அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் - ஒரு நிமிடக்கதை
சேமித்துவைக்கப்படாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் பொதுவாக எடுப்பதில்லை என்ற போதிலும், ஏதோ ஒரு உந்துதலில் இந்த அழைப்பை எடுத்துவிட்டேன். பரிச்சயமான குரல் "ஹல்லோ! கார்த்தி" என்றது.
அம்முவே தான். நான்கு வருடங்கள் நாற்பது நாட்கள் கழித்து கூப்பிடுகிறாள். வரலாற்றை கி.பி , கி.மு என பிரிப்பதுபோல என் வாழ்வையும் அம்முவிற்கு முன் அம்முவிற்கு பின் எனப்பிரித்தாலும் என் வாழ்வு இரண்டு பகுதிகளிலுமே அவளுடன் இருந்த அந்த ஒன்றரை வருடங்களைப்போல சுவாரசியமாக இருந்ததில்லை. வாழ்வின் பூரணத்துவத்தை கொஞ்சம் சுவைக்கக் கொடுத்துவிட்டு, கண்மூடி கண் திறக்கும்நேரத்தில் பறித்துக் கொண்டுச் சென்றவள் ஏன் திடீரென கூப்பிடுகிறாள் என்ற எண்ணத்துடன்,
"சொல்லுங்க மத்மசல்"
"மதமசல் கீர்த்தனா எல்லாம் மேடம் கீர்த்தனா ஆகி, குட்டி மத்மசல் கூட வந்தாச்சு" எனச் சிரித்தாள். அவளின் சிரிப்பை ரசிக்க தோணாததால், எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு நீ அதே மத்மசல் தான் என்பதையும் சொல்லவில்லை.
"குட்டி கீர்த்தனா எப்படி இருக்காங்க, உங்க மொன்சியர் எப்படி இருக்காரு"
"ரெண்டு பேருமே சூப்பர்டா, கார்த்தி இந்த வாரம்தான் குட்டிப்பாப்பாவை ஸ்கூல்ல சேர்த்தோம்"
அஞ்சலி எனக் குழந்தைக்குப் பெயர் வைத்திருப்பாளோ!காலங்கள் கடந்து போகையில்,ஆண்களுக்கு காதலின் பிம்பத்தைத் தாண்டி வர சிரமமாக இருக்கையில், முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது.
"இன்னும் சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கு போல, உன் வெப்சைட்ல பார்த்தேன்" இது நக்கலா, அக்கறையா என்ற ஆராய்ச்சிக்குள் போக விரும்பாமல்
"எந்த தேசம், எந்த ஊர், வாழ்க்கை எப்படி இருக்கு" பொத்தாம்பொதுவான கேள்விகளை ஏனையவர்களிடம் கேட்பது போல அம்முவிடமும் கேட்டேன்.
"டொரண்டா ல இருந்தோம், இப்போ இரண்டு வருஷமா மாண்ட்ரீல்ல இருக்கோம், உங்கிட்ட கத்துக்கிட்ட பிரெஞ்சு கொஞ்சம் உதவுது"
"எப்படி திடீர்னு என் ஞாபகம்" மிகுந்த ஆர்வத்துடனும் கொஞ்சம் தயக்கத்துடனும் கேட்டேன்.
"அவரு ஆபிஸ், மீட்டிங்னு பிசியா இருக்கிறாரு, குட்டிப்பாப்பாவும் ஸ்கூலுக்குப் போயிடுறா, இரண்டு நாளா வெறுமையா ஃபீல் பண்ணேன்,சின்ன வாய்ட் வந்துடுச்சோன்னு தோனுது, அதுதான் உன்னைக் கூப்பிட்டு பேசலாம்னு நினைச்சேன்"
என் வாழ்க்கையையே சூனியம் ஆக்கிவிட்டு போனபொழுது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கேட்காமல் வெறுமனே "ம்ம்" கொட்டினேன்.
