Tuesday, November 20, 2007

மௌனராகம் - கார்த்திக் - ரேவதி காட்சிகள்

தொலைக்காட்சி ஓடைகளில் மௌனராகம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும்பொழுதும் கார்த்திக்-ரேவதி வரும் காட்சிகளைப் பார்க்காமல் விடுவதே இல்லை. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை.



ஒரு காட்சியில் மணிரத்னம் "continuity" யைத் தவற விட்டு இருப்பார். ரேவதி பயணம் செய்யும் பேருந்தை தொடர்ந்து வரும் கார்த்திக் லேசாக தாடி வைத்திருப்பார். ஆனால் பேருந்துக்குள் வரும்பொழுது முழுக்க சவரம் செய்யப்பட்டு பளபளப்பான முகத்தோடு வருவார். Frame by frame ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து இருந்து இருக்கலாம்.

கடலைக் கொறித்துக்கொண்டே கார்த்திக் பின்னோக்கி நடந்து வரும் காட்சி, அதே வசனங்களுடன் மணிரத்னத்தின் முதல்படமான அனில்கபூர் நடித்த பல்லவி அனுபல்லவியிலும் இடம்பெற்றிருக்கும். (கன்னடப் படமான இது, பின்பு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது)

கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமவுலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை.


படத்தை யுடியூப் தளத்தில் வலையேற்றி வைத்திருந்த பால்ஸ்055 க்கு நன்றி

2 பின்னூட்டங்கள்/Comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சொல்ல வேண்டி தளத்தை பார்வைம் இட வந்தேன்.. மிகவும் அருமயான வலைப்பூ ஒன்றை காணா நேர்ந்தது கண்டு மிக்க மகிழ்சி... தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்ட ராகாமாலிகா போல் ஒவ்வொரு பதிவும் அருமை.. நன்றி மீண்டும் வாழ்த்துக்களுடன்..

Thanjavurkaran said...

எனது மொபைல் போன்ல இந்தபின்னனி இசைதான் ரிங் டோன். இரண்டு விதமான பின்னணி இசையால் மூன்று விதமான உணர்வுகளை ஏற்படுத்துவார் ராஜா. நானும் தொடர்ந்து பார்த்து வருபவன். ஆனால் கார்த்திக் தாடி மாற்றம் கவனித்தது இல்லை. இனிமேல் கவனிக்கிறேன்.

இதேபோல் முதல் மரியாதையில் சிவாஜி அறிமுக கட்சியிலும் ராஜா பின்னி எடுத்திருப்பார். வடிவுக்கரசி சோறு போடும்போதும், காபி குடிக்கும் போதும் ஒரு சோக வயலின், சிவாஜி வீட்டை விட்டு வெளியே வந்து ஆகாயம் பார்த்து உற்சாகம் அடையும் பொது எழும் பின்னணி இசை. எக்ஸ்செல்லேன்ட். முடிந்தால் கவனிக்கவும்