Wednesday, July 28, 2010

கிரிக்கெட் - வினாடி வினா

வினாடி வினா வகையில் ஒரு பதிவைப்போடுவது எப்போதும் அலாதியானது. நீண்ட நாட்களாக பதிவுலகில் இவ்வகையிலான பதிவுகள் ஏதும் தென்படாததால் ஒரு “ஓவர்” கிரிக்கெட் க்விஸ் இங்கே !


1. இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக டெஸ்ட் ஆடியபொழுது இந்திய அணியின் தலைவர் சி.கே.நாயுடு. இந்திய அணி முதன்முதலாக ஒருநாள் போட்டியில் ஆடியபொழுது இந்திய அணியின் தலைவர் அஜீத் வடேகர். இப்பொழுது கேள்வி என்னவெனில் இந்தியா முதன் முதலாக டி20 பன்னாட்டுப்போட்டியில் ஆடியபொழுது இந்திய அணியின் தலைவர் யார்?

2. கிரிக்கெட்டில் நோ-பால் வீசப்படும்பொழுது ரன் - அவுட் வகையில் ஆட்டமிழந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். இது எல்லோருக்கும் தெரிந்ததே !! ஆனால்நோ - பால் வீசப்பட்டாலும் மேலும் மூன்று வகைகளில் ஒரு மட்டையாளரை ஆட்டமிழக்க விதிகளில் இடம் உண்டு. அவை யாவை?

3. முத்தையா முரளிதரன் பன்னாட்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எதிர்காலத்தில் ”இன ஒழிப்பு , இனவெறி மற்றும் போர்” குற்றங்களுக்காக இலங்கை (முன்பு தென்னாப்பிரிக்காவை போல) சர்வதேச ஆட்டங்களில் பங்கு பெறுவதில் இருந்து ஒதுக்கப்பட்டு, ஏற்கனவே பங்குபெற்ற டெஸ்ட் ஆட்டங்களின் அங்கீகாரமும் நீக்கப்பட்டால் முத்தையா முரளிதரன் மொத்தம் பன்னாட்டு டெஸ்ட் போட்டிகளில் எத்தனை விக்கெட்டுகள் எடுத்திருப்பார்?

4. தற்பொழுது டெஸ்ட் ஆட்டங்கள் 5 நாட்கள் ஆடப்படுகின்றன. இங்கிலாந்து அணி ”முடிவிலா - நாட்கட்டுப்பாடு இல்லாத” டெஸ்ட் ஆட்டங்களை ஆடிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி 3 நாள் ஆட்டமாக இங்கிலாந்துடன் ஆடியது. பின் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் வந்த பொழுது இந்தியா 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டங்களாக ஆடியது. மீண்டும் இந்தியா இங்கிலாந்து சென்ற பொழுது மூன்று நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர். 1947-48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. இந்த முன்னுரையுடன் கேள்வி என்னவெனில் இந்தியா யாருடன் தனது முதலாவது 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை ஆடியது? (ஓய்வு நாளைக் கணக்கில் எடுக்கவில்லை)

5. சின்ன நடக்க சாத்தியம் உள்ள ஒரு சுவாரசியமான கற்பனை, 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டம் , முதல் நாள் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்படுகிறது. இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் துவங்குகிறது, முதலில் மட்டையடித்த ”ஈ”அணி 369 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கிறது. எதிரணி "த" ஆட்டக்காரர்கள் 210 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கின்றனர். ”ஈ” அணியின் தலைவர் “த” அணியைத் தொடர்ந்து(பாலோ ஆன்) ஆடச்சொல்லுகிறார். ”த” அணியின் தலைவர் 159 ஓட்டங்கள் தானே வித்தியாசம், தொடர்ந்து ஆட மாட்டோம் என மறுக்கிறார். யார் சொல்லுவது சரி? ஏன்?

6. தீபக் சோதான் (ஆர்.எஸ்.சோதான்), ஹனுமந்த் சிங், ஏ.ஜி.கிருபால் சிங், சுரீந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சௌரப் கங்குலி , வீரேந்திர சேவக் இவர்களுக்கு இடையிலான ஒரு ஒற்றுமையான விசயம் என்ன? லாலா அமர்நாத், அப்பாஸ் அலி பெய்க், குண்டப்பா விஸ்வநாத் இந்த மூவர் செய்த சாதனைக்கும் மேற்சொன்னவர்கள் செய்த ஒரேமாதிரியான சாதனைக்கும் என்ன வித்தியாசம்?


23 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாக்களிச்சமா, கிளம்பனுமான்னு இருக்கனும் ஆமா

said...

1.எம் எஸ் டோணி

2. பந்தினை கையால் தொடல், ஹிட் விக்கெட் இன்னொன்று ஹிஹிஹி தெரியவில்லை

3. அப்பவும் 800 விக்கெட்டுகள் தான் முரளியின் சாதனை அப்படியே தான் இருக்கும்

4. பாகிஸ்தான்

5. த அணி சொல்வது தான் சரி
தங்கள் முதல் போட்டியில் சதமடித்தவர்கள்

said...

1. M.S. Dhoni sep 2007
2.Handled the ball, hit the ball twice,Obstructing the field
Run out.

said...

@வந்தியத் தேவன்

2வது கேள்விக்கு ஒரு விடை சரி.

கடைசிக் கேள்விக்கும் விடை சரி. அந்த வித்தியாசம் என்னவென்றும் சொல்லிவிடுங்களேன்

said...

