Thursday, October 05, 2006

மரணம் - மாபெரும் விடுதலை - சிறுகதை - தேன்கூடு போட்டிக்காக

"கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்துப் பாடு" என்ற மாயாவி படத்தின் பாடலின் ஹலோ டியூனைத் தொடர்ந்து என் நண்பரும் பிரபல எழுத்தாளரும் ஆன வாசகன் ஹலோ சொன்னார்.

சொல்லு கார்த்திக் என்ன விசயம்? இப்போ ஸ்டோரி டிஸ்கஷன் ல இருக்கேன் ...

சார், எங்க இருக்கீங்க , ஒரு விசயம் பேசனும் ..மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு !!!

ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ் ல இருக்கேன் கார்த்தி, மணி இப்போ 6, நைட் பத்து மணிக்கு வர்றேன். வீட்டுலேயே இரு.. எங்கேயும் போய்டாதே உன்னை வந்து நான் மீட் பண்றேன்

ஒகே சார் என்று போனைக் கட் செய்தேன்.

என் பேரு கார்த்திக், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில சின்ன பொறுப்பிலே இருக்கேன்.எழுத்தாளர் வாசகன் நான் மதுரையில் படிக்கிறப்ப நடந்த "பெர்ஷனாலிடி டெவலப்மென்ட்" கேம்ப ல அவரை பேச அழைத்தபோது கிடைத்த அறிமுகம்.. அப்ப ஆரம்பித்த நட்பு இன்றும் சென்னை வந்த பிறகும் தொடர்கிறது.

நான் என்னுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் அவருடன் தான் கலந்துரையாடுவது வழக்கம் ... எழுத்தாளர் வாசகன் கடை நாற்பதுகளில் இருப்பவர்.. திருமணமாகதவர், ஆனால் பிரமமச்சாரி இல்லை...
எப்போதும் அவரைச் சுற்றி ஒரு "பாசிடிவ்" வளையம் இருப்பது போல் இருக்கும். எந்த ஒரு விசயத்துக்கும் சோர்வடையாதவர்.


என்னுடைய "அவள்" என்னை விட்டு பிரிந்ததிலிருந்து எனக்கு "தற்கொலை" எண்ணம் மேலோன்கி வருகிறது... நேற்று கூட அலுவலக்த்தின் மாடியிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றியது... அதனாலேயே இன்று லீவு போட்டுட்டு வீட்டிலேயே அடைந்து உள்ளேன்.

எழுத்தாளர் வாசகனுடன் பேசினால் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்தால் அவரும் பிஸியாக உள்ளார். சரி எதாவது படிக்கலாம் என்று முன்பு வாங்கி வைத்து இருந்த "வெரோனிகா டிசைட்ஸ் டொ டை" எடுத்து படிக்கலானேன்.

கதையின் துவக்கமே சுவரசியமாக "தற்கொலை" முயற்சியில் ஆரம்பித்தது... கதை பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே அப்படியே தூங்கிப் போனேன். திடிரென எனது வீட்டு நாய் வழக்கத்தை விட அபாயகரமாக குரைக்க தூக்கம் கலைந்து எழுந்தேன்.. கதைவைத் அகல திறந்து யாரவது வெளிமனிதர்கள் வந்துள்ளனரா எனப் பார்த்தேன்.

அட !!! எழுத்தாள்ர் வாசகன் நின்று கொண்டிருந்தார்,
சார் எப்படி உள்ள வந்தீங்க ..

வெளி கேட்டு பூட்டியல்ல வச்சிருந்தேன்...

ஏறிக் குதித்து வந்தேன்..அதுதான் உன் வீட்டு நாய் குரைக்கிறது.

சிரித்துக் கொன்டே , உங்களுக்கு எப்போதும் விளையாட்டுதான் சார், மொபைல் ல கால் பண்ணி இருந்தா கேட்டை திறந்து விட்டிருப்பேனே.. ஏன் சிரமம்...எனப் பேசிக் கொண்டே இருவரும் உள்ளே வந்தோம்.

