Tuesday, March 04, 2008

வெள்ளத்தனைய மலர்நீட்டம் - சிறுகதை

எனது நிறுவன உயரதிகாரிகளில் ஒருவர் தான் ராஜினாமா செய்வதாக அனுப்பி இருந்த மின்னஞ்சலை வாசித்து முடித்தேன். இந்த மாதத்தில் இப்படி ராஜினாமா செய்யும் நாலாவது உயர்மட்ட அலுவலர்.இன்னும் சிலரும் போகக்கூடுமோ என்ற எண்ணம் மேலும் அயற்சியைத் தந்தது.

என்னுடைய இந்த நிறுவனம் பொருளாதார ரீதியிலும், அலுவலர்களின் எண்ணிக்கையிலும் மத்தியவகையைச் சார்ந்தது. பத்து வருடங்களுக்குப்பின்னரும் எத்தனை கடும் உழைப்பைக் கொட்டினாலும் என்னால் இப்போதிருக்கும் நிலையைவிட்டு அடுத்த நிலைக்கு கொண்டு
போக இயலவில்லை.

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என் அலுவலகத்திற்காக உடல் பொருள் உணர்வு எல்லாம்
தந்தும் ஏன் இந்த தேக்க நிலை !!! என் வகுப்புத் தோழன் மோகன், என்னைவிட புத்திசாலி ஒன்றும் கிடையாது. கல்லூரியில் நான் முதற்மாணவனாக தேர்ச்சிப்பெற்று வெளிவந்து ஒரு வருடம் கழித்துத் தான் தேர்வாகாதா பாடங்களை எழுதி முடித்து இரண்டாம் நிலையில் தேர்ச்சிபெற்று வெளிவந்தான். ஆனால் அவன் ஆரம்பித்த நிறுவனம் இன்று மூன்று துணை நிறுவனங்களுடன் எதிர்கால ஆலமரம் என்று வியாபார பார்வையாளர்களால் உற்று நோக்கப்படுகிறது. இத்தனைக்கும் மோகன் பெரிய பின்புலத்தோடுவரவில்லை.

நண்பர்கள் உறவினர்கள் இவர்களிடம் கடன் வாங்கி ஆரம்பித்த பெரிய வணிக முதலைகளுடன் போட்டியிடும் அளவுக்கு வரச்சசெய்ததை என்னால் ஏன் செய்ய இயலவில்லை. இயலாமை/ஆதங்கம் மேலோங்க மோகனுடன் இதைப்பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மறுநாள், நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த மேல்தட்டுமக்களுக்கான உணவரங்கில் மோகனைசந்தித்தேன்.பரஸ்பர நலம் விசாரிப்பு ஏதுமன்றி நேரடியாக விசயத்திற்கு வந்தேன்.

“உன் கம்பெனிக்கு இப்படி இவ்வளவு வளர்ச்சி, வாட்ஸ் த சீக்ரெட்”

“ஜஸ்ட் ஹார்ட் வொர்க், அவ்ளோதான்”

“உன்னைவிட நான் அதிக நேரம் என் கம்பெனிக்கு கொடுக்கிறேன்...நீ பெரும்பாலான நேரங்களில் கிளப்ஸ், காலேஜ் பங்சன்ஸ் இப்படித்தான் இருக்க”

“கரெக்ட், நான் ஒரு நாளைக்கு என் நிறுவனத்திற்கு கொடுக்கிற நேரம் 4 ஹவர்ஸ் தான்,”

“பிறகு எப்படி உன்னால சக்ஸஸ்புல்லா கம்பெனி ரன் பண்ண முடியுது?, “

“சிம்பிள் கார்த்தி, ஐ டிரஸ்ட் பியுப்பிள்.. என்ன வேலை செய்யனும் அசைன் பண்ணிட்டு , முழு சுதந்திரமும் அவங்களுக்குக் கொடுத்துட்டு நான் அமைதியா இருந்துடுவேன், என்னால பண்ண முடியுற வேலையை என் எம்ப்ளாயி ஒருத்தரால செய்ய முடியும்னா அதுக்கு நான் சந்தோசப்பட்டு அந்த பொறுப்பை அவனுக்குக் கொடுத்திடனும்.. எனக்கு வேலை கம்மி ஆகுதுல்ல... நான் போய் கண்ட்ரி கிள்ப்ல ஜாலியா ஸ்னூக்கர் ஆடலாம்”

