Friday, January 14, 2011

நீங்களும் புத்தகப் பதிப்பாளர் ஆகலாம் - அமேசான் இணையதளம் தரும் வாய்ப்பு

நமக்குத் தெரிந்த தகவல்கள், அறிவுப்பூர்வமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சுகமே அலாதியானது. தகவல் பகிர்வு சங்கிலியில் மட்டுமே ஆற்றலுக்கான விதிகள் பொய்யாகின்றன, அறிவு எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து குறைவதே இல்லை, மணற்கேணி போல மேலும் ஊறத்தான் போகின்றது.


தைத்திருநாள் அன்று இதோ தங்கள் படைப்புகளை புத்தகவடிவில் பார்க்க விரும்புகிறவர்களுக்காக அமேசான் இணையதளம் வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றி காண்போம்.

ஆர்வலர்களின் கலைசார்ந்த படைப்புகளை பரந்தபட்ட வாசகர் அரங்கிற்கு கொண்டு செல்ல அமேசான் உருவாக்கியுள்ள கருவி Createspace. படைப்பாளிகள் எழுத்து, இசை, திரைப்படம் எந்த வகையாக இருந்தாலும் அவர்களின் படைப்புகளை எந்தவித பாரபட்சமுமின்றி ஏற்றுக்கொண்டு பதிப்பிக்கின்றார்கள்.

கடந்த வாரம் எனது சிறுகதைகளைத் தொகுப்பாக இந்த வகையில் வெளியிட்டதனால் புத்தகம் வெளியிடுதலை பற்றி மட்டும் பகிர்கின்றேன். இசைத் தொகுப்பை வெளியிடுதல், குறும்படங்கள், திரைப்படங்கள் ஆகியனவற்றை பற்றி எனக்கு பரிச்சயம் இல்லாததால், அது சம்பந்தபட்ட விசயங்களை அறிய விரும்புபவர்கள் நேரிடையாக ஆங்கிலத்தில் கீழ்க்காணும் சுட்டிகளில் வாசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


குறும்படங்கள் - https://www.createspace.com/Filmmaker.jsp

சரி, புத்தகங்களுக்கு வருவோம். புத்தகங்களை இரு வடிவில் , அதாவது காகித அச்சிலும், Kindle மின்னூலாகவும் வாசகர்களுக்கு கொண்டு செல்ல அமேசான் இணையதளம் உதவுகிறது.

காகித அச்சில் வரும்பொழுது , புத்தகத்திற்கான ISBN எண்ணையும் அமேசான் இணையதளம் இலவசமாக வழங்குகின்றது.

முதலில் https://www.createspace.com/ இணையதளத்தில் ஒரு கணக்கைத் துவக்கிக் கொள்ளவும். தங்களின் விபரங்களை சரியானபடி கொடுத்தால் பிற்காலத்தில் தங்களுக்கான சன்மானத் தொகை கிடைக்கும் நடைமுறைகளுக்கு வசதியாக இருக்கும்.

உங்களுக்கான கணக்கில் நுழைந்த பின் Dashboard யில் இருக்கும் Add New Title வழியாக உங்களுக்கான புதியத்திட்டத்தை ஆரம்பிக்கலாம்.




புதியதாகத் திறக்கும் பக்கத்தில் தங்கள் திட்டத்திற்கான பெயரையும், புத்தகம் என்பதால் Paperback என்பதையும் தேர்ந்தெடுத்து




உள்ளே வந்தால் புத்தகம் பதிப்பிற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும்



இங்கு ஒரு சின்ன பிரச்சினை என்னவென்றால் தமிழில் விபரங்களை தட்டச்சு செய்ய இயலவில்லை. ஆதலால் ஆங்கிலத்தில் தலைப்பு, எழுத்தாளர் பெயர் , புத்தகத்தைப்பற்றிய குறிப்புகளைக் கொடுத்துவிடுங்கள். தொடரும் பக்கம் தான் மிக முக்கியமானது.



மேற்கண்ட பக்கத்தில் புத்தகத்தின் பரிமாணங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு முன்,
அச்சில் வரக்கூடிய அளவில் அவர்கள் கொடுத்திருக்கும் ஏதேனும் பரிமாணத்தைத் தேர்ந்து எடுத்து அதற்கு ஏற்றார் போல Createapace Template களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்களின் எழுத்துப்படைப்புகளை மாற்றி விடுங்கள்.

புத்தகத்தின் உள்கட்டமைப்பு Template களை கீழ்க்காணும் சுட்டியில் எடுத்துக் கொள்ளலாம்

https://www.createspace.com/en/community/docs/DOC-1323

புத்தகத்தை வடிவமைத்தவுடன் அதை பிடிஎப் கோப்பாக மாற்றி தரவேற்றிவிடவும்.



உங்களிடத்தில் ஐஎஸ்பிஎன் இல்லை எனில் அமேசானை வழங்கும்படிக் கேட்டுக்கொள்ளலாம்.




அடுத்தது புத்தகத்திற்கான அட்டையை வடிவமைத்தல் பகுதி. நீங்கள் ஏற்கனவே அட்டையை வடிவமைத்து இருந்தால் புத்தகத்தின் பரிமாணத்திற்கான அளவிலேயே அதையும் மாற்றி பிடிஎப் கோப்பாக தரவேற்றிவிடலாம்.

உங்களுக்கு வடிவமைப்பதில் சிரமம் இருந்தால் Cover Design யையும் Createspace தருகின்றது. Create Space தரும் அட்டையில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்ய இயலவில்லை. அதனால் தமிழ் புத்தகம் போட விரும்புவர்கள் தாங்களாகவே அட்டையைத் தயார் செய்து கொள்வது நலம்.