நாய் இன்னும் குரைத்துக் கொண்டிருந்தது..

மொபைல் எடுத்துட்டு வரல கார்த்திக்.. சாரி ஒரு அவசரமான விசயம்னால சொன்ன டைம்க்கு வர முடியல.. கொஞசம் லேட்டாயிடுச்சு...


ஆமாம் சார் பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு 12 மணிக்கு வர்றீங்க..


கோவிச்சுக்காதே கார்த்திக், சரி என்ன பிரச்சினை சொல்லு!!

சார், அவள் போன பிறகு வாழ்க்கையின் மேலே ஒரு வெறுப்பு வந்துடுச்சு... எனக்கு என் கவலைகளிலிருந்து விடுதலை வேணும்... ஒரே சொல்யூஷன் ..மரணம்... தற்கொலைப் பண்ணிகொள்ளலாம் போல இருக்குது... ஆனால் உங்க சிஷ்யப் பிள்ளையா இருந்து கொண்டு இப்படி யோசிப்பது தவறுதான்..எனக்கு ஒரு வழி சொல்லுங்க...


ஹாஹா திடிரென வித்தியாசமக சிரிக்க ஆரம்பித்தார்... கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு. ஆனால் முட்டாள் தனமானது.. உண்மை மரணம் மாபெரும் விடுதலை தான்..ஆனாலது தானாகவே சம்பவிக்க வேண்டும்.. உன் வாழ்க்கையின் குறிகோள் என்ன ? உன்னவளா? நிச்சயம் இல்லை!! உனக்கு அவளை எவ்வளவு நாளாத் தெரியும் .

கடைசி இரண்டு வருடங்கள்!!!

யோசித்துப் பார், உனது கல்லூரி கால குறிக்கோள்கள் எதையாவது அடைந்து இருக்கிறாயா?

இல்லை !!!

உன்னுடைய இந்த இரண்டு "குவாலிட்டி" வருடங்களை அவளைக் காதலித்ததன் மூலம் தொலைத்து விட்டாய். காதல் தோல்விகளினால் தற்கொலை என்றால் மனித இனம் என்றோ அழிந்துப் போய் இருக்கும். நான் அடிக்கடி சொல்லும் தத்துவம்தான்

" ஒரு விசயம் கிடைத்தால் சந்தோசம் கிடைக்கா விட்டால் ரொம்ப சந்தோசம், எந்தவொரு நிகழ்வும் காரணம் இன்றி நிகழ்வதில்லை, எல்லாம் நன்மைக்கே"

அப்படியே நீ தற்கொலை பண்ணிகொள்வதால், உன்னவளின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.. எதற்காக நீ அவளை காலம் முழுதும் குற்றணர்ச்சியில் வாழ வைக்க நினைக்கிறாய்.

அவளுடன் நேரம் போதவில்லை என்ற உனக்கு இனி அத்தனை நேரத்தையும் பயனுள்ள் முறையில் செலவு பண்ணலாம்.

ம்ம்ம்.. சார், சிகரெட் என்று மெந்தால் சிகரெடை அவரிடம் நீட்டினேன்...

அவர் சிரித்துக் கொண்டே என்னால் இப்பொது சிகரெட் பிடிக்க முடியாது என்றார்.

எதாவது பொடி வைத்தே பேசுங்கள்..எப்படி சார் நீங்க எப்போதும் சந்தோசமாகவே இருக்கிறீர்கள்.. பொறாமையா இருக்கு என்றேன்

கார்த்தி, பார்க்கிற விசயமெல்லாம் பார்க்கிறது போல் கிடையாது. "என் வலி தனி வலி"

சிலேடை அருமை!!! என்றேன்

உனக்கு தெரியுமா தற்கொலை பண்ணி கொள்கிறப்ப இருக்கிற வேதனை..அது அனுபவிப்பனுக்குத்தான் தெரியும்...

