Tuesday, March 04, 2008

ஜெனி அருகே வராதே !! - சிறுகதை

அவசரப்பட்டு ஆளைத்தீர்த்துக்கட்டும் கும்பலுடன் நான் வைத்துக்கொண்ட தொடர்பினால் ஏற்பட்ட பயம் இன்று எனது மனைவி ஜெனியை அலுவலகத்தில் இருந்து வரும் வழியில் பார்த்தபோது தொலைந்து போனது. வாளு போய் கத்தி வந்த கதையாக பயம் போய் திகில் பிடித்தது போலானது என் மனம். நிச்சயம் பிரமை இல்லை. அது அவளேதான்.

இந்த திகிலுடன் இவ்வளவு பெரிய பங்களா வீட்டில் மனம் திக் திக் என அடிக்க தனியாக இருக்கும்போது வீட்டு அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தேன். எங்க வட்டார காவல்துறை அதிகாரியும் கூடவே சில காவல்துறை அலுவலர்களும் இருந்தனர்.

“மிஸ்டர் கார்த்திக் , உங்க வொய்ஃப் காணமல் போயிட்டாங்கன்னு நீங்க கொடுத்த கம்ப்ளைண்ட் சம்பந்தமா கொஞ்சம் பேசனும்”

“உள்ளே வாங்க சார்”

காவலதிகாரி வீட்டை நோட்டம் விட்டபடியே உள்ளே நுழைந்தார்.

“கார்த்தி, உங்க வொய்ஃப் காணாமல் போனப்ப என்ன டிறஸ் போட்டு இருந்தாங்க, அவங்க வீட்டை விட்டு போறப்ப என்ன என்ன எடுத்துட்டுப்போனங்கன்னு சொல்ல முடியுமா?”

ஏன் இவர் இப்படி தோண்டித்துருவிக் கேள்வி கேட்கிறார் என்ற எரிச்சல் இருந்த போதும் அவர்கேட்ட தகவல்கள் எல்லாவற்றையும் புகார் மனுவில் எப்படி சொல்லி இருந்தேனோ அப்படியே ஒரு வரிமாறாமல் சொல்லி முடித்தேன்.

“உங்க வொயிஃப்க்கும் உங்களுக்கும் ஏதேனும் பிரச்சினையா, “

“இல்லை சார், எங்களுக்குள்ள குட்டி சண்டைக் கூட வந்தது கிடையாது, நாங்க மேட் பார் ஈச் அதர் ன்னு எல்லோரும் சொல்லுவாங்க, இன்பேக்ட் நாங்க லவ்மேரேஜ் தான் பண்ணிக்கிட்டோம்”

“உங்களுக்கு யார்மேலேயவது சந்தேகம் இருக்கா” என அவர்கேட்டு முடிக்கும் முன்னர் தொலைபேசி அழைக்க அவரே போய் எடுத்தார்.

அடுத்த முனையில் என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் காவலதிகாரி ”யா ஓகே , சொல்லிடுறேன்” என பேசிவிட்டு தொலைபேசியைக் கீழே வைத்த பின்

“கார்த்தி, உங்க வொய்ஃப் அவங்க பிரண்ட் மோகன் வீட்டுல இருக்காங்களாம்... இன்னும் கொஞ்ச நேரத்தில இங்கே வந்துடுவாங்களாம்”

“யார் சார் போன்ல”

“உங்க பிரண்டு மோகன் தான் பேசினார்” என சொல்லிவிட்டு அவர் கிளம்பிப்போன பின் அப்படியே பஞ்சு நாற்காலியில் சரிந்தேன். இரண்டு நாட்கள் முன் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

“ஜெனி, மோகன்கிட்ட பேசுறது எனக்குப்பிடிக்கல, “


“கார்த்தி,, மோகன் ஜெம் ஆஃப் த பெர்சன்ஸ்,,, உனக்கு என் மேலே எப்போதும் சந்தேகம் தான்”

“உங்க பழக்கம் நட்பா மட்டும் இருந்தா பரவாயில்லையே,, அதுக்கு மேலே போகுது,,நம்ம ஆபிஸுல பியுன்லேந்து போர்ட் மீட்டிங்ல டைரக்டர்ஸ் வரைக்கும் அசிங்கமா கிண்டல் அடிக்கிறாங்க”

“ஸோ வாட், எவனெல்லாம் கமெண்ட் அடிக்கிறானோ, அவனை எல்லாம் வேலையை விட்டுத்தூக்கு,, நீ தானே பாஸ்” சொல்லிவிட்டு ஏளனமாய் சிரிக்க கடுப்பாகிப்போனது. ஆத்திரத்தில் நான், விட்ட ஒரு அடியில் சுவற்றின் முனை தலையில் பட, மூர்ச்சையானாள். ம்ஹூம்ஹூம் திரும்ப மூச்சுவரவே இல்லை.

