வயோஜர் - ஒரு நிமிடக்கதை
ஆண்டு 1976 , அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்
" நீங்கள் தமிழராக இருந்தாலும் அண்டவெளியில் பயணம் செய்யப்போகும் வயோஜரின் காலப்பேழையில் , தமிழில் பேசிப்பதிய , ஏன் முன்னெடுக்கவில்லை ?"
என்ற நீல்சனின் கேள்விக்கு நாமம் போட்டு இருந்த ராகவன் .
"நெப்டியுனைத் தாண்டுமா என சொல்ல முடியாது ... தாண்டினாலும் , இந்த வயோஜரை கண்டுபிடிக்கப் போகின்ற வேற்றுகிரகவாசிகள் அப்படியே தமிழ் தான் பேசப் போகிறார்களாக்கும். , ஏற்கனவே தமிழர்கள் , ஹரப்பா தம்முடையது , குமரிக் கண்டம் தம்முடையது மாயன் தம்முடையது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ... வயோஜரில் இல்லை என்றால் தமிழுக்கு ஒன்றும் இழுக்கு வராது " சொல்லியபடி சிரித்தார்
ஆண்டு 2126
"ஃ" கிரகம் என்றுமே இல்லாத அளவிற்கு பரபரப்பாக இருந்தது. அளவில் சிறிய ஏதோ ஒன்று, "ஃ" கிரகத்தை கடக்கப் போவதாக செய்திகளில் சொல்லிக் கொண்டு இருந்தனர். அண்ட வெளியில் ஒரு மூலையில் இருக்கும் இக்கிரக மக்கள் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் , பயப்படுவது வெளியில் இருந்து வரும் எரிகற்களுக்கு மட்டுமே ...
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி ஓர் எரிகல் வந்து விழுந்த பின்னர் பயந்து சனம் அழிந்து விடுமோ என , தொலை தூர கோள்களுக்கு சென்று தங்களது குடியேற்றங்களை ஏற்படுத்திவிட்டு வந்து இருக்கின்றனர்.
'நமது கோளை நோக்கி வருவது எரிகல் அல்ல, ஒரு விண்கலம் போல இருக்கின்றது - பயப்பட வேண்டியதில்லை " என அனைவரின் மூளைக்குள்ளும் உடனடி செய்தி அனுப்பப் பட்டது .
வானில் நகர்ந்து கொண்டிருந்த கருவி ஃ கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கத் தகட்டை வியப்புடன் அறிவியல் மக்கள் பார்த்தனர். அவர்களின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த பழமையான பேழையில் தகடு ஓடவிடப்பட்டது. தகட்டில் இருந்த ஒலிகள் ( http://www.youtube.com/watch?v=QTDK2jCVPN0 )அங்கிருந்த யாருக்கும் விளங்கவில்லை.
கடைசியில் குப்பை என நிராகரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டது.
அதே சமயம் பூமியில் , 150 வருடங்களாக அண்டவெளியில் பிராயணம் செய்து கொண்டிருந்த வயோஜர் விண்கலம் செய்திகளை அனுப்புவதை நிறுத்தியது என்ற செய்தியும் கடைசி தமிழ் பேசும் மனிதர் மரணமடைந்தார் என்ற செய்தியும் அடுத்தடுத்து ஓடிக்கொண்டு இருந்தன. பூமிக்கும் "ஃ" கிரகத்திற்கும் இருந்த ஒரே தொடர்ச்சியும் அறுந்து போனது .