தாங்க்ஸ் சார், இதுக்கு தான் "வாசகன்" துணை வேண்டும் என்பது என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, நானில்லாமலும் நீயாக சிந்திக்க வேண்டும், அப்போதுதான் நீ என் உண்மையான் சிஷ்ய பிள்ளை...

சரி சார், எனக்கு ஏதோ தெளிவு ஏற்பட்டது போலிருக்கு... தாங்க் யூ... டைம் ஆயிடுச்சு... தூங்கலாமா..

எனக்கு தூக்கம் வராது நீ போய் தூங்கு என்றார்.

ஓகே என்று தூங்கப் போனேன்.

நாய் குரைத்தலை இன்னும் நிறுத்தவில்லை.

பாதி வெட்டப்பட்ட மாடு என்னைத் துரத்துவது போல் வந்த கனவினால் தூககம் கலைந்து மணியைப் பார்த்தேன். 8 அடித்தது. ஹாலில் வந்து பார்த்தேன்..வாசகனை காணவில்லை..

அவர் எப்பொதும் இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் கதவைத் திறந்து வைத்துச் சென்று விடுவார்.


வெளியே கிடந்த தினமணி பேப்பரை புரட்டலானேன்.

அதில்,
பிரபல எழுத்தாளரும் திரைவசனகர்த்தாவுமான வாசகன் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் தனது கடற்கரை வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பிரபல திரைப்பட நடிகயுடனான காதல் முறிவு இம்முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

ஐயோ அப்போ நேற்றிரவு நான் பேசிகொண்டிருந்தது??!!!!!!!!!!!!!!!! அப்படியே தரையில் சரிந்தேன்....

27 பின்னூட்டங்கள்/Comments:

பொன்ஸ்~~Poorna said...

காதல் தோல்விக் கதையாவே எழுதித் தள்றீங்க!!

அந்த நேரத்தில் வெரோனிகா கதையைப் படித்த கார்த்திக் தான் தற்கொலை செய்துப்பான்னு நினைத்தேன்.. இப்படி வாசகனைக் கொன்னுட்டீங்களே! (என்னை இல்லீங்க)

வினையூக்கி said...

பொன்ஸ் ,
ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க ...நன்றி...

த்ரில்லரா இருக்கனும்னு நினைச்சு எழுதினதால வாசகனை சாகடிச்சாச்சு

வினையூக்கி said...

///
காதல் தோல்விக் கதையாவே எழுதித் தள்றீங்க!!
////
ஹிஹி... (Smiles)

Anonymous said...

நானும் ஒரு பிரபல வலைப்பதிவாளர் தான். உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் பேருலயே வந்து சொன்னா தப்பா நெனைப்பீங்களோன்னு அனானியா வந்து உங்களை விமர்சனம் பண்ணுறேன்.

நீங்க எழுதற கதையோட தீம் எல்லாம் நல்லா இருக்கு. பிரச்சினை என்னன்னா உரையாடல்கள் இயல்பா இல்லே. உரையாடல்களை கொஞ்சம் அறிவுஜீவித்தனமா அமைக்கணும்னு நெனைச்சி அதுக்கு சரியான பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காம ஒப்பேத்துறிங்க. முடிஞ்சவரைக்கும் இயல்பு தமிழில் உரையாடல்களை அமைத்து கதை எழுதுங்கள்.

உங்க பதிவு படிக்கிறதுக்கு முன்னாடி வேறு ஒருத்தர் தேன்கூடு போட்டிக்காக எழுதிய படைப்பை பார்த்தேன். முழுக்க முழுக்க வசனங்களால் ஆன கதை என்று சொல்லமுடியாத ஒரு வித்தியாசமான படைப்பு.

உரையாடல்களை ரொம்பவும் இயல்பாக நம் நிஜ வாழ்க்கையில் நாம் கேட்கும் வார்த்தைகளாலேயே அமைத்திருந்தார். ஒரு நாய் குரைப்பதை கூட அவ்வளவு இயல்பாக எழுதியிருந்தார். ஆனாலும் அவர் படைப்புகள் சிலவற்றை புரட்டினேன். தீம் கிடைக்காமல் தடுமாறுகிறார் போல.

