Monday, November 28, 2005

தமிழ் அன்பர்களே,
"அகவல்" என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன என்று கூறமுடியுமா?

ஆங்கிலத்தின் "Never Say Never" என்ற சொற்றொடர் போல தமிழில் உண்டா?

தமிழில் Vocabulary மேம்படுத்த ஏதேனும் இணையத்தளங்கள் உள்ளனவா?
ஆவலுடன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

Saturday, November 26, 2005

இந்தியவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது இந்தியர்கள் மைதானத்தில் சந்தோசத்தில் குதிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா.... நேற்று நடந்தது. திராவிட் அவுட் ஆகி வெளியே வரும்போது பவுலரைப் பாராட்டும் விதமாக ஒரே கைத்தட்டல். திராவிட்டின் முகத்தில் ஒரு கடுகடுப்பு தெரிந்தது. ஸ்மித் அடித்த ஒவொவொரு பவுண்டரிக்கும் என்ன ஒரு ஆரவாரம். தங்களின் "ஆல்ரவுண்டர் கங்குலி" ஆதரவை எவ்வளவு நாசூக்காக தெரிவித்தனர். பாராட்டுக்கள்

Thursday, November 24, 2005

உங்களுக்கு தெரிந்த உடற் ஊன்முற்ற பட்டதாரி நண்பர்களுக்கு இந்த தகவலை அளிக்கவும்

AbilityFoundation Madras...

They are like a consultancy who bring companies for recruitment for the disabled...who completed Diplomma,B.Sc,B.Tech etc....Till now they have made 32companies for recruitment...they had, 700 disabled candidates attending the interview and out of them 65 candidates were selected and now they are in the job.. this is a great oppurtunity for them....this is for people who completed their degree or doing their degree...

And November 30th is the last date for registering for interview...only registered candidates are allowed to attend the interview they dont want any mishappenings without registration...Dec 17th,18th interview .... they prefer only one person accompanying the candidate for help.

conducted by Lions club and sponsered by ASN india.contact

details: www.abilityfoundation.com

For more queries Call : +91 44 2445 2400 Or mail at abilityindia@vsnl.net


Employee Ability-2005

C /o.Ability Foundation,
28,Second cross street,
Gandhi Nagar,
Adayar,
Madras.
044-24452400

Wednesday, November 23, 2005

நேற்று ஒரு நல்ல காரியம் சம்பந்தமாக எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் அந்த நல்ல காரியத்தை நாளை செய்வதாக கூறினார். நான் வேண்டாம், இன்றே செய்து விடுங்கள் இன்று புதன் கிழமை நல்ல நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றேன். அவரும் சரி என்று அந்த விசயத்தை செய்ய கிளம்பினார்.


அவர் சென்றவுடன் என் அருகில் இருந்த நபர், என் ந்ண்பர் கேட்டார் உனக்கு நாள், கிழமை இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்று,
நல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே... நன்றே செய்.. நன்றும் இன்றே செய் என்பதற்காக அவரிடம் அப்படிக் கூறினேன் என்றேன்.


ஒரு வேளை அவர் நாளை வந்து இதைப் பத்தி கேட்டிருந்தால் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்றும், வெள்ளி அன்று வந்து இருந்தால் வெள்ளி எல்லாருக்கும் புனிதமான நாள் என்றும், சனி அன்று வந்து இருந்தால் வெங்கடாசலபதி க்கு உகந்த நாள் நல்ல காரியத்தை உடனே தொடங்குங்கள் என்று சொல்லி இருப்பேன் என்றேன்.


என் நண்பரும் என்னை மடக்கும் விதமாக ஞாயிறு என்றால் ... நான் சொன்னேன் ஞாயிறு அன்று விடுமுறை நாள் எந்த ஒரு காரியத்தையும் ஆழ்ந்து வேறு எந்த அலுவல்களின் தொந்தரவு இல்லாமல் செய்ய முடியும். நானே தொடர்ந்து திங்கள் கிழமை வாரத்தின் முதற் நாள், நல்ல காரியத்துடன் தொடங்கலாம் என்றிருப்பேன் என்றேன்.


செவ்வாய் பொதுவாக யாருக்கும் ஆகாது என்பார்கள், அன்று நல்ல காரியத்தைப் பற்றி விவாதிக்க வந்து இருந்தால் என்ன செய்வாய் என்று புத்திசாலித் தனமாக் மடக்கினார்.

