Tuesday, August 07, 2007

கற்றதும் கற்றுக் கொடுத்ததும் - வலைப்பதிவர் பட்டறை

பட்டறைக்கு முந்தைய நாள் :

உற்சாகம் என்பது ஒரு தொற்று விசயம். ஒருவரின் உற்சாகமே நம்மை எளிதாகப் பீடித்துக் கொள்ளும் எனும்போது, உற்சாகக் கடலில் தள்ளி விட்டால் எப்படி இருக்கும்..பாலாவை வழக்கம்போல ஓட்டிவிட்டு(கலாய்த்து விட்டு) மா.சிவக்குமார் , நந்தா ஆகியோருடன் அரங்கை அடைந்தவுடனேயே அவர்களின் உற்சாகம் "ஆவி" போல் மனதிலும் உடலிலும் புகுந்து விட்டது. இந்த "ஜெயா" என்று பெயர் வைத்திருப்பவர்களே அதிரடிதான் போலும்.மறுநாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனைகளை கொடுத்து ஷாகித் அப்ரிடி போல அடித்து ஆடிக்கொண்டிருந்தார்.

சுந்தருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவர் காபி மெஷின் எடுக்க நந்தாவுடன் வடபழனிக்கு பறந்து போனார். அதனை அடுத்து ஓசை செல்லா , தான் ஹோட்டலில் இருந்து வருவதையும் நேரிடை ஒலிபரப்பை மா.சிவக்குமாரிடம் செய்து கொண்டிருக்க, லக்கிலுக்கும், அவரின் நணபரும் ஸ்டேஷனரி அயிட்டங்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தனர். லக்கி உங்களுக்கு மட்டும் எப்படிங்க இண்ஸ்டண்ட் நண்பர்கள் கிடைக்கிறாங்க...

மாலை டீ கூட குடிக்காமல் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருக்க , நந்தாவும் ஜேகேவும் சமயோசிதமாக பீச்சில் டீ விற்றுக் கொண்டிருந்தவரை பல்கலை வளாகத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தனர். 3 ரூபாய் டீக்கு தான் எவ்வளவு சக்தி... மக்கள் மீண்டும் பம்பரமாக வேலை பார்க்க ஆரம்பித்தனர். இதனிடையில் உண்மைத்தமிழன் வந்து சேர்ந்தார். மீண்டும் அவரை பதிவு எழுத வருமாறு நண்பர்கள் திகிலுடன் கேட்டுக்கொண்டனர்.

உண்மைத்தமிழனுடன் நானும் கதைக்க ஆரம்பித்த போது என்னையும் ஜேகேவையும் பரிமேலழகர் பயிற்சி அறைக்கு சென்று கணினிகளை இணைக்க மா.சிவக்குமார் பணித்ததனால் மேலே சென்று, கணினிகளை இணைக்க ஆரம்பித்தோம். ஜேகேவின் சுறுசுறுப்பு ஆச்சர்யப்பட வைத்தது. ஒரே சமயத்தில் பலவேலைகளை எடுத்துக் கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து முடித்தார். பாலபாரதி கண்டிப்பாக தமிழ்99 பற்றி தான் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டதால் இ-கலப்பை/பயர்பாக்ஸ் ஆகியனவற்றை பொன்ஸின் மேற்பார்வையில் அனைத்து கணிணிகளிலும் தரவிறக்கினோம்.
கணினி வேலைகளை முடித்துவிட்டு கீழே வரும்போது செந்தழல் ரவி வரவனையான் ஜெய்சங்கர் ஆகியோர் மும்முரமாக குறுந்தகடுகளையும் சுவடிகளையும், அதற்கான பையில் போட்டுக் கொண்டிருந்தனர்.

இரவு வீட்டிற்கு கிளம்பும்ப முன், சிவக்குமார் அரங்க காவலாளிகளுக்கு சில ரூபாய் தாள்களைக் கொடுதது "கவனி"த்தார்.
“சார், நீங்களா இப்படி" என்று கேட்ட போது
“தமிழுக்காக இதையும் செய்வோம்" என்றார்.