உங்களுக்கு தீம் ரொம்ப நல்லா திங்க் பண்ண வருது. வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் எளிமையை சேருங்கள்.

இந்த பின்னூட்டத்தை வெளியிடுவதும், மட்டுறுத்துவதும் உங்களுக்குள்ள உரிமை. ஏதோ சொல்லணும்னு நெனைச்சேன். சொல்லிட்டேன்.

Gnanes said...

getting reminded of the movie 'the sixth sense'....it defied the conclusion which i had assumed....i was expecting the write to hang at karthiks place...

பொன்ஸ்~~Poorna said...

வினையூக்கி,
அந்த அனானி சொன்னதை நானும் சொல்ல நினைச்சேங்க..

அத்தோட, punctuation கொஞ்சம் பாருங்க.. எங்க டயலாக், எங்க இல்லைங்கிறதே சில சமயம் புரிய மாட்டேங்குது.

அதே மாதிரி, வெரோனிகா மாதிரியான ஆங்கிலக் கதைகளும் இந்தக் கருப்பொருளுக்கு அத்தனை பொருந்த வில்லை என்று தோன்றுகிறது. (சில்வியா பிரவுன் முயற்சித்திருக்கலாம் ;) இப்பத்தைய ட்ரெண்ட் அது தான் )

Anonymous said...

inga adiyum aval... anthamum aval ilai.... anaal antham aval gunam.... pei ah ah ah ah.....

கப்பி | Kappi said...

/////
காதல் தோல்விக் கதையாவே எழுதித் தள்றீங்க!!
////
ஹிஹி... (Smiles)//

அதே கேள்வியை நானும் கேட்கிறேன்..எனக்கும் சிரிச்சு மழுப்பிடாதீங்க ;)

கதை சூப்பர்! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வினையூக்கி said...

//நானும் ஒரு பிரபல வலைப்பதிவாளர் தான். உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் பேருலயே வந்து சொன்னா தப்பா நெனைப்பீங்களோன்னு அனானியா வந்து உங்களை விமர்சனம் பண்ணுறேன்.
//

நன்றி அனானி, நீங்கள் உங்கள் பெயரிலேயே போட்டு இருக்கலாம். வளர நினைக்கும் எனக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உண்டு.

//
உரையாடல்களை கொஞ்சம் அறிவுஜீவித்தனமா அமைக்கணும்னு நெனைச்சி அதுக்கு சரியான பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காம ஒப்பேத்துறிங்க. முடிஞ்சவரைக்கும் இயல்பு தமிழில் உரையாடல்களை அமைத்து கதை எழுதுங்கள்.

//

நீங்கள் சொல்வது மிக்க சரி, "வார்த்தைகள்" கிடைக்காமல் ஒப்பேற்றுவது... சரியான வார்த்தைகளைப் போடாமல் சில சமயங்களில் ஹாப் பாயில் ஆகிவிடுகிறது.
எளிமையான நடையில் எழுத முயற்சி செய்கிறேன்.

// உங்களுக்கு தீம் ரொம்ப நல்லா திங்க் பண்ண வருது.//

மிக்க நன்றி

//
இந்த பின்னூட்டத்தை வெளியிடுவதும், மட்டுறுத்துவதும் உங்களுக்குள்ள உரிமை. ஏதோ சொல்லணும்னு நெனைச்சேன். சொல்லிட்டேன். //

உங்கள் பக்குவமான விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

வினையூக்கி said...

//
பொன்ஸ் said...
வினையூக்கி,
அந்த அனானி சொன்னதை நானும் சொல்ல நினைச்சேங்க..