ஒரு அறிவியல் பூர்வமான உண்மை செவ்வாய் கிழமை தான் வார நாட்களிலேயே " The Most Productive Day". ஆகையால் உடனே நல்ல காரியத்தை முடித்து விடுங்கள் என்று இருப்பேன் என்றேன்.

செய்யும் காரியம் மட்டுமே முக்கியம் நாள், கிழமை அல்ல என்று முடித்தேன்,
அவரும் என் வாத திறமையை மெச்சி அவர் வேலைப் பார்க்க கிளம்பினார்.
அவர் சென்றவுடன் நான் அன்றைய நாளிதழை எடுத்து எனக்கான ராசிப் பலனைப் பார்க்கலானேன்.
Monday, November 21, 2005

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக செய்திகளை முந்தித் தருவது உங்கள் "---" தொலைக்காட்சி மற்றும் "---" நியூஸ்.
ஆனால் இன்று சானியா மிர்சா கொச்சியில் மலபார் ஜுவல்லரிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிநடப்பு செய்ததை எனோ 8 மணி செய்தியில் காட்டவில்லை. சிக்னலில் நிற்கும் வண்டிகளை எல்லாம் படம் பிடித்து வந்து விட்டு சாலை மறியல் என்று படம் காட்டுகிறவர்கள் இதை எப்படி விட்டார்கள்செய்தி வந்து சேரவில்லையா அல்லது வழக்கமான இருட்டடிப்பா!!!!! சூரியனுக்குத்தான் வெளிச்சம்.

கடந்த ஒரு மாதத்தில் அதிக முறை தமிழ் தொலைக்காட்சிகளில், வானொலிய் அலைவரிசைகளில் பேட்டி அளித்தவர் யார் தெரியுமா!!!! குஷ்பூ வா, ராமதாஸா, திருமாவளவனா, கராத்தேயா......ம்ஹூம் யாருமில்லை.....
சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் - திரு. இரமணன்.

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்கள் முடிந்ததும் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால் பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சியின் போது நம்மூர் அரசியல்வாதிகள் பத்தோடு பதினொன்றாக அசடு வழிந்து கொண்டு நிற்பது.....

எனக்கு காரசாரமாக ஒரு பதிவுப் போட வேண்டுமென்று ஒரு விருப்பம். ஆனால் ஒரு முறை ஹிந்திக்கு ஆதரவாக ஒரு பதிவுபோட்ட போது என் தந்தை அறிவுரை கூறினார் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா!!! அதனால் சில பரபரப்பான விசயங்களைப் பற்றி பதிய முடியவில்லை. கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது என்று சொல்வார்கள்.

இருந்தாலும் யாரையாவது வம்பிழுக்க வேண்டுமென்று தோன்றியபோது நினைவுக்கு வந்தது நம்ம டெண்டுல்கர் தான்.

நாம் எப்போதும் டெண்டுல்கருக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்துள்ளோமோ என்று தோண்றும். ஒரு மேட்ச் அடித்து விட்டு பத்து மேட்ச் அடிக்காமலிருந்தாலும் நாம் டெண்டுல்கரை ஒன்றும் விமர்சனம் செய்வது இல்லை.

கடைசி பத்து ஆட்ட்ங்களில் அவரது ஸ்கோர்
1, 9, 93 , 67, 2, 11, 19, 39, 2, 2 மொத்தம் 245 பத்து ஆட்டங்களில்.

மக்கள் உடனே சொல்வார்கள் ஷார்ஜா வில் அடித்த அடி என்ன? வோர்ல்ட் கப்பில் அடித்த அடி என்ன என்று... ஷார்ஜாவில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதுமே சந்தேகத்துக்கு உட்பட்டவை.

வோர்ல்ட் கப்பில் கூட இரண்டாம் தர பவுலர்களைத்தான் அடிக்க முடிந்தது. பாகிஸ்தான் ஆட்டம் யுவராஜ் இல்லை என்றால் தோற்றுப்போய் இருப்போம். ஆஸ்திரேலியவுக்கு எதிரான் இரண்டு ஆட்டங்கள் மற்றும் நியுசிலாந்து ஆட்டங்களில் ரன் எடுக்க முடியவில்லையே....

