Tuesday, January 24, 2006

கார்த்திக் - விஜி - வசந்த் சிறுகதை

மேட்ச் என்னடா ஆகும், பாம்பே டெஸ்ட் மேட்ச் மாதிரி கோல்கத்தா டெஸ்ட் மேட்ச்சும் ஊத்தி மூடிடுவானுங்களா...வர்றியா ஹஸ்டல் போய் மேட்ச் பார்க்கலாம் என்ற நண்பனிடம் வேணான்டா கிளாஸ் போகலாம். பர்ஸ்ட் ஹவர் இன்ஸ்ட்ருமென்டேஷன், எனக்கு அட்டென்டன்ஸ் இல்லை, கண்டிப்பா அட்டென்ட் பன்னனும், இல்லாட்டி பெருசு இன்டெர்னல்ஸ்ல கை வச்சுடும் என்றான் கார்த்திக்.

கிளாஸ்ல இருந்தப்ப மனசு முழுவதும் மேட்ச் லேயே இருந்தது கார்த்திக் கிற்கு. நேற்று முழுவதும் கட் அடிச்சுட்டு லக்ஷ்மன் உடைய சென்சுரி பார்த்தான். மனசுக்குள் ஒரு கற்பனை வந்து, கொண்டே இருந்தது இன்று நாள் முழுவதும் திராவிடும், லக்ஷ்மனும் ஆடிவிடுவார்கள், நாளை ஆஸ்திரேலியாவை சுருட்டி விடலாம் என்ற தொடர்ந்து எண்ணம் வந்து கொண்டே இருந்தது. கார்த்திகிற்கு பல சமயஙளில் இப்படித் தோன்றும் எண்ணஙகள் நடந்துவிடும்.

அவன் நினைத்தபடியே இந்தியா வென்றது. அந்த வெற்றி வரலாறு ஆனது.

கார்த்திகிற்கு சிறு வயது முதலே இந்த "சக்தி" உண்டு. அந்த கண நேரத்தில் அவனுக்கு சில சமயங்களில் பின்பு நடக்கக் கூடிய விசயங்கள் முன்பே மின்னல் போல வந்து மறைந்துவிடுவது உண்டு. எல்லா விசயஙளும் நடந்து விடுவதில்லை. தவறிய விசயஙகளை மீண்டும் ஒரு முறை எண்ண ஓட்டத்தோடு ஒப்பிட்டால் அவனுடைய சரியான புரிதல் இல்லாமைதான் காரணமாக இருக்கும்


இந்த விசயத்தை விஜி யிடம் கூறியபோது அவள் பயந்தது என்னமோ உண்மைதான். விஜி அவன் வகுப்புத் தோழி... வாழ்க்கைத் தோழி யாகப் போகிறவள். இருவருக்குமே கேம்பஸில் வேலைக் கிடைத்து விட்டதால், இரண்டு வருடம் வேலைப் பார்த்து விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பவர்கள்.

சென்னைக்கு வந்த பிறகு அலுவலக நெருக்கடி காரணாமாக எந்த ஒரு "எதிர்கால" நிகழ்வும் அவனுக்குத் தோன்றவில்லை. கல்லூரிக் காலங்களில் இருந்த ஒரு தெளிவான மன நிலை போய் விட்டதானால் இருக்குமோ என்று அவன் நினைப்பது உண்டு. உண்மையில் அவன் சந்தோஷப்பட்டான், கெட்ட விசயஙகள் எதுவும் தோன்ற வாய்ப்பில்லை என்று.

அடுத்த இரண்டு வருடத்தில் கார்த்திக் இரு முறை பின்லாந்து சென்று வந்த தால் விஜி - கார்த்திக் திருமணம் மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திப் போட்டார்கள். விஜிக்கு இரு முறை ஆன் - சைட் வாய்ப்பு வந்தும் அம்மாவை விட்டு பிரிய மனமில்லாமல் போகவில்ல்லை.

மூன்றாம் முறை பின்லாந்து சென்று இருந்த போது அவன் பள்ளித் தோழன் வசந்தை கார்த்திக் சந்தித்து இருந்தான். உண்மையில் பள்ளிக் கால்ங்களில் வசந்திற்கும் கார்த்திக்கிற்கும் பிடித்துக் கொள்ளாது. கீரியும் பாம்பைப் போல இருப்பார்கள். கால ஓட்டத்தில் பல விசயங்கள் எப்படி மாறிவிடுகின்றன என்று இருவரும் பள்ளிக் காலங்களில் ஒருவருக்கொருவர் குழி பறித்ததை பேசிக் கொண்டார்கள்.

