Monday, March 03, 2008

வினாடி வினா சில நினைவுகளும் , ஒரு குட்டி க்விஸும்

எங்கள் குடும்பம் திருச்சியில் தபால் தந்தி குடியிருப்பில் வசித்த போது (1989 - 96) பள்ளிவிடுமுறைகளில்(காலாண்டு,அரையாண்டு, இறுதித் தேர்வுகள் விடுமுறைகள்) ஒவ்வொரு நாள் மாலையும் வினாடி-வினா போட்டிகள் எங்களுக்குள் ஒருவர் க்விஸ் மாஸ்டராக இருந்து நடத்துவோம். அந்த தூர்தர்ஷன் காலங்களில் வெள்ளி மற்றும் ஞாயிறு தவிர ஏனைய நாட்களில் பெரும் வரவேற்பு இருக்கும்.
பொதுஅறிவை பள்ளிக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் (பரிசுகள் ஏதும் கிடையாது, பாராட்டுக்கள் மட்டுமே) நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டிகளில் ஏதாவது ஒரு குழுவுடன் இணைந்து, சிலப்பல கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கிடைக்கும் பெருமிதம் சிலநாட்களுக்கு குறையவேக் குறையாது. மனோரமா இயர் புக் உதவியுடன் நானும் நிறைய தடவை க்விஸ் மாஸ்டராக இருந்தது உண்டு. இப்படி ஏற்பட்ட ஆர்வம்பொதுஅறிவு சம்பந்தபட்ட விசயங்கள் கடலை மடித்துத் தரும் தாள்களில் இருந்தால் கூட வாசிக்க வைத்தது. தொலைக்காட்சிகளில் க்ரோர்பதி அதன் பாதிப்பு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு கேள்விக்கும் தானே அங்கு இருப்பது போல பதிலை கண்டுபிடித்து, உடன் இருக்கும் நண்பர்கள் குடும்பத்தாரிடம் சொல்லுவதில் ஒரு குட்டி சந்தோசம். சிதார்த் பாசு ,அமிதாப்,ஷாருக்,சரத்குமார் இப்படி க்விஸ் மாஸ்டர்கள் மனதைக் கவர்ந்திருந்தாலும் ஆல்டைம் பேவரிட் நம்ம தூர்தர்ஷனில் வரும் டாக்டர் சுமந்த்.சி.ராமன்தான். நேரலை ஒளிபரப்பில் ”ஹல்லோ உங்களுடன்” என்ற வினாடிவினாவை இவர் நடத்தும் விதமே அழகு.வலையுலகில் அவ்வப்போது வரும் குட்டி குட்டி திரைப்பட சார்ந்த கேள்விகள் / விடைகள் வகையிலான பதிவுகளில் தெரிந்த விடைகளை பின்னூட்டங்கள் வாயிலாக சொல்லிவந்த போதும்இலவசக்கொத்தனார் மிகவும் சிரத்தை எடுத்து நடத்திய க்விஸ் தொடரில் எல்லா கேள்விகளுக்கு கூகுளின் உதவியுடன் விடையளித்தபோதும் இவைபோல சிறப்பாக இல்லாவிடினும் ஒரு சின்ன க்விஸ் பதிவு போடவேண்டும் என்ற எண்ணத்தை இந்தப்பதிவின் வாயிலாக நிறைவேற்றிக்கொள்கிறேன்.

கிரிக்கெட்ல ஒரு ஓவர் ல ஆறு பந்து இருக்கிற மாதிரி ஆறேக் கேள்விகள் தான்.

1. இவர் ஒரு பெண்.இவரின் தந்தை தூர்தர்ஷனில் தலைமைப்பொறுப்பை வகித்தவர். இவரின் மாமனார் 1971 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்தியசுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற வகையில் வெற்றி வாகைசூட முக்கியப்பங்காற்றியவர். வெற்றி பெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்தவர். இவரின் கணவரும் இங்கிலாந்தில் முதற்தரப்போட்டிகள் சிலவை ஆடியுள்ளார். ஊடகத்துறையில் இருக்கும் இவரும் இவரின் கணவரும் நடத்திவரும் தொலைக்காட்சி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. யார் இவர்?

