Monday, October 15, 2007

உன் கனவு என் நினைவு - சிறுகதை

தலைவலியாக இருந்ததனால், சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாத்திரைகளை விழுங்கும் பொழுது, சின்ன உள்ளுணர்வு.. யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல். சன்னல் திரைச்சீலைகளை விலக்கிப் பார்த்தேன். வீட்டிற்கு வெளியே யாரும் இல்லை.
"ம்ம், தலைவலியுடன் கூட இருந்த உடற் அயற்சியினால் ஏற்பட்ட பிரமையாக இருக்கும். “ என நினைத்துக் கொண்டேன்.

தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி ஓடைகளை மாற்றி மாற்றி பார்க்கும் பொழுது, மீண்டும் அதே உள்ளுணர்வு, யாரோ மிக அருகில் என்னை உற்றுக் கவனிப்பது போல... பாசத்துடன் உற்று நோக்குவதாக... யாரோ என் கண்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதோ சொல்ல முயற்சிப்பதாக அந்த உள்ளுணர்வு சொல்லியது.

என்னையும் அறியாமல் ஒரு பயம் மனதைக் கவ்விக் கொண்டது. வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டு அருகில் இருந்த கோவிலுக்குப் போனேன். யாரோ என்னைப் பின் தொடர்வது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன் யாரும் நூறடி தூரத்திற்கும் என் பின்னே நடந்து வரவில்லை.

வேகவேகமாக கோவிலுக்குள் நுழைந்தேன். கோவிலில் சாமி கும்பிடும்போதும், அந்த உணர்வு தொடந்தது. யாரோ எனக்கு இடப்புறம் நின்று என்னுடன் சேர்ந்து கைக்கூப்பி சாமி கும்பிடுவது போல இருந்தது. கடவுளே!!! கோயிலில் கூடவா,

திடிரென உரைத்தது... யாரவது நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால் , அவர்களின் உயிர் பிரியும்பொழுது நாம் அவர்களுடன் இல்லை என்றால் நம்மை தேடி வருவார்கள் என்று என் பாட்டி சொல்லக் கேட்டு இருக்கேன்.

கோவிலை விட்டு வெளிவந்தவுடன், முதல் வேலையாக வீட்டிற்குக் கூப்பிட்டு அம்மா , அப்பா தம்பி எல்லோரிடமும் பேசிய பின் தான் எனக்கு மீண்டும் மூச்சு வந்தது போல இருந்தது. என்னோட அலுவலக மனேஜருக்கும் தொலைபேசினேன். நல்ல வேளை அவருக்கும் எதுவும் இல்லை. என்னை முக்கியமாக நினைக்கும் என் சில நண்பர்களிடமும் பேசினேன்.

யாரேனும் விட்டுப் போய் இருக்கிறார்களா!!! ஒரு வேளை ஜெனியாக இருக்குமோ!! ஜெனி நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண் இரண்டு வருடத்திற்கு முன் அவளுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்டாள். கடைசியாக அவளின் கல்யாணத்தின் போது கோயம்புத்தூரில் பார்த்தது. அதன் பிறகு அவளை நான் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் தான்.

அடுத்து ரம்யாவின் ஞாபகமும் வந்தது. வீட்டிற்குக் போக மனமில்லாமல் மீண்டும் அலுவலகத்திற்கே வந்தேன். ரம்யாதான் என்னோட இப்போதைய விருப்பம். அவளிடம் என் திருமண விருப்பத்தைச் சொல்ல ஒரு நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் கொன்டிருக்கிறேன். ரம்யா அவளது இருக்கையில் அமர்ந்து சுவாரசியமாக ஆர்குட்டில் தனக்கு வந்த "ஸ்கிராப்புகளை" பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் ஆர்குட்டிற்குப் போய் நீண்ட நாட்கள் ஆகிறது, ஆர்குட்டினுள் நுழைந்தேன். ஒரு புதிய நட்பு அழைப்பு கிடந்தது.... அட, அது ஜெனிபர் வேதநாயகம் ...அவளிடம் இருந்து ஒரு ஸ்கிராப்பும் வந்து இருந்தது அவளின் புரைபைல் போய் பார்த்தேன்... அவளின் கணவன் ஒரு வயதுக்குழந்தை ஆகியோருடன் ஜெனி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்திருந்தாள். ம்ம்ம் அவளின் சந்தோசத்தை அந்தப் புகைப்படங்கள் உறுதிபடுத்தின.

