Sunday, November 13, 2005

என்க்கு ஆங்கிலப் படமே சப்-டைட்டில் போட்டாதான் புரியும், இந்த லட்சணத்தில் நான் சத்யம் ல நேற்று ஒரு பிரென்ச் படம் பார்த்தேன்(ஆங்கில சப்-டைட்டிலுடன் தான்). நான் பிரென்ச் படிக்கும் அலையான்ஸ் பிரான்ஸெ யில் காம்ப்ளிமென்ட் பாஸ் கிடைத்தது.

அம்பத்தூரில் என் ந்ணபனின் திருமணத்திற்கு சென்று விட்டு 10 நிமிடம் தாமதமாக தியேட்டர் வந்த்டைந்தும், என் அதிர்ஷ்டம் காரணமாக படம் சில நிமிடங்கள் ஓடிய பின் திரும்பவும் ஆரம்பித்தார்கள். படத்தின் கதை எளிமாயானது. வீடா என்ற ஆப்பிரிக்க கதாநாயகி பாரிஸ் செல்லும் முன் தன் தாயிடம் சத்தியம் செய்கிறாள் எக்காரணம் கொண்டும் பாட மாட்டேன் என்று.
அக்குடும்பத்தில் பெண்கள் பாடினால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற அவள் தாயின் நம்பிக்கை காரணமாக அப்படி ஒரு சத்தியம் செய்கிறாள்.


ஆனால் பாரிஸ் சென்ற பின் தன் பிரென்ச் காதலனின் வற்புறுத்தாலால் அவள் பாடி உலகப் புகழ் பெறுகிறாள். தன் குற்ற உணர்ச்சியின் காரணமாக திரும்பவும் தன் நாட்டிற்கு வந்து அம்மவிடம் ம்ன்னிப்புக் கோருகிறாள். தான் பாடியதன் காரணமாக தான் இறந்து விட்டதாகவும் தனக்கு ஈமச்சடங்கு நடத்தும்படியும் கேட்டுக்கொள்கிறாள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் மென்மையான நகைச்சுவை.

தமிழ் படங்களில் பாடல்கள் இருப்பதற்கு குறை சொல்பவர்கள், இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் சொல்ல மாட்டர்கள். 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பாடல். எல்லாம் ரசிக்கும் படியாகவே இருந்தன.

எனக்கு சாரு நிவேதிதா வின் கோணல் பக்கங்களைப் படிக்கும்போது அவர் குறிப்பிடும் பிரென்ச் மொழி பிரென்ச் இசை ஆகியவைப் பற்றி பெரிய எண்ண்ங்கள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது புரிகிறது அவர் ஏன் அவ்வளவு சிலாகித்து எழுதியுள்ளார் என்று.

படத்தைப் பார்த்தப் பிறகு, நாம் இசை, நடனம் மற்றும் நாடகம்[திரைப்படம்] ஆகிவற்றை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது மேற்தட்டு மக்களுக்கானவை என்று ஒதுக்கி வைத்துள்ளோமோ என எனக்கு தோன்றியது.

சினிமா இசை, நடனம் தவிர நம் நகரங்களில் வசிக்கும் பாமரனுக்கு வேறு எந்த வடிவிலும் இசை தெரியாது. கிராமத்தவர்கள் பரவாயில்லை, அவர்களுக்கு நாற்று நடுகையில் ஒரு பாட்டு, களைஎடுக்கையில் ஒரு பாட்டு என வித விதமாய் பாடற்கள் வைத்துள்ளார்கள்.

நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒருவர் எபோதும் ராகத்தோடு செய்யுள்களை நடத்துவார். ராகத்தை பிடித்துவிட்டாள் நிச்சயம் செய்யுளைப் பிடித்து விடலாம். என் வகுப்பில் மனப்பாட செய்யுள்களில் அனைவரும் முழு மதிப்பெண் எப்போதும் பெற்றி விடுவோம்.

இசையுடன் அமையும் இவ்வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும். பல சமயங்களில் இலுப்பைப்பூ சர்க்கரைப் போல் சினிமா இசைக் கூட இனிமை தான்.

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

நீங்கள் ரசித்ததை(யே)... நானும் ரசிக்குமளவுக்கு அழகாக எழுதியிருக்கின்றீர்கள். நன்றி.

said...

படத்தின் பெயரை சொல்லவில்லையே !

said...

அதானே.....படத்தோட பேரச் சொல்லுங்க.....

said...

What is the title of the film?