ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்
எல்லோரும் எட்டு எட்டாய் அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்க, தாமதமாக பழைய "Sixer" ஒன்றை அடிக்க இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. திரு.டி.பி.ஆர் ஜோசஃப் வெகுநாட்களுக்கு முன்னர் எழுத அழைத்திருந்த ரசிக்கப்பட்ட ஆறு விசயங்கள் தொடர் பதிவு இதோ.
1. பேசும்படம் என்ற மவுனபடத்தில் கமல்ஹாசன் ஒரு பிச்சைக்காரரிடம் தான் வைத்திருக்கும் காசை சுண்டிவிட்டு பெருமையாகக் காட்டப் போக, அதற்கு அந்த பிச்சைக்காரர் தான் அமர்ந்திருக்கும் கோணியை நகர்த்தி ஏராளமான பணத்தைக் காட்டுவார். அதே பிச்சைக்காரர் இறந்துப்போக,பிணத்தை விட்டு பறக்கும் பணத்தின் பின்னால் மக்கள் போகும் காட்சியைப் பார்த்து கமல் திருந்துவார். இந்தப் படம் முழுவதுமே அழகிய கவிதைத்துவமான காட்சிகளால் நிரம்பியது.
2. நடுக்கும் குளிரிலும், பிரயாணக் களைப்பி்னால் சோர்வாக இருந்தாலும் தாஜ்மகாலைப் பார்த்த அந்த தருணங்கள், அந்த பிரம்மாண்டத்தின் முன்னால் அனைத்து சோர்வுகளும் பறந்துப் போயின.
3. வேலையை விட்டு போன பின்னரும், வாங்கிய 300 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுத்த பழைய வாட்ச்மேனின் நேர்மை.
4.என்னோட கதைளிலேயே நான் மிகவும் ரசித்து எழுதிய
இந்தக் கதை
சோர்வடையும் பொழுதெல்லாம் இந்தக் கதையை அடிக்கடி மறுவாசிப்பு செய்வதுண்டு.
5. காணமல் போன துரதிர்ஷ்டசாலி பெண்ணை, ஒரு துரதிருஷ்டசாலி நபரின் மூலம் கண்டுபிடிக்கும் La Chèvre என்ற பிரெஞ்சுப் படம்.
6. "உலக அழகி நான் தான் " என்ற பாடலுக்கு எண்ணெய் முகத்தில் வழிய, பிறப்பு படத்தின் நாயகி காட்டும் முகபாவங்கள்
Misc :
a. கதைகளில் ஜெனி கதாபாத்திரத்துக்கு என்னால் கொடுக்கப்படும் முகங்கள்
b. தமிழ்மணத்தின் புதியமுகப்பு
c. குட்டீஸ் ஹெல்மெட் போட்டுட்டுப் போனது
d. பெர்முடா அணியின் சுழல் பந்து வீச்சாளார் லெவரக்கின் கேட்ச்.
e. கிப்ஸின் ஆறு சிக்ஸர்கள்
f. "சீனி கம்" படத்தின் பாடல்கள்
9 பின்னூட்டங்கள்/Comments:
---"உலக அழகி நான் தான் " என்ற பாடலுக்கு---
கலக்கிட்டீங்க :))
/* வெகுநாட்களுக்கு முன்னர் எழுத அழைத்திருந்த */
வெகு நாட்களுக்கு முன்னரா அல்லது சில வருடங்களுக்கு முன்னரா? :-))
ஆறிப் போட்ட ஆறுப் பதிவாக இருப்பினும் நல்ல சுவாரசியமாக இருக்கிறது.
இனி உங்களின் எட்டுப் பதிவை 2008 ல் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன். :-))
இப்பத்தான் ஆறா? எட்டு எப்ப வரும்? :))
ஆறும் ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க! கலக்கல்!!
நன்றி பா.பா
வெற்றி வருகைக்கு நன்றி. எட்டுப்பதிவு உடனடியாகப் போட்டாகி விட்டது. உங்களையும் எட்டு போட அழைத்துள்ளேன். நேரமிருக்கும்பொழுது பதியவும் சார்.
கப்பி ரொம்ப தாங்க்ஸ்... நீங்க அழைத்த எட்டும் போட்டுட்டேன். நீங்க ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு கமெண்ட் அடிங்க
ulaga azhagi naanthaan..
cool.. nice to see few more ppl have also enjoyed the song and the picturization.. offcourse the heroine too ;-)
நன்றி யாத்திரீகன். ஆமாம் நிஜமாகவே இந்தப் பாடல் நிறையப்பேருக்குப் பிடித்து இருக்கிறது..
வெகு நாட்களுக்கு முன்னரா அல்லது சில வருடங்களுக்கு முன்னரா? :-))//
நல்ல கொக்கி:-)
பிந்தி வந்தாலும் ஒங்க ரசனை அழகாவே இருக்குங்க...
வாழ்த்துக்கள்.
Post a Comment