டெண்டுல்கரின் பாதிக்கு மேற்பட்ட சதங்கள் சுமாரன பவுலிங்க்கு எதிராக வந்தமை. கடைசிப் பத்து வருடங்களில் கங்குலியும் டெண்டுல்கருக்கு சமமாக ஆடியும் கங்குலி ஆடதபோது குறை சொன்னவர்கள் டெண்டுல்கர் ஆடதபோது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.

முக்கியமான ஆட்டங்களிலோ, இக்கட்டான தருணங்களிலோ டெண்டுல்கர் பெரும்பாலும் ஆடியதில்லை. ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட வெற்றிகளை, யார் ஆடினாலும் வெற்றி பெற்று விடும் என்று சூழலிலே ஆடி வெற்றி பெற வைப்பது பெரிய விசயமல்ல.

நிச்சயம் அடி விழும் என்று தெரிந்தே எழுதி உள்ளேன். போடுங்கள் உங்கள் பவுன்சர்களை...

நன்றி கிரிகின்போ இணையத்தளம்

நண்பர்களே, இலவச ஆங்கில ஈ-புத்தகம் GodsDebris by Scott Adams

இதன் கருத்துக்கள், சொல்ல வந்த விசயம் ஆகியன நன்றாக உள்ளது.
படித்துப் பாருங்கள்.

http://www.andrewsmcmeel.com/godsdebris

Wednesday, November 16, 2005

"கிரி" பட வடிவேலு இன்டர்வியுக்கு போனால்

நான் சரி ஒரு ரவுண்ட் தானே ண்னு ஒரு இன்டெர்வியுக்கு போனேன் அங்க 5 பேர் மா, மாத்தி மாத்தி கொஸ்டின் கேட்டங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆன்ஸர் சொன்னேன்.
அப்புறம் 4த் ப்ளோர் போங்க, ஆஃபர் லெட்டர் வாங்கிக்குஙன்னு சொன்னானுங்க, சரின்னு நானும் நம்பி 4த் ப்ளோர்க்கு போனேன். அங்க 8 பெரு , அவங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ கொஸ்டின் கேட்டங்க.
திடீர் நு ஒருத்தன் HRக்கு போன் போட்டு... மச்சான்.. ஃபிரீயா இருந்தா வாடா, இங்க ஒருத்தன் சிக்கி இருக்கான்னு சொன்னான். நானும் எவ்வளோ நேரம் தான் ஆன்ஸர் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது. அதுல ஒருத்தன் சொன்னான் ,என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்ட இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் மா...


பின்குறிப்பு : இது எனக்கு வந்த ஈ-மெயில்

Sunday, November 13, 2005

சென்னை எக்மோரிலிருந்து வளசரவாக்கம் வர கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே ரூபாய் 100 அல்லது 110 தான் கொடுத்து வருகிறேன். இந்த வருடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய் ஏறி உள்ளது. உண்மையில் சில சமயங்களில் ஆட்டோ டிரைவர்களின் கதையை கேட்கையில் மிகவும் பரிதாபமாக இருக்கும். ஷேர் ஆட்டோ வந்தப் பிறகு இன்னும் அவர்களது நிலை மோசம்.

ஒரு ஆட்டோ டிரைவருடன் பேசுகையில் அவர் சொன்ன விசயம் ஆச்சர்யப்பட வைத்தது,
குடிப்பழக்கம், சினிமா, அரசியல் சார்பு இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர் நிச்சயம் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை லாபம் மட்டும் சம்பாதிக்கலாம்.

இன்னும் 10 ரூபாய் பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மினி பஸ் வந்தால் கூட

நான் கொடுக்கும் முக்கிய இடங்களுக்கான ஆட்டோ கட்டணம்

எக்மோர் - வளசரவாக்கம் - 100 - 110
எக்மோர் - வடபழனி - 60 - 70
சென்ட்ரல் இருந்து வந்தால் 15 கூட கொடுக்கலாம்.
வளசரவாக்கம் - நுங்கம்பாக்கம் 70
கோயம்பேடு - நுங்கம்பாக்கம் 60
டி.நகர் - கோயம்பேடு 70
தி.நகர் - வளசரவாக்கம்.
பெசன்ட் நகர் - வளசரவாக்கம் 140
அம்பத்தூர் - சத்யம் சினிமா 150

மற்ற இடங்களுக்கான கட்டணம் அவ்வபோது பேரம் பேசி படியும்.

