தமிழ்மணத்தில் பழைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களை உடனடியாகத் தெரியவைத்தல்
பட்டறை நிகழ்வின் போது பதிவர் மக்கள் சட்டம்,, பழைய பதிவுகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக தமிழ்மண மறுமொழியப்பட்ட இடுகைகளில் வருவதில்லையே என்று கேட்டார்,
"தெரியவில்லையே சார், எனக்கும் எனது பழைய இடுகைகளுக்கான மறுமொழிகளை பதிப்பைக்கும் போது தமிழ்மணத்தில் வெளிவர தாமதமாகிறது" என்றேன்
அப்போது, பதிவர் சுகுமாறன் அதற்கும் ஒரு வழி உண்டு என்று சொல்லி, விளக்கமாக உடனடியாக தமிழ்மணத்தில் தெரியவைப்பது எப்படி என்பதை சொன்னார்.
எளிமையான வேலை தான்,. மறுமொழியைப் பதிப்பித்தவுடன் , ஒரு முறை அந்த குறிப்பட்ட இடுகையை திறந்துவிட்டால் போதும், தமிழ்மணத்திற்கு மறுமொழிகளை அறிவிக்கும் "code” "Fresh" ஆக செயற்பட்டு தமிழ்மண முகப்பில், மறுமொழிகளுக்கான் பக்கத்தில் நமது இடுகையைக் காட்டிவிடும்.
மேலதிக தகவல்களுக்கு --->
தமிழ்மணம் உதவிப்பக்கத்தைப் பார்க்கவும்
13 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி ,
இதைத்தானே தமிழ்மணம் உதவிப்பக்கதிலும் போட்டு இருக்காங்க!
இது தான் நெறைய பேருக்கு தெரியுமே? உங்களுக்கு தெரியாதா வினையூக்கி? :-))))))
"தனக்கு தானே பின்னூட்டம்" போட்டுக்கற வழக்கம் உங்களுக்கு இருந்திருந்தா இந்த சூட்சுமம் தெரிஞ்சுருக்கும்!!!
நன்றி வவ்வால் மற்றும் லக்கிலுக். எனக்கு இந்த விசயம் முன்பு தெரியாது. பழையபதிவுகளுக்கு இடப்பட்ட பின்னூட்ட்டம் எப்பொழுது தமிழ்மணத்தில் வரும் என்று சில நாட்களில் இரவு நேரங்களில் காத்து இருந்து பார்த்ததுண்டு. எதுவாகினும் என்னைப்போல் இந்த விசயம் தெரியாத சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இடுகைய எங்கங்க தொறக்கனும்...அப்பல் பதிவு வரக்கூட லேட் ஆவுதே....அது பத்தி ஏதாவது..
//*ஒரு முறை அந்த குறிப்பட்ட இடுகையை திறந்துவிட்டால் போதும், தமிழ்மணத்திற்கு மறுமொழிகளை அறிவிக்கும் "cஒடெ” "Fரெஷ்" ஆக செயற்பட்டு தமிழ்மண முகப்பில், மறுமொழிகளுக்கான் பக்கத்தில் நமது இடுகையைக் காட்டிவிடும்..*//
நன்றி வினையூக்கியரே!
நன்றி. மக்கள் சட்டம் என்ற வலைப்பதிவில் சட்டம்-நீதி குறித்த பதிவுகளை மட்டுமே உள்ளிடுகிறோம். எனவே, தமிழ்மணத்தின் குறிச்சொல் ஜன்னலில் "சட்டம்-நீதி" என்ற பகுதியில் எங்கள் பதிவுகள் இடம் பெறவேண்டும் என்று விரும்புகிறோம். Labels பகுதியில் சட்டம்-நீதி என்றும் குறிப்பிடுகிறோம். எனினும் தமிழ்மணத்தின் சட்டம்-நீதி பகுதியில் எங்கள் பதிவுகள் வருவதில்லை.
அதற்கு என்ன செய்வது?