ஒரு வகையில் இதுவும் நல்லதாகிப்போய்விட்டது . மோகனைத் தான் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முன்பணம் எல்லாம் கொடுத்து வைத்திருந்தேன்.. அவர்கள் முழுப்பணமும்
கொடுத்தால் தான் வேலை முடியும் எனபிரச்சினை செய்கிறார்கள். இனி மோகனைத் தீர்த்துக்கட்ட அவசியம் இல்லை. இவள் செய்த தவறுக்கு அவன் பலிகடா மட்டும் தான். அவளையும் அவளது சில உடமைகளையும் தோட்டத்தில் ஒரு குழி நோண்டி
புதைத்து விட்டு மறுநாள் அழகாய் நடித்து புகார் கொடுத்து நிம்மதியாய் ஒருநாள் கூட ஆகவில்லை. எல்லாம் கனவாய் இருக்கக் கூடாதா!!!

மீண்டும் தொலைபேசி அடிக்க நினைவுக்கு வந்தேன். அதே சமயம் வீட்டு அழைப்பு மணியும் அடித்தது. உறைந்து போய் இருந்த நான் ,எழுந்திருக்க கூடிய நிலைமையில் இல்லை... வாசல் அழைப்பு மணி சத்தம் தானாகவே நின்றது..ஆனால் தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருக்க கதவு திறக்கப்படாமலேயே ஜெனி உள்ளெ வந்து தொலைபேசியை எடுத்து “ஹல்லோ” சொன்னாள்..இல்லை சொன்னது.

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

//ஆனால் தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருக்க கதவு திறக்கப்படாமலேயே ஜெனி உள்ளெ வந்து தொலைபேசியை எடுத்து “ஹல்லோ” சொன்னாள்..இல்லை சொன்னது.//

பேய் கதை !!!
:))

இராஜேஷ் குமார் கதை பாணியில் இருக்கு. அவர் கதையில் பேய் மிஸ் ஆகி கொலைகாரன் சிக்கிக் கொள்வது போல் எழுதுவார்.

said...

avvvv

said...

பயமுறுத்தினாலும் நன்றாகத்தான் உள்ளது. ஆனாலும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம்....... :)

said...

ஆரம்பிச்சுட்டார்யா ஆரம்பிச்சுட்டார்..
பேய்க்கதை ஆரம்பிச்சுட்டார்.
அதான், பயந்துட்டே படிக்கிறோம்னு
மொதல்லேயே சொல்லிட்டேனே....!

said...

கத கேளு கத கேளு வினையூக்கி அண்ணனின் பேய்க்கத கேளு :)))

கதை நல்லா இருக்கு !!! :)

said...

//ஆனாலும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம்....... :)//

ரிப்பீட்டே!!

நிறையா open ends இருக்கு, வழக்கமா கடைசியில் வரும் அட! என்ற எண்ணம் வரவில்லை. நட்சத்திர வாரத்தில் இன்னும் கலக்க வேண்டும் தல!

said...

பேய்க்கதையா.... இன்னொருவாட்டி பேய்க்கதை எழுதுனீங்க....... :) பேய் வரப் போகுதுன்னு புரிஞ்சிருச்சுங்க.

said...

//ஆனாலும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம்....... :)

ரிப்பீட்டே!!//

ரிப்பீட்டேஏஏஏய்

said...

பேய் கதை நல்லாயிருக்கு வினையூக்கி:))

said...

கதய பட்ச்சு படா மெர்சுலா கீது தலீவா :))

said...

எப்போ வரப் போகுது பேய்னு தோணினாலும்..இந்தக் கதைல ஒரு வேள வராதோன்னு நினைக்கறப்பவே வந்துருச்சு..நல்லாருந்துச்சு..

said...

இந்த வாரத்தை மைண்ட்'லே வைச்சிருக்கோம்..... இன்னும் நிறைய நிறைய உங்கக்கிட்டே இருந்து எதிர்பார்க்கிறோம்.... :)

said...

நல்லா கதை எழுதுறீங்க... கதையுடைய ஆரம்ப வரிகள் கொஞ்சம் ஸ்மூத்தாக இருந்திருக்கலாம்.

said...

இதுவும் பேய் முடிவா???
பேய்கள் மிக நெருக்கம் போல்