Friday, April 04, 2008

எனக்கே எனக்கா - நிறைவுப் பகுதி

முந்தையப்பகுதிகளைப்படிக்க இங்கே சொடுக்கவும்

ரம்யாதான் மோகனின் மனைவியாகப் போகிறவள் என்று தெரிந்த நாள் முதற்கொண்டு,மோகனிடம் சகஜமாகப் பேசுவதை அடியோடு கார்த்தி நிறுத்தினான். ஆண்களை விட பெண்கள் தங்களது முந்தைய கடந்த கால காதலை வெகுவேகமாக மறந்துவிடுவார்கள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. அது எத்தனை நிதர்சனமான உண்மை என்று தன்னுள் நினைத்துக்கொண்ட கார்த்தியால் ரம்யாவுக்கு திருமணம் என்பதை விட அது காதல் திருமணம் என்பதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

ரம்யாவே எல்லாவற்றையும் மறந்து புதுவாழ்க்கைக்கு தயாரானபொழுது தான் மட்டும் ஏன் அவள் நினைவுகளோடு இருக்க வேண்டும் என்று கார்த்தி ஆரம்பித்த புதுஅத்தியாயம் சுவாரசியமாகவே இருந்தது. தோற்றுப்போன ஒரு விசயம் மீண்டும் வேறுவடிவம் எடுத்து வாழ்வில் மீண்டும் வரும்பொழுது அதன் மேல் இருக்கும் ஆர்வம் இரட்டிப்பாகவே இருக்கும் என்பது கார்த்தியின் இரண்டாவதுக் காதலிலும் உண்மையாகவே இருந்தது.

சென்னையைத் தவிர எந்த ஊரிலும் வேலை செய்யத்தயார் என்ற மனநிலையில் இருந்த கார்த்திக்கு எதிர்பார்த்ததைவிட விரைவாக திருவனந்தபுரத்தில் வேலைக்கிடைத்தது.
குறைந்த நேர அவகாசம் கொடுத்து ராஜினாமா செய்தாலும் , அலுவலகத்தில் ஏதும் பிரச்சினை செய்யவில்லை. ஜெனியை சமாதானப்படுத்துவதுதான் கார்த்திக்கு பெரிய விசயமாக இருந்தது.ஊருக்குப்போகும் முன் ஜெனியின் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளின் கடவுச்சொற்களை மறக்காமல் வாங்கி வைத்துக்கொண்டான். மோகன் ரம்யா திருமணம் நடைபெற்ற அதே நாளில் கார்த்தி தன் சம்பளத்தில் கால்வாசிப்பகுதி தொலைபேசி செலவுக்கு எனமுடிவு செய்து திருவனந்தபுரத்தில் புதுவேலையில் சேர்ந்தான்.

திருமணம் முடிந்து சென்னையில் வாழ்க்கையை ஆரம்பித்த பின் ரம்யா ஒருநாள் தனது கல்லூரிப்புகைப்படங்களை மோகனிடம் காட்டியபோது முதன்முறையாக மோகனிடம் தனது கல்லூரிக்கால காதலைப்பற்றிச்சொல்ல ஆரம்பித்தாள். கார்த்தி அந்தப்படத்தில் மிக ஒல்லியாக இருந்தபொழுதும் மோகன் அவனை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். ஆனாலும் கார்த்தி தன் நிறுவனத்தில் முன்பு வேலைப்பார்த்தவன் என்பதை மோகன் ரம்யாவிடம் சொல்லவில்லை. முதன்முறையாக கார்த்தி ராஜினாமா செய்துவிட்டுப்போனதற்காக மகிழ்ச்சி அடைந்தார்.

பழையநினைவுகளை மோகனிடம் பகிர்ந்து முடித்துவிட்டு அழ ஆரம்பித்த ரம்யாவிடம் மோகன்

“எல்லோருக்கும் அட்லீஸ்ட் ஒரு பாஸ்ட் லவ்வாவது இருக்கும் ரம்யா, இதுஎல்லாம் பெரிய விசயம் இல்லை.... எனக்குக்கூடத்தான் ஏகப்பட்டகிறஸ் இருந்து இருக்கு...காலேஜ்ல நான் விரட்டி விரட்டி ஒரு பொண்ணைக் காதலிச்சு இருக்கேன்”

“-----”

“பாஸ்ட் பத்திஎல்லாம் யோசிக்காதடா செல்லம்,எல்லோருக்கும் ஒரு கவலையான கடந்தகாலம் இருக்கும் அதெல்லாம் நினைச்சுட்டு இருந்தா செக்கு மாடு மாதிரி ஒரே இடத்தில தான் நிக்கவேண்டி இருக்கும்”

மோகனால் ரம்யாவை சமாதனப்படுத்தி,சிரிக்க வைக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. மறுநாள் மோகன் அலுவலகம் சென்றபின் அந்த ஆல்பத்தில் இருந்து கார்த்தியுடன் தான் எடுத்துக்கொண்டப் படங்களை எடுத்துவிடலாம் என்று ஆல்பத்தை தேடியபொழுது அதைக் காணவில்லை. மாலை மோகன் அந்த ஆல்பத்துடனும் வரும் வரையில் முழுவதும் சல்லடை போட்டுத்தேடிக்கொண்டே இருந்தாள்.

“நீங்கதான் எடுத்துட்டுப் போய் இருந்திங்களா?”

