தல!!

ஒரு உதாரணம்: பீச்ல பிருத்விராஜும் பத்மப்ரியாவும் பேசிட்டிருப்பாங்க. பிருத்விராஜ் ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள ஸ்கீரின்ல நாலு ஷஅட் மாறுது...என்ன பேசறானே கவனிக்க முடியல..அதே மாதிரி இரண்டாம் பாகத்துல என்ன பண்றதுன்னு யாருக்குமே தெரியல போல :)))

வசந்த் எப்பவுமே பாட்டுக்கு கான்செப்ட் முடிவு பண்ணிட்டு தான் படத்துக்கு கதை யோசிப்பாரு :)) குறைஞ்சபட்சம் பாட்டு வர சிட்சுவேசனாவது திரைக்கதைல கொண்டு வரலாம்ல..என்னமோ போங்க..

கடைசில "நாங்கள் இனி குடிக்க மாட்டோம்"ன்னு உறுதி மொழி எடுப்பாங்கல்ல...நாங்களும் எடுத்துக்கிட்டோம் "நாங்கள் இனி வசந்த் படம் பார்க்க மாட்டோம்"ன்னு..ஆனா ஒவ்வொரு முறையும் உறுதிமொழியைக் காப்பாத்த முடியல :))))

said...

தம்பீ.. நாளைக்கு நான் படத்தைப் பார்த்துட்டு அப்புறமா கமெண்ட்ஸ் போடுறேன்..

said...

முரளி கண்ணன், நீங்க சொல்லும் அந்த pseudo intellectualism வசந்தின் படங்களில் நானும் உணர்ந்தது உண்டு.

கப்பிபய,
//ஆனா ஒவ்வொரு முறையும் உறுதிமொழியைக் காப்பாத்த முடியல :))))/ அதே அதே !!!

உண்மைத்தமிழன்,
உங்களின் திரைப்பார்வையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

said...

வினையூக்கி,

உங்கள் திரைப் பார்வைக்கு நன்றி!

ஏனோ பிருத்விராஜ் மனதில் ஒட்ட மறுக்கிறார். வில்லனாக அவர் நடித்த படத்தைவிட கதநாயகனாக சோபிக்கவில்லை என்பது என் கருத்து.

அவருடைய குரல் சரியில்லை.

இருப்பினும் படம் பார்க்கும் ஆவலை இந்த இடுக்கை தூண்டியுள்ளது.

பகிர்வுக்கு நன்றி!

said...

IT IS NICE MOVIE

PLEASE GO OUR WEB
If you like to view a Tamil Website with more than 99% in Tamil, visit www.TamilKudumbam.com (தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family.