Wednesday, February 22, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz)

1. ஆரம்ப காலங்களில் , சச்சின் டெண்டுல்கர் நடுவரிசை ஆட்டக்காரராக, ஒருநாள் போட்டிகளில் ஆடும்பொழுது நிறைய ஆட்டங்களில் மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 94 ஆம் ஆண்டிற்குப்பின்னர், துவக்க ஆட்டக்காரராக ஆட ஆரம்பித்ததில் இருந்து அவர் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் அவருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கேள்வி இதுதான், கைவிடப்படாத ஒருநாள் ஆட்டமொன்றில்,(அதாவது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருக்க வேண்டும்)கடைசியாக, டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைக்காத ஆட்டம் எது?

2. டெஸ்ட் போட்டிகளின் ஐந்து நாட்களிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டையடிப்பது என்பது கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. ஆனால் மட்டையடித்த ஐந்து நாட்களிலும் தலா ஒரு சிக்ஸர்கள் வீதம் ஐந்து சிக்ஸர்கள் மொத்தமாக விளாசிய கிரிக்கெட் வீரர் யார்? தனது 30 வது வயதிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்தும், ஆட்டத்தில் இருந்தும் அழுதுகொண்டே ஓய்வு பெற்றவர்.

3. கீழ்காணும் படத்தில் இருப்பவர் ஒரு தமிழர். கொழும்பில் பிறந்து சென்னையில் கிரிக்கெட்டைக் கற்று கொண்டு, இரண்டு பன்னாட்டு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியவர். ஆடிய முதல் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்த வெகுசில ஒருநாள் ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இந்தக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்?4. சமீபத்தில் மன்காடட் ரன் அவுட் ஒரு நட்சத்திர கிரிக்கெட் இறுதி போட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் எளிமையான கேள்வி தான், மன்காட்(Mankaded) முறையில் ரன் அவுட் செய்யும் முறை விதிமுறைகளுக்கு உட்பட்டதா இல்லையா

5. ஒரு கற்பனையான முதல் தர ஆட்டம், கடைசி விக்கெட்டிற்கு , இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. மட்டையாளர் துணை ஓட்டக்காரரை(By-runner) வைத்திருக்கின்றார்.
மட்டையாளர் பந்தை திருத்தமாக அடிக்க, துணை ஆட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் வேகமாக ஓடி முதல் ஓட்டத்தை முடிக்கின்றனர், இரண்டாவது ஓட்டம் முடியும் தருவாயில் பந்து தடகளப்பு செய்யப்பட்டு விக்கெட் கீப்பரிடம் வருகிறது, துணைஓட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் ஓட்டங்களை பிரச்சினை இன்றி முடிக்கின்றனர்.
ஆனால் மட்டையாளர் உற்சாககுதுகலிப்பில், கோட்டிற்கு வெளியே நிற்கிறார். விக்கெட் கீப்பர் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்கிறார். கேள்வி என்ன வெனில்
இந்த ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?

6. கிறிஸ் கெய்ல் களத்திற்கு வந்தாலே சிக்ஸர்கள் பறக்கும். இருபதுக்கு இருபது பன்னாட்டு போட்டிகளில், இவர் மொத்தம் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உண்மையில் இவர் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவர் அடிக்கும் பந்தைப்போல , காணாமல் போன சிக்ஸர்களுக்கான காரணம் என்ன

---

விடைகள்

1. ஸ்டாண்டர்டு வங்கி முத்தரப்பு போட்டித்தொடரில், 2001 ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் ஆடிய கென்யா அணி 90 ஓட்டங்களுக்கு சுருண்டுப்போக, குறைவான ஓட்டங்கள் மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு மட்டைப்பயிற்சி அளிக்கவும், தீப்தாஸ் குப்தாவும் சேவாக்கும் களமிறங்கி விக்கெட் இழப்பின்றி அணியை வெற்றிபெறச்செய்ததால் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/66101.html

