கட் ஆஃப் - சிறுகதை
இந்த கல்லூரியில் சேர்ந்து இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. வகுப்பிலேயும் விடுதி அறையிலேயும் கட்-ஆப் மார்க் பத்தி தான் ஒரே பேச்சு. நீ எவ்வளவு எடுத்த, கலந்தாய்வின் போது வேறு எந்த எந்த கல்லூரிகளில் இடங்கள் இருந்தன என்று உரையாடல்கள் அமைந்து, சில குழுக்களாக பிரிவது கண்கூடாகத் தெரிந்தது.
நானும் ஒரு குழுவில் இணைந்தேன். முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்தக் கல்லூரியும் பிடிக்கவில்லை, நான் எடுத்து இருந்த பொறியியற் பிரிவும் பிடிக்கவில்லை. அவசரப்பட்டு செய்த தவறினால் கணிதத்தில் தவறிய 10 மதிப்பெண்கள் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது.,
என்னோட அறையில் இருந்தவர்களில், மூவர் என்னோட கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்கள். இன்னொருத்தன் என்னை விட 15 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து, நான் எந்த பிரிவை எடுக்க நினைத்து கிடைக்காமல் போனதோ, அதை இவன் இட ஒதுக்கீட்டில் எடுத்து இருந்தான். முதற்நாள் அதைக் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு ஏற்கனவே இருந்த எரிச்சல் உணர்வு அதிகமானது. அவனும் என்னோட வகுப்புதான். முதல் செமஸ்டர் மட்டும் அனைத்து பிரிவு மாணவர்களும் ஒன்றாக இருப்பார்கள். கல்லூரியில் அவனைப் பார்த்தால் நான் சிரிப்பது கூட கிடையாது.
15 மதிப்பெண்கள் என்பது கிட்டத்தட்ட 5 சதவீதம். இந்த 5 சதவீத மதிப்பெண்களை அதிகமாக எடுக்க எத்தனை இரவு தூக்கத்தை இழந்து இருப்பேன். எத்தனை மாதிரி பரிட்சை எழுதி இருப்பேன். எத்தனை விருப்பங்களை தியாகம் செய்து இருப்பேன். கிட்டத்தட்ட 14 மாத தவம். +1 தேர்வு முடிந்த கையோடு எடுத்த புத்தகங்களை நுழைவுத்தேர்வு முடியும் வரை கீழே வைக்க வில்லை. சே!! என்னவொரு தேர்வு முறையடா, தரப்பட்டியலில் முதலில் இருப்பவனுக்கு கிடைக்க வேண்டியதை , சொகுசாக குறைவான மதிப்பெண் எடுத்தவன் எடுத்துக் கொள்கின்றேன். நான் மட்டும் இந்த தேசத்தின் தலைவன் ஆனால் முதலில் இந்த முறைகளை எடுத்து விட்டு தகுதி அடிப்படையில் மட்டுமே எல்லா விசயங்களும் என்று சட்டம் இயற்றுவேன்.
நேற்றிரவு 2 மணிவரை, "இவன் நம்ம ஆளுட" என்று மூன்றாமண்டு மாணவர்கள், நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்ததால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. முதல் பாடவேளை வேதியியல். தாமதமாகப் போனால், அந்த விரிவுரையாளர் வருகை அளிக்க மாட்டார். அதனால் அடுத்து இயற்பியல் வகுப்புக்குப் போனேன். அங்கு நான் உட்காரும் இடத்தில் வேறு ஒருவன் உட்கார்ந்து இருந்ததால், வேறு வழியின்றி ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து இருந்த "அவனுடன்" வேறு வழியின்றி அமர்ந்தேன். இயற்பியற் ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்கும்போது , இவன் அந்த கேள்விகளுக்கு முணுமுணுவென சரியான பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எழுந்து பதில் சொல்லவில்லை. ஒரு சின்ன ஆச்சர்யம் எப்படி இவன் தமிழ்வழியில் படித்தவன் பொதுவாகவே தமிழ் வழியில் படித்தவர்கள் தனக்கு தெரிந்து இருந்தாலும் ஆங்கிலத்தில் இணையான வார்த்தைகள் தெரியாததால் சில விசயங்களை கிரகித்துக் கொள்ள சிரமப்படுவார்கள். இதைக் கூறித்தான் என் அப்பா 5 வதுக்குப் பிறகு ஆங்கில வழிக்கல்வியில் என்னைச் சேர்த்தார். இதைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.
