புண்ய பூமி நா தேசம் - தெலுங்கு பாடல், என்.டி.ஆர் கட்டபொம்மனாக
என்.டி.ராமாராவ் தனது உணர்ச்சிப்பிரவாகமான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். தமிழகத்தில் கிருஷணர் , ராமர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இவர்தான்.
மேஜர் சந்திரகாந்த் என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. இதில் ராமாராவ் வரலாற்று நாயகர்களாக தோன்றி இருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வருகிறார்.
வரி வட்டி வசனமும் பாடலின் இடையில் வரும்.
இந்த படம் ராமாராவின் கடைசிபடம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலுக்கு இசை : கீரவாணி(நம்ம ஊரில் மரகதமணி)
நன்றி: நந்தமூரி ரசிகர்கள் இணையதளம்
4 பின்னூட்டங்கள்/Comments:
அதிலும் கூட சத்திரபதி சிவாஜியின் படமாக காட்டப்படுவது ,நடிகர் திலகம் 'ராமன் எத்தனை ராமனடி' படத்த்தில் சிவாஜியாக தோன்றிய காட்சி.
என் இளமைக்காலத்தீல் இவர் சம்பூர்ணராமாயணம் பார்த்துள்ளேன்.
கர்ணனில் இவரைப் பார்த்துள்ளேன். ஆனால் இவர் தெலுங்கு நடிகர் எனத் தெரியாது. இந்த ராவ் வித்யாசம் தெரியாத காலம்.
ரங்கராவ் என் அபிமான நடிகர், என்ன ஆழுமையான தோற்றம்,கருணையுள்ள அப்பாவாக வந்து கவர்ந்தவர். அவர் ஒரு தெலுங்கு நடிகர் என்பது எனக்கு பல காலத்தின் பின்னே
தெரியும்.
இவரும் இப்பாடலில் அசப்பில் சிவாஜி
போல் தான் உள்ளார்.
நல்ல தேர்வு
ராமர், கிருஷ்ணர் ஆகிய வேடங்களில் ராமராவைப் பார்க்க முடியாது. ராமரையும் கிருஷ்ணரையும் தான் பார்க்க முடியும். அவர் இப்படத்தில் சிவாஜியையும் நினைவூட்டுகிறார். நல்ல நடிகர்.
// ஜோ / Joe said...
அதிலும் கூட சத்திரபதி சிவாஜியின் படமாக காட்டப்படுவது ,நடிகர் திலகம் 'ராமன் எத்தனை ராமனடி' படத்த்தில் சிவாஜியாக தோன்றிய காட்சி. //
சரியாப் பிடிச்சீங்க ஜோ. அது நடிகர் திலகமேதான். ராமன் எத்தனை ராமனடியேதான்.
கட்டபொம்மன் வேடத்துல என்.டீ.ஆரு நடிகர் திலகம் மாதிரிதான் நடிக்கப் பாத்திருக்காரு.
இந்தப் பாட்டுல என்.டி.ராமாராவைப் பார்க்கக் கஷ்டமா இருக்கு.
கர்ணன் படத்துல வருவாரே கிருஷ்ணரா...அது...என்.டி.ராமாராவ்.
Post a Comment