2. கிம் ஹியுஜஸ் (Kim Hughes) என்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் தான் அந்த வீரர். 80 ஆம் ஆண்டு, லார்ட்ஸில் நடைபெற்ற நூற்றாண்டு நினைவு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், ஒவ்வொரு நாளிலும் ஒரு சிக்ஸர் அடித்து கேள்வியில் சொன்ன சாதனை இன்னமும் தன்னகத்தே வைத்துள்ளார்.
ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/63271.html


சொந்த ஆட்ட சொதப்பல், அணியினரின் உள்குத்து, ஊடகங்களின் வெளிக்குத்து, மேற்கிந்தியத் தீவுகளின் கும்மாங்குத்து இவைகளை சமாளிக்க முடியாமல் , 84 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்குப்பின்னர், அழுகையை அடக்க முடியாமல், மேலாளரை ராஜினாமா கடிதத்தைப் படிக்கவிட்டு, தலைமைப்பதவியில் இருந்து விலகியவர். ஒட்டுமொத்தமாக விலகாமல், தொட்டுக்கோ துடைத்துக்கோ என அடுத்த இரண்டு ஆட்டங்களில் 3 முட்டை களுடன் ஒட்டு மொத்தமாக ஆட்டத்தை விட்டு மூட்டை கட்ட வைக்கப்பட்டார். பொதுவாக ஆஸ்திரேலியா கேப்டன்கள் பதவி விலகும்பொழுது ஆட்டத்தில் இருந்து ஓய்வும் பெற்றுவிடுவார்கள். ரிக்கிபாண்டிங்கிற்கு முன்னர், கிம் ஹியுஜஸ்தான் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் சில ஆட்டங்கள் ஆடியவர்.


3. கனடா அணிக்காக ஆடிய அரவிந்த் கந்தப்பா - http://www.espncricinfo.com/canada/content/player/313432.html

4. விதிமுறை 42.15 இன் கீழ் மன்காட் முறையில் ஆட்டமிழக்க செய்யலாம்.

5. துணை ஓட்டக்காரர் வைத்திருக்கும்பொழுது, மட்டையடிப்பர், கோட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், எத்தனை ஓட்டங்கள் முழுமையடைந்திருந்த பொழுதும், விக்கெட் கீப்பர் முனையில் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்யும் பொழுது, எடுத்த ஓட்டங்கள் எதுவுமே கணக்கில் வராது. அந்த வகையில் கேள்வியின் படி, பந்து வீசும் அணி வெற்றி பெறும்.

6. இருபதுக்கு இருபது ஆட்டங்களில், ஆட்டம் சமனில் முடியும்பொழுது , வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க, சூப்பர் ஓவர் நடை முறை உள்ளது சூப்பர் ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்கள் , ஆட்டக்காரர்களின் புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படமாட்டாது. நியுசிலாந்துக்கு எதிரான ஒரு 20/20 போட்டியில், கிறிஸ் கெயில் சூப்பர் ஓவரின் போது மூன்று சிக்ஸர்களை விளாசி, வெற்றியைத் தேடித்தந்தார். அந்த மூன்று சிக்ஸர்கள் தான் கெயிலின் காணமல் போன சிக்ஸர்கள்.

ஆட்டவிபரம் இங்கே http://www.espncricinfo.com/ci/engine/match/366707.html

---விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சித்த அனைவருக்கும் நன்றி ---

33 பின்னூட்டங்கள்/Comments:

said...

2.ஸ்ரீகாந்த் 4.விதிக்கு உட்பட்டது. மற்றவை தெரியவில்லை.

said...

@நிலாரசிகன், மன்காடட் சம்பந்தபட்ட கேள்விக்கு சரியான பதில்.

2 வது கேள்விக்கான விடை நீங்கள் சொன்ன நபர் அல்ல.

said...

1. india vs kenya 2001
Standard Bank Triangular Tournament - 4th Match (Went for sachin stats)

2. kim hughes - aus (till end i thought it is ravi shastri)

3. i thought it is sunil wettymuni but Arvind Kandappah - canada is that player. (i identified using T-shirt)

4. yes, rules is there now to mankad a player. but its not given as RUN-OUT but given as MANKAD like handling the ball/hit wicket like wicket

5. the bowling team win by 1 run(s)-guess

6. i guess the 3 sixes hit as winning shot and win completed before the six by running.

said...

