Sunday, March 02, 2008

திரும்பிப்பார்க்கிறேன்


ஒவ்வொரு வாரமும் திங்களன்று தமிழ்மண முகப்பில் தெரியும் நட்சத்திரத்தைப்பார்க்கையில் அடடா, இன்னும் நாம் நட்சத்திரம் ஆகவில்லையே!! என்ற ஏக்கம்/ஆதங்கம் கடைசி இரண்டரை வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் பூங்காவில் படைப்புகள் வரும்போதும், பூங்காவில் வரவேண்டும் என்று எண்ணத்துடன் எழுதும்போதும் கொஞ்சம் குறைந்தது. பூங்கா தற்காலிகமாக வெளிவராத நிலையில் நட்சத்திர ஏக்கம் மீண்டும் எனக்குள் தலைகாட்டியது. Better late than never.. இந்த வாரம் ”வினையூக்கி”யாகிய நான் தான் நட்சத்திரம் என்ற பெருமையுடன், கடைசி இரண்டரை வருட பதிவுலக அனுபவத்தை திரும்பிப்பார்க்கையில் நெடியதூரம் வந்துவிட்டதாக தோன்றினாலும், இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான தரமானப் பதிவுகளைக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம், இனிவரும் வருங்காலங்களில் அப்படி எழுதவேண்டும் என்ற உறுதியைக்கொடுக்கிறது.

2004 பிற்பகுதிகளில் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்களினால் நிகழ்ந்த அல்லது எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தனிமைச்சூழல் (hibernation) ஒரு கட்டத்தில் வெறுப்படைய , ஒரு மாற்றைதேடி மனம் அலைய வரப்பிரசாதமாகக் கிடைத்ததுதான் வலையுலகம். இணையத்தில் சாருஆன்லைன்.காம், காலச்சுவடு, திண்ணை மட்டும் படித்துக்கொண்டிருந்த போது ஏதோ ஒன்றைத் தேடப்போக, வலைப்பூக்களில் மனம் வசப்பட்டது. ஏற்கனவே ஆங்கில வலைப்பதிவராக இருந்த , கல்லூரி நண்பர் ஏகாந்த் இடம் பிலாக் நுட்பங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டு, ஜாஃப்னாலைப்ரரி தட்டச்சுப்பொறி உதவியுடன் முதல் பதிவை பதிந்த நாள் அக்டோபர் 3, 2005.
முதல்பின்னூட்டத்தை ஏகாந்த் கொடுத்திருந்தாலும்,அது நட்பு ரீதியிலானது என்பதால், அவருக்கு அடுத்து வந்த கார்த்திக்ராமஸின் பின்னுட்டம் முதல் பின்னூட்டம் எனலாம்.

தமிழ்ப்பதிவுலகில் வந்த ஒரு வாரத்திலேயே நான் எழுதிய இந்தப்பதிவு தினமலரில் வந்தது.


தினமலரின் சுட்டி இங்கே

ஜனரஞ்சக நாளிதழ்களும், தினசரிகளும் கொடுத்திருந்த அரசியல் , இலக்கிய அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் எழுத ஏதும் சரக்கு என்னிடம் இல்லாத நிலையில் பிரச்சினை இல்லாமல் எழுத வேண்டும் என்பதற்கு சிறுகதைகள் தளம் ஒரு சிறப்பாகப் பட்டது. எனக்கு எப்போதும் இருக்கும் பேய்பயங்களினால் ஏற்பட்ட சிலக் கற்பனைகளுக்கு வார்த்தைக்கொடுத்து , அமானுடக் கதைகளை வரிசையாக எழுத ஆரம்பித்தபோது பதிவர் வட்டங்களில் என்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடிந்தது.

என்னுடைய முதல் கதை இங்கே

தேன்கூடு கதைப்போட்டிகள், கதை எழுத மேலும் ஆர்வத்தை தூண்டின என்றால் மிகையாகாது. ஒவ்வொரு பதிவு பதிப்பித்தவுடன் பதிவர் முத்து(தமிழினி) யின் தொலைபேசி அழைப்புவரும். எப்படி எழுதி இருக்கலாம் என்ற ஆலோசனைகள், பாராட்டுக்கள் கிடைக்கும். ஆரம்பத்தில் அவரைத்தவிர வேறு சகப்பதிவர்கள் யாரும் அறிமுகம் ஆக வாய்ப்பு இல்லாத நிலையில், சென்னைப்பட்டினம் நடத்திய வலைப்பதிவு சந்திப்புகளினால் பாலபாரதி, பொன்ஸ் லக்கிலுக்,சிவஞானம்ஜி,மாசிவக்குமார் ,நாமக்கல் சிபி, யோசிப்பவர், பிரியன், நந்தா,போன்றவர்களின் அறிமுகமும் அதற்கு மேல் அவர்களின் நட்பும் கிடைத்தது.