அவளின் ஸ்கிராப்பிற்கு பதில் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அவள் தன்னுடைய ஜிடாக் ஐடியைத் தந்து , சாட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

உடனே ஜிடாக்கில் அவளை இணைத்து,

“ஹலோ ஜெனி, எப்படி இருக்க"

“நல்லா இருக்கேன் கார்த்தி , you know, just got up from my bed, உன்னைப் பத்தி ஒரு கனவு வந்து தூக்கத்தை கலைச்சிடுச்சு , அந்த கனவு என்னன்னா, நீ ஒரு வீட்டில் தனியாக இருக்கிற, அங்க வந்து நான் உன்னைப் பார்க்கிறேன், நீ என்னைக் கண்டுக்க மாட்டுற, உன்னை ஃபாலோ பண்றேன்,, நீ என்னை திரும்பிப் பார்த்துட்டு போயிடுறஅப்புறம் வேற சிச்சுவேஷன்ல நீ கோயில்ல இருக்க ..அங்கேயும் என்னை நீ கண்டுக்கல, “

“ம்ம்ம்ம்"

"ரொம்ப நாள் கழிச்சு உன் ஞாபகம் வந்துடுச்சு, ஆர்குட்ல நீ இருப்பேன்னு தேடிப் பார்த்தேன்.. சர்ப்ரைஸா உன்னைத் திரும்ப கண்டுபிடிச்சுட்டேன், சரி நீ எப்படி இருக்க?!!"

அவள் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

=========== முடிந்தது======

9 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஏன் தனித்தளத்தில் எழுதாம, மறுபடியும் இங்கேயே எழுத ஆரம்பிச்சுட்டீங்க? நான் உங்க தனித்தளத்திலேயே, ரொம்ப நாளாக, 'என்னடா ஆளைக் காணோமே?' என்று தேடிக் கொண்டிருந்தேன்.

said...

இது டெலிப்பதியை பற்றியது. இது காதலுக்கு அப்பாலும் உள்ளுணர்வுடன் பல விடயங்களில் ஒத்துப் போகும். நம்பக் கஸ்டம். நான் சீர்காழி கோவிந்தராஜனின் பரமரசிகன்; ஒரு நாளிரவு அவர் பாடல் கேட்க வேண்டுமென நினைத்து கேட்டுக் கொண்டே உறங்கிவிட்டேன். விடிய என் நண்பர் கூறினார்.
சீர்காழியார்..இறையடி சேர்ந்துவிட்டார்.
நான் பாரிஸ் வந்த பின்,என் அம்மா அக்காவுடன் இருப்பதால் அவருக்கென தனியாக காசனுப்புவதில்லை.
ஒரு தடவை காசனுப்பிவிட்டு, கடிதமொன்று போட்டேன். அந்தக் கடிதத்தில் அம்மாவின் கையில் 2 ஆயிரம் ரூபா கொடுக்கவும்; அவர் விரும்பியதைச் செய்யும் படி எழுதினேன்; நான் கடிதமெழுதிய திகதி
என் தாயார் உயிர் பிரிந்துள்ளது; அக்கடிதம் அவர் 31 நாள் கிரிகையன்று கிடைத்து; வாசித்ததாக வீட்டார் எழுதினார்கள்.( அன்றைய நாளில் தொலைபேசி பரவலாக இல்லாததால் நான் ஒரு வாரத்தின் பின்பே அம்மா மறைந்த செய்தி அறிந்தேன்.
இப்போ பற்றற்ற எதையும் தாங்கும் மனநிலை..;இப்படியானவை இல்லை

said...

Interesting :)

said...

Interesting :)

said...

நல்ல விருவிருப்பு. ரசித்தேன்.

said...

Good Subject Line!

Good Story!

Thanks for sharing!

said...

very well told da......i throughly enjoyed ....

said...

hey...very well said selva...i was expecting ghost to come at some point of time and it took me to a surprise to read the finishing park...very well told da

said...

கதை நல்லா இருக்கு.. நன்றி.