பட்டறை அன்று :

பட்டறை நாள் சரியாக 7 மணிக்கு மா.சிவக்குமார் அரங்க கதவைத் திறந்து வேலைகளை முடுக்கி விட்டார். வரிசையாக பட்டறையின் "Core – team” வந்து சேர பட்டறைக்கான கடைசிக் கட்ட ஆயத்த வேலைகள் முடிந்தன. நானும் ஜேகேவும் செய்முறை பயிற்சி அரங்கத்திலேயே இருந்ததால் கருத்து பரிமாற்ற அரங்கத்தில் நடந்தவைகளைப் பற்றி தெரியவில்லை. (பதிவர்களின் பதிவுகளைப் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்). இதனிடையில் முத்து(தமிழினி) பட்டறைக்கான முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்க அறையினுள் நுழைந்த பொன்ஸ் "ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்" என்று சில கல்லூரி மாணவிகளை உள்ளே அனுப்ப அவர்கள் நேராக யோசிப்பவரின் இடத்திற்கு சென்று அமர்ந்து சுவாரசியமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இ-கலப்பை பற்றி கேட்டுக் கொண்டிருந்த ஈழத்தை சார்ந்த இரு சகோதரர்கள், நான் தான் வினையூக்கி என்று சொன்னதும் "நீங்க பேய் கதை எழுதி ஏன் இப்படி பயமுறுத்திறீங்க" என்று அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது,

தமிழ் தட்டச்சு கற்றுக் கொடுக்கையில் நாங்கள் பின்பற்றிய முறை, தமிழில் எளிமையாக தமிங்கிலிஷ் முறையில் அடிக்கலாம். அப்படி செய்து காட்டியவுடன் கற்றுக் கொள்ள வந்தவர்கள் ஆஹா இவ்வளவு எளிமையா, என்று குஷியானவுடன், மெல்ல தமிழ்99 முறையை எடுத்து சொல்லி, சிந்தாநதியின் கணினிச்சுவடியில் இருந்த தட்டச்சு அமைப்பை வைத்து தட்டச்சு பயிற்சியை செய்ய வைத்தோம்.அவர்கள் காரணம் கேட்க, க் + ஏ தான் கே , kee = கே கிடையாது, தமிழில் சிந்திப்போம் என்ற அடிப்படை தமிழ் உணர்வைக் கிளறி விட , ஆர்வமாக தமிழ்99 தட்டச்சு செய்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.லக்கிலுக் ஸ்டைலில் சில துளிகள் :

பதிவர் இரா.சுகுமாரன் நான் தடுமாறிய போதெல்லாம் அதை எளிமையாக எனக்கும், கற்றுக் கொன்ள வந்தவர்களுக்கும் சொல்லி புரியவைத்தார். பதிவர் பிரேம்குமார் கூடவே இருந்து சில நுட்பங்களை அருமையாக சொல்லி தந்தார்.சிவஞானம்ஜி வேர்டுபிரஸ் சந்தேகங்களை கேட்க , யோசிப்பவர் சிவஞானம்ஜியின் ஐயங்களை தீர்த்து வைத்தார்.

மக்கள் சட்டம் பதிவர் கேட்ட சில ஐயங்களை என்னால் தீர்க்க இயலவில்லை.

பதிவர் வெயிலான் , கற்றுக் கொள்ள வந்தவர் என்று நினைத்து வாங்க தமிழ் தட்டச்சு வலைப்பதிவு கற்றுக் கொடுக்கிறேன் என்று நான் கூப்பிட நான் தான் பதிவர் வெயிலான் என்று சொல்லி என் முகத்தில் அசடு வழிய வைத்தார்.

சிஃபி யின் பொறியாளர் ஒருவர் கோபி என்று இருக்க, அங்கு வந்த பிரபல பதிவர் ஒருவருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்

“நான் --------”

“நான் கோபி"

“ஹாய் கோபி"

“யா , ஹாய்"

பிறகு அவர்கள் இருவரும் எதோ கதைத்துக் கொண்டனர்.

சிஃபி கோபி அங்கிருந்து நகர்ந்து விட , உண்மையான தகடூர் "ஹாய்" கோபி, அங்கு வர டிபிகல் கிரேசி மோகன் ஸ்டைல் கலாட்டாவானது.