"நீ அடிக்கடி சொல்லுவியே, தெரியாத தேவதைகளை விட தெரிந்த பிசாசுகள் மேல்,புது நட்புகளிடம் சில விசயங்களை ஷேர் பண்றதை விட, பழகின உன்கிட்ட பேசினா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்னு தோனுச்சு"
"அது அப்படி இல்லை, தெரியாத கடவுள்களைவிட, தெரிந்த தேவதைகள் மேல்"
"யா யா, ஐ னோ, பாசிடிவ் ஃபீல்க்காக நீ மாத்துன, ஒரிஜினல் நான் சொன்னதுதான்"
தொடர்ந்து அவளின் கணவனின் பராக்கிரமங்களைப் பறைசாற்றினாள். பி.எச்.டி முடித்து விட்டு வேலைப்பார்த்துக்கொண்டே போஸ்ட் டாக்டரல் படிப்பு எல்லாம்
படிக்கிறாராம். ஒரு வகையில் அவள் இப்படி சொல்லுவது கூட நல்லதற்குதான். கொஞ்சம் சுணக்கம் விழுந்து கொண்டிருக்கும் எனது பி.எச்.டி ஆராய்ச்சிப் படிப்புக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். வாழ்க்கையின் பல வெற்றிகளில் முக்கியமானது, காதலித்த பெண்ணின் கணவனை விட ஒரு படி அதிகம் ஜெயித்துக் காட்டுவதுதான். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல், கணவனைப் புகழ்ந்த பின்னர் புகுந்த வீட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டிருந்தாள். அவளின் கணவனின் தம்பி, நார்வேயில் இருக்கின்றானாம், வாய்ப்புக் கிடைக்கையில் என்னைப்போய் பார்க்கச் சொன்னாள். அவள் சொன்ன விசயங்களில் பாதியைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கிரிக்கெட் வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருதேன்.
"சரிடா கார்த்தி, அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன்" எனச் சொல்லிவிட்டு வைத்தாள். மறுநாள் அரை மணி நேரம் பேசினாள். கணவன் வரும் நேரத்திற்கு முன் வைத்துவிட்டாள். மூன்றாவது நாள் என்னை அழைக்கச் சொன்னாள். கொஞ்சம் அழுதாள், நிறைய சிரித்தாள். நான்காவது நாள் நான் போன் எடுக்கவில்லை. நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன். அம்முவிற்குப்பின்னான வாழ்க்கையில் முதல் தடவையாக மனது இலகுவானது.
31 பின்னூட்டங்கள்/Comments:
"வாழ்க்கையின் பல வெற்றிகளில் முக்கியமானது, காதலித்த பெண்ணின் கணவனை விட ஒரு படி அதிகம் ஜெயித்துக் காட்டுவதுதான்"
i like this line...
:)
//எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன். //
இது டாப்பு
நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன்." நல்லாருக்கு..
கதை நல்லாயிருக்கு
நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன்.
இதுதாங்க டாப்பு!!!
அம்மு உங்களிடம் தான் கணவன் உயர்ந்த நிலையில் இருப்பதையே காட்டி வெறுப்பேத்திருக்கிறாள்.
என்ன Ph,d அது சும்மா..
மீண்டும் மத்மசல் வார்த்தை கேட்டதில் ஒரு ஆன்ந்தம் என்னிடமும்.
பெண்கள் போலியானவர்கள் என்பதை காட்டும் கதை இது.
என் வாழ்க்கையையே சூனியம் ஆக்கிவிட்டு போனபொழுது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கேட்காமல் வெறுமனே "ம்ம்" கொட்டினேன்.
இந்த பசங்களே இப்படி தான் சார்..!!!
நிமிடத்துக்கு மேல போகுது, இன்னும் எடிட் பண்ணியிருக்கலாம்!
//முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது. //
இந்த பொம்பளை பிள்ளைங்களே இப்படி தான் பாஸ் .,,,
//நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன்.//
ரொம்ப அபூர்வமா இது மாதிரி ஆண்கள் இருக்கிறது உண்டு ., இது மாதிரி ஏதோ மனவருத்தத்தை பகிரும் பெண்ணை உபயோகம் செய்பவரே பலர் .,
கதை ரொம்ப நல்லாருக்கு செல்வகுமார்.
//வாழ்க்கையின் பல வெற்றிகளில் முக்கியமானது, காதலித்த பெண்ணின் கணவனை விட ஒரு படி அதிகம் ஜெயித்துக் காட்டுவதுதான்.//
Kalakkitinga......
இப்படி எல்லாரும் சிந்தித்தால் கலாசார சீரழிவும் குடும்பப்பிரச்சினைகளும் நிறையவே தவிர்க்கப்படும். நல்ல கதை, நல்ல முடிவு.
அருமை...
எனக்கு பிடித்த வரிகள்
//முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது. //
சில வாக்கியங்களை தவிர கதை கொஞ்சம் மொக்கை தான் சார்
"இந்த பொண்ணுங்களே இப்படி தான்
குத்துங்க எஜமான் குத்துங்க !!!!!!!!!!!!!!!!"
