Monday, August 03, 2009

வினாடி- வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல்)

1. தெலுங்கு கீதாஞ்சலியின் தமிழ்வடிவமான இதயத்தைத் திருடாதே யில் அனைத்துப்பாடல்களையும் தெலுங்கின் மூலவடிவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உணர்வுப்பூர்வமாகப் பாடிய பாடகர் மனோ, பின்னாளில் முக்காலா முக்காபுலா, அழகிய லைலா என ஹைபிட்ச் பாடல்களில் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தமிழில் பாடிய முதல் பாடல்/படம் எது? அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்?


2. இவர் ஒரு முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனை செய்தவர். அதிரடியாக முன்வரிசை ஆட்டக்காரராக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் களம் இறங்கி ஆட்டமிழக்காமல் சதமடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர்.இவர் பெயரைக் கேட்டவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்ஆனந்த பரவசமடைந்து மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள்.யாரிந்த கிரிக்கெட் வீரர்?

3. இது உலகின் மிகப்பெரியத் தீவுகளில் ஒன்று. சுயாட்சி அதிகாரம் படைத்த தீவாக இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியன ஸ்கேண்டிநேவிய நாடு ஒன்றின் வசம் உள்ளது(Suzerainty). கொலைக்குற்றவாளி என நார்வே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவரால் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தீவின் பெயர் என்ன?

4. இவர் பாரத ரத்னா விருது பெற்றவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த இவர் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர். இருந்த போதிலும் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானி ஆன பின்னர் “இந்தியாவின் நண்பனாகவே “ அடையாளம் காணப்பட்டவர்.

வாழ்நாளில் பெரும்பான்மையான நாட்களை(கிட்டத்தட்ட 52 வருடங்கள்) சிறையிலோ நாடு கடத்தப்பட்டோ கழித்த இவர் இறந்த போது இந்திய அரசாங்கம் இவருக்காக 5 நாட்கள் துக்கம் அனுசரித்தது. இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நபர் யார்?

5. ஆல்பிரட் நோபலுக்கும் இந்திய அரசியலுக்கும் நேரிடையான சம்பந்தம் கிடையாது. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையாக இருந்த உலகின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றிய போது , இந்த நிறுவனத்தின் பெயர்தான் இந்திய அரசியலில் ஒரு கலக்கு கலக்கப் போகின்றது என அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது, மழைவிட்டாலும் தூவானம் விடாது என கால் நூற்றாண்டிற்குப்பின்னரும் இந்திய அரசியல் அரங்கில் வலம் வரும் இந்த சுவிடீஷ் நிறுவனத்தின் பெயர் என்ன?

6. பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெறும், தென்னமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடு எது? இந்த நாடு நேரிடையாகப் பங்கேற்காமல் கூட்டாக அணியை போட்டிகளுக்கு அனுப்பும் நாடுகளுள் ஒன்று. இந்த தென்னமெரிக்கா நாட்டின் பெயர் என்ன? இதே போல் ஒரு தனிக்குடியரசு நாடு, மற்றொரு நாட்டின் ஒரு பகுதியோடு இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த அணியின் பெயர் என்ன?

7. உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரே தலைநகரத்தைக் கொண்டிருக்கையில் விதிவிலக்குகளாக , சில நாடுகள் நிர்வாக வசதிக்காக இரண்டு தலை நகரங்களைக் ஏற்படுத்தி வைத்திருக்கும். இதைத் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு நாடு மூன்று தலைநகரங்களைக் கொண்டிருக்கின்றது. நிர்வாகத்திற்கு ஒன்று, நீதித்துறைக்கு ஒன்று, சட்டம் இயற்றலுக்கு(பாராளுமன்றம்) ஒன்று என மூன்றுத் தலைநகரங்களை வைத்திருக்கும் நாடு எது?

8. கேள்வி எண் மூன்றில் இருக்கும் நாடு போல இந்தியாவின் மேற்பார்வையில் தனிச் சுதந்திர நாடாக இருந்த ஒன்று பின்பு இந்தியாவின் மாநிலமாக மாறியது. அந்த மாநிலத்தின் பெயர் என்ன?

9. மகாபாரதக் கதைகளில் கௌரவப் படையினரில் உயிருடன் எஞ்சிய மூவர்களில் இருவர் கிருபாச்சாரியா, கிரீடவர்மா. மூன்றாமவர் யார்?

10. கடைசியாகக் கிரிக்கெட் பற்றிய மற்றும் ஒரு கேள்வி. ஒரு நாள் போட்டிகளின் வீச்சு மிக அதிகமாக கோலேச்சிய 90 கள் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடி 4000 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்த ஒரு ஆட்டக்காரர் தன் வாழ்நாளில் பன்னாட்டு ஒரு நாள் போட்டி ஒன்று கூட ஆடவில்லை.

இது போல சுவாரசியமான சாதனைகளை எல்லாம் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தான் வைத்திருப்பார்கள்? யாரிந்த இங்கிலாந்து ஆட்டக்காரர்?

36 பின்னூட்டங்கள்/Comments:

said...