[வார்த்தைகள் கிடைக்க சிரமப்படுகிறீர்கள் என்று பொன்ஸின் அட்வைசும், டேய் கொய்யால, வாசிப்பு அனுபவம் உனக்கில்லைடா...ஒழுங்கா புத்தகம் நிறையப் படிடா என நேற்றுவரை பாலபாரதியின் குட்டுக்களும் வாங்கிக்கொண்டுதான் இருக்கேன்]

பதிவர் சந்திப்புகளோ, பதிவர் பட்டறைகளில் பங்களிப்போ இல்லை என்றால் இந்த அளவு சுமாராகவாது எழுதி இருப்பேனா என்பது சந்தேகம் தான்.

2006 இறுதியில் தான் ஜூனியர் கப்பிப்பய தயவினால் எ-கலப்பை அறிமுகம் கிடைத்தது. எ-கலப்பை முகுந்தின் அறிமுகம் கோவை பதிவர் பட்டறையில் கிடைத்தது. தொழில்நுட்ப விசயங்களில் முகுந்தின் அறிமுகமும் , ”தகடூர்” கோபி மற்றும் ரவிசங்கரின் அறிமுகமும் தனித்தளம் அமைத்து சிலப்பல ஆராய்ச்சி வேலைகளைச் செய்ய உதவியது. இவர்களிடம் ”ஹாய் ஹல்லோ நல்லா இருக்கீங்களா” என ஜிடாக்கினால் பதில் வராது. “சார் ஒரு டவுட்” என அடித்தோம் என்றால் அடுத்த மைக்ரோ வினாடியில் பதில் வந்து சேரும்.

கதைநல்லா இருக்கு , நல்லா இல்லை என நேரிடையாக அபிப்ராயம் சொல்லும் இலவசக்கொத்தனார் மற்றும் யோசிப்பவர் சிறுகதைகளுக்கு டிப்ஸ் அவ்வப்போதுக்கொடுத்துக்கொண்டிருக்கும் சிறில் அலெக்ஸ் மற்றும் பாஸ்டன் பாலா, 2005 இல் இருந்து இன்று வரை கதைகளுக்கு பின்னூட்டம் மட்டும் போடாமல் அதன் தொடர்ச்சியையும் எழுதித்தரும் வீ.எம் இன் அபிப்ராயங்களும், இந்தக் கதை நிச்சயம் பாராட்டு பெறும் என்று நினைப்பை நிஜம் என்று உறுதி செய்யும் வகையில் அமையும் காசி, குழலி , ஜிரா,மாசி,கோவி.கண்ணன்,டிபிஆர்.ஜோசப் ,ஆகியோரின் பின்னூட்டங்களும் கதை எழுதும் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையல்ல.
கிரிக்கெட் பற்றிய பதிவுகள் என்றால் எங்கிருந்தாலும் உடனே ஆஜராகும் வவ்வால், இளா,சிவபாலன், பாரதிய நவீன இளவரசன் ஆகியோருக்கும் அடிக்கடி தொலைபேசி உற்சாகமளிக்கும் யோகன் பாரிஸ், பதிப்பிக்கும் முன் தனிவாசகர்களாக வாசித்து அபிப்ராயம் சொல்லும் சிவஞானம்ஜி, டிபிசிடி,திவ்யா,துர்கா மற்றும் சில அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த நட்சத்திர அந்தஸ்தில் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.

அட , முக்கியமாக நான்குப் பேருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன். அவங்க வேறு யாருமில்லை. ஜெனி, கார்த்தி, மோகன், ரம்யா தான்... அவர்களுக்கும் நன்றி. அவர்களை உருவகமாக நான் கொண்டிருக்கும் நிஜமான நபர்களுக்கும் நன்றி.

