Monday, October 15, 2007

கன்னடம் - தமிழ் - ஹிந்தி - இளையராஜா

இசையை எந்த மொழி வடிவில் கேட்டாலும் இதயத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். அதிலும் இளையராஜாவின் இசையை சொல்லவே வேண்டாம். இந்த குறிப்பிட்ட இசை வடிவமைப்பு மூன்று மொழிகளில் வெளிவந்து மூன்றிலும் சக்கைப் போடு போட்டது.

1980 ஆம் ஆண்டு வெளிவந்த "கீதா" என்ற கன்னடப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த "ஜோதியளி" எனத்தொடங்கும் இந்த பாடல் கன்னட ரசிகர்களால் பெரிதும் இன்றும் விரும்பிக் கேட்கபடும் பாடல்.
எஸ்.பி.பி ஜானகி இருவரின் குரலுக்கு வாயசைத்து நடித்து இருப்பவர்கள் சங்கர்நாக், அக்ஷதாராவ்.

1984 ஆம் ஆண்டு, மணிவண்னன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்திற்கு இளையராஜா இதே மெட்டைப் பயன்படுத்தி விழியிலே எனத்தொடங்கும் பாடலை அமைத்திருப்பார். அதே எஸ்.பி.பி ஜானகி குரலுக்கு வாயசைத்து நடித்தவர்கள் மோகன் நளினி.

முதன் முறையாக இசையமைத்து 27 வருடங்களுக்குப் பிறகு இதே பாடல், பல விளம்பரப் படங்களை இயக்கிப் புகழ் பெற்ற பாலகிருஷணன் என்ற பால்கி இயக்கிய சீனிகம் என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் , தபு நடிக்க ஸ்ரேயா கோஷலின் குரலில் மீண்டும் இசை ரசிகர்களின் செவிகளில் தவழத்தொடங்கியது. மெட்டை மாற்றாமல் ஆனால் புதிய பின்னணியை சேர்த்து இளையராஜா இந்தப்பாடலை அட்டகாசப்படுத்தி இருப்பார்."புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!!" என ஒரு பாடலில் இளையராஜா வருவார். பழைய ராகங்களை அதன் சுவை மாறாமல் மறு அவதாரம் தருவதும் பெரிய விசயமே. இளையராஜாவின் காலத்தில் நாமும் இருப்பது நமக்குப் பெருமையே

தமிழ் கன்னட வீடியோக்களை வலையேற்றி வைத்திருந்த vasanthfriend அவர்களுக்கு நன்றி

ஹிந்திப்பாடலுக்கா veerpradeep அவர்களுக்கு நன்றி

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

அது சரி.. மாப்பிளை என்னடா.. ராத்திரியில எல்லாம் கண் விழிச்சு காத்திருக்கானேன்னு நினைச்சேன். இந்த மாதிரி ஆராய்ச்சி செய்யத்தானா...?

விடியோ தொகுப்புடன் கொடுத்திருந்ததால்.. எளிமையாக உணர முடிந்தது.

பாராட்டுக்கள்.

said...

இந்த மூன்றையும் தூக்கிச் சாப்பிடும் வீடியோ ஒன்று இருக்கிறது. பாருங்கள்

said...

Could you pleas pass on the MP3 download link for this song in Tamil.

Amazing music. Thanks for sharing.

cyril.alex@gmail.com

said...

//இளையராஜாவின் காலத்தில் நாமும் இருப்பது நமக்குப் பெருமையே
//

absolutely true.

but, somehow, Kannada sounds better than the other 2 versions. don't you think?

the link Prakash gave is excellent too. Chitra Iyer sings it well - but not as good as S.Janu -

but hey, we are die hard Janu fans, we cant accept anyone else messing with Janu songs.

said...

ஆமாம் சர்வேசன், மற்ற இரண்டு பாடல் வடிவங்களை விட என்னைக் கவந்தது "முதற்" கன்னட வடிவம் தான். ஜானகி பாடிய பாடல்களை வேறு யார் பாடினாலும் அவர் அளவிற்கு பாட முடியாது.

சிறில் சார், உங்களுக்குப் பாடல் அனுப்பி வைக்கின்றேன்.

said...

பிரகாஷ் நீங்கள் அனுப்பிய சுட்டிக்கும் நன்றி. எஸ்.பி.பி அவருக்கு நிகர் அவரேதான்

said...

//அது சரி.. மாப்பிளை என்னடா.. ராத்திரியில எல்லாம் கண் விழிச்சு காத்திருக்கானேன்னு நினைச்சேன். இந்த மாதிரி ஆராய்ச்சி செய்யத்தானா...?//

ரிப்பீட்டேய்..

said...

கன்னட வடிவம் இப்போதே பார்த்துக் கேட்டேன்.
நல்ல பாடல்

said...

Why dont i blame you that you just copied my blog post...?

http://kaalapayani.blogspot.com/2007/06/blog-post_19.html

Hmmmmmm....

said...

//இரா. வசந்த குமார். said...

Why dont i blame you that you just copied my blog post...? //

வசந்தகுமார் சார்,

என்ன சார் இப்படிக் குற்றம் சாட்டிவிட்டீர்கள், நீங்க சுட்டிய உங்களின் பக்கத்தைப் போய் பார்த்தேன். அருமையான வரிகளுடன் உவமானங்களுடன் பதிந்து உள்ளீர்கள். ஒரு வேளை இந்தப் பதிவு பதியப்படும் முன்னர் உங்களுடையதை பார்த்து இருந்தால் நிச்சயம் உங்களது பதிவிற்கு link கொடுத்து இருப்பேன். இப்பொழுது தான் பார்க்க நேர்ந்தது.

