Monday, May 02, 2011

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. இந்திய மத்தியவரிசை மட்டையாளர் சுரேஷ் ரைனா வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் வைத்திராத ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சாதனையை தன் கைவசம் வைத்துள்ளார். கிறிஸ் கெயில், மெக்கல்லம், ஜெயவர்த்தனே ஆகியோரும் உலகளவில் இந்த சாதனையை செய்துள்ளனர். அப்படி சுரேஷ் ரைனா செய்த சாதனைதான் என்ன?


2. ரன் அவுட் வகையில் ஆட்டமிழக்கப்படும் விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது. அது போல வேறு எந்த ஆட்டமிழக்கப்படும் முறைகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது?

3. ஜாகிர்கான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்பொழுது நேர்த்தியாக பேட்டிங் ஆடுவதிலும் வல்லவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடாமல், நிலைமையை உணர்ந்து ஆடும் டெயிலெண்டர் ஆட்டக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் இவரும் டெண்டுல்கரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 133 ஓட்டங்கள் சேர்த்தது இந்திய சாதனையாக உள்ளது. டெண்டுல்கரிடமோ , கங்குலியிடமோ, சேவக்கிடமோ இல்லாத ஒரு அதிரடி பேட்டிங் சாதனையை, (In One Day Internationals) ஜாகிர்கான் தன் கைவசம் வைத்துள்ளார். அந்த சாதனை என்ன?

4. இங்கிலாந்து வீரர் பென் ஹோலியாக், ஜிம்பாப்வேயின் டிரெவர் மடாண்டோ, பங்களாதேஷின் மஞ்சுரல் இஸலாம் ரானா இவர்களுக்கு இடையிலான துயரமான ஒற்றுமை என்ன?

5. காயங்கள் காரணமாக , ஆட்டக்காரர்கள், “ரிடையர்ட் - நாட் அவுட்” வகையில் பெவிலியன் திரும்பி, பின்னர் ஆட வருவது வழக்கம். ஆனால் ரிடையர்ட்-அவுட் என தன்னைத் தானே ஆட்டமிழக்க செய்து கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? அதே டெஸ்ட் ஆட்டத்தில் இன்னொருவரும் தன்னைத் தானே ஆட்டமிழக்கசெய்து கொண்டார். அதற்கு பின்னர் யாரும் தங்களை இதுவரை ஆட்டமிழக்க செய்து கொள்ளவில்லை.

6. ஒருநாள் ஆட்டங்களில் களத்தடுப்பை இடையூறு செய்தல் (Obstructing the field), பந்தை கையால் தடுத்தல் (handled the ball) என இருவகையிலும் வெவ்வேறு ஆட்டங்களில் ஆட்டமிழந்த ஒரே ஆட்டக்காரர் யார்? இவர் ஒரு இந்திய ஆட்டக்காரர்.

விடைகள்

1. சுரேஷ் ரைனா டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருபது என அனைத்து வகை பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களிலும் சதம் அடித்துள்ள ஒரே இந்திய வீரர்.

2. Hit the ball twice - பந்தை இருமுறை அடித்தல், Obstructing the field - களத்தடுப்பை இடையூறு செய்தல், handled the ball - பந்தை கையால் தடுத்தல், Timed Out - நேரத்திற்கு வராமை

3. ஜாகிர்கான் , ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் ஒன்றில் , ஒலாங்கா வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 25 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அளவில் ஒரு சாதனையாகும். அதில் கடைசி 4 பந்துகளையும் சிக்ஸருக்கு (இடையில் ஒரு Wide பந்து) தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பினார். முரண் நகையாக, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒரு பந்து, ஒரு விக்கெட் மீதமிருக்கும் நிலையில், 50 வது ஓவரில் ஓட்டங்களை வாரி வழங்கிய ஒலாங்கா வெற்றி ஓட்டத்தை எடுத்து ஜிம்பாப்வே அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.


4. மூவரும் இளம் வயதில் உயிர் இழந்த டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இதில் டிரெவர் மடோண்டாவைத் தவிர , ஏனைய இருவர் சாலை விபத்தில் காலமானவர்கள்.

5. மார்வன் அட்டப்பட்டு, மஹேலா ஜெயவர்த்தனே

ஆட்ட விபரம் இங்கே http://www.espncricinfo.com/ci/engine/match/63947.html


6. மொகிந்தர் அமர்நாத்

26 பின்னூட்டங்கள்/Comments:

said...

1. டெஸ்ட், ஒருநாள், ட்வென்டி 20 ஆட்டங்களில் சதங்கள்..!!!

2. களத்தடுப்பை இடையூறு செய்தல்.


3. ஜிம்பாப்வே விற்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள்.. (பந்து வீச்சாளர் - ஒலங்கா..!!!)

4. மூவரும் விபத்தில் அகால மரணம் அடைந்தவர்கள்..

