Thursday, July 29, 2010

கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்

கடந்த பதிவின் கிரிக்கெட் புதிர்களுக்கான விடைகள் இங்கே


1. வேண்டா வெறுப்பாய் இந்தியா அணி தனது முதலாவது இருபதுக்கு இருபது பன்னாட்டு போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2006, டிசம்பர் 1 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் ஆடியது. டெஸ்ட் ஆடும் அணிகளில் இந்தியா அணிதான் கடைசியாக டி20 ஆட்டங்களை ஆடத்தொடங்கியது. மகேந்திர சிங் தோனி தலைவராகத் தலை எடுத்த டி20 2007 உலகக்கோப்பை ஆட்டங்கள் தொடங்க 10 மாதங்கள் முந்திய இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவர் வீரேந்திர சேவக். சமீபகாலமாக முழு நேர மட்டையாளராக மாறிவிட்ட தினேஷ்கார்த்திக் தன் எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வகையில் இந்த ஆட்டத்தின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவின் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் ஆட்ட விபரம் இங்கே (இது மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டமாக ஆடப்பட்டது)


2. நோ-பால் வீசப்படும்பொழுது ரன் அவுட்டைத்தவிர வேறுவகையில் ஆட்டமிழக்கக்கூடிய வாய்ப்புகள்
அ. பந்தை மட்டையால் இரு முறை அடித்தல் - hit the ball twice
ஆ. களத்தடுப்பில் குறுக்கீடு செய்தல் - obstructing the field
இ. பந்தை கையால் தொடுதல் - handled the ball

When No ball has been called, neither batsman shall be out under any of the Laws except 33 (Handled the ball), 34 (Hit the ball twice), 37 (Obstructing the field) or 38 (Run out)

3. முத்தையா முரளிதரன் ஐசிசி அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடி இருக்கின்றார். சூப்பர் டெஸ்ட் என 6 நாட்கள் 2005 ஆம் ஆண்டு சிட்னியில் ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் இவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆக எதிர்காலத்தில்(ஒரு வேளை) இலங்கை போர்க்குற்ற மனித உரிமைக் குற்றங்களுக்காக ஒதுக்கப்பட்டு இலங்கை அணியின் முந்தைய ஆட்டங்களின் பன்னாட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் இந்த ஐந்து விக்கெட்டுகள் மட்டும் கணக்கில் இருக்கும்.


கொசுறு : தென்னாப்பிரிக்கா தடை பெற்றிருந்த காலத்தில், அங்கு ஆடப்பட்ட ஆட்டங்கள்(including rebel tours) அனைத்தும் முதல் தரப்போட்டிகளாக (First class matches) முதலில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் 93 ஆம் ஆண்டு அந்த அங்கீகாரமும் நீக்கப்பட்டது. அவை அனைத்தும் கண்காட்சிப்போட்டிகள் என்ற அளவிலேயே சாதனைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

4. இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி 3 நாள் ஆட்டமாக இங்கிலாந்துடன் ஆடியது. பின் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் வந்த பொழுது இந்தியா 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டங்களாக ஆடியது. மீண்டும் இந்தியா இங்கிலாந்து சென்ற பொழுது மூன்று நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர். 1947-48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. முதன் முதலாக ஐந்து நாள் ஆட்டமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தில்லியில் 1948 ஆம் ஆண்டு ஆடியது.


5. ”ஈ” அணியின் தலைவர் சொல்லுவதுதான் சரி. முதல் நாள் ஆட்டம் கைவிடப்படும்பொழுது எஞ்சிய நாட்களை வைத்து பாலோ ஆனுக்கான வித்தியாசம் 150 ஆக குறைக்கப்படும். ஐந்து நாட்கள் அதற்கு மேற்பட்ட நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகளில் , பாலோ - ஆன் தரப்படுவதற்கான விதி

Law 13

1. Lead on first Innings

(a) In a two innings match of 5 days or more, the side which bats first and leads by at least 200 runs shall have the option of requiring the other side to follow their innings.
(b) The same option shall be available in two innings matches of shorter duration with the minimum required leads as follows:
(i) 150 runs in a match of 3 or 4 days;
(ii) 100 runs in a 2-day match;
(iii) 75 runs in a 1-day match.

3. First day's play lost
If no play takes place on the first day of a match of more than one day's duration, 1 above shall apply in accordance with the number of days remaining from the actual start of the match.

