Thursday, December 15, 2005

நண்பர்களே,

ஒரு வார தலைநகர் டெல்லி பயணம் மற்றும் உடற் நலக்குறைவு காரணமாக எதுவும் பதிய இயலவில்லை. ஹிந்தி தெரியாமல் விழித்ததைத் தவிர பயணம் நல்ல படியாக முடிந்தது.தாஜ்மகால் விசிட் ஒரு குறிப்பிடத்தக்க விசயம்...ஏனோ தாஜ்மகாலைப் பார்த்தவுடன் ஒரு "ரொமாண்டிக்" ஃபீலிங் ஏற்படவில்லை. 22 வருடத்திய "வறுமையின், தனி மனித பிடிவாததின்" நினைவுசின்னமோ என்று தோன்றியது. எதுவாகினும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் தான்.

ஆக்ராவின் நகர வீதிகளில் செல்லும்போது, எங்களது வண்டி டிரைவர் கூறியது, ஆக்ராவில் பாதிப் பேர் பைத்தியங்கள், மீதிப் பேர் பைத்தியங்களாக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

1 பின்னூட்டங்கள்/Comments:

வினையூக்கி said...

அதென்ன பேரு ஜிகிடி....
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒரு முக்கியமான நபரை, அப்துல் கலாமை சந்தித்து விட்டுத்தான் வருகினொன்றோம்.