Wednesday, March 05, 2008

பண்படுத்திய (பின்) ஊட்டச்சத்துக்கள்

பின்னூட்டங்கள் பெரும்பாலும் சத்தான ஊட்டச்சத்தாகவே இருந்திருக்கிறது. சில சமயங்களில் கசப்பு மருந்தாகவும் இருந்திருக்கின்றன. மிக மிக குறைவான சமயங்களில் நோகடிக்கும் பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் அவையும் வலையுலகம் மாதிரியான பொதுச்சூழலில் இயல்பான ஒன்று மறந்து விடுவதுண்டு.

2006,அக்டோபரில் தேன்கூடு போட்டிக்காக எழுதிய “மரணம் மாபெரும் விடுதலை” என்றக் கதைக்கு வந்த ஒரு அனாமதேயப் பின்னூட்டம் நிறைய யோசிக்க வைத்தது. அந்த அநாமதேயம் சத்தியமான அக்கறையுடன் இந்தப் பின்னூட்டத்தை இட்டிருந்தார். அந்தப் பின்னுட்டம் இதுதான்.


நானும் ஒரு பிரபல வலைப்பதிவாளர் தான். உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் பேருலயே வந்து சொன்னா தப்பா நெனைப்பீங்களோன்னு அனானியா வந்து உங்களை விமர்சனம் பண்ணுறேன்.

நீங்க எழுதற கதையோட தீம் எல்லாம் நல்லா இருக்கு. பிரச்சினை என்னன்னா உரையாடல்கள் இயல்பா இல்லே. உரையாடல்களை கொஞ்சம் அறிவுஜீவித்தனமா அமைக்கணும்னு நெனைச்சி அதுக்கு சரியான பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காம ஒப்பேத்துறிங்க. முடிஞ்சவரைக்கும் இயல்பு தமிழில் உரையாடல்களை அமைத்து கதை எழுதுங்கள்.

உங்க பதிவு படிக்கிறதுக்கு முன்னாடி வேறு ஒருத்தர் தேன்கூடு போட்டிக்காக எழுதிய படைப்பை பார்த்தேன். முழுக்க முழுக்க வசனங்களால் ஆன கதை என்று சொல்லமுடியாத ஒரு வித்தியாசமான படைப்பு.உரையாடல்களை ரொம்பவும் இயல்பாக நம் நிஜ வாழ்க்கையில் நாம் கேட்கும் வார்த்தைகளாலேயே அமைத்திருந்தார். ஒரு நாய் குரைப்பதை கூட அவ்வளவு இயல்பாக எழுதியிருந்தார். ஆனாலும் அவர் படைப்புகள் சிலவற்றை புரட்டினேன். தீம் கிடைக்காமல் தடுமாறுகிறார் போல.

உங்களுக்கு தீம் ரொம்ப நல்லா திங்க் பண்ண வருது. வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் எளிமையை சேருங்கள்.இந்த பின்னூட்டத்தை வெளியிடுவதும், மட்டுறுத்துவதும் உங்களுக்குள்ள உரிமை. ஏதோ சொல்லணும்னு நெனைச்சேன். சொல்லிட்டேன்.


இதைப்பதிப்பித்தவுடன் மீண்டும் அதே அநாமதேயம்


என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட வினையூக்கிக்கு நன்றி.
என்னை யார் என்று
Guess செய்ய முடிகிறதா?
ஐந்து பெயரை சொல்லுங்களேன். அதில் நான் இருக்கிறேனா
என்று பார்க்கிறேன்.
- உங்கள் நலம் விரும்பும் அனானி


என்று சொல்லிவிட்டு தான் யாரென்று இன்றுவரை சொல்லவில்லை. இந்த நட்சத்திர வாரத்தில் கதை எழுதும்திறனை மேலும் செம்மையாக்கிக் கொள்ள முயற்சிகள் எடுக்க வைத்த இந்த அநாமதேயப் பின்னூட்டம் இட்டவருக்கு மனமார்ந்த நன்றிசொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் பின்னூட்டம் வந்து சிலமாதம் கழித்து pay it forward என்ற கதைக்கு மீண்டும் அநாமதேயமாக ஒரு பின்னூட்டம்ஆங்கிலத்தில் வந்திருந்தது.


Hello Mr. Vinaiooki,

It is crystal clear that the base of your story is from the english movie Pay It Forward. Nothing wrong in redoing thestory, but you have to mention a courtesy.
Oru ezhuthallanukku athu than perumai.
If you tell me this is your own idea and it is really strange coincidence.
Be honest for yourself. Otherwise you can not be at peace.
Good luck...

