Monday, November 28, 2005

தமிழ் அன்பர்களே,
"அகவல்" என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன என்று கூறமுடியுமா?

ஆங்கிலத்தின் "Never Say Never" என்ற சொற்றொடர் போல தமிழில் உண்டா?

தமிழில் Vocabulary மேம்படுத்த ஏதேனும் இணையத்தளங்கள் உள்ளனவா?
ஆவலுடன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

அகவல் என்றால் கடிதம் என்று நினைக்கிறேன்.(not sure)

இல்லையென்று இல்லாமல் என்ற சொற்றொடரை பாருங்கள்.

said...

"அகவல்" என்பது பழைய தமிழ் பா வகை ஒன்று.

வெண்பா, கலிப்பா, விருத்தம் போல.

அசை சீர் என்பவற்றின் வைப்புமுறை கோலம் எப்படி இருக்கிறது என்பதைப்பொறுத்தே பா வகைகள் அமைகின்றன.

இந்த கோலத்தின் படி பா புனையும்போது அவ்வப்பாக்களுக்கென சிறப்பான ஓசைகள் எழும்.

உதாரணமாக வெண்பாவில் இயல்பாகவே "சொல்வது" போன்ற ஓசை எழும். அதனால் அதை செப்போசை என்பர்.
குறள் வெண்பாவும் செப்போசை உடையது.

அகவல் வகையில், மயில் அகவுவது (மயில் எழுப்பும் ஓசை) போன்ற ஓசை எழும் அதனால்தான் அது அகவல் என அழைக்கப்படுகிறது.

பேஜர் என்று ஒரு தொழிநுட்பம் நினைவிருக்கிறதா?

அதற்கு அக்காலத்தில் "அகவி" என்ற கலைச்சொல்லை வைத்தார்கள். அகவுவது போன்ற ஓசையை எழுப்புவதால்.

said...

Is it not dictionary??

said...

அகவல் என்பது கட்டுரை என்று நினைக்கிறேன். அகவை என்பது வயது. மயில் அகவும் என்று சொல்வார்கள் செல்வா.