//இவர் தமிழில் பாடிய முதல் பாடல்/படம் எது? அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்?//

வேலை இல்லாதவண்டா... பாடல், படம் : வேலைக்காரன்
(அல்லது) எங்க ஊரு பாட்டுக்காரன்.

said...

கோவி சார், அந்த இரண்டுப் படங்களும் இல்லை. அதற்கு முன்னமே பாடி இருக்கின்றார்.

said...

1. இளையராஜா இசை என்பது தெரியும்
2. சேட்டன் சர்மா
3. கிறீன்லாந்த்
6. மேற்கிந்தியத்தீவுகள், ஜமேக்கா, கிரினீடாட்
7. தென்னாபிரிக்கா கேப்டவுன்(சட்டம் இயற்றல்), ப்ரிட்டோரியா( நிர்வாகம்), புளூம்போன்டைன்(நீதித்துறை)
8. கோவா
10. பிரெட்டிக்

said...

//2. இவர் ஒரு முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனை செய்தவர்.
//
சேத்தன் சர்மா

//4. இவர் பாரத ரத்னா விருது பெற்றவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த இவர் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர். இருந்த போதிலும் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானி ஆன பொழுதிலும் “இந்தியாவின் நண்பனாகவே “ அடையாளம் காணப்பட்டவர்.
//
கான் அப்துல் கபார்கான் என்கிற எல்லை காந்தி

//5. ஆல்பிரட் நோபலுக்கும் இந்திய அரசியலுக்கும் நேரிடையான சம்பந்தம் கிடையாது. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையாக இருந்த உலகின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றிய போது , இந்த நிறுவனத்தின் பெயர்தான் இந்திய அரசியலில் ஒரு கலக்கு கலக்கப் போகின்றது என அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது, மழைவிட்டாலும் தூவானம் விடாது என கால் நூற்றாண்டிற்குப்பின்னரும் இந்திய அரசியல் அரங்கில் வலம் வரும் இந்த சுவிடீஷ் நிறுவனத்தின் பெயர் என்ன? //
ஃபோர்பர்ஸ்

//6. பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெறும், தென்னமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடு எது? இந்த நாடு நேரிடையாகப் பங்கேற்காமல் கூட்டாக அணியை போட்டிகளுக்கு அனுப்பும் நாடுகளுள் ஒன்று. இந்த தென்னமெரிக்கா நாட்டின் பெயர் என்ன? இதே போல் ஒரு தனிக்குடியரசு நாடு, மற்றொரு நாட்டின் ஒரு பகுதியோடு இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த அணியின் பெயர் என்ன?
//
ஜமைக்கா - மேற்கிந்திய தீவுகள்??

//8. கேள்வி எண் மூன்றில் இருக்கும் நாடு போல இந்தியாவின் மேற்பார்வையில் தனிச் சுதந்திர நாடாக இருந்த ஒன்று பின்பு இந்தியாவின் மாநிலமாக மாறியது. அந்த மாநிலத்தின் பெயர் என்ன?
//
சிக்கிம்... இது ஒன்று மட்டுமா? இந்தியா ஆக்கிரமித்த தேசியங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம்

//9. மகாபாரதக் கதைகளில் கௌரவப் படையினரில் உயிருடன் எஞ்சிய மூவர்களில் இருவர் கிருபாச்சாரியா, கிரீடவர்மா. மூன்றாமவர் யார்?
//
பீஷ்மர், போர் முடியும் வரை அம்பு படுக்கையில் உயிரோடிருந்தவர்

said...

@குழலி

மித வேகப்பந்து வீச்சாளர் விடை சரி.

பாரத ரத்னா விருது விடை சரி.

சுவிடீஷ் கம்பெனி விடை யும் சரி

தென்னமெரிக்க நாடு - தவறு

மாநிலத்தின் பெயர் - சரி

மகாபாரதக் கதை போரின் முடிவுக்குப் பின்னரும் உயிருடன் இருந்தவர்கள். நீங்கள் சொன்ன விடையல்ல

said...

@வந்தியத் தேவன் 2,3,7 விடைகள் மிகச்சரி.
முதற்கேள்வியின் இசையமைப்பாளர் விடை சரி.

said...

Just for know...!

said...

Mano's first song -- Anne Anne from film poo vizhi vasalile

said...

@சித்ரா
கலக்கிட்டீங்க.. மனோவோட முதற்பாடல் சரியான பதில்

said...

@டக்ளஸ்

வாங்க வாங்க

said...

Thanks u sir...

said...

1.வேலைக்காரன் - வேலை இல்லாதவன்டா

2.சேத்தன் சர்மா

3.கிரீன்லாந்து
7.தென் ஆப்பிரிக்கா
8.காஷ்மீர்
10.கிரீம் ஸ்மித்

said...

1. பூவிழி வாசலிலே..

பாட்டு: அண்ணே அண்ணே இப்போ என்ன ஆச்சு

இசை : இளையராஜா

2.ஸ்ரீகாந்த் (?!)

3.

said...

9. துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.