அதற்கடுத்து தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறையாகிப் போனதால், முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் தங்களது ஊருக்கு சென்று விட்டனர். முதலாமாண்டு விடுதி மாணவர்களில் எஞ்சியது நாங்கள் இருவரும் தான்.
முதல் இரண்டு நாட்கள் நான் "எங்க ஆளுங்க" மூன்றாமண்டு மாணவர்கள் அறையில் போய் பேசிக் கொண்டிருந்ததால் "அவனுடன்" பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்று திருப்பரங்குன்றம் கோயில் போகலாம் என்று நினைத்த போது பேச்சுத் துணைக்கு "அவனையும்" கூப்பிட்டு போகலாம் என்று அவனை அழைத்தேன்.
போகும் வழியில்
"இங்கிலீஷ் ஈகுவலண்ட் வேர்ட்ஸஸெப்படி உனக்குத் தெரியும், நீ தமிழ் மீடியம் தானே படிச்ச"
"ஆமா, காலேஜ்ல சேர முன்னாடி இங்கிலீஷ் மீடிய புக்ஸ் வாங்கி வாசிச்சேன், ஈகுவேசன்ஸ் எல்லாம் முன்னமே தெரியும், வேர்ட்ஸ் எல்லாம் இப்ப படிச்சுக்கிட்டு இருக்கேன்".
என்னையும் அறியாமல் அவன் தோளைத் தட்டி பாராட்ட தோனியது. அவன் குடும்ப சூழல்கள் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.
"அப்பா கூலி வேலை பார்க்கிறாரு, அம்மா பண்ணை வீட்டுல வேலை பார்க்குறாங்க
நானும் வேலை பார்த்து இருக்கேன், எல்லா காட்டு வேலையும் எனக்குத் தெரியும். ஸ்கூல் முடிச்சுட்டு பண்ணை வீட்டுல வேலை பார்ப்பேன்"
"நீ ஏன் படிக்கிறப்ப வேலை பார்க்கனும், உங்க வீட்டுல தான் ரெண்டு பேரும் இயர்னிங் ல, "
"இல்லை, எங்க அப்பா காசு கொடுக்க மாட்டாரு, சரியன குடிகாரரு, அக்கா புருஷன் கள்ளச்சாராயம் காய்ச்சி அடிக்கடி ஜெயிலுக்குப் போய்டுவாரு, அதனால அக்கா வீட்டையும் நாங்க தான் பார்த்துக்கனும்"
நீ நல்ல மார்க் வாங்கினதனால் கணினி வாங்கித் தருவதாக சொன்ன அமெரிக்காவில் இருக்கும் என் அக்காவின் கணவர் நினைவில் வந்து போனார்.
தின செய்திகள், கிரிக்கெட், தொலைக்காட்சி தொடர்கள் தியாகம் செய்த அம்மா,அப்பா, ஒவ்வொரு தொலைபேசி உரையாடலிலும் படிப்பை மட்டும் பேசும் அக்காவும் ஞாபகம் வந்தார்கள்.
"சரி நீ எண்ட்ரன்ஸ் கோச்சிங் போனியா? எங்க போன?"
"எங்க ஸ்கூல்லய சொல்லிக்கொடுத்தாங்க, அதுவும் முழுசா போக முடியல, பண்ணை வீட்டுல வேலைக்குகூப்பிட்டுட்டாங்க, எங்க ஸ்கூல் வாத்தியார் தான் என்னை கவுன்சிலிங்க் எல்லாம் கூட்டிட்டுப் போனார், படிக்க அனுப்பிச்சா ஸ்காலர்ஷிப் பணம் எல்லாம் கிடைக்கும் , செலவு இல்லன்னு சொன்ன பின்ன தான் அப்பா என்னை காலேஜ் ல சேர விட்டாரு"
நகரத்திலே இருக்கிற நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் சிறந்த மையத்தில் நான் படிக்க அப்பா தனது வண்டியை எனக்குக் கொடுத்து விட்டு அவர் பேருந்தில் சென்றதும் நினைவுக்கு வந்தது.
"நமக்கு செமஸ்டர் லீவ் எவ்வளவு நாள் கிடைக்கும், அறுப்பு நேரம், நான் போனால் அம்மாக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்."