68 பின்னூட்டங்கள்/Comments:

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி!!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி, கலக்குங்க

said...

//இந்தக் கதை நிச்சயம் பாராட்டு பெறும் என்று நினைப்பை நிஜம் என்று உறுதி செய்யும் வகையில் அமையும் காசி, குழலி , ஜிரா,மாசி,கோவி.கண்ணன்,டிபிஆர்.ஜோசப் ,ஆகியோரின் பின்னூட்டங்களும் கதை எழுதும் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையல்ல.//

வினையூக்கி அவர்களே,

நட்சத்திர நன்னாளில் நினைவு கூறுவதற்க்கு நன்றி !

நட்சத்திரமானதற்கு மிக்க மகிழ்வு, மற்றும் பாராட்டுக்கள் !

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மாமா

said...

நட்சத்திரப் பதிவர் வினையூக்கி அவர்களே,

உங்கள் சிந்தனையில் இருப்பது முழுவீச்சில் இன்னும் வரவில்லை என்பதை அறிந்த ஒரு சிலரில்/பலரில் நானும் ஒருவன்.

2.5 வருடக் கதையில், கடைசி ஓவர் மட்டும் மட்டைப் படித்த என்னை, குறிப்பிட்டுச் சொல்லி, பெரிய மனுசன் ஆகிட்டீங்க...

வாழ்த்துக்கள்...கலக்குங்க..

லாரல்- ஹார்டி, டாம் ஜெரி,என்பதுப் போல் ஜெனியும், கார்த்திக்கும்,இனி வரும் காலங்களில் பேய்க் கதை என்றால் நிலைத்துவிடுவார்கள் போலிருக்கிறது...அதற்கு அவர்கள் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள் ஆவார்கள்.

மீண்டும் ஒரு முறை, நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் வலைப்பதிவு துவங்கியிருக்கிறோம். :)

நட்சத்திர வாழ்த்துகள்!!!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மிஸ்டர் வினையூக்கி!
ஜமாயுங்கள்!

நீங்கள் எழுதிய கதைகளோடு - நீங்கள் படித்து ரசித்த இரண்டொரு கதைகளையும் எடுத்து எழுதுங்கள்!

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி!!!

said...

நட்சத்திரத்திற்கு நல்வாழ்த்துகள்!
கொஞ்சம் பய்ந்திட்டே படிக்கப்போறோம்.....
ஆண்டவன் காப்பாற்றுவானில்லே..

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி.

said...

முன்பே வந்திருக்க வேண்டியவர்தான் நீங்கள்.

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

said...

நம்ம ஆளு ஒருத்தர் நட்சத்திரமாயிருக்கார்...

சந்தோஷமா இருக்கு...

அசத்துங்க வினையூக்க்கி....

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திர வாழ்த்துகள்..வினையூக்கி.

said...

வாழ்த்துகள் வினையூக்கி, பல நேரங்களில் உங்கள் கதையை நேரடியாகவே நல்லா இருக்கு, இது நல்லா இல்லை, இது சுமார் என விமர்சித்திருக்கிறேன்....அது தொடரும்..

நன்றி

said...

வாழ்த்துக்கள்!!

said...

வினையூக்கி,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

ஸ்டார் வாரம்.. சூப்பர். கலக்குங்க வினையூக்கியாரே..வாழ்த்துக்கள்..
ஒரு பேய் கதையாச்சும் வரனும் .. சொல்லிட்டேன்... :)

ஸ்டார் பதிவராக வராவிட்டாலும், ஸ்டார் பதிவரின் ஒரு பதிவில் என் பெயர் குறிப்பு இருப்பது மிக்க மகிழ்ச்சி..


வீ எம்

said...

வினையூக்கி,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

ஏலேய் மக்கா ஸ்டாராம்ல ஜொள்ளவே இல்லையே.....

வாழ்த்துக்கள்.

Anonymous said...

//ஏலேய் மக்கா ஸ்டாராம்ல ஜொள்ளவே இல்லையே.....//

அடப்பாவி நந்தா...ஜொள்ளனுமா?நான் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு எஸ்கேப்..
தமிழ்மண நட்சத்திர வானில் மின்னும் வினையூக்கிக்கு எனது வாழ்த்துக்கள்.இந்த வாரம் இன்னும் நிறைய பேய்கதை வருமா :)

said...

