Tuesday, August 04, 2009

விடைகள் : வினாடி - வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல் )

1. வன்முறையின்றி ஒரு நல்ல த்ரில்லர் படத்தைக் கொடுக்க முடியும் என இயக்குனர் பாசிலின் கைவண்ணத்தில் வெளிவந்த பூவிழி வாசலிலே திரைப்படத்தில் பாடகர் மனோ “அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே” எனத் தொடங்கும் பாடலைப் பாடி இருப்பார். இந்தப் பாடல் தான் மனோவின் முதல் தமிழ் திரைப்பாடல். படத்திற்கு இசை இளையராஜா.2. ஷார்ஜா கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜாவேத் மியாண்டட் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை பாகிஸ்தானுக்குத் தேடித்தருவார். அந்தக் கடைசி ஓவரை வீசியவர் தான் சேதன் சர்மா. ஸ்ரீகாந்த் இந்திய அணித்தலைவராக இருந்த போது, கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான ரன்விகிதம் கிடுகிடுவென எகிற , “காட்டடி” அடிக்க சேதன் சர்மா களம் இறக்கப்பட்டார். கண்ணை மூடிக்கொண்டு சுத்தாமல் நேர்த்தியாக ஆடி சதம் அடித்ததோடு மட்டும் அல்லாமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதிச் செய்தார். இவரைக் களமிறக்கும் முடிவை ஸ்ரீகாந்த் தான் எடுத்தார் சொல்லப்படும். 87 ரிலையன்ஸ் உலகக்கோப்பை போட்டி ஆட்டம் ஒன்றில் , நியுசிலாந்து அணிக்கெதிராக அனைத்தும் Bowled என்ற முறையில் ஹேட்ரிக் எடுத்தார். இந்த ஆட்டத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம், ஆமை வேகத்தில் ஆடும் கவாஸ்கர் அதிரடியாக ஆடி சதம் அடித்ததுதான். கவாஸ்கரின் ஒரே ஒரு நாள் போட்டி சதமும் இதுதான்.


3 வது மட்டும் 8 வது கேள்விகளுக்கானப் பதில்கள்

ஆஸ்திரேலியா கண்டம் ஆகிப்போனதால் க்ரீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவு என்கிற அந்தஸ்தை பெற்றது. நார்வே நாட்டில் பிறந்து குழந்தையாக இருக்கும்பொழுது பெற்றோர்களுடன் ஐஸ்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட எரிக் த ரெட், வளர்ந்த பின் வேறு ஒரு கொலைக் குற்றத்திற்காக நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். அப்படி துரத்தப்படும்பொழுது ஐஸ்லேந்தில் இருந்து
500 மைல்கள் மேற்கு நோக்கி செல்லும்பொழுது க்ரீன்லாந்தைக் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். மாற்றுக் கூற்றுகளாக அதற்கு முன்னரே மக்கள் பாரிய நிலப்பரப்பை பார்த்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இப்பொழுது மனித உரிமைகள் / சமாதானம் பேசும் நாடாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் டென்மார்க் கும் ஒரு காலத்தில் “நாடு பிடிக்கும்” அரசாங்கத்தைத் தான் கொண்டிருந்தது. நார்வேக்காரர்கள் க்ரீன்லேந்தை விட்டுப்போனது 17 ஆம் நூற்றாண்டில் டென்மார்க் க்ரீன்லேந்தை தனதானதாக சொந்தம் கொண்டாடியது. உலகப்போருக்குப்பின் 1953 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் முடியாட்சியின் கீழ் க்ரீன்லாந்து ஒரு அங்கமாக வந்தது.

சுயாட்சி அதிகாரம் கொடுத்துவிட்டு பாதுகாப்பு,வெளியுறவுக்கொள்கைப் போன்றவன வற்றை தன் வசம் வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த நாடு சிறிய நாட்டை ஆட்சி செய்யும் முறைக்கு Suzerainty என்று பெயர். தற்பொழுது இந்தியாவின் மாநிலமாக இருக்கும் சிக்கிம் 1975 ஆம் ஆண்டு வரை இந்த வகையிலேயே இந்தியாவில் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. நேபாளத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களினால் ஏற்பட்ட கலவரங்களினாலும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை குறைந்ததாலும் இந்தியா தனது ராணுவ ந்டவடிக்கைகளினால் மீட்டெடுத்து சிக்கிமை இந்தியாவுடன் இணைக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான வரவேற்குப்பின் இந்தியாவின் 22 வது மாநிலமாக சிக்கிம் மாறியது.

4. எல்லை காந்தி என இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்படும் கான் அப்துல் கபார்கான் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதலாவது இந்தியக் குடிமகன் அல்லாதவர். அதற்கு முன் அன்னை தெரசா பெற்றிருந்தாலும் அவர் இந்தியக் குடிமகளாக மாறி இருந்தார். கபார்கானுக்குப்பின்னர் நெல்சன் மண்டேலா வெளிநாட்டுக்காரராக இவ்விருதைப் பெற்றிருக்கின்றார்.
கபார்கான் இறுதிச்சடங்கின் போது ஆப்கானில் நடைபெற்ற போர் இருதரப்பிலும் நிறுத்தி வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாம்.