சிவஞானம்ஜி, என் கதைகளை மோகன் கதைகள், ஜெனி கதைகள், பேய் கதைகள் என வகைப்பிரித்து சில விசயங்களை ஆராய்ந்து சொன்ன போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

நாமக்கல் சிபி 4 மணிக்கே கிளம்புவதாக சொல்லிவிட்டு 7 மணிவரை இருந்தார். அது அவரா... இல்லை அவரின் அமானுஷ்ய உருவமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
அவருடன் "அண்டார்டிகா ஆவியும் அமிஞ்சக்கரை ஆவியும்" வந்திருந்ததாக சீக்ரெட் ரிப்போர்ட்டர் "பகல் காக்கா" ரகசிய தகவல் சொன்னார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் என் காலேஜ் ஜூனியர்கள் கப்பிபய லையும், பட்டறைக்கு வந்திருந்த தமிழ்செல்வனையும் சந்தித்தேன்.


கற்றுக் கொடுத்தது என்னவோ எளிமையான அடிப்படை விசயங்கள் தான். ஆனால் இந்த பட்டறையின் வாயிலாக கற்றுக் கொண்ட விசயங்கள் தான் அதிகம்., தொழில் நுட்ப ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும். . தமிழ்99 பற்றி சொல்லிக்கொடுத்த போதிலும் , நான் இந்தப் பதிவு வரை தமிங்கிலிஷ் முறை தான் பயன்படுத்துகிறேன். முதல் வேளையாக தமிழ்99 பயிற்சி செய்ய வேண்டும்.

தனிப்பட்ட விதத்தில் கற்றுக் கொண்டதில் முக்கியமானது "The effectiveness of team work”.

“Core-Team” மற்றும் "Supporting-team" இருந்தவர்கள் வெவ்வேறு பலமான பின்புலங்களுடன் வந்திருந்தாலும், யாரும் "Ego” பார்க்காமல் "தமிழுக்காக " என்ற ஒரே உணர்வுடன் வேலை பார்த்தது ..”Amazing” .

கற்றது கையளவு , கல்லாதது உலகளவு, கற்றுக் கொடுத்ததை விட கற்றுக் கொண்டது தான் அதிகம்.

மெல்லத்தமிழ் இனிச்சாகும் என்ற கூற்று எழும்போதெல்லாம்., இந்த தமிழ் உணர்வினால் , தமிழ் மீண்டும் மி்ண்டும் விசுவரூபம் எடுக்கும் என்பது நிச்சயம்.

22 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்ல பதிவர் என்றே அறிந்திருந்தேன்;
பட்டறையில் உணர்ந்தேன், நீங்கள் நல்ல ஆசிரியர் என்பதை! நன்றி!

தமிங்கிலிஷ் என்பதை தங்கிலிஷ் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.இப்பதான் தமிழ்99 என்றால் என்ன என்பது புரிந்தது
(கே=க்+ஏ;kee அல்ல!)

சீக்கிரம் தமிழ்99 க்கு மாறனும்

said...

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்!

அருமை!

பகிர்வுக்கு நன்றி!

said...

நன்றி சிவஞானம்ஜி...

said...

நல்லாத்தான் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள் வாத்தியாரே! உங்களுக்கு ஒரு மாணவன் கிடைக்கவுள்ளான்.
பொதுவாக அந்த மாணவன் ""பலன் "" ஆசிரியர்கள் பிடரியில் கால் பட ஓடுவது; அவ்வளவு மொக்கு
நீங்கள் என்ன? செய்யப் போறீர்களோ??வேறு யாருமல்ல நான் தான் அது.
கேள்விகள்; சந்தேகம் பல உண்டு பின்பிடுகிறேன்.

said...

உழைத்த களைப்பு தீருமுன் அழகுப் பதிவொன்று .. நன்று.

வாழ்த்துக்கள் - உழைப்புக்கும், இப்பதிவுக்கும்

said...

வாழ்த்துக்கள் தல :)

said...

சுவாரசியமான ரிப்போர்ட். நன்றி!

said...

