உபரி ஓட்டங்கள் - 23-10-2012 (சினிமா , கிரிக்கெட்)
கைதி, ஆட்டோராணி, இதுதாண்டா போலிஸ் தொடங்கி நேற்றைய அருந்ததி, இன்றைய நான் ஈ வரை நான் தெலுங்கு மொழிமாற்றுப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். அந்தப்புரம் என்ற படம், முதல் பாதி மொழிமாற்றுப்படமாகவும், பிற்பாதி நேரடிப்படமாகவும் இருக்கும். இப்பொழுது வரும் மொழிமாற்றுப்படங்களில் எல்லாம், நகைச்சுவைப்பகுதியை மட்டும் சொருகி நேரடிப்படங்கள் மாதிரியான தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். சரி தமிழில் வந்த மொழிமாற்றுப் படம் என்னவென தேடியதில் நாகேஷ்வரராவ், அஞ்சலி தேவி வில்லியாக நடித்த கீலுகுர்ரம் என்ற படம் தான் முதல் டப்பிங் படம் என்று ராண்டார் கை எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில் , இந்தப்படம் தமிழில் உரிமை வாங்கப்பட்டு, பாலய்யா நாயகனாக நடித்து, எம்.ஜி.ஆர், வி.என் ஜானகி சிறுவேடங்களில் நடிக்க மோகினி என்ற பெயரில் தமிழில் நேரடியாக வெளிவந்து பெரும் தோல்வியடைந்ததாம். இதைப்பார்த்த கீலுகுர்ரம் படத்தின் தயாரிப்பாளர் தெலுங்குப்படத்தை மாயக்குதிரை என டப் செய்து வெளிவிட்டு கொஞ்சம் காசு பார்த்தாராம்.
தகவலுக்கான தரவு - http://www.thehindu.com/arts/cinema/article3790929.ece
-----
ஒரு கிரிக்கெட் கேள்வி, ஆட்டத்தின் கடைசிப்பந்து, ஐந்து ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மட்டையாளர் பந்தை வேகமாக விளாசுகிறார், பந்து தரையில் உருண்டோடி , மெல்ல எல்லைக்கோட்டை நோக்கை நகர்ந்து எல்லைக்கோட்டைத் தொடுகிறது. அதற்குள் மட்டையாளர்கள் ஐந்து ஓட்டங்கள் ஓடிவிடுகின்றனர். ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?
----
இந்திய அரசாங்காத்தின் தணிக்கைக் குழு, பெரும்பாலான படங்களை பிரச்சினையின்றி தணிக்கை செய்து வெளியிட அனுமதித்தாலும், சிலப்படங்களை கொத்தி குதறி விடுவார்கள். பலக்காட்சிகள் வெட்டப்பட்டுவிடும். அவ்வாறு வெட்டப்படும்பொழுது, ஏன் அந்தக் காட்சி வெட்டப்பட்டது என விதிமுறைகளுடன், ஆவணப்படுத்தப்படும். இந்த அதிகாரப்பூர்வத் தளத்தில் திரைப்படங்களின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்ன , ஏன் எனவும் அறியலாம்.
http://cbfcindia.gov.in/ வலது மேற்பக்கத்தில் Search Film என்ற பெட்டியில் தேடுங்கள்
-----
தசாவதாரம் படத்தில், கமலின் பல்ராம் நாயுடு கதாபாத்திரம், ஒரு ரிங் டோன் வைத்திருக்கும் எந்தோ சின்னதி ஜீவிதம் நாகேஷ்வரராவ் நடித்த ஸ்ரீமாந்துடு என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல். இந்தப்பாடலுக்கும் கமலுக்கும் இருக்கும் மற்றும் ஒரு சம்பந்தம் கமல் , சிறு வயதில் இந்தப்பாடலுக்கு நடனமைத்திருக்கிறார். கமலஹாசன் எதையுமே காரியம் இல்லாமல் செய்ய மாட்டார்.
---
ரிடையர்ட் ஹர்ட் முறையில் நிறைய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்து இருக்கின்றார்கள். அத்தப்பட்டு, ஜெயவர்த்தனே இருவரும் ரிடையர்ட் அவுட் முறையில் கூட ஆட்டமிழந்து இருக்கிறார்கள். ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியவர் கார்டன் கிரீனிட்ஜ். தனது மகளின் சிகிச்சைக்காக ஆட்டத்தின் பாதியில் இருந்து வெளியேறியவரின் ஸ்கோர் ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் குறிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரின் மகள் அந்த சிகிச்சையில் பிழைக்கவில்லை.
----
கீழ்க்கண்ட படத்தின் முக்கியத்துவம் என்ன?