1. india vs kenya 2001
Standard Bank Triangular Tournament - 4th Match (Went for sachin stats)

2. kim hughes - aus (till end i thought it is ravi shastri)

3. i thought it is sunil wettymuni but Arvind Kandappah - canada is that player. (i identified using T-shirt)

4. yes, rules is there now to mankad a player. but its not given as RUN-OUT but given as MANKAD like handling the ball/hit wicket like wicket

5. the bowling team win by 1 run(s)-guess

6. i guess the 3 sixes hit as winning shot and win completed before the six by running.

said...

வேதாளம் அர்ஜுன், கலக்கிட்டீங்க போங்க... கடைசி , கிறிஸ்கெயில் கேள்வியைத் தவிர, ஏனையவை எல்லாம் சரி..

said...

1. 2001 oct 12 கென்யாவிற்கு எதிராக
2. கிம் க்யூக்ஸ்
3. அரவிந்த் கந்தப்பா
4. விதிமுறைக்கு உட்பட்டு அவுட்
5. பேட்டிங் அணி ஒரு ரன்னில் தோற்கும். பேட்ஸ்மேன் வெளியே நின்றதால் முதல் ரன்னே இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கும்.
6. மூன்று 6 கள் ஓவர் த்ரோவின் மூலம் கிடைத்ததோ? சரியாக தெரியவில்லை.

said...

@தமிழ் பிரியன்,
கடைசி கேள்வியைத் தவிர அனைத்தும் சரி. கிறிஸ் கெய்ல் அடித்தவை நேரிடையான எல்லைக்கோட்டிற்கு அப்பால் அடிக்கப்பட்ட சிக்ஸர்களே ...

said...

அண்ணே

இந்த முறை மாட்டிக்கிட்டேன் போல இருக்கே!!

1) 12 October 2001 - கென்யாவிற்கு எதிராக நடந்த போட்டி (க்ரின்கின்போ ஸ்டாட்ஸ்குருவிற்கு நன்றி)

2) கிம் ஹ்யூக்ஸ் - விடை முதலிலேயே தெரியும். ஆனால் சந்தேகம் இருந்திருந்தால் உங்க அழுதுகொண்டே ஓய்வு குறிப்பு அதை நிவர்த்தி செஞ்சிருக்கும் :)

3) இலங்கைக்கு ஆடினவரா இல்லை இந்தியாவிற்கான்னு முதலில் யோசிச்சேன். ஆனா அது ஒண்ணும் மாட்டலை. கடைசியா கூகிளாண்டவர் அருளால கண்டுபிடிச்சேன் - கனடாவிற்கு விளையாடிய அரவிந்த் கந்தப்பா.

4) விதிமுறைகளின் படி சரிதான். ரூல் 42.15. சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது ஆனால் விதிமுறைக்குட்பட்டதுதான்.

5) பை ரன்னரே இப்போ கூடாதேப்பா!! அதனால கேள்வி சரியா? :) இந்த பாயிண்டை விட்டுட்டா இது ரன் அவுட் தான். எந்த விதமான ஆட்டம்ன்னு தெரியலை. அதைப் பொருத்து ட்ரா அல்லது டை தான் முடிவு.

6) இதுதான் தெரியலை. இன்னும் தேடணும். திரும்ப வரேன்.

said...

To get answers :)

said...

@இலவசக்கொத்தனார்,
முதல் தர ஆட்டங்களுக்கு பை ரன்னர் வைத்துக் கொள்ளலாம். இருந்த போதிலும் அதற்கான விடை தவறு. ஏனையவகளுக்கு வழக்கம்போல கலக்கிட்டீங்க...
கிறிஸ்கெயிலின் காணாமல் போன சிக்ஸர்களையும் கண்டுபிடிங்க...

said...

