நீதான் வந்தாயா? - குட்டிக்கதை
"கார்த்தி நான் கிளம்புறேன், டைம் ஆயிடுச்சு" என சொல்லிக்கொண்டே தனது கைப்பையை எடுத்துக் கொண்டு என் சீட்டுக்கு வந்தாள்.
"திஸ் ஈஸ் டூ ஜெனி மச், உன்னோட கோடிங்க தான் பார்த்துட்டு இருக்கேன் வெயிட் பண்ணு" என்றேன்.
"இல்லை, இப்போவே மணி பத்து, நான் கிளம்புறேன். பை பை, நாளைக்குப் பார்க்கலாம் " என்று கூறி விட்டு அலுவலகத்தை விட்டு கிளம்பிப் போனாள்.
இவளோட வேலையை நாம் செய்வதற்கு , இவளை இருக்க வைக்க எவ்வளவு கெஞ்ச வேண்டி இருக்கு.
அவள் போய் பத்து நிமிடம் கழித்து அவளிடமிருந்து கால் வந்தது
"சாரிடா, அந்த ஆசிரமத்துக்கு தர்றேன்னு சொன்ன பத்தாயிரம் ரூபாயை நாளைக்கு காலையிலே வந்தவுடன் உன் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்" என்றாள்.
"உன் பாஸ்வேர்ட் ஐடி கொடு, நானே டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்" அவளின் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன். ஏற்கனவே அவளின் ஐடி பாஸ்வேர் கேட்டபோது அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளினால் என்னை அர்ச்சித்து இருக்கிறாள்.
அவள் ஏதோ சொல்ல வந்தாள், அதற்குள் கிரிச்சீன்னு ஒரு சத்தம், அழைப்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் அவளை அழைத்த போது இணைப்பு கிடைக்கவில்லை.
கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு இடத்துக்கு வந்தமர்ந்தேன்.
யாரோ பின்னே நிற்பது போல உணர, திரும்பிப் பார்த்தேன். ஜெனி அங்கே.
"எதுக்கு திரும்ப வந்த?"
"கார்த்தி, பேங்கோட வெப்சைட் போ, நல்ல விசயங்களை உடனே செய்துடனும், அதுதான் திரும்ப வந்தேன்"
"இந்த நீயே ஐடி பாஸ்வேர்ட் அடி" என்று அவளை நோக்கி கீ போர்டைத்திருப்பினேன்.
"இல்லை நீயே அடி" என் தனது ஐடி பாஸ்வேர்ட்டை எனக்கு சொன்னாள்.
"ஒரு 40000 உன் அக்கவுண்டுக்கு மாத்திக்கோ, இனிமேல் என்னைக் கேட்கவேண்டாம், நீயே என் சார்பா கொடுத்துடு" என்று மேலும் சொன்னாள்.
"ஹே, ஏன் " என்றேன் ஆச்சர்யத்துடன்..
"பராவாயில்லை இருக்கட்டும், நான் கிளம்புறேன் பை" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கான வேலையை முடித்து விட்டு, என் வேலை தொடங்கலானேன்.
சிறிது நேரம் கழித்து வசந்தின் அழைப்பு வந்தது,
"ஹலோ கார்த்தி, ஜெனி ஆக்சிடெண்ட், ஜெனி...சாரிட அவ ஸ்பாட்லயே " என்றான் வார்த்தைகள் தழுதழுக்க.
கடவுளே!!, இப்பொழுது தானே ஜெனி வந்தாள். ஆக்சிடெண்டுக்கு முன்னமே இங்கே வந்தாளா!!! இல்லை ஆக்சிடெண்டுக்கு பின்னாடியா!!!
எனக்குத் தலைச்சுற்றியது.
6 பின்னூட்டங்கள்/Comments:
ha ha..back to the same genere.......
மறுபடியும் ஆரம்பிச்சாசா?
But fine. ஒரு விதத்துல நல்ல விஷயம் தான் சொல்லிருக்கீங்க!
நாலு கதைக்கு ஒரு தடவை ஜெனி ய
க்ளோஸ்செய்றீங்க...
ஜெனி யாரு?
உங்க டேமேஜரா?
பூர்ணிமாவை வழிமொழிகிறேன்...
மறுபடியும்.... ;)
//At 9:42 AM, sivagnanamji(#16342789) said…
நாலு கதைக்கு ஒரு தடவை ஜெனி ய
க்ளோஸ்செய்றீங்க...
ஜெனி யாரு?
உங்க டேமேஜரா?
//ஹிஹிஹி, டேமேஜர் இல்லை. சும்மா ஒரு கற்பனைப் பெயர். குஷி படத்துல கதாநாயகியின் பெயர்.
// பொன்ஸ் said...
பூர்ணிமாவை வழிமொழிகிறேன்...
மறுபடியும்.... ;)
//
:) :) :) அடுத்த இரண்டு கதைகளையும் படிங்க. நோ ஜெனி, நோ கார்த்திக்
Post a Comment