“ம்ம்ம்”

“கார்த்தி, நீ கம்பெனி ஆரம்பிச்சப்ப உன்கூட இருந்த ஆட்களில் எத்தனை பேரு உன்கூட இருக்காங்க?”

“யாருமே இல்லை மோகன்..ஆல் ஆஃப் தெம் லெஃப்ட்”

“ம்ம் நான் ஆரம்பிச்சப்ப என்கூட இருந்த ஆட்களில் நிறையபேரு என்கூடத்தான் இருக்காங்க.. என்னோட மத்த கன்சர்ன்ஸுக்கு எல்லாம் அவங்கதான் ரியல் ஹெட், நான் சும்மா பேருக்காகத்தான்.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவங்களையே அபிசியல சொல்லப்போறேன்... நம்ம எம்ப்ளாயிசுக்கு அவங்களுக்கு எதிர்காலம் பிரகாசமான எதிர்காலம் அப்படின்னு உறுதிசெய்யப்பட்டுவிட்டால் நம்மை விட்டு போகவே மாட்டார்கள்., என்
கம்பெனியோட பலமே அது தான்”

“மோகன், இருப்பது ஒரே ஒரு டாப் பொசிசன், மத்தவங்க என்னளவுக்கு வளர்ந்தாலும் நான மட்டுமே தானே தலைவராக நீடிக்க முடியும்.. “

“யெஸ் யூ ஆர் கரெக்ட்.. ஆனால் அதுக்கும் ஒரு சொல்யூசன் இருக்கு.. உன் பொசிசனை அவங்களுக்குக் கொடுத்துட்டு அதுக்குமேலே ஒரு பொசிசனை உருவாக்கி நீ அந்த சேர்ல உட்கார்ந்துக்கோ, உன் ஈகோவை விட உன் கம்பெனி வளர்ச்சி முக்கியமானதாக இருந்தால் இது உனக்கு ரொம்ப ஈசி”

“ம்ம்ம்ம்”

“நானும் கேள்விப்பட்டேன்.. உன் கம்பெனி முக்கியமான ஆட்கள் எல்லாம் ரிசைன் பண்ணிட்டாங்கன்னு, இப்பக்கூட ஒன்றும் குறைந்துப்போய்விடவில்லை, அவர்களில் யாருக்காவது திரும்ப வரவிருப்பமான்னு கேளு, வந்த பிறகு புரோமசனோட பொறுப்பும் கொடு... ஒவ்வொரு லெவலிலும் நீ எம்ப்ளாயிசை நடத்துறவிதம் எல்லா லெவல் எம்ப்ளாயிசுக்கிட்டேயும் டேரக்ட் இம்பாக்ட் இருக்கும்”

“ம்ம்ம்”

“வேலைத் தெரிஞ்சவங்களிடம் எப்படி வேலை வாங்கனும்கிற அறிவு மட்டும்தான் என்கிட்ட இருக்கு.., அதுதான் என் கம்பெனி சக்ஸசோட சீக்ரெட், உன் எம்ப்ளாயிசோட வளர்ச்சிதான் உன் கம்பெனியோட வளர்ச்சி ஸோ டேக் மேக்சிமம் கேர் டு ரிடெயின் தம்”

மோகன் சொல்ல சொல்ல , அவன் வளர்ச்சியில் மேல் வைத்திருந்த பொறாமை குறைந்து பெருமிதம் அதிகமானது, எந்த விசயத்துக்காக மோகனை இவ்வளவு காலம் தவிர்க்க நினைத்திருந்தேனோ , அந்த விசயத்தை மறந்து அவன் மனைவி ரம்யாவைப் பற்றி விசாரித்தேன்.