2. இவர் ஆடிய முதல் ஆறு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இவர் எடுத்த ஓட்டங்கள் 0, 0, 0, 1, 0, 0. அறிமுகமாகி 7 வருடத்திற்குப்பின் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை அடித்த இவர், டான்பிராட்மேன், வாலிஹாமெண்ட், பிரையன் லாரா ஆகியோருக்கு அடுத்த படியாக அதிக டெஸ்ட் இரட்டைசதங்கள் அடித்தவர் என்ற பெருமையுடன் பன்னாட்டுப்போட்டிகளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் ஓட்டங்கள் அடித்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்? அணித்தேர்வாளர்களை விமர்சித்தது, தங்கும் அறையில் இருந்து கத்தை கத்தையாக பணம் கண்டெடுக்கப்பட்டது என கிரிக்கெட் தவிர பிற காரணங்களுக்காகவும் செய்திகளில் அடிப்பட்ட இவர் யார்?

3. ஐவர் முன்முயற்சி என அறியப்பட்ட அணிசேராஇயக்கத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வந்த ஐவரில் ஒருவர்.இவர் சோவியத் பாணியில் அமைந்திருந்த நாட்டின் அதிபராக வல்லமையுடன் செயற்பட்டவர். 90களின் பிற்பகுதியில் தனித்தனியாகபிரிந்து போன அக்கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் இருந்தும் ஒரு நாடு சுதந்திரப்பிரகடனம் செய்து கொண்டது. இவர் மறைந்தபோது, இவரின் இறுதி ஊர்வலத்திற்கு இதுவரை இல்லாத அளவு வந்த 128 உலகநாடுகளின் தலைவர்கள் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த போதும் கலந்து கொண்டார்கள். இவ்வளவு மதிப்பை உள்நாட்டிலும், உலகநாடுகளிலும் பெற்றிருந்த இந்தத் தலைவர் யார்?

4. பொறியியல் பட்டதாரியான இவர், இளவயதில் மனைவியை இழந்தவுடன், வேலையைத்துறந்துவிட்டு, காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இணைந்து காந்தியடிகளின் அஹிம்சைப் பாதையைப்பின் தொடர்ந்தார். இவர் காந்திய வழியில் போராடி சாதித்துக் காட்டிய ஒன்று , நவீன இந்தியாவில் தேசியம் என்ற பெயரில் மொழி அடையாளங்களைத் தொலைக்கவிடாமல் அந்த அடையாளங்களை மீட்டெடுக்க உதவியது. “அமரஜீவி” என தெலுங்குப் பேசும் மக்களால் அழைக்கப்படும் மொழியின் அடையாளத்துக்காக, உரிமைக்காக,தனித்துவத்திற்காக உயிர்கொடுத்த இவர் யார்?

5. குறிப்பிட்ட கதாநாயகியுடன் அதிகப்படங்களில் நடித்தவர் என்ற சாதனையைத் தன்னகத்தே வைத்திருக்கும் இவரின் 39 படங்கள் 1979 ஆண்டில் மட்டும் வெளிவந்தது.அனைத்திலும் இவரே நாயகன். இதுவும் ஒரு சாதனைதான். கிட்டத்தட்ட 700 படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இவர் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஸ்டைலில் அரசியலில் ஈடுபட்டு அவர்களின் வெற்றியை மலையாளக்கரையோரம் நடத்திக்காட்ட இயலவில்லை.

6. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அப்போதைய நிதியமைச்சர் - இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கிடையேயான ஊழலை அம்பலப்படுத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அந்த நிதியமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தது. மிகவும் இளவயதில் மரணத்தைச் சந்தித்த இவர் யார்?

விடைகள்

1. சகாரிகா கோஷ், இவரது கணவர் ராஜ்தீப் சர்தேசாய்,சிஎன்என்-ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சியின் தலைவர். ராஜ்தீப் சர்தேசாயின் தந்தை திலீப் சர்தேசாய் மேற்கிந்தியத் தொடரில் கலக்கு கலக்கி தொடரை வெல்ல பேருதவியாய் இருந்தவர்.

2. மறவன் அட்டப்பட்டு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்

3. மார்ஷல் ஜோசப் டிட்டோ, யூகோஸ்லாவியா முன்னாள் அதிபர்

4. ஆந்திரா மாகாணம் அமைய வேண்டும் என்று உண்ணாவிரதப்போராட்டத்தில் உயிர் துறந்தவர்.

5. பிரேம் நசீர் , உடன் அதிகமாக நடித்த நடிகை ஷீலா

6. பெரோஸ் காந்தி, பதவி விலகிய நிதியமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி

38 பின்னூட்டங்கள்/Comments:

said...

1........
2........
3மார்ஷல் டிட்டோ
4 பொட்டி ஸ்ரீஇராமுலு
5பிரேம் நஸீர்
6பெரோஸ்காந்தி

said...

சிவஞானம்ஜி நீங்க பதில் சொன்ன 4 உம் கரெக்ட். 66%

said...

