செண்டர்ம் எடுப்பேன் - குட்டிக்கதை
ஒரு குறிப்பிட்ட மதத்தை கிண்டலடித்து எழுதி வைத்திருந்த அங்கத கட்டுரையை ஒரு வார இதழுக்கு அனுப்ப வேண்டும் என்ற நினைவோடு வண்டியில் வந்து கொண்டிருந்தேன். அந்த மெயின் ரோட்டில் காலை நேரமாதலால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு சின்ன பையன் கையில் பரிட்சையில் எழுதும் அட்டையுடன் கை நீட்டினான்.
"சார், பாய்ஸ் ஹை ஸ்கூல் கிட்ட இறக்கி விட்டுடுங்க, பரிட்சைக்கு டைம் ஆச்சு பிளீஸ் " எனக் கெஞ்சலுடன் லிப்ட் கேட்டான்.
அவனை சில வினாடிகள் உற்று நோக்கினேன். படிக்கிற பையன் என்று முகத்திலேயே தெரிந்தது. நெற்றியில் விபூதியும் சந்தனமும் . ம்ம்ம் நம்ம பையன் தான் ..
"சரி, ஏறிக்கோ"
"தாங்க்ஸ் சார், பஸ் நிறுத்தாம போயிட்டான்"
சில நிமிட மவுனத்திற்குப் பின் "என்ன பரிட்சை இன்னக்கி" என்றேன்
"மேத்ஸ் சார்"
"செண்டர்ம் எடுப்பியா?"
"எடுத்துடுவேன் சார்"
அவனுக்கு உம் கொட்டினேன். தூரத்தில் சர்ச் தெரிந்தது, சர்ச்சை தாண்டினால் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி.
அந்த சர்ச்சை தாண்டுகையில்,
"சார், நான் இங்க இறங்கிக்கிறேன், சாமி கும்பிட்டுட்டு நடந்துடுப் போயிடுறேன். இங்க கும்பிட்டு போன நான் செண்டர்ம் எடுப்பேன், தாங்க்யூ சார்" என்று சொல்லிட்டு சர்ச் உள்ளே ஒடினான் அந்த சிறுவன்.
சுள்ளென்று எதோ மனதினில் தைத்ததது. அவன் திரும்புகையில் அவன் கையில் எனது ஹீரோப் பேனாவைக் கொடுத்துவிட்டு, எழுதி வைத்திருந்த அங்கத கட்டுரையை கிழித்தெறிய வேண்டும் என்ற முடிவோட வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்தேன்.
10 பின்னூட்டங்கள்/Comments:
நல்லாயிருக்குங்க..
சென்ஷி
அப்படிப் போடு. நல்ல இருக்குங்க.
பாத்து நீங்களும் பிரச்சினைல மாட்டிக்காதீங்க.
நெற்றியில் மத அடையாளங்கள் - எந்த மதம் என்ற குறிப்பில் தெளிவில்லை
ஆனால், சர்ச் என்னும் பொழுது தெளிவு வருகிறது..
இது கொஞ்சம் குழப்பம். இதை விட நெற்றியில் விபூதி வைத்திருந்தான் என்று தெளிவாக சொல்லி இருந்தால் இன்னுமே நச்சென்றிருந்திருக்கும் :)
சமீபநாட்களின் உங்கள் பதிவுகள்
மிக அருமையானவை
//
Nandha said...
அப்படிப் போடு. நல்ல இருக்குங்க.
பாத்து நீங்களும் பிரச்சினைல மாட்டிக்காதீங்க.
//
நந்தா நன்றி. சிறுவயதில் நடந்த சம்பவம். குறிப்பிட்ட வயதுவரை எல்லா தெய்வங்களையும் "நம்பினால்" கைவிடாது என்ற ஒரு விசயம் எப்படி காலப்போக்கில் மாறுகிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்ததால் இதை எழுதினேன்.
பிரச்சினை வரும் சொல்லாடல்கள் எதுவும் இல்லை என்று எண்ணுகின்றேன்.
//sivagnanamji(#16342789) said...
சமீபநாட்களின் உங்கள் பதிவுகள்
மிக அருமையானவை
//
வசிஷ்டர் கையினால் ஒரு குட்டு. நன்றி சார்.
//பொன்ஸ் said...
நெற்றியில் மத அடையாளங்கள் - எந்த மதம் என்ற குறிப்பில் தெளிவில்லை
ஆனால், சர்ச் என்னும் பொழுது தெளிவு வருகிறது..
இது கொஞ்சம் குழப்பம். இதை விட நெற்றியில் விபூதி வைத்திருந்தான் என்று தெளிவாக சொல்லி இருந்தால் இன்னுமே நச்சென்றிருந்திருக்கும் :)
//
மாற்றிவிடுகிறேன் பொன்ஸ்.
மிக்க நன்றி சென்ஷி
short and sweet...
நல்லா ல்லி இருக்கீங்க அண்ணா!
மதம் ஜாதி மொழி எல்லாம் மனிதன் படைத்தது! அவை எல்லாம் நம்ம வசதிக்காக தானே?
கடவுளின் படைப்புகளாகிய நாம் அவர் பெயரை காப்பாத்த வேண்டுமில்லயா?
Post a Comment