எனக்கு ஒரு யோசனை ஏன் ஆட்டோக்களை எல்லாம் அரசுடைமையாக்கி , ஆட்டோ டிரைவர்களை போக்கு வரத்து ஊழியர்கள் போல் ஆக்க கூடாது.

அரசுக்கும் லாபம், மக்களுக்கும் நிம்மதி....

என்க்கு ஆங்கிலப் படமே சப்-டைட்டில் போட்டாதான் புரியும், இந்த லட்சணத்தில் நான் சத்யம் ல நேற்று ஒரு பிரென்ச் படம் பார்த்தேன்(ஆங்கில சப்-டைட்டிலுடன் தான்). நான் பிரென்ச் படிக்கும் அலையான்ஸ் பிரான்ஸெ யில் காம்ப்ளிமென்ட் பாஸ் கிடைத்தது.

அம்பத்தூரில் என் ந்ணபனின் திருமணத்திற்கு சென்று விட்டு 10 நிமிடம் தாமதமாக தியேட்டர் வந்த்டைந்தும், என் அதிர்ஷ்டம் காரணமாக படம் சில நிமிடங்கள் ஓடிய பின் திரும்பவும் ஆரம்பித்தார்கள். படத்தின் கதை எளிமாயானது. வீடா என்ற ஆப்பிரிக்க கதாநாயகி பாரிஸ் செல்லும் முன் தன் தாயிடம் சத்தியம் செய்கிறாள் எக்காரணம் கொண்டும் பாட மாட்டேன் என்று.
அக்குடும்பத்தில் பெண்கள் பாடினால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற அவள் தாயின் நம்பிக்கை காரணமாக அப்படி ஒரு சத்தியம் செய்கிறாள்.


ஆனால் பாரிஸ் சென்ற பின் தன் பிரென்ச் காதலனின் வற்புறுத்தாலால் அவள் பாடி உலகப் புகழ் பெறுகிறாள். தன் குற்ற உணர்ச்சியின் காரணமாக திரும்பவும் தன் நாட்டிற்கு வந்து அம்மவிடம் ம்ன்னிப்புக் கோருகிறாள். தான் பாடியதன் காரணமாக தான் இறந்து விட்டதாகவும் தனக்கு ஈமச்சடங்கு நடத்தும்படியும் கேட்டுக்கொள்கிறாள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் மென்மையான நகைச்சுவை.

தமிழ் படங்களில் பாடல்கள் இருப்பதற்கு குறை சொல்பவர்கள், இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் சொல்ல மாட்டர்கள். 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பாடல். எல்லாம் ரசிக்கும் படியாகவே இருந்தன.

எனக்கு சாரு நிவேதிதா வின் கோணல் பக்கங்களைப் படிக்கும்போது அவர் குறிப்பிடும் பிரென்ச் மொழி பிரென்ச் இசை ஆகியவைப் பற்றி பெரிய எண்ண்ங்கள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது புரிகிறது அவர் ஏன் அவ்வளவு சிலாகித்து எழுதியுள்ளார் என்று.

படத்தைப் பார்த்தப் பிறகு, நாம் இசை, நடனம் மற்றும் நாடகம்[திரைப்படம்] ஆகிவற்றை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது மேற்தட்டு மக்களுக்கானவை என்று ஒதுக்கி வைத்துள்ளோமோ என எனக்கு தோன்றியது.

சினிமா இசை, நடனம் தவிர நம் நகரங்களில் வசிக்கும் பாமரனுக்கு வேறு எந்த வடிவிலும் இசை தெரியாது. கிராமத்தவர்கள் பரவாயில்லை, அவர்களுக்கு நாற்று நடுகையில் ஒரு பாட்டு, களைஎடுக்கையில் ஒரு பாட்டு என வித விதமாய் பாடற்கள் வைத்துள்ளார்கள்.

நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒருவர் எபோதும் ராகத்தோடு செய்யுள்களை நடத்துவார். ராகத்தை பிடித்துவிட்டாள் நிச்சயம் செய்யுளைப் பிடித்து விடலாம். என் வகுப்பில் மனப்பாட செய்யுள்களில் அனைவரும் முழு மதிப்பெண் எப்போதும் பெற்றி விடுவோம்.

