சென்னை பதிவர் பட்டறை(ஆகஸ்ட் 5, 2007) , இரண்டு வருடங்கள் நிறைவு
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை பல்கலை கழக வளாகத்தில் இதே ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பதிவர்கள் திண்ணைப்பேச்சு அரட்டையாளர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் கருத்து மாறுபடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பதிவர்கள் ஒன்றிணைந்து நடத்தி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.
வலைப்பூக்களின் வீச்சு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மற்றும் ஒரு பதிவர் பட்டறை சென்னையில் நடத்தப்பட்டால் நன்றாக இருக்குமோ!!!
பட்டறை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.
பதிவர் பட்டறைகள் புதியவர்களை உள்ளிழுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நிதர்சனம். ஊர் கூடி தேர் இழுத்தல் அழகுதானே!!!
சென்னையில் மீண்டும் ஒரு பட்டறை முன்பை விட சிறப்பாகவும் அதிக நபர்களை உள்ளிழுக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். சென்னையில் இருக்கும் பதிவர்கள் கவனிப்பார்களா!!!
---
சென்னைப் பதிவர் பட்டறை முடிந்த கையோடு புதுவை பதிவர்கள் இணைந்து நடத்திய புதுவை வலைப்பதிவர் பட்டறையும் மிகுந்த வெற்றி பெற்றது.
சிறு நகரங்கள் பெரு நகரங்களுக்கெல்லாம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என விழுப்புரம் பயிலரங்கம் அமைந்திருந்தது.
4 பின்னூட்டங்கள்/Comments:
புதுப் பட்டறைப் போட்டாச் சொல்லுங்க.
இந்த ரெண்டு வருசத்துலே புதுசாப் பதிவு எழுத வந்தவங்க எண்ணிக்கைப் பலமடங்கு கூடி இருக்கே!
அதுவே வெற்றிதான்.
:-)
நல்ல விஷயம்.
மதுரை தமிழில் பட்டறையை போட்டுருவோம்ன அர்த்தம் வேற,
குப்பன்_யாஹூ
பழைய செய்திகளை நினைவு படுத்தி இருக்கிறீர்கள்
மீண்டும் புதிதாய் எழுவோம்
நன்றி
சுகுமாரன்
Post a Comment