அத்தோட, punctuation கொஞ்சம் பாருங்க.. எங்க டயலாக், எங்க இல்லைங்கிறதே சில சமயம் புரிய மாட்டேங்குது.
//

நன்றி பொன்ஸ், இனி வாக்கியகுறிகளை இட்டு மேலும் எளிதாகப் புரியும் படி எழுதுகிறேன்

வினையூக்கி said...

// getting reminded of the movie 'the sixth sense'....it defied the conclusion which i had assumed....i was expecting the write to hang at karthiks place...//

SIXTH SENSE is my all time favorite Thriller. It is obvious me getting inspired by that.
Atlast I proved your guess is wrong. Smiles

வினையூக்கி said...

/////
காதல் தோல்விக் கதையாவே எழுதித் தள்றீங்க!!
////
ஹிஹி... (Smiles)//

அதே கேள்வியை நானும் கேட்கிறேன்..எனக்கும் சிரிச்சு மழுப்பிடாதீங்க ;) ///

Big Smiles

//கதை சூப்பர்! வெற்றி பெற வாழ்த்துக்கள்! //
Merci beacoup

Anonymous said...

என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட வினையூக்கிக்கு நன்றி.

என்னை யார் என்று Guess செய்ய முடிகிறதா?

ஐந்து பெயரை சொல்லுங்களேன். அதில் நான் இருக்கிறேனா என்று பார்க்கிறேன்.

- உங்கள் நலம் விரும்பும் அனானி

Anonymous said...

என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட வினையூக்கிக்கு நன்றி.

என்னை யார் என்று Guess செய்ய முடிகிறதா?

ஐந்து பெயரை சொல்லுங்களேன். அதில் நான் இருக்கிறேனா என்று பார்க்கிறேன்.

- உங்கள் நலம் விரும்பும் அனானி

வினையூக்கி said...

//
என்னை யார் என்று Guess செய்ய முடிகிறதா?

ஐந்து பெயரை சொல்லுங்களேன். அதில் நான் இருக்கிறேனா என்று பார்க்கிறேன்.
//

அனானி, ஒரு சின்ன க்ளூ கொடுங்களேன். எனக்கு இதற்கு முன்பு பின்னூட்டமிட்டிருக்கிறீர்களா... எனக்கு நன்கு அறிமுகமான பிரபல வலைப்பதிவாளர் போனிலியே தனது விமர்சனங்களை சொல்லிவிடுவார்.ஆகையால் நீங்க அவராக இருக்க வாய்ப்பு இல்லை. இன்னொரு பிரபல வலைப்பதிவாளர் இப்பொதெல்லாம் எனக்கு பின்னுட்டமிடுவதில்லை. தெரியலீங்க ..சொல்லுங்க...

வினையூக்கி said...

Thanks Muthu(Thamizhini)

Anonymous said...

Kathai romba nalla irunthuthu Anna. Enjoyed reading it. Especially the end. It was unexpected. Supera irukku.
Vetri pera vazhthukkal.

Anonymous said...

//- உங்கள் நலம் விரும்பும் அனானி //

நீங்க ரொம்ப நல்ல அனானி போல

Anonymous said...

Nice one

Anonymous said...

செல்வம்,

பூர்ணிமா, கப்பிபய, ஞானேஸ் இதுமாதிரி பெயர்கள்லே நீங்களே நெறைய பின்னூட்டம் போட்டுக்கறீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே. வெளக்கம் ப்ளீஸ்.

வினையூக்கி said...

ஹாஹா ..கெட்ட அனானி, வருகைக்கு நன்றி,
கப்பி பய ஒரு பிரபல தமிழ் வலைப்பதிவாளர். என் காலேஜ் ஜூனியர்
http://kappiguys.blogspot.com/

ஞனேஷ் மற்றும் பூர்ணிமா இருவரும் ஆங்கில வலைப்பதிவாள்ர்கள். இவர்களும் என்னுடன் கல்லுரியில் படித்தவர்கள்.
உங்கள்: சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டேன்.
அப்படியே கதையைப் பற்றி ஒரு வரி சொல்லுங்க அனானி

கப்பி | Kappi said...

