கண்ணாடி - கவிதை மாதிரி
---------------- கண்ணாடி ----------------
நினைவுகளுக்காக ஒரு முகம்
தொலைந்து போன கனவுகளுக்காக மறுமுகம்
கடமைகளுக்காக ஒரு முகம்
இல்லாத கடவுளுக்காக திருமுகம்
அன்புக்காக சிறுமுகம்
பண்பைக் காட்ட பலமுகம்
நிதம் ஒரு முகமாக தொலைந்து போன முகத்தை தேடினேன்
முகமிலியே உன்னிடம் கண்டேன் என் முகத்தை
ஆம் முகமிலிகள் கூட முகங்களே
12 பின்னூட்டங்கள்/Comments:
சபாஷ்!
உண்மையில் யாரை முகமிலிகள் என்கிறீர்கள் என்பதில் எனக்கு குழப்பம்..
காதலிக்கும் பெண்ணை?
சரி விடுங்க.. எதுவாகினும்..
கவிதை அருமை!
பகிர்வுக்கு நன்றி
முகமிலி என்றால்??
முகமில்லாதவர்கL தானே??
அதாவது அனானிகள்??
நல்ல கவிதை!! :-)
//ஆம் முகமிலிகள் கூட முகங்களே//
சூப்பர்!
நன்றி நண்பரே,
உங்கள் உதவியால் எங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் சட்டம் - நீதி பகுதியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
மீண்டும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
-மக்கள் சட்டம் குழு
sooper thala!
முகமறியா முகமலிகளின் முகவரி காண துடிக்கும் தம்பீ..
அவர்களிடமும் முகம் உண்டு என்பதால்தான் பார்க்கத் துடிக்கிறேன் என்பதைச் சொல்லும் அளவுக்கு உனக்கு முகமறியா முகமலிகளினால் என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளத் துடிக்கிறேன். சொல்வாயா?
சிவபாலன், சிவிஆர் மற்றும் உண்மைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. இங்கு முகமிலி என குறிப்பிடப்படுவது கண்ணாடி, ஊருக்கெல்லாம் முகம் காட்டும் கண்ணாடிக்கு முகம் இல்லை என்பதே உண்மை.
வாவ்,
படமே கதையைச் சொல்லி விட்டது. கவிதை அதற்கு மகுடம் வைத்தது போல.
அன்புடன்,
மா சிவகுமார்
கவிதை + "ஊருக்கெல்லாம் முகம் காட்டும் கண்ணாடிக்கு முகம் இல்லை என்பதே உண்மை."
அருமை!
படத்துக்கு கவிதையா? கவிதைக்கு படமா? என அறுதியிட முடியவில்லை.
நன்றாக இருக்கிறது.
gud kavithai
it is true we search for a new face evryday
Post a Comment