இது சூப்பர் எட்டு இல்லீங்க .. சுமாரான எட்டுதான்
எட்டு தொடர் ஆரம்பித்த வாரத்திலேயே கப்பி பயலிடமிருந்து அழைப்பு வந்தது. பிறகு டி.பி.ஆர் ஜோசஃப் சார் , ராதா ஸ்ரீராம் ஆகியோரிடமிருந்து அழைப்பு வர, சரி இனியும் தாமதிக்கக் கூடாது ,உடனே பதியவேண்டும் என்ற எண்ணத்துடன் இதோ சுமாரான எட்டுக்கள்.
1. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
பொதுவிலோ அலுவலிலோ யார் எந்த எந்த விசயத்தை சிறப்பாக செய்வார்கள் என்று அனுமானித்து செயல்படுவது, பெரும்பாலும் அனுமானங்கள் சரியாகவே இருக்கும்.
2. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
பெரும்பாலும் கடும் - சுடு சொற்களை தவிர்ததுவிடுவது்.தன்னை சுடும் அதே
சொற்கள், பிறரையும் அதே அளவு சுடும்தானே... ஆகையால் பெரும்பாலும் நல்ல இனிமையான வார்த்தைகளுடனே பேச முயற்சிப்பது(நிறைய நேரங்களில் திகட்டினால் கூட)
3. இன்னாசெய் தாரை றுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
எதிரி என்று கருதப்படுபவருக்கு அன்போ/நல்லதோ செய்ய வாய்ப்புக்கிட்ட்டும்போது அதை தவறவிடுவதே இல்லை. இதை விட எப்படி சிறப்பாகப் பழி வாங்க முடியும்.
4. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
சிறிய உதவி என்றாலும் அவர்களை மறக்காமல் நினைவில் வைத்து, "Pay it forward" முறையில் வேறு யாருக்கேனும் அதை செய்ய சந்தர்ப்பம் அமையும்போது சரியாக செய்துவிடுவது அல்லது யாரால் செய்ய முடியுமோ அவரிடம் வழிகாட்டி விடுவது(over to point number one)
5. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
இவ்வுலகம் கட்டமைத்துள்ள பல "தீய" விசயங்களில் இருந்து விலகி இருப்பது.எது "potential" பிரச்சினை தருமோ அதிலிருந்து தள்ளி இருப்பது. இதுக்கு ஒரு "Exception" அடுத்தது..
6. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
சில நல்ல பொய்கள் அடிக்கடி சொல்லி பிறருக்கு நல்ல காரியங்கள் நடக்க ஒரு காரணியாக இருப்பதுண்டு.
7. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
எதை விதைக்கிறமோ அதை நாம் தான் அறுவடை செய்தாக வேண்டும். இந்த பயத்தாலேயோ என்னவோ அடுத்தவருக்கு கேடு செய்யும் எண்ணம் எழும்பொழுதெல்லாம் அதை ஒரு கட்டுக்குள் வைக்க முடிகிறது.
8. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது யர்வு.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
அதிகபட்ச நேர்மறையான(Positive) எண்ணங்களுடன் தன்னையும் சுற்றம் இருப்பவர்களையும் வைத்துக்கொள்ள முயற்சிப்பது.
பெருமையாக நினைத்துக் கொள்ளும் இந்த எட்டு விசயங்களும் கடைசி வரை உடன் இருக்கவேண்டும் என்பதே அவா.
அடுத்து எட்டு போட போறவங்க
1.குழலி
2.முத்து(தமிழினி)
3.பூர்ணிமா
4.சென்ஷி
5.நந்தா
6.யோசிப்பவர்
7.சிவஞானம்ஜி
8.வெற்றி
15 பின்னூட்டங்கள்/Comments:
good boy. சமூகத்திற்கு கட்டப்படுதல் என்பது இவைதான்.
அப்பிடித்தான் இருக்க வேணும்.
உங்களைப்போலவே எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். டென்மாக்கில் வசிக்கிறார் இப்போ. /உங்கள் சாயலில் )
மிக்க நன்றி நளாயினி மேடம். என்னுடைய வணக்கங்களை உங்களது தம்பிக்கு தெரிவித்து விடவும்.
//உங்கள் சாயலில் //
முக சாயல் அல்லது எழுத்து நடை சாயல் ??!!
Good Thoughts வினையூக்கி and simple and best too.
/இன்னாசெய் தாரை றுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
எதிரி என்று கருதப்படுபவருக்கு அன்போ/நல்லதோ செய்ய வாய்ப்புக்கிட்ட்டும்போது அதை தவறவிடுவதே இல்லை. இதை விட எப்படி சிறப்பாகப் பழி வாங்க முடியும்./
இது எனக்கு மிகவும்பிடித்த குறள்!!!
இதில் முக்கியமான சொல்லே "விடல்" தான். அதாவது தீமை செய்தவருக்கும் , நன்மை செய்து விட்டு, அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் "மறந்து விட" வேண்டுமாம்!!!
தெய்வமே..காலைக் காட்டுங்க :)
அசத்திட்டீங்க!!
நல்ல எட்டு வினையூக்கி......எப்போதுமே இந்த குணங்கள் உங்கள்ட்ட இருக்கணும்னு வாழ்த்தரேன்.....
மொத்தத்தில், குறள் வழி வாழறீங்க. வாழ்த்துக்கள் !
அடடா!
வித்தியாசமான எட்டுப் பதிவு.
அய்யன் வள்ளுவர் வகுத்த வழியில் வாழ்கின்றீர்கள் போலும்.
அய்யன் வள்ளுவன் வழியே சிறந்த வழி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ம்ம்ம்... நானும் முடிந்தளவில் வள்ளுவர் வழியைப் பின்பற்ற முயற்சிக்க வேணும்.-:)
அழைப்பிற்கு நன்றி. கொஞ்சம் காலம் கழித்துத்தான் எட்டுப்பதிவு போட முடியுமென நினைக்கிறேன்.
அட! குறளுக்குப் பொருள் என்னான்னு யாராவது கேட்டா உங்களைக் கை காண்பிக்க வேண்டியதுதான் போல!!
நேற்று திவ்யா புதுமையா எட்டு போட்டாங்க;
இன்று உங்க 'டர்ன்'ஆ?
நல்ல பதிவு!
அழைப்பிற்கு நன்றி!
// இவ்வுலகம் கட்டமைத்துள்ள பல "தீய" விசயங்களில் இருந்து விலகி இருப்பது //
அது!!! :)
இதுதான் சுப்பர் எட்டுங்க!
நன்றி நெல்லைகாந்த், அருட்பெருங்கோ, கப்பிபய, ராதாஸ்ரீராம், கதிரவன், இளவஞ்சி,வெற்றி,இலவசக்கொத்தனார், சிவஞானம்ஜி, யோகன்பாரிஸ்
நம்ம ஜியோட பதிவுல ஒங்கள பத்தி எழுதணும்தான் திடீர்னு ஐயோ இவர் நம்ம அழைப்ப ஏத்துக்கிட்டு போட்டவராச்சேன்னு இங்க ஓடிவந்தேன்..
உண்மையிலேயே அருமையான பதிவு..
யாரோ சொன்ன மாதிரி இத்தகைய நல்ல குணங்கள் அனைத்தும் உங்கள விட்டு பிரியாதிருக்கணும்னு பிரார்த்திக்கிறேன்...
அடுத்த முறை உங்கள் அலுவலகம் வரும்போது சந்திக்கலாம்..
எட்டு குட்டு (good)
Post a Comment