அருமை
கதை நல்லா இருக்கு...
//அவள் சொன்ன விசயங்களில் பாதியைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கிரிக்கெட் வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருதேன்.//
இதுவும் நல்லா இருக்கு... ;-)
//முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது. //
அவர்கள் சிரமப்பட்டுதான்.... சினேகமா பேசியிருப்பாங்க...
கதை அருமை.... புனைவுதானே?
நன்றாக இருந்தது!!!!
ஆஹா ! அருமையான கதை.பூங்கொத்து!
Nalla kadhai... thelivana padhivu.. romba anubavichu padichen..
கதை நன்றாக இருக்கிறது. புனைவு என்றால் அருமையான சிறுகதை.
ஆனால் எனக்கு சில முரண்பாடுகள் இருக்கின்றன. ஏமாற்றி விட்ட காதலியின் கணவனை விட ஒரு படி அதிகம் ஜெயித்துக்காட்டுவது என்பது தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
ஜெயிப்பது என்பது இதுவல்ல என்பது தான் என் எண்ணம். தொலைபேசி எண்ணை மாற்றினால் அவள் நல்ல மனைவியாக மாறிவிடுவாளா என்ன? இல்லை.
ஏமாற்றப்படுபவர்கள் பக்குபவப்பட்டு விடுவார்கள். ஏமாற்றுபவர்கள் மேலும் மேலும் ஏமாற்றப்படுவார்கள் என்பது தான் உண்மை.
காதல் என்பது வாழ்க்கையின் ஆரம்பப் படி நிலை. காதலை விட அன்பு பிரதானமானது என்று புரிந்து கொண்டால் காதல், வலி என்பதெல்லாம் சும்மா என்றாகி விடும்.
கடைசி பேரா மட்டுமே போதுமானது.
கடைசி பேராவை மட்டும் தனியாக படித்து பார்த்தாலே உங்கள் கதையின் முழு சாராம்சமும் இருக்கிறது.
Me also change the number
// நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன். அம்முவிற்குப்பின்னான வாழ்க்கையில் முதல் தடவையாக மனது இலகுவானது. //
இப்படி ஒரு கதை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. சூப்பர்..
//நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன். //
நல்ல காரியம் செய்தீர்கள்... ஆம் நல்ல மனைவியாக இருக்கட்டும்.
Great one! Refreshing to read this story.. I can feel letter by letter. dunno to put what smiley!! :) :(
அருமையான கதை என் வாழ்வில் கூட இப்படி ஒரு சம்பவம் உண்டு . ஆனால் நான் கைபேசி எண்ணை மாற்றவில்லை உன்னை திருமணம் செய்திருந்தால் என் வாழக்கை இவ்வளவு சந்தோசமாக இருந்திருக்காது என்றேன் அன்றிலிருந்து இன்றுவரை அழைப்பு இல்லை. பெண்கள் எப்பவுமே இப்படித்தான் ........... டி.ஆர். பாடல் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது. விளக்கு போல் எரிவது பெண்களே விட்டில் பூச்சியாய் விழுவது ஆண்களே.
கதை நல்லாயிருக்கு.
வால் / விசா சொல்வது போல எடிட் பண்ணலாம்.
//முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது. //
திருமணத்துக்கு முன்பும் பின்பும் கூட, அது நட்பு இல்லை.
//"சரிடா கார்த்தி, அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன்" எனச் சொல்லிவிட்டு வைத்தாள்.//
:)
கதையை இதோடு முடித்திருக்கலாம்..
செல்வா உங்கள் கதைகளை முரட்டுத்தனமாக விமர்சிப்பவன், எதையாவது நோனாவட்டம் சொல்லிக்கொண்டே இருப்பேன், ஸ்டார்ட்டிங் சரியில்லை, ஃபினிஷிங் இல்லை, டெம்ப்ளேட் கதை என்று... இந்த கதைக்கருவும் அரதப்பழசு தான் ஆனால் கதை ஆரம்பிச்சதிலிருந்து முடிக்கற வரை கதைப்போன வேகம், கூட குறைச்சல் இல்லாமல் சரியான அளவில் எழுதப்பட்ட கதை, அந்த டயலாக்கில் இருக்கும் ஷார்ப்னஸ் மற்றும் ஒரிஜினாலிட்டி இவையெல்லாம் சேர்ந்து இந்த கதை உங்கள் சிறுகதை படைப்புகளில் முக்கியமானதாக்குகின்றது...
சிறப்பு சிறப்பு...
Post a Comment