அன்புடன் மக்கள் சட்டத்திற்கு,
தாங்கள் தங்களுடைய பதிவுகளில்
"சட்டம்-நீதி" என்று வகை இட்டுள்ளீர்கள். ஆனால் தமிழ்மணத்தில்
"சட்டம் - நீதி" என "-" குறிக்கு முன்னும் பின்னும் இடைவெளி விடப்பட்டு தொகுக்கப்படுகிறது.
ஆகையால் "சட்டம் - நீதி" என லேபல் கொடுக்கவும். சரியாகிவிடும்
நன்றி சுப்பையா சார்.
TBCD, பழைய பதிவுகளுக்கான பின்னூட்டத்தை பதிப்பித்தவுடன், பின்னூட்டத்திற்கான போஸ்ட்டை ஒரு முறை திறந்து பார்த்துவிடுங்கள். உங்கள் பிலாக்கிலேயே.
தமிழ்மணத்தைப் பொறுத்தமட்டும் உடனடியாகத்தான் இணைக்கப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் புதிய பதிவர்கள் இணையும் போது ஏற்படும் காலத்தாமதத்தை சொல்லுகிறீர்களா?!!
வினையூக்கி,
//எதுவாகினும் என்னைப்போல் இந்த விசயம் தெரியாத சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.//
அப்படியே அந்த உதவிப்பக்கத்துக்கும் ஒரு தொடுப்புக் கொடுத்தா பாக்காதவங்களும் பாத்துக்க்குவாங்களே!
இதுதானே அது:)
பி. கு.
உங்கள் பட்டறை உழைப்புக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!
காசி சார்,
முதன் முறையாக பதிவிற்கு வந்து இருக்கிறீர்கள். வாங்க வாங்க, தமிழ்மணம் உதவிப்பக்கத்திற்கான சுட்டியை இந்தப் பதிவின் கடைசியில் இணைத்துவிட்டேன்.
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார். கோவை பட்டறையின் போது நீங்கள் வருவீர்கள் சந்திக்கலாம் என்று இருந்தேன். முடியவில்லை. சென்னையிலும், நான் முதற்தளத்திலேயே இருந்துவிட்டதால் இந்த முறையும் சந்திக்க முடியவில்லை.
இந்த விடயம் தெரியாது,ஆனால் போட்டதைக் காணவில்லையே என அதை இதைத் திறந்து மூடுவது வழக்கம் அப்போ தெரிவதை அவதானித்து, தொடர்ந்து அப்படியே செய்கிறேன்.
''குருடன் பொண்டாட்டிக் அடிச்சது போல்''
வினையூக்கி,
அப்படியும் வரவில்லையென நினைக்கிறேன். அதோடுஎனக்கு wordpress-weblogs-wordpress என்று போய்வந்த ப்ரச்சனை வேறு.
//''குருடன் பொண்டாட்டிக் அடிச்சது போல்'' //அப்டின்னா என்னன்னு யோகன்பாரிஸ்ஸிடம் கேட்டு சொல்லுங்களேன்.......
//*வினையூக்கி said...
TBCD, பழைய பதிவுகளுக்கான பின்னூட்டத்தை பதிப்பித்தவுடன், பின்னூட்டத்திற்கான போஸ்ட்டை ஒரு முறை திறந்து பார்த்துவிடுங்கள். உங்கள் பிலாக்கிலேயே.
தமிழ்மணத்தைப் பொறுத்தமட்டும் உடனடியாகத்தான் இணைக்கப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் புதிய பதிவர்கள் இணையும் போது ஏற்படும் காலத்தாமதத்தை சொல்லுகிறீர்களா?!!*//
தகவலுக்கு நன்றி...தமிழ் மணத்தின் போஸ்ட் இட்ட உடன் செய்ய வேண்டிய விபரங்கள்..தெரியாதிருந்தேன்...நன்பர்கள்...ஜி.டாக் மூலம்..அதை சொல்லிக் குடுத்தனர்... இப்பொழ்து..நீங்கள் சொன்னது..புரிகின்றது..
Post a Comment