வினைஊக்கி!
வாங்கோ ! வாங்கோ!

வாழ்த்துக்கள்!!!

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள்!

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி!!

said...

வினையூக்கி, பெயர்க்காரணம் சொல்லவே இல்லையே?

said...

இங்கேயும் சொல்லிக்க்றேன் !!வாழ்த்துக்கள் !!
சொல்லவே இல்லை ??? :)

கேட்கவே இல்லைன்னு சொல்லக் கூடாது ;)

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி!!

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி..

said...

//
நந்தா said...
ஏலேய் மக்கா ஸ்டாராம்ல

ஜொள்ளவே இல்லையே.....

வாழ்த்துக்கள்.
//
வாழ்த்துக்கள்

ஜொள்ளீட்டேன்
ஜொள்ளீட்டேன்
ஜொள்ளீட்டேன்

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

said...

//கருப்பன்/Karuppan said...
வினையூக்கி, பெயர்க்காரணம் சொல்லவே இல்லையே?
//

நட்சத்திர அறிமுக பக்கத்தில் சொல்லி இருக்கார்

said...

//
நட்சத்திர அறிமுக பக்கத்தில் சொல்லி இருக்கார்
//
நன்றி கண்ணன் இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறது எனக்கு இப்பத்தான் தெரியுது... கை புதுசுல்ல போக போக சரியாகிரும்!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி!!

said...

தம்பி வினையூக்கி!
வெளியூர் விடுமுறை சென்றிருந்தேன். தமிழ்மணம் திறக்க வாய்பிருக்கவில்லை.இன்று நீர் நட்டத்திரம்.
ஈழத்தில் "அவர் பேய்க்காய்" என்றால்...ஏதோ துறையில், அவர் விண்ணன் எனக் கருத்து. நீரும் பேய்க் கதை கூறுவதில் "பேய்க்காய்"
அமர்க்களப்படுத்தவும்.
என்னைப் பற்றியும் சொல்லியுள்ளீர்கள். எனக்கு நீங்கள் தந்த ஊக்கம்; தொழில் நுட்ப உதவி சொல்லிமாழுமா??என் மனைவிதான் உங்கள் முதல் வாசகி ஆனால் பின்னூட்டுவதில்லை.
படித்ததும் படிக்கும்படி சிபார்சு செய்வார்.
எனக்கு நிறைய படிக்க பின்னூட்ட உள்ளது.முயல்கிறேன்.

said...

தம்பீபீபீபீபீபீபீபீபீபீ

வீக்லி ஸ்டாரா..? வாழ்த்துக்கள் ராசா.. நல்லாயிரு..

said...

வினையூக்கி,

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க.

//இவர்களிடம் ”ஹாய் ஹல்லோ நல்லா இருக்கீங்களா” என ஜிடாக்கினால் பதில் வராது. “சார் ஒரு டவுட்” என அடித்தோம் என்றால் அடுத்த மைக்ரோ வினாடியில் பதில் வந்து சேரும்.//

அடப்பாவி, இப்படியா போட்டு குடுப்பீங்க. சார் மோர் எல்லாம் வேணாம். மீ பாவம் இல்லை... ஐ ஆம் தி எஸ்கேப்.

இப்போ போறேன். மறுபடியும் வருவேன்னு சொல்ல வந்தேன்.

said...

வாழ்த்துகள் வினையூக்கி. -'பேய்க்கதையல்லாமல் என்ன எழுதினாலும் வாசிக்கும் ஜந்து':-)

said...

வினையூக்கி,

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
இளையகவி

said...

வாழ்த்துக்கள் நண்பரே

said...

வாழ்த்துக்கள் அண்ணாத்த!! கலக்குங்க :))

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

said...

முதல் நட்சத்திர பதிவே திரும்பி பார்க்கிறதோட ஆரம்பிச்சு கலக்கி இருக்கீங்க. * வாழ்த்துக்கள்!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி

said...

அட தலைவா... சொல்றதில்லையா இதெல்லாம் :))

நட்சத்திர வாழ்த்துக்கள் தலைவா...

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்க் :))

said...

@ Divya
திவ்யா உங்கள் முதல் பின்னூட்டம் நட்சத்திரப்பின்னூட்டமாக அமைந்துவிட்டது, மிக்க நன்றி.