10 பின்னூட்டங்கள்/Comments:

said...

சிறுகதைஎன்பதைவிட சிறந்த அறிவுரை.

வாழ்த்துக்கள்.

said...

//சிறுகதை என்பதைவிட சிறந்த
அறிவுரை//
ரிப்பீட்டேய்...

ஆமா! ப்ரமோஷன் கொடுக்க மறுக்கிறாங்களா? உங்க பாஸ் இதைப்
படிப்பார்னு நம்புறீங்களா?

said...

தம்பி !
வள்ளுவர் கூடச் சொல்லியுள்ளார். அதை அதை அவர்களிடம் விட்டுவிட வேண்டுமென; குறள் உடன் ஞாபகப்படுத்த முடியவில்லை.
உண்மை எதிர் கால வளர்ச்சி என்பதற்கு உத்தரவாதமிருந்தால் தான் தொழிலாளிக்கு ஆர்வம் வரும்.
என் முதல் வேலைக்கு 1979 ல் ;நேர்முகப் பரீட்சைக்குப் போன போது; நான் சற்றும் எதிர்பார்க்காத, தயார்ப்படுத்தாத "எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்" எனும் கேள்வி...
உடனே, உங்களால் என் வேலைக்குத் தரக்கூடியத்தைத் தாருங்கள் என்று விட்டேன்.அது ஒரு இலங்கையில் முன்ணணித் தனியார் நிறுவனம்.
அந்த முகாமையாளர் சிரித்துக் கொண்டு " 50 ரூபா தந்தால் செய்வாயா? எனக் கேட்டார்"
நானுமோ "எதிர் காலத்தில் ஓரளவு வாழ்க்கையைச் சமாளிக்கக் கூடிய சம்பள உயர்வுக்கு உத்தரவாதமிருந்தால்; செய்வேன்."என்றேன்.
வேலை கிடைத்தது; 750 ரூபா சம்பளத்தில்; பல நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்றலுத்ததால் நான் இது கிடைக்குமென நம்பவில்லை.
தொளிலாளிகளில் நம்பிக்கை; அவர்கள் திறமையை மதித்தல்; கட்டாயம் முதலாளிக்கு இருந்தால்
வெற்றி நிச்சயம்.
நீங்கள் முதலாளியாகும் போது கடைப்பிடிக்கவும்.

said...
This comment has been removed by the author.
said...

More than a 'short story', this very much sounded as a management lesson. !

Excellent Vinaiooki..

said...

ஜெனி எங்க? :))

நாடகத்தனமா இருந்தாலும் ஓக்கேவா இருந்தது.

said...

யோகன்,

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இதைத்தானே சொன்னீங்க!

வினையூக்கி, அருமையான கருத்து. வெற்றிகரமான நிறுவனங்களுக்கு அடிப்படைத் தேவை.

அன்புடன்,
மா சிவகுமார்

said...

நன்றி!
சிவகுமார். வீடு சென்று பார்க்க இருந்தேன். உடன் இட்டு விட்டீர்கள்.

said...

சிந்திக்க வைக்கும் சிறுகதை, அருமை!!

[கார்த்திக் ரம்யாவை ஏன் விசாரித்தார்??? கதையில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இருக்க வேண்டுமென்பதற்காகவா??.....ரம்யா கதாப்பாத்திரம் கதையின் நடைக்கு அவசியமானதாக தெரியவில்லை, அதுனால தான் கேட்கிறேன்.

\எந்த விசயத்துக்காக மோகனை இவ்வளவு காலம் தவிர்க்க நினைத்திருந்தேனோ , அந்த விசயத்தை மறந்து\

அந்த 'விசயம்' வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விட்டீர்களோ???]

said...

பயனுள்ள கருத்துக்களை கதையாக ஆக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.