என்னையும் அவனையும் ஒப்பிட்டு பார்த்தேன். படிப்பு மட்டுமே சூழலாகக் கொண்டு, ஊக்கத்தை மட்டுமே பெற்று வளர்ந்து, உயர் மனப்பாண்மையில் இருந்து நான் எடுத்த மதிப்பெண்,
விளிம்பு நிலை பிரச்சினைகள் , கல்வி வாசனை அறியாத குடும்பம், அடிமைச் சூழல் இத்தனை இருந்த போதும் அவன் படித்து எடுத்த மதிப்பெண்களைக் காட்டிலும் மிகக் குறைவு என இன்னொரு பரிமாணத்தில் உணர்த்தியது.
ஒரு வேலை நான் அவன் சூழலில் இருந்து இருந்தால் அவன் அளவு படித்திருப்பேனா என்று எண்ணம் ஒரு திகிலைக் கொடுத்தது. கல்வி சமுதாயத்தின் மிகப்பெரும் சமனி, வேதியியல் சமன்பாடுகளை சமப்படுத்துவது போல் தான் இதுவும் என் உணர்ந்தேன்.
"எப்படியும் 10 நாள் கிடைக்கும் என அவனது முந்தைய கேள்விக்கு பதில் சொல்லி, அவன் தோளில் பெருமிதமாக கைபோட்டு கல்லூரியை நோக்கி நடந்தேன்".
30 பின்னூட்டங்கள்/Comments:
நல்ல சிறுகதை!
பாராட்டுக்கள்!
இதுதாங்க வாழைப்பழத்தில ஊசிஏத்துறது என்பது...
ஜமாய்ங்க!
Very Good Story.
இதை கதையென்று சொல்ல தோன்றவில்லை எனக்கு அத்தனை அற்புதமாக நிஜத்தில் நடப்பதை எழுதியிருக்கின்றீர்
அருமையான கதைங்க.
//ஒரு வேலை நான் அவன் சூழலில் இருந்து இருந்தால் அவன் அளவு படித்திருப்பேனா என்று எண்ணம் ஒரு திகிலைக் கொடுத்தது. //
சூழ்நிலைக்கு ஏற்ற கதை. பாராட்டாம இருக்க முடியலை. வாழ்த்துக்கள்.
இடஒதுக்கீடு போன்ற விஷயத்தை பற்றிய கருத்துக்களை யார் மனதையும் புண்படுத்தாத விதத்தில் வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்! :-)
நல்ல கதை,நீங்கள் சொல்ல வந்த கருத்துக்களை வெகு அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்!! :-)
மறுக்க முடியாத உண்மை!
How many students from BC/OBC are coming from a background like you mentioned in the story? Do you have any statistics to prove that? How many "so called" FC students have full support to continue thei study? This story is just generarized view to support reservation.
//Deiva said...
How many students from BC/OBC are coming from a background like you mentioned in the story? Do you have any statistics to prove that? How many "so called" FC students have full support to continue thei study? This story is just generarized view to support reservation.
//
அன்பின் தெய்வமனம் சார்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நண்பர் குழலியின் பதிவில் இது தொடர்பான புள்ளி விவரங்கள், வாத பிரதிவாத இடுகைகளின் தொகுப்புகள் இருக்கிறது
அன்புடன்
வினையூக்கி
தெய்வா சார்,
இதையும் பார்க்கவும்
அன்புடன்
வினையூக்கி
வினையூக்கி,
எனக்கு தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுச் சிக்கல்கள் பற்றி ஒன்றும் தெரியாது.
எனினும் தமிழ்மணத்தில் வாசிக்கும் பதிவுகளை வைத்துப் பார்க்கும் போது நண்பர் குழலி சொன்ன கருத்தைத் தான் சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் அன்றாட வாழ்வில் நடக்கும் அவலத்தைக் குட்டிக் கதையாக மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
பி.கு:- இலங்கையில் பள்ளிகளோ அல்லது பல்கலைக்கழகங்களோ சாதி அடிப்படையில் அனுமதி வழங்குவதில்லை. அங்கு புள்ளிகளின்[marks] அடிப்படையிலே தான் அனுமதி வழங்கப்படும். ஒருவரின் சாதி பார்க்கப்படுவதில்லை. அத்துடன் பல்கலைக்கழகங்களிலோ அல்லது பள்ளிகளிலோ சேரும் போது மாணவர் என்ன சாதி என்றும் கேட்பதில்லை.
அதனால்தான் இலங்கையில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் தொகை 98.9 %.
தமிழகம் இவ் விடயத்தில் இலங்கையைப் பின்பற்றி, கல்வி என்பது ஒருவரின் பிறப்புரிமை என்பதை உணர்ந்து அனைவருக்கும் கல்வி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நல்ல சிறுகதை தல!