(சஞ்சயன் போரில் பங்கேற்காததால் கௌரவப்படையை சேர்ந்தவராக கருதப்பட மாட்டார்)

said...

@ சென்ஷி

மனோ கேள்விக்கான பதிலும் மகாபாரதக் கேள்விக்கான பதிலும் மிகச்சரி.

ஸ்ரீகாந்த் எப்போங்க வேகப்பந்து வீச்சாளர் ஆனார், ஆனால் ஸ்ரீகாந்த் என்பதிலும் ஒரு க்ளூ இருக்கு.

said...

@ அதிஷா,

2, 3, 7 கேள்விகளுக்கான பதில்கள் சரியானவை.

ஆமாம் க்ரீம் ஸ்மித் எப்போது இங்கிலாந்து ஆட்டக்காரர் ஆனார்? :)

said...

விடையை காண இந்த பின்னுட்டம் :)

said...

என்னங்க ஒரு கேள்விக்கு கூட விடை தெரியாத அளவுக்கு இவ்ளோ கஷ்டமா கேக்குறீங்க..???

said...

வாழ்த்துக்கள் நட்சத்திரம்!!!
வெற்றிகள் தொடரட்டும் :-)

said...

3.கிரின்லாந்து


மின்னுது மின்னல்

said...

@ மின்னுது மின்னல்

சரியான பதில்

said...

1 . அண்ணே அண்ணே..நீ என்ன சொன்னே' பூவிலி வாசலிலேஅதே மின்னுது மின்னல் :)

said...

மின்னுது மின்னல் , திரும்பவும் சரியான பதில்

said...

8 கோவா ?


மின்னுது மின்னல்

said...

7.சவுத் ஆப்பிரிக்கா


மின்னுது மின்னல்

said...

@ மின்னுது மின்னல் 7 வது சரி

8 வது தவறு

said...

8.ஜம்மு காஷ்மீர் ?


மின்னுது மின்னல்

said...

@மின்னுது மின்னல்
மீண்டும் தவறு

said...

வினையூக்கி

ரொம்ப நாள் ஆச்சு! எல்லா பதிலும் தெரியலை. இது முதல் அட்டெம்ப்ட்.

1) இதயத்தை திருடாதே படத்தில் மனோ சொதப்பினார் என்பது என் எண்ணம். போகட்டும்.

அவரின் முதல் படம் கற்பூரதீபம் என நினைக்கிறேன். கூகிளாண்டவரைக் கேட்டா கங்கை அமரன் எனச் சொல்கிறார்.

2) சேத்தன் ஷர்மா

3) க்ரீன்லாந்து

4) கான் அப்துல் கபார் கான்

5) போபர்ஸ்

6) கையானா (மேற்கிந்திய தீவுகள்). மற்றொரு நாடு சரியாத் தெரியலை. ஆனா வேல்ஸ் வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருக்கிறார்களா?
7) தென்னாப்பிரிக்கா
8) சிக்கிம்
9) அஷ்வத்தாமா
10) மார்க் புச்சர்

said...

@இலவசக்கொத்தனார்

வாங்க வாங்க

1. மனோவின் முதற்பாடல் நீங்கள் சொல்லியது அல்ல.

6 வது கேள்விக்கான முதல் பாதி சரி.
இரண்டாவது பாதி கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள்.

இங்கிலாந்தும் வேல்ஸும் அரசியல் ரீதியாக ஒரே நாடு (இது க்ளூ)

மற்றவை எல்லாம் கரெக்ட்

said...

2) சேத்தன் ஷர்மா
3) கிரீன்லாந்து
4) கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக்காந்தி)
5) போஃபர்ஸ்
6) கயானா (க்ளைவ் லாயிட்)
ஸ்காட்லாந்து (அ) அயர்லாந்து ஹிஹி...
7) சவுத் ஆஃப்ரிக்கா (கேப் டவுன், பிரிட்டோரியா, பாஸ்)
8) லட்சத்தீவுகள்???
10) மார்க் புட்சர்

said...

@ விஜய் ஆனந்த்
8 மட்டும் தவறு.

6. முதற்பாதி மிகச்சரி. இரண்டாம் பாதியில் ஒன்று மட்டுமே கரெக்ட்

said...

ஸ்காட்லாந்து வீரர்கள் இங்கிலாந்திற்காக விளையாடி இருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது அவர்கள் தனி அணியினராக இருப்பதால் இனி அப்படி விளையாட முடியாது என நினைக்கிறேன்.

அப்படிப் பார்த்தால் இந்தியர்கள் கூட இங்கிலாந்திற்காக முன்னம் விளையாடி இருக்கிறார்களே! :)

said...

1
2 Chetan charma
3 Green Land controleed by denmark
4 Khan Abdul kabar khan ( ellai gandhi)
5 Bofers
6 Guyana
7 Southafrica
8
9 சால்யன் ( karnanin therootti..)
10

said...

2. Chetan Sharma
3. Greenland
4. Frontier Gandhi Khan Abdul Gaffar Khan
9. Aswathama

said...

நல்ல கேள்விகள்.நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி தொடரட்டும்.