ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 2 )
Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி
----
பகுதி 1 - http://vinaiooki.blogspot.it/2013/04/2.html
எங்கள் கூட்டைப் பற்றி சொல்லியாக வேண்டும். கொஞ்சம் தாழ்வான, ஆனாலும் வசதியான ஒரேயொரு அறைமட்டுமே. இதில் நாங்கள் நால்வரும், எங்களுடைய பொருட்களும் அடக்கம்.தரை தடிமனான கம்பளி தரைவிரிப்பினால் ஆனது. மூன்று பக்கவாட்டு சுவர்களும் போர்வைகளால் மூடப்பட்டிருக்கும். கூட்டின் உயரம் அப்பாவின் தலை வரை இருக்கும். உண்மையில் இந்தக் கூடு, மிகப்பெரிய அறையினுள் இருப்பதாக அப்பா சொல்வார். ஆனால் நிஜக் கூரையையோ தரையையோ சுவரையோ நான் பார்த்ததில்லை.
ஒருப்பக்க போர்வைச் சுவற்றில் ஓர் அலமாரி இருக்கின்றது. அதில் சிலப்புத்தகங்களுடன் வேறு சிலப் பொருட்களும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. மேலடுக்கில் வரிசையாக கடிகாரங்கள். கடிகாரங்கள் சரியாக ஓடவைப்பதில் அப்பா குறிப்பாக இருப்பார். நேரத்தை மறந்துவிடக்கூடாது. அதுவும் கதிரவனும் நிலாவும் இல்லாத இந்தக் கட்டத்தில், வெகுசுலபமாக நாம் நேரத்தை மறந்துவிடக்கூடும்.
நான்காவது சுவரும் போர்வைகளால் ஆனதுதான், ஆனால் நெருப்பு மூட்டும் இடத்தைத் தவிர. இந்த நெருப்புதான் உறையும் குளிரில் இருந்து எங்களைக் காக்கின்றது, குளிரில் இருந்து மட்டும் அல்ல, அதற்கு மேலும். எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து நெருப்பு அணையாது கவனித்துக் கொண்டே இருப்போம். அலமாரியில் இருக்கும் கடிகாரங்களில் சிலவை நினைவூட்டல் மணிக் கொடுப்பவை. ஆரம்பத்தில் அம்மாவும் அப்பாவும் தான் அலாரம் வைப்பார்கள், அம்மாவிற்கு முடியாமல் போனதில் இருந்து, நான் அப்பாவிற்கு உதவியாக இருக்கின்றேன். சில சமயங்களில் தங்கையும் உதவுகின்றாள்.
அப்பாதான் நெருப்பின் தலைமைப் பாதுகாவலர், அல்லது அப்படித்தான் நான் நினைத்துக் கொள்கின்றேன். கால்களை மடக்கி, கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையாமல், ஒவ்வொரு துண்டாக கரியை எடுத்துப் போட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், பழங்காலத்தில் புனித நெருப்பு வெளியேப்போகாமல் இருக்கு வெஸ்டல் கன்னிப் பெண்கள் இருந்தனர் என அப்பா சொல்வார். உறையா காற்று இல்லாத அந்தக் காலத்தில் நெருப்பு பரவாமல் இருக்க அப்படியான தேவதைகள் தேவையே இருந்திருக்காது.
நான் கூட்டிற்குள் நுழையும்பொழுது அப்படித்தான் அமர்ந்து இருந்தார். என் கையில் இருந்து வாளியை வாங்கிக் கொண்ட அப்பா, தாமதத்திற்கு கடிந்து கொண்டார். அவரின் கவனம் உறைந்த சுவடுகளைக் கொண்ட, என் தலைகவசத்தின் மேல் போனது. உடனடியாக அம்மாவும் கேள்விக் கேட்க ஆரம்பித்தார். குட்டி சகோதரியும் தன் பங்கிற்கு கேள்விகளை வீசினாள்.
கொண்டு வந்து இருந்த, உறைந்த காற்றை அப்பா ஒரு துணியில் பிழிந்து எடுத்தார், அது காற்றாக மாறி, அறை முழுவதும் விரவியது. ஒட்டு மொத்த அறையின் வெப்பத்தையும் எடுத்துக் கொண்டு, குளிரடித்தது. புத்தம் புது ஆக்சிஜனினால், மேல் எழும்பிய நெருப்பை , அதன் இடத்திற்கு அழுத்தினார்.
நான் கொண்டு வந்திருக்கும் வாளியில் இருந்த அந்த வெள்ளை நிற திண்மமான ஆக்சிஜன் தான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக காற்று உருகி, அறைக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், நெருப்பையும் தொடர்ந்து எரிய வைக்கின்றது.
சுற்றி இருக்கும் போர்வைகள் ஆக்சிஜன் தப்பியோடமல் இருக்க உதவுகின்றன. அப்பாவிற்கு நான்காவது சுவரையும் முழுமையாக போர்வையால் மூடவேண்டும் என விருப்பம். ஏற்கனவே பூகம்பத்தால் கட்டிடம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது, மேலும் நெருப்பின் புகை வெளியே போகவும் ஓரிடம் வேண்டும்.
கூட்டில் காற்றோட்டம் அளவாக இருப்பதில் நாங்கள் கவனமாக இருப்போம். ஒருப்பக்கம் உறைந்த பனி, வாளிகளில் வைத்திருப்போம், அதை உருக்கி குடிநீராகப் பயன்படுத்த, மறுப்பக்கம் தேவையான உணவு, நெருப்பு எரிக்க கரி என அப்பா அனைத்தையும் ஸ்டாக் வைத்திருப்பார். குடிநீருக்காக பனியை எடுக்க, மட்டும் வெளிக்கதவைத் திறந்து, கட்டிடத்தின் அடித்தளம் வரை போய் ஆகவேண்டும்.
பூமி குளிரடைய ஆரம்பித்த பொழுது, எல்லா நீரும், காற்றும் உறைந்துப் போயின.அது பத்து அடி உயரமுள்ள அடுக்கு ஒன்றை உருவாக்கியது. உறைந்த அடுக்கில் இருந்து கொட்டிய துகள்களுடன் கூடிய காற்று மண்டலம் ஓர் எழுபது அடி அடுக்கை உருவாக்கியது.
ஆனாலும் எல்லா வகையான காற்றும் ஒட்டு மொத்தமாக உறைந்து பனியாகிவிடவில்லை. நீருக்காக பனியை கரண்டி கொண்டு அள்ளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். மேலாகவும் எடுத்துவிடக்கூடாது. கார்பன் டையாக்ஸைடு இருக்கும். அடுத்தது நைட்ரஜன், இதுதான் அதிகமாக இருப்பது. அதற்கு மேலே ஆக்சிஜன், அதன் பின்பு ஹீலியம். ஒரு நல்ல விசயம் என்னவென்றால், இந்தக் காற்று வகைகள் எல்லாம் தனித்தனி அடுக்குகளாக அருமையாக அமைந்து இருக்கின்றன, வெங்காயத்தைப்போல சிரித்தபடி சொன்னார் அப்பா... அந்த வெங்காயம் என்பது என்னவோ...எனக்குத் தெரியாது.
தொடரும் ---> பகுதி 3 http://vinaiooki.blogspot.com/2013/04/3.html