/If he is thus dismissed, runs completed by the runner and the other batsman before the wicket is put down shall be disallowed./

இதுனால அவங்க எடுத்த முதல் ரன்னும் கணக்குல வராது. அதனால தோத்துப் போயிடுவாங்க. ம்ம்..

said...

1. கென்யாவுக்கு எதிராக 12/10/2001 ல் நடந்த போட்டி.

2.Kim huges - Australia

3.அரவிந்த் குண்டப்பா - கனடாவிற்காக விளையாடியவர்

4.விதிமுறைகளுக்குட்பட்டதே

5. பந்து வீசிய அணி வெற்றிபெரும். மட்டையாளர் இந்த முறையில் அவுட்டாகினால் இதற்க்கு முன்னால் எடுத்த ரன்கள் கணக்கில் சேராது.

6.அந்த 3 சிக்ஸ்கள் சூப்பர் ஓவரில் அடித்தவை. நியுசிலண்ட்க்கு எதிராக .

said...

1 ) இந்தியா v கென்யா (Standard Bank Triangular Tournament, 2001/02)
http://www.espncricinfo.com/ci/engine/match/66101.html

2) Kim Hughes; இதுதான் அந்தப் போட்டி http://www.espncricinfo.com/ci/engine/match/63271.html ஆனால் இவர் தனது இறுதிப் போட்டிக்கு தலைமை வகிக்கவில்லை!!!! இதை செக் பண்ணி பாருங்க.... http://www.espncricinfo.com/ci/engine/match/63386.html

3) Arvind Kandappah; கனடா அணி வீரர் http://www.espncricinfo.com/canada/content/player/313432.html

4) உட்ப்பட்டது (இறுதி இந்திய இலங்கை போட்டியில் அஸ்வின் திரமினேக்கு மங்கட் முறையில் ஆட்டமிளப்பை கோரினார்; சேவாக் நிராகரித்ததால் திரமினே தொடர்ந்து ஆடினார்!!)

5) துடுப்பாடிய அணிக்கே வெற்றி; காரணம் இரண்டு batsman உம் ரன்ஸ் ஓடி முடிந்தவுடன் போட்டி நிறைவடைந்ததாகவே கொள்ளப்படும்; உதாரணமாக 1 ஓட்டம் பெற வேண்டும், 9 விக்கட் இழந்த நிலையில் துடுப்பாட்ட அணி ஆடிக்கொண்டு இருக்கிறது; அடுத்த பந்தில் batsman stomp முறையில் ஆட்ட மிளக்கிறார்; ஆனால் அது ஒரு அகலப்பந்து!!!! இப்போதும் துடுப்பெடுத்தாடிய அணிக்குத்தான் வெற்றி; கரணம் அகலப்பந்துதான் முதலில் நிகழ்ந்தது; அது போடப்பட்ட போதே போட்டி நிறைவடைந்து விட்டது!!!

6) அந்த 3 சிக்ஸ்சர்களும் super over ஒன்றில் (டானியல் வெட்டோரிக்கு) பெறப்பட்டது; West Indies tour of New Zealand, 2008/09; http://www.espncricinfo.com/ci/engine/match/366707.html

said...

1 ) இந்தியா v கென்யா (Standard Bank Triangular Tournament, 2001/02)
http://www.espncricinfo.com/ci/engine/match/66101.html

2) Kim Hughes; இதுதான் அந்தப் போட்டி http://www.espncricinfo.com/ci/engine/match/63271.html ஆனால் இவர் தனது இறுதிப் போட்டிக்கு தலைமை வகிக்கவில்லை!!!! இதை செக் பண்ணி பாருங்க.... http://www.espncricinfo.com/ci/engine/match/63386.html

3) Arvind Kandappah; கனடா அணி வீரர் http://www.espncricinfo.com/canada/content/player/313432.html

4) உட்ப்பட்டது (இறுதி இந்திய இலங்கை போட்டியில் அஸ்வின் திரமினேக்கு மங்கட் முறையில் ஆட்டமிளப்பை கோரினார்; சேவாக் நிராகரித்ததால் திரமினே தொடர்ந்து ஆடினார்!!)