இசையுடன் அமையும் இவ்வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும். பல சமயங்களில் இலுப்பைப்பூ சர்க்கரைப் போல் சினிமா இசைக் கூட இனிமை தான்.

Thursday, November 10, 2005

நான் எழுதி வரும் தொடர்கதை நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன் ஐ படித்து விட்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக கோ.கனேஷ், ராகினி மற்றும் முத்து ஆகியோருக்கு அதிக நன்றிகள்.

எந்தொரு எழுத்தாளனின் முதற் கதையும் அவன் சொந்தக் கதையாகத்தான் இருக்கும்.

என் சக ஊழியர்கள் அவர்களின் இடைவிடாத பணிக்கும் மத்தியிலும் படித்து குறை நிறை களை சுட்டி காட்டியமைக்கு நன்றி.


அதிகம் ஆங்கிலம் கலப்பதாக ஒரு "கொட்டு" விழுந்துள்ளது. இயற்பாக எழுத நினைக்கையில் இப்படி ஆகிவிடுகிறது.

நீண்ட நாட்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த கதையில் பிடித்த வரி.
நமக்குப் பிடிச்சவங்களுக்காக நாம கஷ்டப்படுறதும், நமக்காக நமக்கு பிடிச்சவங்களை கஷ்டபடுத்துறதும் ஒரு சுகம்.

அந்த மாதிரி என் பதிவுகளை என் நண்பர்களுக்கு அனுப்பி ஆனந்தமடைகிறேன்.Wednesday, November 09, 2005

கடந்த ஞாயிறன்று, தெலுங்கு ஆதித்யா சேனலில் நம்ம சூர்யா பேட்டி லைவ் ஆ போய் கொண்டிருந்தது. அஹமதாபாத் மாட்ச் போரடிச்சதால் ஆதித்யாவுக்கு தாவினேன். "பாகுன்னாரு" என்ற தெலுங்கு வார்த்தையை தவிர மற்றவையெல்லாம் ஆங்கிலம்.
ராஜமுந்திரியில் இருந்து ஒரு தெலுங்கர் தமிழில் கூப்பிட்டுப் பேசினார். "கஜினி" தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட் ஆகியுள்ளதாம். நிச்சயம் எந்த ஒரு தமிழ் சேனலிலும் இது போல் ஒரு தெலுங்கு நடிகரின் பேட்டி கனவிலும் சாத்தியம் அன்று.
வாழ்க தெலுங்கு மக்களின் திரை நேசம்.
நிகழ்ச்சியின் போது கீழே ஓடிகொண்டிருந்த SMS

kalpana: Sanjay Ramasamy I love you.

எல்லோரும் மஜா வா இருக்கனும்.. இதுதான் மஜா படத்தில் சொல்ல வந்த விசயம்.

மலையாளத்தில் "தொம்மனும் மக்களும்" என்று மம்மூட்டி, ராஜன்.பி.தேவ், ஆனந் நடித்து வந்தப் படம்.

படத்தின் ஹைலைட் - பசுபதி.

படத்தில் விக்ரம், முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் அஸாருதின் போல் எதோ வந்தோம் போனோம் என்று நடித்துள்ளார்.

மலையாளத்தில் தமிழ் நடிகர் ஆனந் வில்லன். தமிழில் மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லன்.


சீ சீ பாடலைத் தவிர, படத்தை குடும்பத்தோடு தைரியமாகப் பார்க்கலாம்.

ராஜேஷ் குரல் நடிகர் முரளிக்கு சரியாகப் பொருந்துகிறது.

காம்ப்லெக்ஸான கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறைப் பார்க்கலாம்.

இன்று நான் ரசித்த ஐவர்:

1. பாண்டி பஜாரில் ட்ராபிக்கை நிருத்தி, ஒரு மூதாட்டிக்கு ரோட்டை கிராஸ் பண்ண உதவிய ட்ராபிக் கான்ஸ்டபிள்.

2. தி.நகர், துரைசாமி சுரங்கப்பாதையில் இரண்டு பள்ளி மாணவ்ர்களுக்கு லிப்ட் கொடுத்த பல்ஸ்ர் பைக் இளைஞன்.

3. மழையிலும், அதிகம் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர்.

4. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சர்ச்சுகுள் சென்ற சிறுவன்.

5. அதிசயமாய் இன்று என்னைப் பார்த்து சிரித்த பக்கத்து வீட்டுப் பெண்.