//பூர்ணிமா, கப்பிபய, ஞானேஸ் இதுமாதிரி பெயர்கள்லே நீங்களே நெறைய பின்னூட்டம் போட்டுக்கறீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே. வெளக்கம் ப்ளீஸ்.
//

:))))))))))))

கெட்ட அனானி...உங்களுக்கு செம நகைச்சுவை உணர்வு!! எப்படிங்க இப்படியெல்லாம் தோனுது?? என்னால சிரிப்பை அடக்க முடியல :))

Anonymous said...

Just now read the maranam story.
Nalla irunthuchu Selva.
It is good to see you using typography to tell the story - do develop on it, it will give a different dimension to the story :-)
Nee motha irunthae vasagan yeranthatha hint kudukaama irunthiruntha innum effective-va irunthurukumnu thonuthu.
this time I'll try to vote before the time expires :-)

ஓகை said...

கதை நடுவிலேயே முடிவு ஊகிக்க முடிகிறது. நாய் குரைத்துக் கொண்டே இருந்ததையெல்லாம் சொல்லவே வேண்டாம் என்று நினைக்கிறேன்.

படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Sowkan said...

Hi Vinaiooki, long time.....excuse me......I read all your posts today. About this story:
You deserve a good pat on your back. But I am very sorry I have lot of criticism, positive, of course....(I know you are a valarnthuvarum ezhuthalar).
1. Spelling mistakes. I guess because you have to type in Jaffna library translation tool and in the speed with which you write the story, it is natural that you might miss on correcting spelling mistakes. Would you do a review once you are finished your story and correct them?
2. Quotations for dialogues....this time I was mislead to think you had used red colored font but I think that was also some mistake. Kindly pay attention.
3. Karthik thinks about suicide and reads the book 'Veronica decides to die'?!@#$%? Surprising and a bit weird, too... Atleast when you are scared you might suicide and want to avoid it, you wouldn't read such a book. Anyways, I can get convinced, Karthik was phsycologically disturbed. But when the book started with suicide, he found it "interesting"?? I am sorry you should have used some other word here.
4. Vasagan tells Karthi that he has wasted 2 "quality years" in loving that girl. But later he says that she might feel bad if Karthi suicided. It is totally contradictory. He might instead said "Past is past. Dont drool in the past. You have "the present". Make best use of it."
5. Climax was real good, something unexpected. There is a good improvement in your story-telling ways.

லக்கிலுக் said...

வலைச்சரம் மூலமாக வந்து இப்போது தான் இந்த கதையை படிக்கிறேன். நல்ல மர்மக்கதை. என்னால் கடைசி வரை முடிவை யூகிக்க முடியவில்லை. சூப்பர்!!!!

உண்மைத்தமிழன் said...

தம்பி வினையூக்கி,

அருமையான மர்மக் கதை. என்னால் இறுதிவரை யூகிக்க முடியவில்லை. சபாஷ்.. இது போன்ற எந்த ஒரு கதையையும் நான் முன்னெப்போதும் கேட்டதில்லை. அதனால் எனக்கு இது புதிது.

கமெண்ட்ஸ்களில் வந்திருந்த சில யோசனைகள், கதையில் கொஞ்சம் வார்த்தை ஜாலத்தையும், மேக்கப்பையும் சேர்த்திருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்குமே என்பதுதான்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் எழுத்து வெளிப்படும்தானே. அதை விட்டுவிடுங்கள். உங்கள் ஸ்டைலிலேயே எழுதுங்கள்..

வசனங்களை கொட்டேஷனுக்குள் போட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் கொஞ்சம் சரி பார்த்து, format செய்து வெளியிட்டால் சில சில சின்னச் சின்ன 'கனப்பார்வைகள்' யாருக்கும் தோன்றாது..

'அன்றைக்கு' சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறேன்.. எழுதுங்கள்.. எழுதிக் கொண்டே இருங்கள்.. வெல்வீர்கள்..

வாழ்க வளமுடன்..