சரி, நீங்கள் இருக்கும் இருக்கும் ஊருக்கு நீங்க தான் இனிமே தமிழ்99 கொ.ப.செ :) அதைக்கற்றுக் கொடுத்த அணுகுமுறை நல்லா இருக்கு.

higopi comedyக்கு :)

said...

//அங்கு வந்த பிரபல பதிவர் ஒருவருக்கும்//

எப்படி அது? பிரபல பதிவரா?;-)

said...

//யோசிப்பவர் said...

எப்படி அது? பிரபல பதிவரா?;-//

ஆமாங்க அவரு ஒரு பிரபல பதிவர் தான்... ஹிஹிஹி

said...

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்லாத்தான் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள் வாத்தியாரே! உங்களுக்கு ஒரு மாணவன் கிடைக்கவுள்ளான.
//
தூஜூர் ஜெஸ்வி அன் எத்யூதியான்...
கற்பூர மாணக்கர்கள் உங்களை போல் கிடைக்கும்போது வாத்தியார்களுக்கு என்ன கசக்கவா செய்யும்

said...

நன்றி ரவிசங்கர். தங்களின் பங்களிப்பை மா.சிவக்குமார் சொல்ல வியந்து போனேன்.

said...

நன்றி பா.பா, தருமி , கப்பி பய மற்றும் சிவபாலன்

said...

நல்ல தொகுப்பு வினையூக்கி!

said...

வினையூக்கி!
யேசுதாசஸ் இன்றும் ஒரு கச்சேரிக்குச் செல்லும்போது இது தன் முதல் கச்சேரி என எண்ணுவாராம்.
அப்படி உங்களை இன்றும் மாணவனாகக் கருதும் இயல்பு நிச்சயம் உயர்த்தும். அத்துடன் என்னிலும் உங்களுக்குப் பிரன்சு மொழி அறிவு அதிகம் என்பது. இப்பொருத்தமான பதில் மூலம் அறிகிறேன்.
தொடரவும்.

கற்பூரமோ,வாழைமட்டையோ போகப் போகத் தெரியும்.
என் சந்தேகம் சில பின்பு தனிமடலாக இடுகிறேன்.

நன்றி

said...

நல்லா தொகுத்து தந்து இருக்கீங்க அண்ணா.

நான் கூட இனிதான் தமிழ்99 பயன் படுத்த போறேன்.

//ஒருவரின் உற்சாகமே நம்மை எளிதாகப் பீடித்துக் கொள்ளும் எனும்போது, உற்சாகக் கடலில் தள்ளி விட்டால் எப்படி இருக்கும்..//

அன்று உணர்ந்தோமே!...

said...

பட்டறையில் கலந்துக்கொண்டதில் அங்கே நடந்த சில‌ சுவாரசியமான விசயங்களை பார்க்க முடிந்தது. ஆனால் BEHIND THE STAGE நடந்த பல ருசிகர தகவல்களை பறிமாறிக் கொண்டதற்கு நன்றி நண்பா.

said...

நல்ல தொகுப்பு.
உங்கள் அனைவரினதும் கடின உழைப்புக்கு தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பார்ப்போம், இன்னும் சில நாட்களில் பல புதிய பதிவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். :-)

said...

ஆஹா... இவ்வளவு நடந்ததா..!

நான் தான் மிஸ் பண்ணிட்டேன். கோவை மாதிரியே இங்கேயும் எதையும் சரியா கவனிக்க முடியாமப் போச்சு!

எனக்குன்னு யாராச்சும் தனியா பட்டறை நடத்துங்கப்பா... நான் கலந்துகொள்ள மட்டும் வருகிறேன். :)

said...

நன்றி பாலபாரதி, ஜேகே பிரேம்குமார் மற்றும் வெற்றி,
யோகன்பாரிஸ் தங்களது மின்னஞ்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

said...

வித்தியாசமான விசயங்களுடன் கூடிய தொகுப்பு! நன்றி!

said...

வினை... வெகு சிறப்பாக தொகுத்து எழுத தமிழ் உங்களுக்கு வருகிறது, வாழ்த்துக்கள். நானும் நேரில் பார்த்தை வைத்து சொன்னால் நீங்கள் எழுதியிருப்பவை அனைத்தும் சரியே.