மேற்கிந்திய தீவுகள் சூற்றுப்பயணம் செய்த அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி , சொந்த மண்ணிலேயே அந்த அணியை 1971 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஜமைக்கா கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.திலீப் சர்தேசாய் (ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவனர் ராஜ்தீப்பின் தந்தை) இரட்டை சதத்தினால் இந்திய அணி 387 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடத்தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 217 க்கு ஆட்டமிழந்தது. அஜீத்வடேகர் மேற்கந்திய தீவுகள் அணியை தொடர்ந்து ஆட சொன்ன பொழுது கேரி சோபர்ஸ் கோபம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தாராம். (பன்னாட்டு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை பாலோ ஆன் செய்யும்படி எதிரணி கேட்பது அதுவே முதல் தடவை). அவர் நினைத்திருந்தது ஓட்ட வித்தியாசம் 170 தானே என்று. பின்னர் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது நினைவுக்கூறப்பட்டு, விதிமுறைகள் சோபர்ஸுக்காக சரிப்பார்க்கப்பட்டு பாலோ ஆன் செய்யப்பட்டது. சோபர்ஸ் மற்றும் ரோகன் கன்ஹாய் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிராவில் முடிந்தாலும், உளவியல் ரீதியாக தொடரை வெல்ல இந்த ஆட்டம் அடித்தளமாக அமைந்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர் சீனிவாச வெங்கட்ராகவன் இந்த பாலோ ஆன் பற்றிய நுட்பமான விதியை நினைவூட்டினாராம். பின்னாளில் சீனிவாச வெங்கட்ராகவன் சிறந்த நடுவர்களில் ஒருவராக வந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த தசாப்தத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை , முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட , 188 ரன்கள் குறைவாக முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தமையால் பாகிஸ்தான் பாலோ ஆன் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


6. தீபக் சோதான் (ஆர்.எஸ்.சோதான்), ஹனுமந்த் சிங், ஏ.ஜி.கிருபால் சிங், சுரீந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சௌரப் கங்குலி , வீரேந்திர சேவக் இவர்கள் அனைவரும் தாங்கள் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் , மட்டையடித்த முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்தவர்கள். சமீபத்திய வரவு சுரேஷ் ரைனா.


லாலா அமர்நாத், அப்பாஸ் அலி பெய்க், குண்டப்பா விஸ்வநாத் - தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தவர்கள். சுரீந்தர் அமர்நாத் லாலா அமர்நாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.4 பின்னூட்டங்கள்/Comments:

said...

enna suddena cricket post??

said...

மூன்றாவது வினாவிற்கான விடை மட்டும்.

முரளிதரனின் விக்கற்றுகள் அப்படியே தான் இருக்கும்.
தென்னாபிரிக்கா தடை செய்யப்பட்டது 1970 ஆம் ஆண்டு.
தடை எடுக்கப்பட்ட ஆண்டு 1991 ம் ஆண்டு.

அதற்கு முன் விளையாடிய போட்டிகள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

தடைக் காலப்பகுதியில் விளையாடப்பட்ட போட்டிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படவில்லை.
தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட அணி விளையாடிய போட்டிகள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பது யதார்த்தம்.
ஆனால் தடைக்கு முன்னைய காலப்பகுதியில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றன.

இலங்கை அணி மீது ஒருவேளை தடை செய்யப்பட்டால் (பட்டால்), தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் இலங்கை விளையாடும் போட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

முரளிதரன் தடைக்கு முன்னரே விளையாடி முடித்துவிட்டதால் அவரின் விக்கற்றுகள் அப்படியே இருக்கும்.

உதாரணத்திற்கு, Peter Pollock -
தடைக்காலப்பகுதி வரை விளையாடியிருக்கிறார்.
அவரது சாதனைகள், வரலாறுகள் அப்படியே இருக்கின்றன...

(முரளிதரன் எதிர்ப்பாளிகள் தொல்லை தாங்க முடியலப்பா...
எவ்வளவு கஷ்ரப்படுறாங்க...)

said...

Vinai,

etho ninaivil irunthu sonnen, sila answers sariya vanthiduchu :)

5 day test west indies ah irukkumo ena enakkum oru doubt irunthathu, but w.i 5 day test ada maruthathu ena munnar paditha ninaivu ,karanam appo w.i bada team, so maathi solli sothapiten!

About murali wkt records, kangon solvathum sari ena thondukirathu.

World leven match international test alla, 1 st class status mattume.

So wkt record remove seyvathaga irunthal mothama poidum.

said...

@வவ்வால்

சூப்பர் டெஸ்ட் பன்னாட்டு போட்டிதான்,

இலங்கைக்காக முரளி எடுத்தது 795 மட்டுமே..

உலக லெவனுக்கு ஆடி மீதி ஐந்து.

---

அங்கீகாரங்களை முன் தேதியிட்டும் மாற்ற முடியும், தென்னாப்பிரிக்க விலக்கு காலங்களில் இருந்த பொழுது உள்ளூர் ஆட்டங்கள் முதல் தரப்போட்டிகளாக இருந்தன. 93 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக அனைத்துப்போட்டிகளின் முதல் தர அங்கீகாரத்தை ரத்து செய்தது.

தற்பொழுது மீண்டும் அங்கீகாரம் பெற தென்னாப்பிரிக்கா முயற்சி செய்கிறது