கலக்கல்.. இன்ரஸ்டிங்கா கொடுத்திருக்கிங்க... விடைகளை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.. வெயிட்டிங்கு:))

said...

வணக்கம் நட்சத்திரமே.

ரொம்பக் கஷ்டமான கேள்விகளா கேட்டிருக்கீங்க.

4. பொட்டீ ஸ்ரீ ராமுலு-வா? இவர்தான் ஆந்திராவை மெட்ராஸ் மாகாணத்துல இருந்து பிரிக்கனும்னு உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டது.

5. பிரேம் நசீர். இவரு கூடவே கதாநாயகியா நடிச்சாங்களே ஷீலா. எத்தனை படம்.. எத்தனை படம். அடேங்கப்பா...

மத்த கேள்விகளுக்கெல்லாம் விடு ஜூட்.....

said...

1. திலிப் சர்தேஷியின் மருமகளும், ராஜ்தீர் சர்தேஷியின் மனைவியும், CNN IBN ன் Managing Director ம் ஆகிய திருமதி சகாரிகா கோஸ்
2. மரவன் அட்டப்பட்டு - 6 இரட்டைச்சதம். டெஸ்ட்டில் 5502 ரன்னும் ஒருநாள் ஆட்டத்தில் 8529 ரன்னும் எடுத்துள்ளார்.
3. யுகோஸ்லேவியாவின் இரண்டாவது அதிபர் ஜோஷிப் ப்ரோஷ் டிடோ
4. அமரஜீவி பொட்டி ஸ்ரீராமுலு
5.சீமாவுடன் மட்டும் 700 படம் சேர்ந்து நடித்த மலையாள நாயகன் பிரேம் நசீர்
6. T.T.கிருஷ்ணமாச்சாரியை ராஜினாமா செய்ய வைத்த பிரோஸ் காந்தி.

said...

தமிழ்பிரியன்,

6 பந்தையுமே சிக்ஸருக்கு அனுப்பிட்டீங்க எல்லாமே கரெக்ட்.

5 வது கேள்வியில் நடிகை வேறொருவர்.

said...

ஜிரா, 4 யும் 5 உம் கரெக்ட்

said...

1) Sagarika Ghose

4) Potti Sriramulu

5) Prem Nazir

6) Feroze Gandhi

அடேடே நீங்க P & T colony யா?? நாங்க கல்லுகுழி .:)

said...

4, 5 தான் எனக்கும் தெரியுது

பொட்டி ஸ்ரீரமலு, ப்ரேம் நசிர்

said...

1. Sardesai, Rajdeep Sardesai,CNN_IBN channel.
2. Tito
3. Potti Sriramulu
4. Rahul Dravid
5. Prem Naseer
6. Feroz Gandhi.

said...

தியாகராஜன் கேள்வி 1ல் அந்தப்பெண்மனி பெயர் சொல்லவில்லையே!!
4 தவறு. மற்றவை எல்லாம் சரி.

said...

கோவி.கண்ணன் சார் 4 உம் ஐந்தும் சரி

said...

நானும் சுமந்த்.சி.ராமனோட விசிறி தான் தல..இப்பவும் கூட BSNL Sports quiz விடாம பார்த்துட்டிருந்தேன் :))

1. சகாரிகா கோஸ்

2. மார்வன் அட்டபட்டு

5. பிரேம் நாசிர்

6. பெரோஸ் காந்தி

said...

ராதா ஸ்ரீராம் நீங்க சொன்ன 4 விடைகளும் கரெக்ட்.

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த இடம். ரயில்வே காலனி அந்தோனியார் கோவில், தவே டியுசன் செண்டர் இவைஎல்லாம் நினைவு இருக்கா!!!

said...

கப்பிப் பய நீங்க சொன்ன 4 விடைகளும் சரி. 3 , 4 கொஞ்சம் டிரை பண்ணுங்க

said...

எனக்கு 5-வது கேள்விக்கு மட்டும் பதில் தெரியும்.
ப்ரேம் நசீர்.
சரியா?
சகாதேவன்

said...

1. சாகரிகா கோசு சர்தேசாய்
2. மரவன் அட்டப்பட்டு
3. டிட்டோ, யூகோசுலொவியா
4. பொட்டி சிரிராமுலு
5. பிரேம் நசிர்
6. பிரோசு காந்தி

said...

//தியாகராஜன் கேள்வி 1ல் அந்தப்பெண்மனி பெயர் சொல்லவில்லையே!!// oops!, Sagarika Ghosh....

I thought the answer for the fourth question is 'Potti Sriramulu' who died after a fast o(r may be I mixed up the name).

said...

