இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் - வட்டத்துக்குள் சதுரம்
இளையராஜாவின் இசையில் எழுபதுகளில் வெளியான "வட்டத்துக்குள் சதுரம்" என்ற படத்திலிருந்து இந்த பாடல் நட்பினை போற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் சிறந்த பாடல்களுள் இதையும் ஒன்றாகச் சொல்லலாம்
சிறு வயது சுமித்ரா , லதாவாக வரும் அந்த இரு குட்டி பெண்களும் அழகாக நடித்து இருப்பனர்.ஒரு குழந்தை "சிந்து பைரவியில் " நடித்த ராசி என்று நினனக்கிறேன். இன்னொருவர் "சுவரில்லாத சித்திரங்களில்" நடித்த சுமதி யா?!! சரியாக தெரியவில்லை.
ஆமாம் இந்த பாடலை பாடியவர்கள் யார்? யாரேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
நன்றி : www.youtube.com
7 பின்னூட்டங்கள்/Comments:
வாவ்!
இளையராஜா பின்னி பெடலெடுத்திருக்கிறார்..
சும்மாவா சொன்னங்க.. இசைஞானி என்று.. கலக்கல்..
பகிர்வுக்கு மிக்க நன்றி!
நீங்க சொன்ன சிறுமிகளின் பெயர் சரியென்றே என்க்கும் தோன்றுகிறது.
அருமையான பாட்டுங்க. ரொம்பவே. இளையராஜாவின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
நீங்க சொன்னது சரிதான். அவங்க ராசியும் சுமதியுந்தான்.
பாடுனவங்க யாரா? நல்ல கேள்வி. பி.எஸ்.சசிரேகாவும் எஸ்.ஜானகியும்.
இளைய ராஜாவின் இனிய பாடலில் ஒன்று.எப்போதும் கேட்கலாம்.
இந்தப் படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கிருந்தார். நல்ல பாட்டு, படமும் பார்க்கக் கூடியதே
வினையூக்கி, ஜி.ரா : நடித்தது ராசி அல்ல, அவரது அக்கா இந்திரா
தகவல் திருத்தத்திற்கு நன்றி ஐகாரஸ் பிரகாஷ் சார்.,
ஜிரா கானா பிரபா தகவலுக்கு நன்றி
http://www.youtube.com/watch?v=9Ml_nWwVZUw
Post a Comment