இஸபெல்லா - சிறுகதை
கருப்பு மனிதர்களை இவர்களுக்குப் பிடிக்கின்றதோ இல்லையோ, நேசப்பிராணிகளில் இந்த சுவிடீஷ் மக்கள் கருப்பு நிறத்தையே விரும்புகின்றனர். ஒருவேளை இப்படி இருக்கக்கூடும், கருப்பாக இருக்கும் விலங்குகளை நேசிப்பதால் கருப்பாக இருக்கும் மனிதர்களையும் விலங்குகள் போல நடத்துகின்றனரோ என அரசியல் மனஓட்டத்துடன் எனக்கு முன்னால் தனியாக நடந்துபோய் கொண்டிருந்த கருப்புக் குதிரையை வேடிக்கைப் பார்த்தபடியே அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கிச் செல்லும்பொழுதுதான் வழியில் ஒரு பெரிய கல்லறைத் தோட்டம் இருப்பதை கவனித்தேன்.
எடுத்தவுடன் பரந்த புல்வெளி, பின்னர் பச்சைச் செடிகளால் ஆன வேலி, சில மரப்பெஞ்சுகளுடன் ஏதோ ஒரு பூங்கா என இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த அளவிற்கு அதன் பரமாரிப்பு அத்தனை நேர்த்தியாக இருந்தது. ஊரில் சுடுகாட்டுப்பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகவே ஐந்து கிலோமீட்டர்கள் சுற்றிக்கொண்டுப்போனது காரண காரியத்தோடு நினைவுக்கு வந்து சென்றது. கல்லூரியை முடித்த பின்னர் மனிதனின் கற்பனைகளில் ஏதோ ஒரு அலாதியான ஈர்ப்பு ஏற்பட்டு விட தொடர்ந்து அதனால் தான் அடிக்கடி கடவுள்கள், பேய்கள் பற்றிய புத்தகங்களும் வாசித்து வருகின்றேன். கல்லறைக்குள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமில்லை. யாரும் இல்லாததனால் பயமும் இல்லை !!
ஒளித்து வைத்திருந்த தைரியத்தை உடன் கொண்டு ஒவ்வொரு கல்லறையையும் பார்த்தபடியே வடக்கு மூலை நோக்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மார்க்கஸ் ஸ்வென்ஸன் கல்லறை பளிங்குகளில் புத்தம் புதிதாய் பளபளாவென இருந்தது. தோற்றம் 15, ஜனவரி 1917 மரணம் சென்ற மாதம் 5 ஆம் தேதி. 90 களைக் கடந்து மனிதன் அனாயசமாக வாழ்ந்து இருக்கிறார். பக்கத்திலேயே லீனா ஸ்வென்ஸன், மனைவியாக இருக்கக்கூடும். மறைவு 2000. மார்க்கஸின் நீண்ட ஆயுளின் காரணம் புரிந்தது.
கல்லறைக்குள் வாழ்ந்து கொட்டிருப்பவர்களின் செல்வச் செழிப்பு கல்லறையின் வடிவமைப்பில் காட்டியது. பெரும்பாலானவர்கள் சராசரியாக எண்பது வயது வரை வாழ்ந்து இருக்கின்றனர். எத்தனை ஆட்டம்போட்டாலும் இது போன்று சில அடிகள் குழிக்குள்ளோ கைப்பிடி அளவு
சாம்பலிலோ வாழ்க்கை முடியப்போகின்றது என தத்துவார்த்தமாக யோசிக்க ஆரம்பித்து இருந்த மனதை 12 வயதின் குழந்தையின் கல்லறை மனதைக் கனப்படுத்தியது. ஏலின் கோண்ட்ராட்ஸன், தோற்றம் 1996, நவம்பர் 25 மறைவு 2008, செப்டம்பர் 23.