@நிஹேவி
முதல் கேள்விக்கான விடை தவறு. இரண்டாவதுக்கான அனைத்தும் சரி. ஏனைய கேள்விகளையும் முயற்சி செய்யுங்கள்

said...

5. E captain team is right .because only 4 days left, minimum required runs needs 150 run on 4 day match , but T captain team trail by 159 runs

said...

yaenaku yaella answerum theriumae..so idhuvumm oru comment..ah aha ah ahah. spending time for this.. good to have these IQ

said...

தலைவா மற்ற கேள்வி எல்லாம் வெரி ஓல்ட், எனக்கு அவங்க பேரு கூட தெரியாது.
4. i have to search all muthaiya record, it takes long calculation
sorry

said...

@நிஹேவி

5 ஆம் கேள்விக்கும் விடை சரி தோழா

said...

4. 1948 against England

said...

Bradman scored 96 runs on that match

said...

1. மஹி தோனி - சரியா தலைவரே
2. Handling the ball, Obstructing the fielder மற்றும் Time out
3. அதே 800 விக்கெட்டுகள், ஏன்னா, நடந்து முடிஞ்ச அங்கீகரிக்கப்பட்ட ஆட்டங்களின் அங்கீகாரத்தை மாற்ற முடியாது
4. இங்கிலாந்து
5. ஒரு நாள் முழுதும் ஆட்டம் நடக்கலேன்னா 150 ரன் லீட் இருந்தாலே ஃபாலோ ஆன் செய்யச் சொல்லலாம்
6. முதல் லிஸ்ட்ல இருக்கறவங்க Debut Test இன் முதல் இன்னிங்க்ஸ்ல சதம் அடிச்சவங்க, ரெண்டாவது லிஸ்ட்ல
இருக்கறவங்க ரெண்டாவது இன்னிங்ஸ்ல சதம் அடிச்சவங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

Vinai,

dd sports quiz paarpingalo,

ans:
1)sehwag

2)handled the ball,hitting the ball twice,obstructing the fielder.

3)murali made his debut in 92, so he has to lose all test wkt credits.

4)against pakistan.

5)to enforce follow on in a 5 day test match,200 run deficit needed.(once venkatragavan used this rule to avoid follow on vs w.i)
for 4 day match 150 run deficit.

6)all scored "100"
run on debut.
Amarnath,ali baig,gr.viswanath scored "100" in second innings.

said...

@Vavval


1,2,5,6 - CORRECT


In 3rd Question there is a catch.Almost you got it right.

4. Wrong

said...

@Boston Sriram

1. Wrong

2. Last one wrong

5 and 6 CORRECT

3, 4 Wrong

said...

1. Virendar Sehwag.
2. Run out, Handling the ball, hit wicket.
3. Dont know.
4. England.
5. E is correct.
6. the first set scored debut centuries in 1st innings. the second set of people scored in their 2nd innings of debut match.

said...

//ஆனால்நோ - பால் வீசப்பட்டாலும் மேலும் மூன்று வகைகளில் ஒரு மட்டையாளரை ஆட்டமிழக்க விதிகளில் இடம் உண்டு. அவை யாவை?//

handling the ball
obstructing the fielding

said...

//யார் சொல்லுவது சரி? ஏன்? //

for every day lost by rain follow on reduces by 40 runs

said...

@Bruno

பாலோ ஆன் கேள்விக்கான விடை இன்னும் குறிப்பாக சொல்ல முடியுமா, 40 ரன்கள் என்பது தவறு.

நோ பாலில் ஆட்டமிழக்கும் முறைகளில் இரண்டு சொல்லிட்டீங்க , இன்னும் ஒன்னே ஒன்னு , அதையும் சொல்லிடுங்க

said...

@டோர்னாடோ

1 - சரி

இரண்டாவது விடையில் ஒன்று மட்டுமே சரி

6 சரி

5 வது விடைக்கான காரணமும் சொல்லுங்கள்

said...

கொஞ்சமா கிரிக்கெட் பார்க்கறதுண்டு!அதுக்காக இப்படிக் கும்மக் கூடாது!கொஸ்டின் பேப்பர் ரொம்ப ட்ஃப்!நான் ஃபெயில்!!

said...

1. சேவாக்
2. அ. ஸ்டம்பிங்
ஆ. பந்தை இரு முறை மட்டையால் அடித்தல்
இ. பந்தை கையால் தடுத்தல்
3. 5 விக்கெட் . இவை ICC World XI க்கான முரளி விளையாண்டு எடுத்தவை.
4. 1948 நவம்பர் வெஸ்ட் இன்டீஸ்
5. ஈ அணி தலைவர். பாலோ ஆன் ஆட முதல் இன்னிங்ஸில் எடுத்ததவை விட குறைந்தது 200 க்கு குறைவான ரன் எடுத்து ஆட்டமிழந்து இருக்க வேண்டும். ஆனால் நான்கு நாள் ஆட்டம் என்றால் 150 ரன் குறைவாக எடுத்து இருந்தாலே பாலோஆன் பணிக்கலாம்.
6. அனைவரும் தங்களது முதல் டெஸ்ட்டில் நூறு அடித்தவர்கள். குறிப்பிட்ட மூவர் முதல் டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் நூறு அடித்தனர்.

said...

@தமிழ்பிரியன்

ஸ்டம்பிங் தவிர அனைத்தும் சரி.

கலக்கிட்டீங்க போங்க