Thursday, April 03, 2008

எனக்கே எனக்கா - குறுந்தொடர்(4)

முந்தையப் பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்



”காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவைத் திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்” ரம்யாவிற்கு பிடித்தமானப் பாடல் மோகனின் கைத்தொலைபேசியில் பாட ஆரம்பிக்க கார்த்தி பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க போட்டோஸ் பார்த்துட்டு இருங்க, இதோ வந்துடுறேன்” என சொல்லிவிட்டு கைத்தொலைபேசியை எடுத்து பேசியபடி அலுவலகத் தோட்டத்திற்கு மோகன் போனார். அந்த அழைப்பு யாரிடம் இருந்து வந்து இருக்கும் என்று கார்த்திக்குப் புரிந்தது.

முதல் படத்தைத்தவிர மற்றப்படங்களை கடமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் ஜெனி “ரொம்ப அழகா இருக்காங்கல்ல!!”

“ம்ம், ஆனால் இவளைவிட நீ இன்னும் அழகா இருக்க” என்ற பதிலுக்கு ஜெனி தான் வெட்கப்படுவதா கோபப்படுவதா என நினைத்தவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மறுநாள் மாலை இரண்டு முறை வலிய இடத்துக்கு வந்து மோகன் அழைத்தபோதும் ,அவர் அலுவலக நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு கார்த்தி போகவில்லை. கார்த்தி போகவில்லை என்பதால் ஜெனியும் போகவில்லை. எட்டு மணி ஆகியும் கார்த்தி அலுவலகத்தை விட்டு கிளம்பாமல் பழைய மின்னஞ்சல்களை எல்லாம் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். ரம்யாவும் அவனும் கல்லூரிக்காலத்தில் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களை மறுவாசிப்பு செய்து இனி இந்த நினைவுகள் அவசியம் இல்லை என ஒவ்வொன்றாக அழித்து முடித்து , மான்ஸ்டர், நௌக்ரி வேலை வாய்ப்புத் தளங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைத் தரவு செய்து முடிப்பதற்கும் ஜெனி பின்னால் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

“கார்த்தி, இப்போ ஏன் இதை எல்லாம் அப்டேட் பண்றீங்க”

“ஒன்னும் ஸ்பெசல் காரணம் இல்லை, அடிக்கடி அப்டேட் செய்து வச்சுக்கிறது நல்லது ஜெனி”

”சொல்லிக்காம எல்லாம் திடீர்னு எல்லாம் ரிசைன் பண்ணிடாதிங்க, அப்புறம் உங்களை மிஸ் பண்ணுவேன்”

“ம்ம் இன்னும் கொஞ்ச நாள் இருப்பேன், டோண்ட் வொரி”

கணினியை அணைத்துவிட்டு கார்த்தியுடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஜெனி வழக்கமாக ஒரு பக்கம் கால் போட்டு உட்காருவது போல் அல்லாமல் இருபக்கமும் கார்த்தியின் வண்டியின் பின் கார்த்திக்கும் அவனுக்கும் இடையில் நல்ல இடைவெளிவிட்டு உட்கார்ந்து கொண்டாள்.

சிலமுன்முடிவுகளை எடுத்திருந்த கார்த்தி , வேண்டுமென்ற வண்டியை மெதுவாக கோடம்பாக்கம் வழியாக வராமல் தி.நகர் வழியே சுற்றி வந்து கொண்டிருந்தான். மௌனமாக இருப்பதாக அவன்காட்டிக்கொண்டாலும் , மனம் சலசலத்துக்கொண்டிருந்தது.

“நீங்க மோகன் கல்யாணத்திற்கு வருவீங்கல்ல, அவரோட மெயில் பார்த்தீங்களா, கன்பார்ம் பண்ணிட்டா அவரு டிரெயின் டிக்கெட்,ஸ்டே எல்லாம் செய்ய வசதியா இருக்கும்னு சொல்லி இருந்தார்” ஜெனி பேச ஆரம்பித்தாள்.

”ம்ம் நான் போகல, அன்னக்கி ஒரு வேலை இருக்கு”

“ம்ம்,நீங்க வரமாட்டிங்களா , அப்போ நானும் போறதைப் பத்தி யோசிக்கனும்.”

“அடடா, என்னது இது !! நீ போயிட்டுவா”

“இல்லை, உங்க கூட டிராவல் பண்ணலாம், நிறைய நேரம் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க வரலேன்னா டிரிப் போரடிக்கும்... அதனால நானும் போகல”

“வாழ்க்கைப் பயணத்திலும் வழித்துணையாய் சகப்பயணியாய் பயணிக்க வேண்டும், சரி என்றால் சொல் , என் பயண திசையைக்கூட மாற்றிக் கொள்கிறேன்”

”கார்த்தி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல”

“நேரடியாகவே கேட்கிறேன்.. நாமக் கல்யாணம் பண்ணிக்கலாமா?”

ஜெனி பதில் பேசவில்லை. இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக உட்கார்ந்து அவன் தோளைப்பற்றிக்கொண்டாள். கார்த்தியின் வண்டி வேகம் எடுத்தது.

நிறைவுப்பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

கதை ரொம்ப இயல்பா போகுது...

நிறைவு பகுதியை படிக்க ஆவலாய்
இருக்கு.....

வசனங்கள் இயல்பாய் இருக்கிறது!!!

said...

அறத்திற்கே அன்பு சார்பென்பத்றியார்
மறத்திற்கும் அஃதே துணை.....(தி)

said...

ம். மெயிலை அழிச்ச உடனே ஞானம் பொறந்திடுச்சா?

said...

ரொம்ப சூப்பரா போகுது உங்க தொடர்கதை:))

இயல்பான கதைவசனம் டாப்பு டக்கர்....டயலாக் எழுத கரெக்ட்டான ஆளு[திவ்யா அக்கா] கிட்ட தான் உதவி கிடைச்சிருக்கு உங்களுக்கு:))

நிறைவு பகுதிக்கு வெயிட்டீங்.....

நட்போடு
நிவிஷா.

said...

//ஜெனி பதில் பேசவில்லை. இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக உட்கார்ந்து அவன் தோளைப்பற்றிக்கொண்டாள். கார்த்தியின் வண்டி வேகம் எடுத்தது.//

சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!! வீவீவீவீ...(விசில் சத்தமுங்கோ!!)

said...

\\“வாழ்க்கைப் பயணத்திலும் வழித்துணையாய் சகப்பயணியாய் பயணிக்க வேண்டும், சரி என்றால் சொல் , என் பயண திசையைக்கூட மாற்றிக் கொள்கிறேன்” \\

ஏமாற்றமும், பழிவாங்கும் உணர்வும் ஏற்படுத்திய காதலால் எடுத்த முடிவோ??

அழகான திருப்பம்!!

said...

\ஜெனி பதில் பேசவில்லை. இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக உட்கார்ந்து அவன் தோளைப்பற்றிக்கொண்டாள். கார்த்தியின் வண்டி வேகம் எடுத்தது.\

அழகு!!!