தற்கொலை - ஒரு நிமிடக்கதை
கார்த்தி தற்கொலை பண்ணிக்கிட்டான் என்பதை கேட்ட பொழுது ஜெனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சொன்னதை செய்துவிட்டான். கடைசி ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராதவன் நேற்று அவள் கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அங்கு வந்த கார்த்தி தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருந்தான்.ஏற்கனவே அவளை இது போல அவன் பலமுறை மிரட்டி இருப்பதால் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இன்று அலுவலகம் அவள் கிளம்பும் முன் மோகனின் தொலைபேசி அழைப்பில் இந்த அதிர்ச்சி செய்தி வந்திருந்தது.
“ஜெனி, கார்த்தி தங்கி இருந்த பிளாட் நாலு நாளா உட்பக்கமா பூட்டி இருந்துச்சாம், நேத்து புல்லா செம பேட் ஸ்மெல் அடிச்சதனால் பிளாட் செக்ரட்டரி கதவை உடைச்சி உள்ளே போய் இருக்காங்க... கார்த்தியோட பாடி டிகம்போஸ் ஆகி இருக்கு.. செத்து போய் மூணு நாள் ஆயிருக்கும்னு சொல்றாங்க" என மோகன் சொல்ல சொல்ல ஜெனிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.
5 பின்னூட்டங்கள்/Comments:
ஹை!! பேய்க்கதை!!
சூப்பரா இருந்தது அண்ணாச்சி. இந்த பின்னூட்டம் நேற்றைய தேதியில் வந்தால் நான் பொறுப்பில்லை!!
இன்னிக்கு கேள்விக்கு பதில் சொல்லாம கதையா அடிக்கறீரு?!
:O appo athu aaviya...creepy :-S
நல்ல கதை....
நல்லா கெளப்புறீங்க பீதியை
நன்றி இலவசக்கொத்தனார், துர்கா, டிபிசிடி மற்றும் சின்ன அம்மிணி
Post a Comment