5. போபஃர்ஸ் ( இந்தப் பெயருக்கு விளக்கமே தேவை இல்லை)

6. மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயரில் பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடிவரும் அணி கரிபீயன் தீவுகளில் இருக்கும் நாடுகளின் கூட்டணி ஆகும். கயனா மட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் வடகிழக்கு முனையில் இருக்கின்றது. ஸ்பானிஷ்/போர்ச்சுகீசிய காலனியாதிக்கத்தில் மொத்த தென்னமெரிக்காவும் அடிமைப்பட கயானா பிரிட்டன் ஆதிக்கத்தில் வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறை உலகக் கோப்பைகளைக் கைப்பற்றிய போது அணித்தலைவராக இருந்த கிளைவ் லாயிட் கயானாவைச் சேர்ந்தவர்தான். ஜார்ஜ்டவுன் கயானா நாட்டின் தலைநகர்.

அயர்லாந்து குடியரசும் , ஐக்கிய ராஜ்ஜியம்(கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து) அரசியல் ரீதியாக இரு வேறு நாடுகளாக இருந்தாலும் , யூகே வில் இருக்கும் வடக்கு அயர்லாந்தும் அயர்லாந்து குடியரசும் இணைந்து அயர்லாந்து கிரிக்கெட் அணியாக பன்னாட்டு போட்டிகளில் பங்குபெறுகின்றது.

7. தென்னாப்பிரிக்கா

பிரிட்டோரியா (Executive)
ப்ளோம்பைண்டைன் (நீதித் துறை)
கேப்டவுன் (சட்டம் இயற்றல்/ பாராளுமன்றம்)

இருந்த போதிலும் ஜோகன்னஸ்பர்க் தான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம்.

9. அசுவத்தாமன்.

10. மார்க் புட்சர்

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

http://www.tfmpage.com/my/singer/mano.html

இதில் மனோ தான் பாடிய முதல் பாடல் 1984ஆம் ஆண்டு வந்த கற்பூர தீபம் என்ற படத்தைச் சொல்லி இருக்கிறாரே.

பூவிழி வாசலிலே 1987ஆம் ஆண்டுதான் வந்திருக்கிறது.

said...

@ இலவசக்கொத்தனார்

அட ஆமாம் சார். இளையராஜாவின் இசையில் நெடுங்காலமாக ‘டம்மி டிராக்' பாடகராக இருந்தார் என படித்திருக்கின்றேன். எஸ்.பி.பி யின் பல பாடல்களுக்கு எஸ்.பி.பி பாடும் முன் மனோவை வைத்து டிராக் ஸ்டாண்ட் பை பாடி வைத்துக் கொள்வார்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பூவிழி வாசலிலே டைட்டிலில் தான் அறிமுகம் என வருவதால் டெக்னிகலி அண்ணே அண்ணெ நீ என்ன சொன்ன பாடல் தான் முதற்பாடல் :).

தகவலுக்கு நன்றி. அயர்லாந்து கேள்விக்கு ஏதேனும் எதிர்வினைகள்?

மிக்க மிக்க நன்றி. நீங்க மாஸ்டரா இருந்து அசத்தின க்விஸ் போட்டி மாதிரி இல்லாவிடினும் ஓரளவுக்கு முயன்றேன்.

said...

//5. போபஃர்ஸ் ( இந்தப் பெயருக்கு விளக்கமே தேவை இல்லை)//

பொதுவா நான் அரசியல் பத்தின கேள்வி பதில்களுக்கு விடை சொல்றது கிடையாதுங்கறதால இந்த கேள்விக்கான விடையை நான் சொல்லலை.

(அப்ப மத்த கேள்விகளுக்கு ஏன் சொல்லலைன்னு கேக்கப்படாது. அதுக்கும் எனக்கு பதில் தெரியணும்ல) :-)

சுவாரசியமான கேள்விபதில் இடுகை.

நன்றி வினையூக்கி!

said...

நன்றாக இருந்தது கேள்வி பதில்!

அது என்னாது எங்க க்விஸ் என்றாலும் நம்ம இலவசம் அண்ணாச்சி ஆஜர் ஆயிடுறாரு! சரக்கு இருக்கு ஆஜர் ஆவுறாருன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான்:)))

said...

நன்றாக இருந்தது இந்த கேள்வி பதில் பாணியிலான இடுகை...

said...

கற்பூர தீபம் தான் தன் முதல் படம்னு சொன்னாரா புதிரா இருக்கிறது ஏன்னா அந்தப்படத்தில் மனோ ஒரு பாடல் கூடப் பாடவில்லை. ஆதாரம் http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=karpooradheepam