@ கானா பிரபா
நன்றி கானா பிரபா

@கோவி.கண்ணன்
நட்சத்திர நாளில் ஊக்கமளித்தவர்களை நினைவுகூறல் மகிழ்ச்சிக்குரியவிசயம்தானே!!! நன்றி வாழ்த்துக்களுக்கு

@நிலா
வாழ்த்துக்களுக்கு நன்றி குட்டீஸ்

@TBCD

<< உங்கள் சிந்தனையில் இருப்பது முழுவீச்சில் இன்னும் வரவில்லை என்பதை அறிந்த ஒரு சிலரில்/பலரில் நானும் ஒருவன். >>
காலம் கனியட்டும். :))))))

@ அருட்பெருங்கோ

<< கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் வலைப்பதிவு துவங்கியிருக்கிறோம். :) >>
ஆமாம் அருட்பெருங்கோ.. நாமெல்லாம் ஒரே செட்டு :))) வாழ்த்துக்களுக்கும் நன்றி

@ மாயா
நன்றி மாயா

@ SP.VR. SUBBIAH

<< நீங்கள் எழுதிய கதைகளோடு - நீங்கள் படித்து ரசித்த இரண்டொரு கதைகளையும் எடுத்து எழுதுங்கள்! >>
வாழ்த்துக்களுக்கு நன்றி சுப்பையா சார். நிச்சயம் அப்படியே செய்கிறேன்

@லக்கிலுக்
நன்றி லக்கி லுக்

@siva gnanamji(#18100882083107547329) said...

<< நட்சத்திரத்திற்கு நல்வாழ்த்துகள்!
கொஞ்சம் பய்ந்திட்டே படிக்கப்போறோம்.....
ஆண்டவன் காப்பாற்றுவானில்லே..>>
ஆண்டவன் காப்பாற்றுராரோ இல்லையோ கார்த்தியும் ஜெனியும் காப்பாத்துவாங்க

said...

நட்சத்திர வாழ்த்துகள் :) இனிமேல் முகத்தில் புன்னகையைக் காணலாமா? அட.. படத்துல கொஞ்சம் சிரிங்க :)

பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு இருக்க என்னுடைய வாழ்த்துகள்.

said...

@ மோகன்தாஸ்

நன்றி மோகன்தாஸ்

@தருமி
நன்றி தருமி சார்

@இரண்டாம் சொக்கன்...!

<< நம்ம ஆளு ஒருத்தர் நட்சத்திரமாயிருக்கார்...>>

மிக்க நன்றி இரண்டாம் சொக்கன் :))))

@அரை பிளேடு

நன்றி அரைபிளேடு

@பாச மலர்

நன்றி பாசமலர்

@குழலி / Kuzhali

<< வாழ்த்துகள் வினையூக்கி, பல நேரங்களில் உங்கள் கதையை நேரடியாகவே நல்லா இருக்கு, இது நல்லா இல்லை, இது சுமார் என விமர்சித்திருக்கிறேன்....அது தொடரும்..>>
மிக்க மிக்க நன்றி சார்.

@ Praveena Jennifer Jacob
நன்றி பிரவீன ஜெனிபர் ஜேக்கப்

@ஹாரி
நன்றி ஹாரி

@வீ. எம்

<< ஸ்டார் வாரம்.. சூப்பர். கலக்குங்க வினையூக்கியாரே..வாழ்த்துக்கள்..
ஒரு பேய் கதையாச்சும் வரனும் .. சொல்லிட்டேன்... :)

ஸ்டார் பதிவராக வராவிட்டாலும், ஸ்டார் பதிவரின் ஒரு பதிவில் என் பெயர் குறிப்பு இருப்பது மிக்க மகிழ்ச்சி..>>
பேய்க்கதை கண்டிப்பாக உண்டு. உங்களைப்பதிவில் சொல்லாமல் எப்படி விடுவேன். ஆரம்பகாலப்பதிவுகளில் இருந்து இடைவெளி இருந்தாலும் இணையத்தில் இருக்கும்பொழுதெல்லாம் ஆஜராகி விடுவீர்களே!!!@ ஆயில்யன்

நன்றி ஆயில்யன்

said...