5. தெரியவில்லை..

6. ஜாகிர் கான்..!!! (யூகம்)

said...

Ans for 4th ques: All the three died at a young age..

Ans for 3rd ques: ZK holds the world record of scoring highest no of runs in a test match by playing as 11th player..

Ans for 1st ques: Suresh Raina scored a century in T20I match against SA.

G Hariprasad

said...

அருமை, செல்வா.. வாழ்த்துக்கள்

(ஆமாம், விடைகள் தெரியவில்லை தான்) ;)

said...

1. T20 hundred.
2. Handling the ball, obstructing the field
3.
4. Died in vehicle accident
5. Marvan Attapattu & Mahela Jayawarthane
6. Mohindar Amarnath

said...

5. Marvan Atapattu and Mahela Jayawardene
6. Mohinder Amarnath

நன்றி - விக்கிபீடியா :)

மற்றவை சத்தியமா தெரியல அ ( கண்டு புடிக்க முடியல ) :)

said...

1) டெஸ்ட், ஒன் டே மற்றும் டி20 என மூன்று விதமான ஆட்டங்களிலும் செஞ்சுரி அடித்தவர்கள்.

2) பந்தினை இரு முறை அடித்தல், பந்தைக் கையினால் தடுத்தல், களத்தடுப்பை இடையூறு செய்தல் (முடியலை), நேரத்தில் வராமை

3) 11ஆவது ஆட்டக்காரராக களமிறங்கியவர்களில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர். நீங்கள் குறிப்பிட்ட ஆட்டத்தில் நிகழ்ந்ததுதான் அது. ஆனால் சச்சினோ கங்குலியோ 11 ஆட்டக்காரராக களமிறங்கியதே இல்லை என்னும் பொழுது கேள்வி சரியானதாக இல்லை என்பது என் எண்ணம்.

4) மூவருமே இளம் வயதில் இறந்து போன ஆட்டக்காரர்கள்.

5) விடை தெரியவில்லை என கூகிளாண்டவரை நாடினேன். செப்டம்பர் 2001 பங்களாதேஷிற்கு எதிராக விளையாடிய இலங்கை அணியில் அட்டபட்டுவும் ஜெயவர்த்தனேவும் ரிடையர்ட் அவுட் ஆனதாகத் தெரிகிறது. ஏன் இப்படிச் செய்தார்கள் என எனக்குத் தெரியவில்லை.

6) மொஹிந்தர் அமர்நாத்

said...

6. இன்சமாம் உல் ஹக்
மீதிக்கெல்லாம் பதில் நீங்க சொன்னாதான் ஆச்சு

said...

1. சதம்
4. விபத்தில் உயிர் இழந்தது

said...

இலவசக்கொத்தனார்,3 வது கேள்வியில் ஒருநாள் போட்டிகளில் எனத் திருத்திப்படிக்கவும்.

ஒருநாள் போட்டிகளில் ஏனைய இந்திய ஆட்டக்காரர்கள் செய்யாத, ஜாகிர் கானால் செய்யப்பட்ட அந்த சாதனை என்ன

said...

இளா, 6 வதுக்கான விடை தவறு

said...

தினேஷ், 5 மற்றும் 6க்கான விடைகள் சரி

said...

டோர்னாடோ,
1,3,4 முழுக்க சரி. 2வது கேள்விக்கு மீதியையும் சொல்லுங்க

said...

ஹாஜா மொகைதீன் , இரண்டும் சரி

said...

மொக்கை, நீங்கள் அளித்த பதில் எல்லாம் சரி

said...

முகிலன்,
1 - Right
2 - there are few more remaining
4,5,6 - Right

said...

1. century in 20/20 international

2. timedout,obstructing the field

4. all died in accident

6. mohinder amarnath?

said...

பின் தொடர இந்த பின்னூட்டம்

said...

பிந்தொடர இந்த பின்னூட்டம்

said...

2. Timed out, retired out, hit the ball twice

said...

Ans for ques 2: Mankaded, obstructing the field, handling the ball. These wickets will not be counted for the bowler. Am i right?

said...

1) Scored Century in all 3 formats of cricket (TwentyTwenty, OneDay, Test) at international level..
2) Timed out, Run Out, Obstructing the field, Hit the ball twice, Handled the ball
3) Hit 4 sixers back to back in ODI.. (Still rembr that all 4 came on the last 4 balls of the innings)
4) All 3 died in Road accidents..
5) Marvan Atapattu & Mahela Jayawardene..
6) Mohinder Amarnath..

said...

@Mokkai,

Yes you are right, but Mankaded is no more in the Cricket rules.

said...

@Prasanna Kannan, Great. All Right

said...

@Ilavasam, Sir, you are as usual rocking

said...

@Selva,
Sir, Mankaded is still there.. it is given out if the bowler hits the stumps before he makes the bowling stride... else not valid...

said...

அருமை