5) துடுப்பாடிய அணிக்கே வெற்றி; காரணம் இரண்டு batsman உம் ரன்ஸ் ஓடி முடிந்தவுடன் போட்டி நிறைவடைந்ததாகவே கொள்ளப்படும்; உதாரணமாக 1 ஓட்டம் பெற வேண்டும், 9 விக்கட் இழந்த நிலையில் துடுப்பாட்ட அணி ஆடிக்கொண்டு இருக்கிறது; அடுத்த பந்தில் batsman stomp முறையில் ஆட்ட மிளக்கிறார்; ஆனால் அது ஒரு அகலப்பந்து!!!! இப்போதும் துடுப்பெடுத்தாடிய அணிக்குத்தான் வெற்றி; கரணம் அகலப்பந்துதான் முதலில் நிகழ்ந்தது; அது போடப்பட்ட போதே போட்டி நிறைவடைந்து விட்டது!!!

6) அந்த 3 சிக்ஸ்சர்களும் super over ஒன்றில் (டானியல் வெட்டோரிக்கு) பெறப்பட்டது; West Indies tour of New Zealand, 2008/09; http://www.espncricinfo.com/ci/engine/match/366707.html

said...

காரணன் ,
நீங்கள் ஒருவர் தான் இதுவரைக்கும் அனைத்திற்கும் சரியாக விடை சொல்லி உள்ளீர்கள் , வாழ்த்துகள்

said...

இலவசக்கொத்தனார் ,
இப்போ பை ரன்னர் கேள்விக்கு விடை சரி.. காணமல் போன சிக்சர்கள் எங்கே

said...

எப்பூடி
ஐந்தாவது கேள்வியைத் தவிர அனைத்திற்கும் விடை சரி. கெயிலின் காணமல் போன சிக்சர்களை கண்டுபிடித்ததற்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்

said...

சூப்பர் ஓவரில் அடிச்ச இரண்டு சிக்ஸர்கள் அவரோட கணக்கில் சேர்த்தி இல்லை. இதுதானே?

said...

@இலவசக்கொத்தனார்,
Now 100% :)

said...

6. 3 sixers hit in SUPER OVER.

said...

6. 3 sixes in super over in the match New Zealand vs West Indies bowled by vettori

said...

வேதாளம் அர்ஜுன்
Now 100% right

said...

1. India Vs Kenya 2001/02 season at Bloamfontain
2.K.Srikanth
3.Arvindah Luxman Kandappah
4.Mankaded runout-- recent instance between ashwin Thirimane.
5.Out, because the batsmen should be lying inside the crease.
6. because while chasing he hit the sixer of a no ball which is the last ball.

said...

@காரைக்குடியான்,
1, 3 , 4 சரி. ஐந்தாவது கேள்வி ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான்

said...

tie

said...

@காரைக்குடியான்
விடை தவறு ..

said...

2.Kim Hughes

said...

6.He hit the no ball sixer of winning shot....

said...

5.Bats man out .But batting team won..

said...

@காரைக்குடியான்
2, right
5,6 wrong

said...

5.may be the runner did not touch the crease while running(Ganguly did like this during his record stand of 252 with sachin against srilanka in Akai Nidahas Indipendance trophy final against srilanka in 1998.)So tha first run was not considered.For second run same kind of thing happened for Manzoor Akthar during Independance cup of Bangladesh.Runner(Afridi) was inside the crease.But the batsman Mansoor Akthar was forgotten that he had runner.He also ran.He was run out by Bahuthule. So the second run was also not considered.As per ur answer the bowling team was won by one run.

said...

Gail ... pls u tell the answer. My head was broken due to thinking.

said...

@காரைக்குடியான்,
இப்பொழுது பை ரன்னர் கேள்விக்கான விடை சரி... உதாரணத்திற்கும் நன்றி...

கிறிஸ் கெயில் கொஞ்சம் யோசிங்க...நாளைக்கு காத்தால விடைகள் வரும்..