தங்களுடைய வார்த்தைகளின்படியே

//பகவான் இராமகிருஷ்ணரிடம் ஒருமுறை கடவுளின் வெவ்வேறு உருவங்கள், அவற்றின் வழிபாடு பற்றிக் கேள்வி கேடகப்பட்டது. பரமஹம்ஸர் ' தண்ணீரை 'பானி' என்றோ, 'வாட்டர்' என்றோ, 'தண்ணீர்' என்றோ, எந்தப் பெயர் சொல்லிக் குடித்தாலும் தாகம் நீங்குகின்றது. அதுபோல், பகவானை எப்பெயர் சொல்லி வழிபட்டாலும், அவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் ' என்றார்.

இசையெனும் பேரருவியும் அது போல் தானே.. //

ஒரே கான்செப்ட் மக்களை இரு வேறு வடிவில் சென்றடைந்துவிட்டது. உங்கள் பதிவுகளில் இருந்த மற்ற பதிவுகளையும் வாசிக்க என்னுடைய பேவரிட்ஸில் இணைத்துவிட்டேன். நீங்கள் தமிழ்வலைப்பதிவு திரட்டிகளில் இணைக்கவில்லையா!!!

தங்களை வருத்தப்படுத்தியமைக்காக வருந்துகின்றேன்

அன்புடன்
வினையூக்கி

said...

இரா.வசந்த குமார் சார்,
தாங்கள்தான் vasanthfriend என்ற பெயரில் யுடியூப் தளத்தில் தமிழ் கன்னட வடிவங்களை ஏற்றி வைத்தருப்பவரா!!
நன்றிகளை பதிவிலே இணைத்துவிட்டேன்.
அன்புடன்
வினையூக்கி

said...

யோவ் வினை,

எதையும் சொல்லமலே குடிச்சாலும் தாகம் தீரத்தான் செய்யும். என்னய்யா உவமை இது?? சரி மேட்டருக்கு வருவோம், அது "ஜொதெயளி" ஜொதே=ஜோடி. கன்னடாவில் வார்த்தைகள் மிகவும் மெலேட்டமாக இருக்கும் அழுத்தமின்றி எனவே அதில் அப்பாடல் மிகவும் இனிக்கிறது. விழியிலே.. அழுத்தம் சற்று அதிகம். ஜொதேயளி ஜொதேஜொதயளி... மிகவும் மெல்லிய உச்சரிப்பு. அதுதான் விசேடம்.

சில நாட்களுக்கு முன்பு நானும் என் பாஸும் இப்பாடல் குறித்து விவாதிக்கையில் அவர் சொல்லியது:

இளையராஜா கர்நாடகாவில் பிறந்திருந்தால் ஊர்தோறும் அவருக்கு சிலையும் கோயில்களும் இருந்திருக்கும். தமிழர்கள் அவருக்கு உரிய மரியாதையை தரவில்லை என்றார்.

அது எங்களோட குலவழக்கம் சாமின்னு சொல்லி தலைய தொங்கபோடவேண்டியதா போச்சு.

said...

இசை வாங்க... வாங்க... அந்த உவமை என்னுடையது அல்ல, இரா. வசந்தகுமாரின் இசை பலரூபங்களில் போகலாம் என்று அவர் சொல்லியது.

ஆமாங்க... என்னுடைய கன்னட நண்பர்கள் சிலரும் நீங்கள் பகிர்ந்து கொண்டதை சொல்லி இருக்கிறார்கள். இளையராஜா எங்களூரில் பிறந்திருந்தால் இன்னும் அதிகமாகவே கொண்டாடி இருப்போம் என்று.

said...

Hai,

Thanks for your reply. As we told, whatever the form, the music/ opinion has to go to the public.

thanks and sorry if i hurts any1 here.

+Vasanth.

said...

பெங்களூரிலே இருக்கும் போது இந்தப் பாடலை அடிக்கடி கேட்டியிருக்கிறேன்..

நான் கூட ஏதோ ராஜாவின் பாடல்களை நகலெடுத்துவிட்டார்களாக்கும் என்று நினைத்து வந்தேன். :)))

கன்னட திரைஉலகிலே, ராஜ்குமார் வீட்டிலே பிறந்திருந்தால் ஒழிய கோவில் எல்லாம் கட்ட மாட்டார்கள்..கன்னட திரை உலக அரசியல் ரொம்ப கொடுமையானது...

ராஜாவுக்கு கோவில் என்பது எல்லாம் ரொம்ப ஓவர். இதய கோவில்களில் குடியிருக்கிறார் என்பது நிதர்சனம். மேலும், அவரின் தனிப்பட்ட "பிம்பம்" நெருங்கவிடாத நிலையிலே இருத்திவிட்டது என்றும் சொல்லலாம்.

ஆசிப் மீரான் ஒரு பதிவு போட்டார், இசை ராசா இசைக்கு மட்டுமெ என்று..

மற்றபடி, இசைராசா காலத்திலே இருந்ததினாலே, ஏகப்பட்ட கோல்டன் மெலெடிஸ் கேட்கும் பாக்கியம் என்பது உன்மை..

( யூடுயூபிலே இருக்கும் பாடல்களுக்கு நன்றி சொல்லி போட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியா தவறா என்று ஒரு விவாதமே நடத்தலாம்..என் கருத்த : தேவையில்லாதது...)