Thursday, March 29, 2007

கிரிக்கெட்,கடலை,ஹிட்ஸ் மற்றும் சில

எல்லோருடைய "WEIRD" பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கும்போது, நம்மளை யாராவது கூப்பிட மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருந்த போது திரு.டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் அழைத்து விட்டார். "செல்-வா" பெயரிலேயே முரணை வைத்துக் கொண்டிருப்பாதாலோ என்னவோ பல விசயங்களில் ஒரே சமயத்தில் இரு வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருப்பது உண்டு. நம்முடைய இயல்பில்லாத-வித்தியாசமான குணதிசயங்கள் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத வரை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.


"I loose interest quickly on things that I love very much"

இதுதாங்க பெரிய பிரச்சினை, கற்பூரம் மாதிரி சீக்கிரம் அணைஞ்சுப் போயிடும். நிரம்ப ஆர்வமா பண்ணிக்கிட்டு இருக்கிறபோது திடீர்னு சலிப்புத்தட்டி விருப்பம் போயிடும்.ஒரு வகையில் இது நல்லது கூட, குறுகிய காலத்தில் பல தரப்பட்ட விசயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். இது பத்தி நிறைய சொன்னால் "சுய சரிதை" ஆயிடும்.

ஆனால் இந்த விசயத்துக்கு இருக்கிற "Exception" கிரிக்கெட்.

இந்திய துணைக்கண்டத்தில் பிறந்து விட்டு கிரிக்கெட்டின் பாதிப்பு இல்லாமல் வளருபவர்கள் மிகச்சிலர்.நான் பெரும்பான்மையில் ஒருவன்.
கிரிக்கெட் எனது வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. கிரிக்கெட் பெண்ணாகப் பிறந்து இருந்தால் ஒரு வேளை என் முதல் காதலை அதனிடத்தில் தெரிவித்து இருப்பேன்.

நிறைய தருணங்களில் கிரிக்கெட் பார்க்கும்போது, எனது "weird" குணங்கள் எட்டிப்பார்க்கும்.
அவற்றில் சில,

அ. வலதுகை மட்டையாளர்கள் மட்டையடிக்கும்போது கண்ணடியில் இடது கை பேட்ஸ்மேனாக பார்ப்பது.
ஆ. 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்கும் சூழல் இருந்தால் கூட அணி வென்று விடும் என்ற நம்பிக்கையில் இருப்பது.
இ.ஏதாவது சாதனை நிகழ்த்தப்படும் என்று ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போது கண்மூடித்தனமாக எதிர்பார்ப்பது. ஆனால் சில சாதனைகளை நேரடியாகவும் பார்த்ததில் மகிழ்ச்சியும் உண்டு. தென்னாப்பிரிக்காவின் 434 துரத்தல். கிப்ஸின் 6*6. இந்தியாவின் 413. திராவிட் - கங்குலி 1999 உலக கோப்பையில் டவுண்டனில் 313 ரன் ஜோடியாட்டம்.
ம்ம்ம். இந்த முறை இந்தியா தோற்று வெளியேறிய போது வருந்தியவர்களில் நானும் ஒருவன்.
தோற்ற வருத்தத்தில் எழுதப்பட்டதுதான் இந்தக் கதை
ஈ. இந்தியா தோற்கும் போதெல்லாம் அன்று இரவு தூக்கத்தில் அந்த ஆட்டத்தை இந்தியா வென்று விடுவதாக கனவு வரும். கிரிக்கெட்டைப் பற்றி அதீத நினைப்பே இதற்கு காரணாமாக இருக்கலாம்.
*******
அடுத்தது, ஏதேனும் புதிய வார்த்தைகளோ,வாக்கியங்களோ அல்லது புதிய விசயங்களையோ தெரிந்துகொண்டால், அதனை வலுக்கட்டாயமாக நாலு பேருடன் பேசும் போது அப்படியே எடுத்து விடுவது. சில சமயங்களில் அது சம்பாந்தமில்லாமல் கூட இருக்கும். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது.
*****
கூகிளில் என் பெயர், புனைப்பெயர்களைப் போட்டு பார்ப்பது.

அடிக்கடி சாவுக்குப் பின் என்ன நடக்கும் என்ன நினைப்பது

பேய் பயம்

பழைய மெயில்களை எடுத்துப்படிப்பது என சொல்லிக் கொண்டே போகலாம்.
******

முன்பிருந்த ஒரு weird குணம் : கல்லூரியில் படிக்கும்போது "கடலை" போட முந்தின இரவே "ஹோம்-வொர்க்" செய்துவிட்டு மனதில் "ரிஹர்ஸலும்" பார்த்து மறுநாள் வெற்றிகரமாக 'மிஷனை" முடிப்பது.

இப்போது புதிதாய் முளைத்திருக்கும் weird குணம்: ஹிட்சை அதிகமாக்க மொக்கையாய் ஏதாவது படங்கள், வீடியோவை சுட்டு தில்லாலங்கடி பதிவு போடுவது.

நான் கூப்பிட விரும்புபவர்கள்;
முத்து(தமிழினி)
லக்கிலுக்
சிவஞானம்ஜி
வெற்றி

2 பின்னூட்டங்கள்/Comments:

டிபிஆர்.ஜோசப் said...

வியர்டுன்னு போட்டுக்கிட்டு நல்லாத்தான் கடல போட்டுருக்கீங்க..

ஆனா இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதியிருக்கலாமோன்னு தோனுது..

குழலி / Kuzhali said...

//"I loose interest quickly on things that I love very much"//
எத்தனை பேருப்பா இப்படி என்னை மாதிரியே

//முன்பிருந்த ஒரு weird குணம் : கல்லூரியில் படிக்கும்போது "கடலை" போட முந்தின இரவே "ஹோம்-வொர்க்" செய்துவிட்டு மனதில் "ரிஹர்ஸலும்" பார்த்து மறுநாள் வெற்றிகரமாக 'மிஷனை" முடிப்பது.//
இதிலுமா ......... ம் எனக்கெல்லாம் ரிகர்சல் எல்லாம் பார்த்து மறுநாள் மிஷன் வெற்றிகரமாக முடிந்தவை வெகு சில சமயங்களே.....
:-))))))))))))

உங்க பதிவுகளை ஒன்றொன்றாக இப்போ படித்துக்கொண்டிருக்கிறேன், ரொம்ப நல்லா இருக்கு... கலக்குங்க....