எல்லா மக்களுக்கும் நீண்ட வாழ்வைக் கொடுத்த இயற்கை குழந்தையை இப்படி அற்ப ஆயுளில் முடித்துவிட்டதே !! கல்லறைக்கு முன் குழந்தை பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள் , பொம்மைகள் இருந்தது மனதைப் பிசைந்தது. கண்கலங்க ஆரம்பித்து விடுவதற்கு முன்னால் நகர்ந்து விட நினைத்த பொழுது வெறும் சிலுவையுடன் வெறும் மணற்பரப்புடன் ஒரு கல்லறை இருந்தது. பாவம் ஏழையாக இருக்கக் கூடும். முன் பக்கமாக வந்து பார்த்தால் இஸபெல்லா என சிலுவையில் எழுதி இருந்தது. பெயரைத் தவிர வேறு எந்த விபரங்களும் இல்லை. இஸபெல்லா என்ற பெயரை இதற்கு முன்னால் கொலம்பஸின் வரலாற்றில் படித்து இருக்கின்றேன். ஆங்கிலத்தில் எலிசபெத் என்பார்களே என அந்த சிலுவையைப் பார்த்துக் கொண்டிருக்கும்ப் பொழுதே ஏதோ அமானுஷ்ய உணர்வு ஏற்பட்டு,
"உர்ஷக்தா" எனக்குரல் கேட்க திரும்பினேன். 14 அல்லது 15 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்னைச் சிலுவையை விட்டு தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் பிரார்த்தித்தாள்.சொன்னால் சிரிப்பீர்கள். இஸபெல்லா கல்லறைக்குப் பின்னால் இருக்கும்
அந்த ஏலினின் பேயாக இவள் இருக்கக்கூடுமோ என பயந்தேன். ஏலின் இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன !! பேய்களுக்குக் கூட வயது வளர்ச்சி உண்டா !!
என்ன நடந்தாலும் பரவாயில்லை என அவள் நகரும் வேளையில், "கேன் டு டா என் ஃபோட்டோ அவ் மெய்க்" என்னை ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்க முடியுமா என சுவிடீஷில் கேட்டுக்கொண்டேன்.
இஸபெல்லா சிலுவையில் தலையை வைத்து நான் அஞ்சலி செலுத்துவதைப்போல பல கோணங்களில் மகிழ்ச்சியாக எடுத்துக் கொடுத்தாள். எனக்கு விருப்பமான அளவில் புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் அவளின் பெயரைக் கேட்டேன், கேத்ரீன் என்றுச் சொல்லிவிட்டு வேகமாகச்
வடக்கு வாசலில் இருந்த காரை நோக்கிச் சென்றாள். நானும் அவளைப் பின் தொடர்ந்து அவள் காரில் ஏறும் வரை பார்த்தேன். நிச்சயமாக இவள் பேய் இல்லை. கார் சற்று தூரம் சென்றபின்னர் நான் முன்பு பார்த்தக் கருப்புக் குதிரையைக் கடக்கும்பொழுது நின்று பின்னர்
குதிரையும் காரும் இணையாகச் செல்லத் தொடங்கின.
மறுநாள் அலுவலகத் தோழர் மற்றும் அந்த நகர்ப்புற பகுதியிலேயே வசிப்பவருமான யூனாஸிடம் இந்தக் கல்லறைப்புகைப்படங்களைக் காட்டி இஸபெல்லா என்ற பெண்ணின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வந்த சிறுவயதுப் பெண்ணை பேய் என நினைத்து பயந்ததைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த பொழுது, யூனாஸ் இடைமறித்து
"சின்னத் திருத்தம், இஸபெல்லா பெண்மணி அல்ல, பெண் குதிரை " என்றார்
13 பின்னூட்டங்கள்/Comments:
மனித பேய்களில் இருந்து இப்போ குதிரை பேயா... :-)
என் வாழ்க்கையில் முதன் முதலில் குதிரை பேய் கதையை படித்தேன்.அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்.
awwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww,ennada kathai ivlav smoothaa poguthunu yoshiicaen , kaila sikunga selva oru naal annaikku iruku ,
ஆவ்வ், இது அநியாயம்.