@நந்தா

<< ஏலேய் மக்கா ஸ்டாராம்ல ஜொள்ளவே இல்லையே.....>>
நந்தா “ஜொள்ளாம” செஞ்சாதான் த்ரில்!! :))))
@துர்கா

<< தமிழ்மண நட்சத்திர வானில் மின்னும் வினையூக்கிக்கு எனது வாழ்த்துக்கள்.இந்த வாரம் இன்னும் நிறைய பேய்கதை வருமா :)>>
நன்றி துர்கா, பேய்க்கதையும் வரும்:)

@வெற்றி

நன்றி வெற்றி அவர்களே

@ram

நன்றி ராம்

@மணியன்

நன்றி மணியன்

@கருப்பன்/Karuppan
நன்றி கருப்பன்.

@கருப்பன்/Karuppan

<< வினையூக்கி, பெயர்க்காரணம் சொல்லவே இல்லையே? >>
கருப்பன், தமிழ்மண நட்சத்திர அறிமுகப்பக்கத்தில் சொல்லி இருப்பதால் இங்கு சொல்லவில்லை.
இதோ உங்களுக்காக

வேதிவினைகளில் வினைகளை துரிதப்படுத்த உதவும் வினையூக்கிகளைப்போல எழுத்துக்களின் மூலம் நேர்மறைக் கருத்துக்களைக் கடத்தும் கடத்தியாக என் எழுத்துக்கள் அமையவேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு , என்னை எழுத்தாளனாக உருவாக்கிக்கொள்ள நான் எடுத்த முயற்சிக்காக எனக்கு நானே கொடுத்துக்கொண்டப் புனைப்பெயர் 'வினையூக்கி'.

@ பொன்வண்டு
நன்றி பொன்வண்டு. குட்டி சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லல... :)))@

@மங்களூர் சிவா
நன்றி மங்களூர் சிவா

@இ.கா.வள்ளி

நன்றி இ.கா.வள்ளி

@மங்களூர் சிவா
<< வாழ்த்துக்கள்
ஜொள்ளீட்டேன்
ஜொள்ளீட்டேன்
ஜொள்ளீட்டேன்
>>

மீண்டும் ஒரு முறை “ஜொள்ளியதற்கு ” நன்றி மங்களூர் சிவா

said...

@நாடோடி இலக்கியன்

நன்றி நாடோடி இலக்கியன்

@கோவி.கண்ணன்
<< நட்சத்திர அறிமுக பக்கத்தில் சொல்லி இருக்கார் >>
நன்றி கோவி. கண்ணன் .சார். பின்னூட்டங்களுக்கு நன்றி பதில் , நன்றி நவில நேரமாகிவிட்டது. நீங்கள் கருப்பனுக்கு பதில் சொல்லியமைக்கு நன்றி


@ கருப்பன்/Karuppan

<< நன்றி கண்ணன் இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறது எனக்கு இப்பத்தான் தெரியுது... கை புதுசுல்ல போக போக சரியாகிரும்! >>
:))

@சின்னக்குட்டி
நன்றி சின்னக்குட்டி
@துளசி கோபால்
நன்றி துளசிகோபால் மேடம்

@குசும்பன்

நன்றி குசும்பன்

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

ஈழத்தில் "அவர் பேய்க்காய்" என்றால்...ஏதோ துறையில், அவர் விண்ணன் எனக் கருத்து. << நீரும் பேய்க் கதை கூறுவதில் "பேய்க்காய்"
அமர்க்களப்படுத்தவும். >>
நன்றி சார்

@உண்மைத் தமிழன்(15270788164745573644)

நன்றி உண்மைத்தமிழன் சார்

@கோபி(Gopi)


<< அடப்பாவி, இப்படியா போட்டு குடுப்பீங்க. சார் மோர் எல்லாம் வேணாம். மீ பாவம் இல்லை... ஐ ஆம் தி எஸ்கேப்.>>
அப்படியே ஆகட்டும் சார்.

@Kasi Arumugam - காசி

<< வாழ்த்துகள் வினையூக்கி. -'பேய்க்கதையல்லாமல் என்ன எழுதினாலும் வாசிக்கும் ஜந்து':-)>>

உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் முக்கியமானது காசி சார்.