Sir, The arguments in Kuzhali's blogs are always onesided. It will be neutral, when the arguments are published from both sides. I am seeing comments from pro-reservationist in the first place. I doubted whether my comment will be published. From your and kuzhali's profile, I see that both of you are in abroad. Your kids will definitely take a chance to use the reservation. If your kids are only competing in OC, then I will give hats off to you
nice effort....!!....it was very nice reading
..but, i strongly feel reservations should be corelate to economic indicators rather than caste systems....times have changed and now caste systems DO NOT directly equate to economic indicators...
//Deiva said...
Sir, The arguments in Kuzhali's blogs are always onesided. It will be neutral, when the arguments are published from both sides.
//
தெய்வா சார்,
குழலி வலையுலகில் கருத்து சுதந்திரம் கொடுக்கும் ஒரு சில நபர்களில் அவரும் ஒருவர்.
அன்புடன்
வினையூக்கி.
//Deiva Said
I doubted whether my comment will be published
//
சார், ஐயம் வேண்டாம். கருத்து சுதந்திரம் மதிக்கப்படும்.
அன்புடன்
வினையூக்கி
//Deiva Said,
If your kids are only competing in OC, then I will give hats off to you
//
Sir,
இந்தக் கேள்விக்கு நண்பர் குழலி இந்தப் பதிவில் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்
நன்றி தங்களின் வருகைக்கு.
அன்புடன்
வினையூக்கி
I didn't know that Dr.Anbumani Ramadoss is first generation. Also as your argument, Dr.Anbumani Ramadoss's kids will be first generation. Good Story.
I don't see Ravi Srinivas's anti-reservation links on Kuzhali's compilation of reservation of articles. There should be both sides when you are making arguments.
நீர் முன்ன பின்ன இஞ்சனியரிங்க கவுன்சிலிங்க போகலை நீ ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ன்னு சரியா தெரியுது.
//Anonymous said...
நீர் முன்ன பின்ன இஞ்சனியரிங்க கவுன்சிலிங்க போகலை நீ ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ன்னு சரியா தெரியுது.
//
:) :) :) :)
ஸ்மைல்ஸ்.
//Deiva said...
I don't see Ravi Srinivas's anti-reservation links on Kuzhali's compilation of reservation of articles. There should be both sides when you are making arguments
//
நீங்க இதை குழலியின் பதிவிலேயே கேட்டு இருக்கலாமே!!!!
அன்புடன்
வினையூக்கி
Kuzhali has a separate blog for writing his views. I am not sure why are citing his article for responding to my comments everytime instead of writing your response. That is why I have to refer his name and blog on my comment.
//At 9:00 AM, Deiva said…
How many students from BC/OBC are coming from a background like you mentioned in the story? Do you have any statistics to prove that?
//
//
Deiva said...
Kuzhali has a separate blog for writing his views. I am not sure why are citing his article for responding to my comments everytime instead of writing your response. That is why I have to refer his name and blog on my comment
///
சார், நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்குத்தான் தகவல்களின் தொகுப்பாக அமைந்த குழலியின் பதிவையும் ஓசைசெல்லாவின் பதிவையும் உங்களுக்கு சுட்டினேன்.
நீங்கள்தன் அதற்குப்பின் குழலி ஒருதலைபட்சமானவர் எனக்கூறினீர்கள். தாங்கள் தான் தனது கருத்துக்கள் பதிப்பிக்கப்படமாட்டாது என ஐயம் கொண்டீர்கள்.
அடுத்து நீங்கள் ரவிஸ்ரீனிவாஸின் பதிவு அங்கில்லை எனக் கூறினீர்கள்.
அதனால் தான் நீங்கள் அதை அந்தப் பதிவிலேயே கேட்டு இருக்கலாமேன்றேன்.
மீண்டும் தங்களின் வருகைக்கு நன்றி சார்.
மேலும் ஒரு சில கதைகள் எழுதியுள்ளேன். படித்துவிட்டு தங்களின் அபிப்ராயங்களைக் கூறவும்
அன்புடன்
வினையூக்கி
Thank you Namakkal Sibi
வினையூக்கி
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும், கிராம பின்னணியிலிருந்து வருபவர்களுக்கும் ஒரு கிரியா ஊக்கி தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இவர்களுக்கான இட ஒதுக்கீடு சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வினை சமப்படுத்த உதவும்.
ஆனால் IPS அதிகாரிகளின் மகன்களும், டாக்டர்களின் மகன்களும் இட ஒதுக்கீடு பெறுகிறார்களே - இது பற்றி உங்கள் கருத்து என்ன??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@பாஸ்டன் ஸ்ரீராம் !!
