உபரி ஓட்டங்கள் (Extras 30-December-2009)
சுவீடன் வந்தபின் முதன் முறையாக திரையரங்கு ஒன்றில் அவதார் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 150 இருக்கைகள் கொண்ட சிறிய அரங்கத்தில் சுவிடீஷ் சப் டைட்டில்களுடன் ஆங்கிலப் படமாகவே திரையிட்டு இருந்தனர். சில வசனங்களை கீழே இருக்கும் சப்டைட்டில்களைப்படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு எனது மொழிப்புலமை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நாவி நேத்ரேயி கதாநாயகன் ஜேக்கை கிஸ்ஸடிக்கும் காட்சியில் விசில் அடிக்க எத்தனித்த அப்பாவி கணேசனைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
படத்தின் பிரம்மாண்டம், நடிப்பு எல்லாவற்றையும் காட்டிலும் படத்தில் சிறப்பாக இருந்த அரசியலை எத்தனைப் பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை.
ஜேக் நாவிக்களிடம் உரையாற்றுகின்ற இந்த வசனம், They've sent us a message... that they can take whatever they want. Well we will send them a message. That this... this is our land!!!
அன்று தங்கத்திற்காக, இன்று பெட்ரோலுக்காக மக்களை நசுக்கி அழித்து, நான்கு திசைகளிலும் வளங்களைச் சுரண்டும் மேற்கத்திய உலகத்தை எதிர்கொள்ள நிஜமாகவே ஒரு/சில ஹீரோ(க்கள்) இப்படி வரமாட்டார்களா என எண்ண வைத்தது.
நாவிக்களை அழிக்க வரும் அதிவேக விமானங்களைப் பார்த்தவுடன் Made in Sweden என்று கமெண்ட் அடிக்க வேண்டும் போல இருந்தது.
---
நேற்றிரவு அலுவலகம் முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் சோமாலியாவைச் சேர்ந்த இளைஞனைச் சந்தித்தேன்.அவனை இதற்குமுன்னர் சிலமுறை தெருமுனைகளில் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். சோமாலிய
தேசத்தவர்கள இந்திய முகக்களையுடன் , இயல்பான ஆப்பிரிக்க கருப்பு நிறத்தைக் காட்டிலும் சற்று மாநிறமாக இருப்பார்கள். பேருந்தில் வீல்சேர் இறங்குவதற்கான பலகை எடுத்துப்போடுவதில் உதவி செய்த அவனிடம் வீடு வரும் வரை பேசிக்கொண்டே வந்தேன்.
"மேன் , ஐ காட் அரெஸ்டட்"
"அய்யோ!! என்னடா ஆச்சுப்பா!!" எனக்கேட்டபொழுது, முந்தைய இரவு ஒரு கைகலப்பிற்காக கைது செய்ப்பட்டதாக கூறினான். ரோன்னிபி நகரத்தில் பொதுவாக சோமலியர்கள் எந்த வம்புதும்புக்கும் போக மாட்டார்கள். அரபு நாடுகளிடம் இருந்து புலம்பெயர்ந்தவர்களைக்
காட்டிலும் இவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். நிறம் ஒரு காரணமாக இருக்கலாம்.
என்ன ஆயிற்று விளக்கமாக கேட்டபொழுது, இரவு விடுதி ஒன்றில், இந்த இளைஞன் சில சோமாலிய தேசத்து நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபொழுது, அடுத்த மேசையில் இருந்த ஒரு சுவிடீஷ் மத்திய வயது ஆள்,
"டே கருப்பனுங்களா !! இங்கே எதுக்குடா வந்தீங்க, ஓடுங்கடா உங்க நாட்டிற்கு" என ஆத்திரமூட்டும் வகையில் பேசியபின்னரும் பொறுமைக் காத்த இவர்கள் , குடும்பத்தைப் பற்றி இழுத்தவுடன் கோபத்தை அடக்கமாட்டாமல் , இந்த சோமாலிய இளைஞன் சுவிடீஷ் ஆளை
ஒரு குத்து விட, போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்த போலிஸார் சுவிடீஷ் ஆளை கண்டித்து விட்டுவிட்டு, இவனைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்து விட்டார்களாம்.
"ஐ டோண்ட் நோ, ஹவ் டூ ஐ ஃபேஸ் மை பேரண்ட்ஸ்" எனக் கண்கலங்கியபடி போனவனுக்கு "மே காட் பிளஸ் யூ" என ஆறுதலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எக்காரணம் கொண்டும் கைநீட்டவேண்டாம் அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தேன்.
" They slapped two fellas on the wrist and they killed the other fella" என்று சமீபத்திய ஆஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் ஆட்டத்தில் சுலைமான் பென் தண்டிக்கப்பட்டபொழுது, ஜோயல் கார்னர் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.