@இளைய கவி
நன்றி இளையகவி

@தாமோதர் சந்துரு

நன்றி தாமோதர் சந்துரு

@கப்பி பய

நன்றி ஜீனியர்

@கயல்விழி முத்துலெட்சுமி

நன்றி மேடம்

@ILA(a)இளா

நன்றி இளா

@rahini
நன்றி ராஹினி

@சென்ஷி

<< அட தலைவா... சொல்றதில்லையா இதெல்லாம் :))>>
:)))) வாழ்த்துக்கு நன்றி சென்ஷி

said...

@ஜிரா
<< நட்சத்திர வாழ்த்துகள் :) இனிமேல் முகத்தில் புன்னகையைக் காணலாமா? அட.. படத்துல கொஞ்சம் சிரிங்க :)

பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு இருக்க என்னுடைய வாழ்த்துகள். >>

ம்ம் முகத்தில் இனி நிறையவே புன்னகையைப் பார்க்கலாம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜிரா.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வினையூக்கி :)

said...

வாழ்த்துக்கள்...வினையூக்கி,
உங்களுக்கு நான் எழுதும் முதல் பின்னூட்டமே வாழ்த்து கூற அமைந்ததில் எனக்கு மிக்க சந்தோஷம்

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி!! கலக்குங்க!!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.....

திரு.வினையூக்கி

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் செல்வா :)
நல்லதா ஒரு பேய் கதை போடுங்க சீக்கிரம் :)

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி... கலக்குங்க...

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி.

இப்பத்தான் பார்த்தேன்...

said...

நட்சத்திர வாழ்த்துகள் வினையூக்கி! உங்கள தள வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள் வினையூக்கி சார்
21/2 வருடம்னு நெனைக்காதீங்க.
இந்த தீபாவளி பொங்கலுக்கு பாருங்க குட்டி குட்டி புது நடிகை/நடிகர் பேட்டிதான் வரும் ரஜ்னி கமல் லாம் ரொம்ப ரேர்.அது மாதிரி நீங்கல்லாம் எஸ்டாபிலிஷ்டு ரைட்டர் பதிவர்.அதான் சிறப்பு நட்சத்திரமாக இப்போ மின்னுகிறீங்க.

ஆனாலும் தமிழ் மணத்தின் மீது இது குறித்த வருத்தமும் கேள்வியும் எனக்குண்டு.
எந்த அடிப்படையில் தேர்வு என்பது இன்னமும் புரியலை.
வந்து 2-6 மாசத்துக்குள் பல புதியவர்கள் [என்னையும் சேர்த்து]நட்சத்திரமாக வரும்போது பல நீண்டநாள் பதிவர்கள் இப்பத்தான் வர்றீங்க.
வாழ்த்துக்கள் பேய்க்கதை மன்னன் பி.டி.சாமி அவர்களே;)

said...

ஆஹா! கடவுளே! நட்சத்திரமா நீங்க? சொல்லிருக்கப்படாதா? லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லிக்கறேன்.. வாழ்த்துக்கள்!!

said...

@கோபிநாத்
மிக்க நன்றி
@கீழைராசா
உங்கள் முதல் பின்னூட்டமே வாழுத்துப்பின்னூட்டமாக அமைந்ததில் மகிழ்ச்சியே
@@ராதா ஸ்ரீராம்
நன்றி
@பேரரசன்
நன்றி பேரரசன்
@பிரேம்குமார்
மிக்க நன்றி பிரேம் குமார்

@கிருத்திகா
மிக்க நன்றி மேடம்
@டிபிஆர் ஜோசப்
மிக்க நன்றி சார்
@ப்ரின்சு என் ஆர்சாமா
மிக்க நன்றி
@கண்மனி
மேடம், நன்றி நன்றி. :))))
@காயத்ரி
மிக்க நன்றி காயத்ரி

said...

Belated தான்! இருந்தாலும் சொல்லாமல் விட முடியாது!
நட்சத்திர வாழ்த்துக்கள் தல!
கலக்குவீங்க-ன்னு சொல்லாமலேயே தெரியும்! :-)

இருங்க...அப்படியே வரிசையா ஒவ்வொண்ணாப் படிச்சிட்டு வாரேன்!

said...

கொஞ்சம் தாமதமாகி விட்டது. இருந்தாலும் நட்சத்திர நல்வாழ்த்துகள் நண்பரே.

said...

கொஞ்சம் தாமதமாகி விட்டது. இருந்தாலும் நட்சத்திர நல்வாழ்த்துகள் நண்பரே.