”காப்பி” அடித்து எழுதப்பட்ட கதை என்றும், நீ நிம்மதியாவே இருக்கமாட்டே என்று சாபம்விடும் விதத்தில் போடப்பட்டிருந்த இந்தப்பின்னூட்டம் அதிர்ச்சியாய் இருந்தது. வருத்தம் இருந்தாலும் உடனே பதில் சொல்ல
விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டேன். மின்னஞ்சலைத் திறந்ததும்


hello Selvakumar,
I read your story on pay it forward.It was good.Shall i
ask u something????Is this your own story???i am asking you this because i have
seen a movie named pay it forward.
So i just thought to ask u this.Do u
realise that u have not written a story on your own.
Ok.the way u presented
the story was really good.But it would be better if u write stories on your own
thinking.

Thanks
Arthi.

என்று ஒரு மின்னஞ்சல் பெட்டியில் கிடந்தது. சரி அந்த அநாமதேயமாகப் போட்டவர்தான் மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு கீழ்கண்ட பதில் அளித்தேன்


Arthi,
Good morning.I am so happy for your comment
as well this mail. Yes it was inspired the movie "Pay it forward". Though I have
not seen the movie yet, I read the reviews sometimes back. The story Title
itself is paying a tribute to that movie. As our bloggers are exposed to English
movies, I thought people would understand that the story is inspired by above
mentioned movie just by giving the name "Pay it forward". It is not intentional
to hide or take credits for this. Sometimes "good things" should be conveyed in
all the possible modes. This pay it forward concept is one of the few. I had
just paid it forward in tamil.

Coming to the point "own thinking" Yes, i
dont want to claim the 40+ stories that I had written are my "own thinking" . we
are bound to be influenced by things "surrounded" us. So none of the stories is
100% free from influences. All my stories are influenced , inspired by the
incidents happened with friends society (fear, beliefs, betrayals emotions ).

I am just a presenter ,At the same time, I present the things which
could bring positive impact and I present it in my own way.

When I
release the book, sure I shall give "credits" to that novel written by Catherine
ryan hide and the movie. Please do visit my site often and pass me your
opinions. Thanks a lot

R.Selvakumar (aka) vinaiooki


இந்தப் பின்னூட்டம் கொடுத்தவரும் யாரென்றுத்தெரியவில்லை. அந்த சமயத்தில் என்னை நானே introspect செய்துகொள்வதற்கும் இதுவும் உதவியாக இருந்தது.

மா.சிவக்குமார் அடிக்கடி , நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை “நெம்புகோல்” கதைகள் என்று சொல்லுவார். நிறைய சமயங்களில் “நெம்புகோல்” கதைகள் அறிவுரைப் பாணியில் அமைந்திருந்தாலும்,
சிறுகதைக்கான இலக்கணங்களை மீறியோ அல்லது பின் தொடராமலோ இருந்திருந்தாலும் யாரேனும் ஒருவரை அதைப் பாதித்து மாற்றத்திற்கு வித்திட்டால் அந்தக் கதைக்கும் எழுதியவருக்கும் பெருமைதான். அவ்வகையான பூரிப்பும் ஒருநாள் எனக்குக் கிடைத்தது. சதீஷ்குமார் என்ற எனக்கு முன்னறிமுகம் இல்லாத ஒரு அன்பர் பிடிஎப் கோப்பாக மின்னஞ்சலில் சுற்றுப்பயணம் வந்துகொண்டிருந்த “கற்கை நன்றே” கதை வாசித்துவிட்டு என்னுடைய editor@vinaiooki.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து இருந்தார்.

Dear Editor,
I read the above mentioned short story.
Wonderful one.
Really thought provoking one
It really brought tears to
my eyes.
Actually, I myself have around 400 books at my house which I
treasure a lot.
I also have a plan to open a mini library at my home.
This short story was just a mirror image of my thoughts.
Was really a
refreshing thought.
The simple narrative adds value to the story to be read
by one and all.
The only problem is that I was not able to express my
feelings in tamil.
Good job.

Satish Kumar SVN.

எழுத்துப் பயிற்சிக்காக எழுதப்படும் பேய்க்கதைகளால் அறியப்பட்டு இருந்தாலும் நெம்புகோல் கதைகளே மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்ற நிலையில் சதீஷ்குமாரின் இந்த மின்னஞ்சல் ஒரு மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தது.

அவ்வகையில் இந்த வருடத்துவக்கத்தில் முதல்பதிப்பாக எழுதப்பட்ட காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு என்ற கதை முக்கியமானது. இனிவரும் காலங்களில் நெம்புகோல் வகையிலான கதைகளை அதிகம் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பதிவை முடிக்கிறேன்.

பிற்சேர்க்கை :
இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கதைகளை கீழ்க்காணும் சுட்டிகளில் வாசிக்கலாம்.
1. மரணம் மாபெரும் விடுதலை
2. Pay it forward
3. கற்கை நன்றே
4. காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு

என்னை மேலும் பண்படுத்திக்கொள்ள உங்கள் தனிப்பட்ட அபிப்ராயங்களை rrselvakumar@gmail.com என்ற முகவரிக்கும் தரலாம்.