நீங்கள் கேட்டதைப்பற்றிய விவாதங்கள் குழலியின் இணையத் தளத்தில் சிலவருடங்களுக்கு முன் நடைபெற்றது.
அதில் இருக்கும் சாரக் கருத்துதான் என் நிலையும் கூட
இணைப்பு இங்கே
http://kuzhali.blogspot.com/2007/04/blog-post.html
வினையூக்கி ஐயா..
Deiva அவர்களுக்கு நீங்க திரும்ப திரும்ப குழலியை மேற்கோள் காட்டி பதில் சொன்னதே எனக்கு நெருடலாக இருந்தது (அவருக்கும் இருந்ததாக ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்).
நான் கேட்டது ஒரு simple கேள்வி, அது பற்றி உங்களுக்கு சொந்தக் கருத்து இருந்தால் சொல்லுங்கள், அல்லது இது வெறும் கதைதான் அதற்கு மேல் ஒன்றுமில்லைன்னு சொல்லுங்க. உங்களுக்குன்னு சொந்த கருத்து இல்லை, குழலி சொல்வதே உங்க கருத்துன்னு சொன்னா.. இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல.
வேறொரு இடுகையில் சந்திப்போம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பி.கு 1 : உங்க பக்கத்தை நான் ரெகுலராக படிக்கிறேன், கதைகள் நல்லா எழுதறீங்க, குறிப்பா ஜெனி கதைகள்.
பி.கு : நான் குழலி மற்றும் இன்னும் சிலரது பக்கங்களுக்கு செல்வதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறேன். அதனால நீங்க கொடுத்த எந்த லிங்கையும் படிக்கவில்லை
@ பாஸ்டன் ஸ்ரீராம்,
க்ரீமிலேயரைப் பற்றி சுவாரசியமான விவாதங்கள் நடந்தப் பதிவு அது. 'சிலரின்' பக்கங்களைப் படிக்க மாட்டீர்கள் என்பது உங்களின் 'கொள்கை' முடிவு என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
எனது பக்கங்களை தாங்கள் வாசிக்கிறீர்கள் எனும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதையும் என்னுடைய வழக்கமான கதையாகப் பார்க்காமல் இதில் இருந்த 'அரசியலையும்' பார்த்து கேள்விக்கேட்டமைக்கு நன்றி.
முதலாவதாக நீங்கள் கேட்கும் கேள்வி கிரீமிலேயரைப் பற்றியது என்பதாகப் புரிந்து கொண்டு எனதுக் கருத்தை நான் எழுதிய இன்னொரு கதையில்(கதைகளின் வாயிலாகச் சொல்லப்படும் அரசியல் ,கருத்துகள் மக்களை விரைவில் சென்றடையும் என நம்புபவன் நான்) பதிந்து உள்ளேன்.
http://vinaiooki.blogspot.com/2008/04/blog-post_11.html
இரண்டாவதாக நீங்கள் குறிப்புடும் நபர்கள் இடஒதுக்கீடுகளில் வரமாட்டார்கள் அதற்கான இந்தியக் குடியரசின் பிற்படுத்தப்பட்டவர்களின் தகவல் சுட்டி http://ncbc.nic.in/html/creamylayer.htm தயவு செய்து 'கொள்கை' ரீதியாக இந்தியக்குடியரசின் இந்தப் பக்கத்தை தவிர்த்து விடாதீர்கள்.
பண்புடன்,
வினையூக்கி செல்வா
பி.கு 1 நீங்கள் கேள்விக் கேட்டதன் மூலம் சிலத்தரவுகள் மேலும் சிலரை சென்றடைகிறது. நன்றிகள் தங்களைச் சாரும்.
பி.கு 2 ஏனைய ஜெனி அம்முக் கதைகளையும் தொடர்ந்து வாசிக்க வேண்டுகின்றேன் :)
அருமையான நடையில் எழுதப்பட்ட தேவையுள்ள ஒரு 'சிறுகதை' !!!
தொடருங்கள் செல்வா.
இந்த 'சிறுகதை'யின் 'மூலக்கதை' தெரியாதவர்களுக்கு தருமி அவர்கள் கீழ்காணும் இணைப்பில் வகுப்பெடுத்துள்ளார்.
http://www.tamilveli.com/mk2009/?p=29
அதனையும் இனி உங்கள் ஆதரவு இணைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
Post a Comment