இந்த முறை கார்த்திக் வந்தவுடன் திருமணம் முடித்துவிட வேண்டும் இரு வீட்டாரும் முடிவு செய்து நாள் குறித்தனர். 7 வருடக் காதல் கனியப் போகும் நாளை இருவரும் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் ஒருக் காட்சி அவன் கண் முன் நிழல் ஆடியது. அது அவன் பள்ளித்தோழன் வசந்தும் விஜியும் திருமணக் கோலத்தில் இருப்பதை அவன் பார்ப்பது. மனது பகீரென்றது... கடவுளே..ஏன் இப்படி...

எவ்வளவோ மனதைக் கட்டுப் படுத்தியும் திரும்ப திரும்ப அந்தக் காட்சி வந்து அவனை திகில் ஊட்டியது. கோயில் போய் பார்த்தான், தியானம் செய்து அந்த நினைவை, எண்ணதை அகற்றப் பார்த்தான். அவனால் முடியவில்ல்லை. சரி.. ஒரு மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை கேட்கலாம் என்று சென்னையில் ஒரு பிரபலமான டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கப் போனான்.

அந்த டாக்டர் அவனக்கு ஏற்கனவே தெரிந்த ESP, Intutions Concepts ஐ விளக்கிக் கூறினார்.

கடைசியாக அவர் கூறியது அவனக்குப் புரிந்தது. சில சமயங்களில் மனது ஒன்றுக்கொன்று முரணான விசயங்களை அபத்தமாக முடிச்சுப் போட்டுப் பார்க்கும். சம்பந்தமே இல்லாத விசயங்களை போட்டுக் குழப்பி குழம்பு வைக்கும். அனாவசியமான புத்தகங்கள் படிக்க வேண்டாம். தனிமை வேண்டாம். கூடுமானவரை குடும்பத்தினருடன் இருக்கவும் என்று அறிவுறுத்தி திருமணத்திற்கு வாழ்த்தும் சொல்லி அனுப்பினார்.

ஓரளவுக்கு தெளிவுப் பெற்றவனாய் பல்ஸரை உதைத்து பூந்தமல்லி ஹை ரோட்டில் விரட்டினான். ஐயோ!!!! ஏன் இந்த கன்டெய்னர் லாரி என்னைப் பார்த்து வருகின்றான் என்றபடியே இடது பக்கம் ஒடித்தவன்.... டயரில் சிக்கி.... பலியானான்.

---------------------------------------------------------------------------
ஆறு மாதங்கள் திக் பிரமைப் பிடித்தது போல் இருந்த விஜி, மாற்றத்திற்காக பெங்களூரில் வேறு வேலைக்கு சேர்ந்தாள். கார்த்திக் நினைவுகளுடனும், வார இறுதிகளில் கார்த்திக்கின் செயற்பாடான ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வருதலை வழக்கமாகக் கொண்டாள்.

ஒரு வருடத்தில் வசந்த் அந்த அலுவலகத்தில் வந்து சேர்ந்தான். விஜியின் செயற்பாடுகள் அவனைக் கவர அவளிடம் தன் விருப்பத்தை சொன்னான். மறுத்தாள்... காரணம் கூறினாள்...அதிர்ந்தான்.. தன் நண்பனின் காதலியின் மேல் மேலும் பிரியம் கொண்டான்.

கார்த்திக் அம்மா அப்பா, தன் அம்மா எல்லோரின் தொடர்ந்த நெருக்குதலில் மிகுந்த மனப் போராட்டத்துக்குப் பின் ஒத்துக் கொண்டாள்.
திருமணக் கோலத்தில் வசந்த் - விஜி... அந்த திருமண மண்டபத்தில் மையத்தில் "கார்த்திகின் ஆன்மா" பார்த்துக் கொண்டிருந்தது. நெகிழ்ச்சியாக...

2 பின்னூட்டங்கள்/Comments:

Sowkan said...

வினையூக்கி, தங்கள் பதிவில் நல்ல முன்னெற்றம் தெரிகிறது.....சரியாக சொல்ல வேண்டுமானால் தங்களின் கதை சொல்லும் பாங்கில்.....தாங்கள் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

Muthu said...

செல்வா,

நன்றாக இருந்தாலும்( முடிவில் நீங்கள் வைத்த ட்விஸ்ட்டை ரசித்தேன்) இதுபோன்ற கதைகளில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே இருக்கின்றன. படிப்பவர்களை சற்றே சிந்திக்க வைக்கும் பாணியிலான எழுத்துக்களையே நான் மிகவும் ரசிப்பேன். என் முயற்சிகள் சிலவற்றை என் பிளாக்கில் போட்டுள்ளென். பார்க்கவும்.