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

:-)

said...

வித்யாசமான பதிவு, வாழ்த்துக்கள்

said...

வினையூக்கி, உங்கள் பேய்க் கதைகள் படித்தது இல்லை. நீங்கள் சொல்லும் நெம்பு கோல் கதைகள் ஒரு சில படித்திருக்கிறேன். வலையில் இன்னும் பலரும் எழுதும் நன்னெறிக் கதைகளும் படித்து இருக்கிறேன். ஆனால், இவை அலுப்படிக்கின்றன. இந்தக் கதைகளைத் தான் பள்ளிக்கூட நன்னெறி வகுப்பிலும் வார இதழ்களிலும் படித்துக் கொண்டே இருக்கிறோமே? நீதி சொல்லாமல், பேய்க் கதையும் இல்லாமல், வெறும் நிகழ்வுகளை சுவைபட அடுக்கும் சிறுகதைகளைக் காண ஆவல்.

said...

என்ன சொல்ல வர்றீங்க?
உங்க்ளுக்கு வந்த இன்னூட்டங்களையும் போட்டிருக்கீங்க;
PIN னூட்டங்களையும் போட்டிருக்கீங்க
இரண்டையும் மறக்கவில்லை என்று
சொல்கின்றீர்களா?

said...

தம்பி!
அருமையான தலைப்பு. மென்மையான பதிவு; உங்களைப் போல்
எதிரிக்குக் கூட இப்படிச் சொன்னல் ஏற்றுக் கொள்வான்...தொடரவும்.
நீங்கள் ஆங்கிலக் கதைகளை தமிழ்ப்படுத்தினாலும் என்போல் ஆங்கிலம் படிக்காதோருக்கு
உதவியே!!!
எல்லாம் ஏதோ ஒரு வகையில் பிரதியே என்பது; மிகச் சரியான கூற்று.
இன்றைய தமிழ்ச் சினிமாக்கள் அடிக்காத காப்பியா?? நீங்கள் அடித்துவிட்டீர்கள்.

said...

:)

said...

:)

said...

// என்னை மேலும் பண்படுத்திக்கொள்ள உங்கள் தனிப்பட்ட அபிப்ராயங்களை rrselvakumar@gmail.com என்ற முகவரிக்கும் தரலாம். //

அவ்வளவுதான? கவலைய உடுங்க... உண்டு இல்லைனு பண்ணிடுறோம் !!! :)

said...

பின்னூட்டங்கள் உங்கள் எழுத்தினை செழுமைபடுத்தியிருக்கிறது என நம்புகிறேன்!

வாழ்த்துக்கள்!!

said...

வித்தியாசமான பதிவு,
வாழ்த்துக்கள்.

சிலபதிவர்கள் குறிப்பாக ஈயம், பித்தாளை பதிவர்கள் ஏதாவது நம் கருத்தை சொன்னால் அனானியாக அவர்களே வந்து பிறாண்டறாங்களே அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க??

said...

உங்களுக்கென ஒரு பாணி வந்தாச்சுங்க. You have to smoothen the rough edges. Take this as Boost...

said...

நேரானதோ எதிர்மறையோ - எப்படி இரண்டுமே கதைகளைச் செழுமைப் படுத்துகின்றனவோ, அதே போல் தான் பின்னூட்டங்களும்! கொள்ள வேண்டியதை மட்டும் கொண்டால், எப்பமே ஊட்டச் சத்து தான் வினையூக்கி! :-)

சரி, ஒரு வேண்டுகோள்!
"பின்னூட்டம்" என்பதை மையமாக வைத்தே ஏன் ஒரு கதையை நீங்கள் ஒரு சிறுகதையைத் தரக்கூடாது? :-)

said...

உங்கள் ஒரு சில கதைகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வாசித்துள்ளேன்! ரொம்ப எல்லாம் பின்னூட்டியதில்லை! அதுக்கு வாய்ப்பு கொடுத்த நட்சத்திர வாரத்துக்கும், ஆபீஸ் ஆணிக்கும் தான் நன்றி சொல்லோணும்!

அந்த ரவிசங்கருக்கு நிகழ்வுகள் கதை விருப்பம்! இந்த ரவிசங்கருக்கு நன்னெறிக்கதை விருப்பம்! :-)
ஆக மொத்தம் கதை எதுவாயினும் நல்ல கருவைக் காணும் போது, மனம் அசை போடத் தான் செய்கிறது!

said...

நன்றி லக்கிலுக்,இ.கா.வள்ளி,ரவிசங்கர்,கேஆர்.எஸ்,
கப்பிபய,சிவஞானம்ஜி,இளா,பொன்வண்டு,
யோகன்பாரிஸ்,மங்களூர்சிவா,திவ்யா,தமிழ்பிரியன்