சரிசரி, பேய் னு சொல்லியாச்சு. அதுல பாகுபாடு ஏன் :)
//எல்லா மக்களுக்கும் நீண்ட வாழ்வைக் கொடுத்த இயற்கை குழந்தையை இப்படி அற்ப ஆயுளில் முடித்துவிட்டதே !! கல்லறைக்கு முன் குழந்தை பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள் , பொம்மைகள் இருந்தது மனதைப் பிசைந்தது. //
நல்ல வரிகள்.
//"சின்னத் திருத்தம், இஸபெல்லா பெண்மணி அல்ல, பெண் குதிரை "//
பல வருடங்கள் எங்களுடன் பாசமாக இருந்துவிட்டு, இறந்து போன எங்கள் வீட்டு “மணி” யை( நாய் ) , எங்கள் தோட்டத்தில்தா புதைத்தோம், வீட்டு உறுப்பினரை இழந்த வேதனை எங்களிடம் இருந்தது. உங்கள் பதிவு மணியின் ஞாபகத்தை உண்டுபண்ணியது.
Super anna! What a twist! I never expected this...... very interesting! "Kuthirai pei" ennumbothu orupakkam bayamaagavum, innoru pakkam paavamaagavum irukku.
But oru chinna correction!
3rd paragraph la, "ovvoru kallaraigalai"yum apdinnu neenga kurippitiruppathai thaan solren. ovvoru innu sollumbothu, athu "orumai (singular)" appadi irukka, "kallaraigalai" innu "panmayay (plural)" kurippittirukkeenga. Please maathidunga.
"ovvoru pookalumey (autograph thiraipadam)" apdinnu thiru.Pa.Vijay eluthinathu thappendrabothum avarukku "National Award" kodukkappatthu oru nerudalai irunthathu(irukkirathu). Antha nyabagam vanthathu ippo.
Chinna thavaru thaan. but ungalai mathiri thiramayaana eluthalargal, tamil meethu aarvam ullavargal, intha mathiri vishayathil thappu panna koodathu.
ungalidam, minnanjalilo, yahoo messenger ilo ithai solli irukkalaam, aanaal, ithula sonna, naalu peru parthu "ovvoru pookal" paattai pathi avangalum ithey thaan nenachaangalaannu therinjukkalaamnu thaan inga type panren. thavarai irunthaal mannichirunga anna.
@Shruthi of Life
திருத்திவிட்டேன் !!
புகைப்பட உதவி - பிரபு துரைராஜ்
முன்பு அப்பாவி கணேசன்...
இப்போ பிரபு துரைராஜ் ...
நீங்க நடத்துங்க சார்
கல்லறையை பற்றி எழுதி விட்டு மற்றொரு விசயத்தை விட்டு விட்டீர்களே !!!
சென்ற வாரம் Magnusson உடன் பேசும் போது அடுத்த வாரம் தனது பாட்டியின் funeral க்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சொன்னார்...
நான் அவரிடம் சாரி என்று சொல்லி விட்டு அதெப்படி funeral க்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்ய முடியும் என்று கேட்டேன் ...
அதற்கு அவர் தனது பாட்டி 20 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும், இது வரை பாட்டியின் உடல் பத்திரமாக பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் சொன்னார் ...
அட பாவிங்களா...இத கூடவா freeze பண்ணி வைப்பீர்கள் என்று நினைத்து அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன் ...
wow.. nalla iruku... last line thriller ...
Hi Anna kadai romba nalla iruku. Ana sila neram idu kadaiya ila nejamawe nadandadanu kolapama iruku.Unga kadai ellam padichi padichi eppada adutha post warumbu pathindu iruka alauku na ungada fan agiten.
Best of luck anna!!
/யாரும் இல்லாததனால் பயமும் இல்லை !!/
யாரும் இல்லைன்னாதான் பயமே வரும்.அடுத்து என்ன மோகினிப் பிசாசுக் கதையா??
Post a Comment