“ஆமாம், போட்டோஸ் எல்லாம் மங்கலாயிட்டே இருக்கு.. எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி லேப்டாப்ல ஏத்திட்டேன்... டிஜிடல் பார்மட் ல நினைவுகளை வச்சுக்கிறது நல்லது ரம்யா”

“யூ ஆர் ஸோ ஸ்வீட், ஐ லவ் யூ ஸோ மச்” என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அதே நேரத்தில் ”ஏன் கார்த்தி , மொபைல் இவ்ளோ நேரம் என்கேஜ்டா இருந்துச்சு ” கார்த்தியின் காதுகிழிய தொலைபேசியில் ஜெனி கத்திக்கொண்டு இருந்தாள்

“பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தேன் ஜெனி”

“எந்த பிரண்டு, பையனா பொண்ணா?!!!... 40 மினிட்ஸா டிரைபண்றேன்”

“பையன் தான்.. அவனுக்கு ஒரு பெர்சனல் பிராப்லம்..அதுக்கு சொல்யூஷன்ஸ் கொடுத்துட்டு இருந்தேன்”

“என்னோட நெம்பர் வரது உன் மொபைல்ல காட்டும்ல, பார்த்துட்டு எடுத்து இருக்கலாம்ல?”

“சரி இனிமேல் சரியா எடுத்துடுறேன் போதுமா ஜெனி!!!”

”இன்னொரு தடவை நான் பேசக்கூப்பிடுறப்ப நீ எடுக்கலேன்னா நடக்கறதே வேற”

“அப்படி எடுக்கலாட்டி என்னோட ஜெனிச்செல்லம் என்ன பண்ணுவாள்?”

“கார்த்தி, நீ மிஸ் பண்ற ஒவ்வொரு call க்கும் என் கையிலே பிளேடால கோடுபோட்டுக்குவேன்!!!”

------ முற்றும் -----------

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

9 பின்னூட்டங்கள்/Comments:

said...

கார்த்திக்கின் வாழ்க்கையின் மறுபக்கம் ஆரம்பமாகி விட்டது..... :)

said...

நிறைவு பகுதி அழகா இருக்கு!!!

ஆனால் கார்த்திதான் பாவம் இனி....

said...

நீ மிஸ் பண்ணுற ஒவ்வொரு காலுக்கும் கையில பிளேடாலே........

கொடுமைப்பா!
ஏன் இப்படி கிறுக்கு புடிச்சு அலையுதுகள்..?

said...

\\கார்த்தி, நீ மிஸ் பண்ற ஒவ்வொரு call க்கும் என் கையிலே பிளேடால கோடுபோட்டுக்குவேன்!!!”\\

இப்படியும் ஒரு வெறித்தனமான காதலா???
இது ஒரு முட்டாள் தனமான செயல், கதையை இப்படி ஒரு உரையாடலோடு முடித்திருப்பது நெருடலாக உள்ளது.

இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.

படித்து , நல்லதொரு வேலையிலும் இருக்கும் எவரும் இப்படி ஒரு காரியத்தை செய்வார்களா??

தொடரை கொண்டு சென்ற விதம் அருமை,முடிவை தவிர!!

இது என் தனிப்பட்ட கருத்து, தவறாக கருத வேண்டாம்.

said...

\“எல்லோருக்கும் அட்லீஸ்ட் ஒரு பாஸ்ட் லவ்வாவது இருக்கும் ரம்யா, இதுஎல்லாம் பெரிய விசயம் இல்லை.... எனக்குக்கூடத்தான் ஏகப்பட்டகிறஸ் இருந்து இருக்கு...காலேஜ்ல நான் விரட்டி விரட்டி ஒரு பொண்ணைக் காதலிச்சு இருக்கேன்”

“-----”

“பாஸ்ட் பத்திஎல்லாம் யோசிக்காதடா செல்லம்,எல்லோருக்கும் ஒரு கவலையான கடந்தகாலம் இருக்கும் அதெல்லாம் நினைச்சுட்டு இருந்தா செக்கு மாடு மாதிரி ஒரே இடத்தில தான் நிக்கவேண்டி இருக்கும்”\


மோகனின் புரிதல் பாராட்டத்தக்கது!

said...

தாமதமாய் இன்றுதான் கதையை படித்தேன் மன்னிக்கவும்!

வழக்கத்துக்கு மாறுபட்டு எழுதியிருப்பது தெரிகிறது (முடிவை தவிர :))!

குறளுக்கு ஏற்ற முடிவுதான்! நன்றாக இருக்கிறது வினை!

said...

'கைதொலைபேசி' என்ற வார்த்தையை விட 'உலாபேசி' என்ற பேயர் சரியாக இருக்கும் வினை!

said...

//“கார்த்தி, நீ மிஸ் பண்ற ஒவ்வொரு call க்கும் என் கையிலே பிளேடால கோடுபோட்டுக்குவேன்!!!”//

முழுதும் படித்தேன்.
தனக்குத் தானே செய்யும் வன்முறையும் வன்முறையே....
தங்கள் உரையாடல்கள் மிக இயல்பு... இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை போக்கே வித்யாசமானதுதான்.அதன் பாதிப்பே இந்தக் கதைகள்..

said...

வினையூக்கி, கடைசி பகுதியில் ரொம்ப எதிர்பார்த்தேன். மூன்றாம் பகுதி இறுதியில் இருந்த அந்த பரபரப்பு நான்காம் பகுதியில் காணும்! இருந்தாலும், நல்ல சீரான கதை ஓட்டம். வசனங்கள் அருமை! உங்களிடம் மிக விரைவில் அடுத்த கதையை எதிர்ப்பார்க்கிறேன்.