------
ஸ்டீரியோ டைப் காதல் தோல்விக் கதைகளையும் , அரைச்ச மாவையே அரைச்ச பேய்கதைகளையும் எழுதிக் கொண்டிருந்த நான், அஸ்ஸலமு அலைக்கும் எனற இஸ்லாமிய முகமன் வாக்கியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டக் கதைப் பரவலாக
வாசிக்கப்பட்டபொழுதும், மக்கள் மேலோட்டமாகப் படித்து அதன் உள்ளார்ந்த அரசியல்களைக் கவனிக்காமல் போய்விட்டார்களோ எனத் தோன்றியது. எழுதி முடித்தபின்னர் மறுவாசிப்புக் கூட செய்யாமல் பதிப்புக்கும் பழக்கமுள்ள நான், சில இஸ்லாமிய நண்பர்களிடம் கருத்துக்
கேட்ட பின்னர்தான் பதிப்பித்தேன்.
உண்மைத்தமிழன் கதையின் நீளம் ரொமப அதிகம் எனச் சொல்லி இருப்பது, ஜெஃப்ரி பாய்காட் , ராகுல் திராவிட் பேட்டிங் ரொம்ப ஸ்லோ என்று சொல்வது போல இருந்தது.
//எவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் காட்டும் குண்டு வைப்பவனைப் போலவே இருந்தது. // இந்த வாக்கியத்தில் மறைந்து இருக்கும் அரசியலைக் கவனிக்காமல், சில நண்பர்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். தொலைக்காட்சியில் இப்படிக்காட்டி காட்டியே தாடி
வைச்சவனெல்லாம் குண்டு வைப்பவன் என ஊடகங்கள் ஆக்கிவிட்டார்கள் என்பதையே சராசரி மனிதனான கதையின் நாயகன் கார்த்தி மூலம் சொல்ல நினைத்தேன். சிறுகதை இலக்கணத்தில் கதை வரவில்லை, கட்டுரையாக வந்து இருக்காலாம் எனசிலர் குறிப்பிட்டு இருந்தனர்.
கட்டுரை எனும்பொழுது தரவுகளுடன் உண்மைகளை மட்டுமே வைக்க வேண்டும். புனைவுகளில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஒரு மையக் கருத்து, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், முடிவில் கதையின் ஆரம்பத்திற்கு நேர் எதிரான முடிவு, கதைக்கான காரணங்களைகதையிலேயே சொல்லி விடுவது என்ற எனது சிறுகதை இலக்கணத்திற்கு இது சரியாகப் பொருந்துவதால் இதுவும் சிறுகதையே !!
----
சென்ற உபரி ஓட்டங்கள் பதிவு கேள்விக்கான விடை ஆடம்பரோர். இவர்தான் முதன் முதலாக நியுசிலாந்து அணிகாக ஆடிய மவோரி இனத்தைச் சேர்ந்தவர். பரோடாவில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் பவுண்டரிகளோ சிக்ஸரோ அடிக்காமல்
அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் அடித்த ரன்கள் 96.

நியுசிலாந்து அணியில் ஆடிய மற்ற மாவோரி இன ஆட்டக்காரர்களில் ரோஸ் டெய்லர், டேரல் டஃபி குறிப்பிடத்தக்கவர்களாவர். ஒரு முறை மார்டின் க்ரோவ் , வர்ணனையின் போது மவோரி ஆட்டக்காரர்களுக்கு உயர்தர கிரிக்கெட் விளையாடும்பொழுது தேவையான பொறுமை
இல்லை எனக்கூறப்போக அது பிரச்சினையாக, பின்னர் மார்ட்டின் க்ரோவ் மன்னிப்புக் கேட்டார்.
----
சுதந்திரப்போராட்ட வீரர், இரண்டு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தவர், படிப்பில் பல்கலைகழகத்திலேயே முதன் மாணவராகத் தேறியவர், பிரதமர் பதவியை மயிரிழையில் தவறவிட்டவர், காங்கிரஸை இரண்டாக உடைத்தவர் இவ்வளவு பெருமை வாய்ந்த என்.டி.திவாரி
உடல்நலக் காரணங்களுக்காக சமீபத்தில் ஆந்திர மாநில ஆளுனர் பதவியில் இருந்து விலகினார். நிஜக்காரணமான அஜால் குஜாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை , தனது இணையதளத்தில் இப்படி செய்தியாக வெளியிட்டது வெடிச்சிரிப்பை வரவழைத்தது.

After sex sting, AP governor Tiwari ejects prematurely
செய்தி இங்கே
---
இந்த உபரி ஓட்டங்கள் பதிவுக்கான கேள்வி, கீழ்காணும் படத்தில் இருக்கும் அம்மணி யார்? க்ளூ கொடுத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவேன் என வால்பையன் சொல்லுவார்.

9 பின்னூட்டங்கள்/Comments:
நான் அடிக்கடி வேலை நிமித்தமாக ஸ்டாக்ஹோம் வந்து செல்பவன்.சில நேரங்களில் சுவீடனில் மிக நீண்ட தூரம் பிராயணம் செய்த அனுபவும் உண்டு
என்னை பொருத்தவரை சுவீடம் மிக அமைதியான அழகான நாடு அருமையான மக்கள் என்ன செய்வது இங்கு இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் சில ஆட்கள் போல அங்கும் ஒருவர் இருவர் இருக்கிறார்கள்
உண்மைத்தமிழன் கதையின் நீளம் ரொமப அதிகம் எனச் சொல்லி இருப்பது, ஜெஃப்ரி பாய்காட் , ராகுல் திராவிட் பேட்டிங் ரொம்ப ஸ்லோ என்று சொல்வது போல இருந்தது.////
hahahaha... super..