கிழிஞ்சுது! ஒரு கேள்விக்கும் பதில் தெரியலயே..... அம்புட்டு கேவலமா இருக்கு என் பொது அறிவு.... ஆவ்வ்வ்வ்வ்

said...

டிபிசிடி நீங்க பாஸ். ஆல் கரெக்ட்.

said...

தியாகராஜன் , கிரிக்கெட் பற்றி 2 வது கேள்வியைத் தவிர எல்லாம் சரி.
[நீங்க கேள்வி எண்ணை மாற்றித் தந்திருந்ததால் 4 தவறு என சொல்லிவிட்டேன், நால் முன்பே சரி )

said...

சகாதேவன் உங்கள் ஒரே பதில் சரி

said...

2. Maravan Attapattu

said...

5. Prem Naseer

said...

4. Potti Sreeramulu
(Courtesy : Google)

:)

said...

கைப்புள்ள நீங்க சொன்ன மூன்றும் சரி. :)))

said...

ஐயா சாமி, இப்படி ஆணி புடிங்கற நேரத்தில் கேள்வி கேட்கறீங்களே. அப்புறமா வரேன்.

1) சாகரிகா கோஸ்
2) அட்டபட்டு
3) ஜோசப் டிட்டோ
4) பொட்டி ஸ்ரீராமுலு
5) ப்ரேம் நசீர் (ஷீலா)
6) பெரோஸ் காந்தி

இப்படி வேலையை விட்டுட்டு இங்க வர வெச்சுட்டீங்களே!! :))

said...

இலவசக்கொத்தனார்,
உங்களுக்கான பார்த்திபன் ஸ்டைல் கவிதை
ஒரு க்விஸ் மாஸ்டரே
க்விஸ் கேள்வுகளுக்குப் பதில்
சொல்லுகிறாரே!!! (ஆச்சரியக் குறி)

எல்லாம் சரி சார். :)))

said...

//கிழிஞ்சுது! ஒரு கேள்விக்கும் பதில் தெரியலயே..... அம்புட்டு கேவலமா இருக்கு என் பொது அறிவு.... ஆவ்வ்வ்வ்வ்//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நாளை மாலை வந்து பதில்களை படிச்சிக்கறேன்.

said...

1. Sagarika Ghose
2. MS Atapattu
3. Josip Broz Tito
4. Sri Sriramulu Potti
5. Prem Nazir
6. Feroze Gandhi

என்ன ஒரு 2 மணி நேரம் கூகில்ல தேட விட்டுடீங்க :-)

said...

வலையோசை எல்லாம் கரெக்ட் :)))

said...

1.சாரிகா கோஸ்..தந்தை பாஸ்கர் கோஸ்..கணவர் ராஜ்தீப் சர்தேசாய்... கன்னல் சிஎன் என் ஐபிஎன்
2.கில்கிறிஸ்ட் ?
3.மார்ஷல் டிட்டோ
4.பட்டாபி சீதாராமைய்யா
5.பிரேம் நசீர்
6.பிரோஸ் காந்தி

said...

மணியன்,
கில்கிறிஸ்ட், பட்டாபி சீதாராமய்யா இரண்டும் தவறு.

ஏனையவை சரி,

said...

//வினையூக்கி said...
வலையோசை எல்லாம் கரெக்ட் :)))//

அப்ப வலையோசைக்கு நான் ரிப்பீட்டே போட்டுக்கறேன் :))


சென்ஷி

said...

பாஸ் P&T Colony லயா இருந்தீங்க?? நானும் மன்னார்புரம் தான் பாஸ்! P&T Colony ல எடிசன் தெரியுமா? நான் மன்னார்புரம் St.Marry's Middle School ல தான் படிச்சேன் பாஸ். அப்புறம் நமக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் சொல்லத்தெரியாது soooooo ஜீட்

said...

@இளையகவி
ஆமாம். இளையகவி. P & T colony தான். எடிசன்.. தெரியுமே!! ஜான் எடிசன் பிரபு அந்த பையன் புல்பேரு.
லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன். நீங்க ஹையர் செகண்டரி எங்கப் படிச்சிங்க

said...

siva gnanamji(#18100882083107547329) , ரசிகன் ,G.Ragavan,தமிழ் பிரியன் ,Radha Sriram , கோவி.கண்ணன் ,கப்பி பய

சகாதேவன் , Thiyagarajan பிரேம்குமார் கைப்புள்ள இலவசக்கொத்தனார்


கோபி(Gopi) valaioosai மணியன் சென்ஷி இளைய கவி

அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.

said...

சரியான விடைகளைக் கொடுத்த தமிழ்பிரியன்,டிபிசிடி,இலவசக்கொத்தனார்,வலையோசை ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்