அட்டைப்படம் வேலையும் முடித்தவுடன் அமேசான் கிரியேட்ஸ்பேஸ் , பரிசீலனைக்கு அதிகபட்சம் 48 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கின்றது. அச்சில் வரமுடியாத அளவுக்கு பிரச்சினைகள் புத்தக உள்கட்டமைப்பில் , அதாவது எழுத்துருக்கள், படங்கள், பரிமாணங்கள் ஆகியனவற்றில் இருந்தால் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். சரி செய்து மீண்டும் தரவேற்றம் செய்துவிடலாம்.

உங்கள் புத்தகம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் , நமது பார்வைக்கு புத்தகம் அனுப்பி வைக்க தபால் செலவு உள்ளிட்ட 7 டாலர்கள் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். அதைக் கட்டி புத்தகத்தை தபாலில் பெற்றுக்கொண்டு புத்தகத்தில் பிரச்சினை ஏதுமில்லை என்ற பட்சத்தில் நமது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டால் புத்தகம் அமேசானில் சிலதினங்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

ராயல்டி தொகை ஏறத்தாழ 20 சதவீதமே அளிக்கப்படும். இலவச சேவையில் இருந்து தொழிற்ரீதியிலான பயனாளராக சேர்ந்து கொண்டால் வருடம் 39 டாலர் கட்டணம் மட்டுமே. இதன் வாயிலாக கல்லூரிகள், நூலகங்கள் ஆகியனவற்றில் கொண்டு சேர்க்க அமேசான் சிரமேற்கும்.

புத்தகத்தை தமிழகத்தில் இருந்தும் அமேசான் வழியாக வாங்கலாம். விலை மட்டுமே ஒரு பிரச்சினையாக இருக்கும். அதிக பக்கங்களைக் கொண்ட புதினங்களையோ, வேறு வகையிலான புத்தகங்களையோ பதிப்பிக்கும்பொழுது இந்தப்பிரச்சினை இருக்காது.
தமிழ் வாசிப்பிற்கு வருங்காலங்களில் அமெரிக்காவிலும் நல்ல சந்தை இருப்பதால் அமேசான் வழியாக ஒரு துண்டைப்போட்டு உட்கார்ந்து கொண்டால் நலம் என நானும் இன்னும் சில தினங்களில் எனது தமிழ் சிறுகதைத் தொகுப்பை வெளியிடப்போகின்றேன்.

முழுவிபரங்களை ஆங்கிலத்தில் வாசிக்க https://www.createspace.com/Products/Book/

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளைப் புத்தகவடிவில் கொண்டு வர இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும்.

--

Kindle வகையில் தமிழில் மின்னூல் வெளியிடும் வாய்ப்பை அமேசான் இதுவரை வழங்கவில்லை. ஆங்கிலத்தில் மின்னூலை வெளியிட கீழ்க்காணும் சுட்டியைத் தொடரவும்.

-----

Createspace வழியாக நான் பதிப்பித்த தமிழ்ப்புத்தகம் பால்டிக்கரையோரம். Createspace கொடுத்த அட்டைப்படத்தைப் பயன்படுத்திக்கொண்டதால் ஆங்கிலத்தில் தலைப்பையும் பெயரையும் கொடுக்க வேண்டியதாயிற்று.



----
பிற்சேர்க்கை -
இந்தியாவிலும் http://pothi.com/pothi/ என்ற தளத்தின் வாயிலாக தேவைக்கேற்ப அச்சில் Print on Demand வகையில் புத்தகங்களை வெளியிட உதவுகிறார்கள். அமேசானைப்போல இதில் ஐஎஸ்பின் எண் தருவதில்லை என்றாலும் , தனிப்பட்ட முறையில் ஐஎஸ்பிஎன் எண்ணைப் பெற்று வைத்துக்கொள்வது வெவ்வேறு வகையில் புத்தகங்களை வெளியிட உதவியாக இருக்கும்.

இந்தியாவில் ஐஎஸ்பிஎன் எண் இலவசமாக தரப்படுகிறது . ஐஎஸ்பிஎன் எண்ணைப்பெற நாம் முறையான வகையில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான வழிமுறை கீழ்க்காணும் சுட்டியில்


பிற்சேர்க்கை தகவல்களைக் கொடுத்து உதவியர் நிமல் (http://nimal.info/)

-------


வருங்கால புத்தக ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்,






9 பின்னூட்டங்கள்/Comments:

R. Gopi said...

எல்லாம் சரி. யார் நம்ம புக்கை எல்லாம் வாங்குவாங்க:)

Nimal said...

பயனுள்ள தகவல் பகிர்வு.

middleclassmadhavi said...

Thanks for the information - Noted for future reference!!!

சென்ஷி said...

செம்ம சூப்பரு. மற்றும் வாழ்த்துகளு :))

Umapathy said...

miga payanulla pathivu

உண்மைத்தமிழன் said...

மிக்க நன்றி தம்பி..! நிச்சயம் நான் இதில் கலந்து கொள்வேன்..!

Prime Point Srinivasan said...

Very useful information.
Prime Point Srinivasan, Chennai

எண்ணச்சிதறல்கள் said...

ரொம்ப பயனுள்ள தகவல். இதுவரை இந்த சேவை பற்றி தெரியாது. நன்றி.

Pranavam Ravikumar said...

Useful Post..!