சற்று நேரம் முன் தான் உண்மையாரிடம் பேசினேன்.
அனைத்தும் கலக்கல் செல்வா.
புத்தாண்டு வாழ்த்துகள்.
//புனைவுகளில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஒரு மையக் கருத்து, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், முடிவில் கதையின் ஆரம்பத்திற்கு நேர் எதிரான முடிவு, கதைக்கான காரணங்களைகதையிலேயே சொல்லி விடுவது என்ற எனது சிறுகதை இலக்கணத்திற்கு இது சரியாகப் பொருந்துவதால் இதுவும் சிறுகதையே !!//
:-)
அந்த பொண்ணு யாருங்க!?
இன்னும் இனவெறி நாடெங்கும் பரவியிருப்பது வருத்தம் அளிக்கிறது!
அந்த பெண் அவதார் பட கதாநாயகி!
பெயர் தெரியவில்லை!
அண்ணே தனி தனி போஸ்டா போடுங்க... படிக்கிறதுக்கு வசதியா இருக்கும்..
ஆனாலும் உபரினா சரிதான்!! :)
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
பதிவுலகதிற்கும்!!
கீழிருக்கும் இலவச சேவை இந்தப் புத்தாண்டு முதல் தமிழ் கோரும் நல்லுலகத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது
http://sites.google.com/site/tamilezhuthaani
//நாவிக்களை அழிக்க வரும் அதிவேக விமானங்களைப் பார்த்தவுடன் Made in Sweden என்று கமெண்ட் அடிக்க வேண்டும் போல இருந்தது. //
ஒரு நாட்டிற்கு பணி/படிப்பு நிமித்தமாக வருபவரின் இத்தகைய கருது தான் அந்த நாட்டை பற்றி தெரியபடுத்துகிறது
பரவா இல்ல உபரி டிப் போஸ்ட் நல்ல தான் இருக்கு ... :)
//அன்று தங்கத்திற்காக, இன்று பெட்ரோலுக்காக மக்களை நசுக்கி அழித்து, நான்கு திசைகளிலும் வளங்களைச் சுரண்டும் மேற்கத்திய உலகத்தை எதிர்கொள்ள நிஜமாகவே ஒரு/சில ஹீரோ(க்கள்) இப்படி வரமாட்டார்களா என எண்ண வைத்தது//
வரவே விடமாட்டார்கள். நம் அரசியல் வியாதிகள். இன்றளவும் அத்தனை வளர்முக நாடுகளிலும் சுரண்டல் அந்த நாட்டு அரசியல்வாதிகளின் தயவோடு, அற்ப சலுகைகளுக்காகவே நடக்கிறது.
//டே கருப்பனுங்களா !! இங்கே எதுக்குடா வந்தீங்க, ஓடுங்கடா உங்க நாட்டிற்கு" என ஆத்திரமூட்டும் வகையில் பேசியபின்னரும் பொறுமைக் காத்த இவர்கள் , குடும்பத்தைப் பற்றி இழுத்தவுடன் கோபத்தை அடக்கமாட்டாமல் //
அங்கன்றல்ல எங்குமே இப்பிரச்சனை ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கவே செய்கிறது. இந்த நாடுகளின்
நீதியும் " இரத்தம்; நீரை விடக் தடிப்பானது" எனக் காட்டத் தவறுவதே இல்லை. அரசுக்கு; நீதிக்குக் கூட
நாம் அரிகண்டங்களே!
ஆனானப்பட்ட யிடான் - பிரஞ்சு உதை பந்தாட்ட வீரருக்கு மைதானத்தில் இவர்கள் என்ன? செய்தவர்கள்.
வந்து விட்டோம்; நெளிவு சுழிவாக வாழப்பழக வேண்டும்.இதை விடப் பெருங்கொடுமைகளை
நம் நாடுகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்த போது; கண்ணிருந்தும் குருடராய்; வாயிருந்தும்
ஊமையாய் வாழ்ந்த உத்தமக் குஞ்சுகள் நாம்.
சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
திவாரி அவர்களின் பாலியல் ,இந்த வயதிலுமா? என்றது போன்ற விமர்சனம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக அவர் தேர்வு செய்தவர்களை அதிகாரம் கொண்டு அதட்டிக் காரியம்
சாதித்தாராயின் அது தண்டனைக்குரியதே!
நம் நாடுகள்தானே முற்றும் திறந்தேனென்று கூறி ,காவிக்குள் சேலையை மறைக்கும் கயவர்களை அவதாரம்
என தொழும் நடுகளாச்சே!!;
குப்பனும் சுப்பனும் செய்தால் குற்றம். இவர்கள் செய்தால் பாதுகாப்புடன் வாழ்வு!
கொடுத்து வைத்தவங்க.....(வெட்கம் கெட்ட ஜென்மங்கள்)
Post a Comment