காதலியின் அண்ணன் - சிறுகதை
"யாரோ யாருக்குள் இங்கு யாரோ .... யார் தந்தாரோ" பாடல் தான் மதியக் காட்சி பார்த்துவிட்டு திரையரங்கத்திலிருந்து ஜெனியுடன் வெளிவருகையில் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
"ஜெனி, இங்கயே வெயிட் பண்ணு, காரை எடுத்துட்டு வந்துடுறேன்"
"ஹே கார்த்தி ஒரு நிமிஷம், அந்த கேட்டு பக்கத்துல எங்க அண்ணன் நிற்கிற மாதிரி தெரியுது... நான் ஆட்டோலேயே போய்க்கிறேன்"
ஆமாம், அங்கே ஒருத்தன் எங்களை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான். அட இவனை என்னோட தெருவில பார்த்திருக்க்கிறேனே..
"ஜெனி, யு நெவர் கீப் யுவர் பிராமிஸ், என்கூட டின்னர் சாப்பிடுறேன்னு சொன்ன"
"இல்லை கார்த்தி, இது சம்திங் சீரியஸ், உனக்கு ஒரு நாள் சொல்றேன், என் அண்ணனைப் பத்தி, பை பை"
--------
மறுநாள் எனது பழைய அலுவலகத் தோழி ரம்யாவுடன் மதிய உணவை அருகில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிட்டு வெளியே வந்த பொழுது,
ஜெனியின் அண்ணன் தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு எங்களை இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் எதேச்சையாக கவனித்தேன்.
அதன் பின் அடிக்கடி அவனை நான் பார்ப்பேன்..அவன் என்னை பின் தொடர்கிறானோ என்ற நினைப்பு ஆத்திரத்தை வரவழைத்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, கல்லூரித் தோழர்களுடன் கடற்கரையில் இருந்த போது சில அடி இடைவெளியில் மீண்டும் ஜெனியின் அண்ணன், என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கடுப்புடன் அவனிடம் நேரடியாகவே எதற்கு என்னைப் பின் தொடர்கிறாய் என கேட்கவேண்டும் என்று வேகமாக அவனை நோக்கி நடக்கையில் ஜெனியின் தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஹலோ கார்த்தி, கொஞ்சம் வீட்டுக்கு வர்றீயா, அப்பா உன்கிட்ட பேசனும்னு சொல்றார், நம்ம விசயத்தை அப்பாக்கிட்ட சொல்லிட்டேன்"
"ம்ம்ம், அடுத்த ஹாஃப் அன் அவர்ல வர்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தவுடன் ஜெனியின் அண்ணனை தேடினேன். அவன் அங்கில்லை. தூரத்தில் போய் கொண்டிருந்தான்.
ஜெனியின் வீட்டில், அவளின் அப்பா எதிர்பார்த்ததை விட நட்பாகவே பேசினார்.
"கார்த்தி, நீங்க ஜெனி ஆபிஸ் ல சேர்ந்த அன்னக்கி செமையா ஜொள்ளு விட்டீங்களாமே" இது ஜெனியின் தங்கை நான்சி,
"நீங்க விடாது காதலா மூனு டைம் புரோபஸ் பண்ணக் கதையை அடிக்கடி சொல்லி சொல்லி சிரிப்பாள்" அவளே தொடர்ந்தாள்.
ஜெனி வீட்டிலே எல்லோரும் கலகலப்பாக பேசினார்கள். அவங்க வீட்டிலேயே இரவு சாப்பாடு சாப்பிட்டேன். ஜெனியின் அண்ணன் வரவே இல்லை. ஒரு வேளை ஒன்றுவிட்ட அண்ணனாக இருப்பானோ? வீடு திரும்பும் வழியில் எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்தேன். ம்ஹூம் இல்லல.
மறுநாள் அலுவலகத்தில், ஜெனி தனது குடும்பப் புகைப்படங்கள் இருக்கும் ஆல்பத்தை கொண்டு வந்து மேஜையின் வைத்து ஒவ்வொரு படமாக விளக்கிக் கொண்டிருந்தாள்.
கடைசிப்படத்தைத் திருப்பும் போது அவளையறியாமல் கைநடுங்கியது,
"இது தான் எங்க அண்ணன் திலீப், என் மேலே கொள்ளைப் பாசம் அவனுக்கு, நான் நம்ம ஆபிஸ்ல சேருவதற்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு ஆக்சிடெண்ட்ல எங்களை விட்டுட்டுப் போயிட்டான், யூ னொ சம்திங்,, அடிக்கடி அவனை நான் பார்க்கிற மாதிரி எனக்குத் தோணும், அப்போ எல்லாம் அவன் நேர்ல இருந்தா எப்படி நடந்துக்குவேனோ அப்படியே நடந்துக்குவேன். அன்னக்கி படம் பார்த்துட்டு வந்தப்பக்கூட அதே ஃபீல் ஏற்பட்டுச்சு, அதனாலதான் என்னையும் அறியாம நான் எங்க அண்ணன் நிக்கிறான்னு சொல்லிட்டு ஆட்டோல வந்துட்டேன்"
"ம்ம்ம்ம்ம்.."
இவன் தான் கடந்த சில காலமாக என்னை பின்தொடர்கிறான் என்பதை சொல்லி பாசத்தை பயமாக்க விரும்பாமல் அவளைத் தேற்றினேன்.
ஒன்று சொல்ல வேண்டும், ஜெனியின் வீட்டிற்குப் போய் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய பின் ஜெனியின் அண்ணன் என் கண்களில் படுவதே இல்லை. ஜெனிக்கூட ஒரு முறை சொன்னாள் அவள் அண்ணனின் உருவம் இப்போதெல்லாம் மனதினில் தோன்றுவதேயில்லை என்று.
10 பின்னூட்டங்கள்/Comments:
சமீபத்தில் நீங்க எழுதிய பேய்க்கதைகளில் எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடித்திருக்கு.. (திலீபன் கடைசியில் வராமல் போவதால் இருக்கலாம் ;) )
நல்லா வந்திருக்கு..
நல்ல ட்விஸ்ட்....
சூப்பர்..
திகில் படம் ரேஞ்க்கு இருந்தது..
இன்னைக்கு நான் தூங்கினாப்லதான் :)))
நல்ல திகில் கதை...வித்தியாசமாக இருந்தது.
:) நல்ல அண்ணன். தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்....
இந்தக்கதை நல்லாயிருக்குது. சுபமா முடித்திருப்பது நிறைவா இருக்குது :-)
கதை சூப்பர். கலக்குங்க.
Nanraaga irundhadhu.. Ivanagala pathi dhan neenga class la pesineengala!!
Idhu varai irandu post dhan padithullen.. Padikka pala vakaikal, pala kadhaikal irukkiradhu!!
யோவ்! நான் வீட்டுக்கு கடைசிப் பிள்ளைய்யா. இப்படியெல்லாம் அநியாயத்துக்கு பயமுறுந்தினா ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப் போவுது!!!
;-)
Post a Comment