Tuesday, May 18, 2010

Do not say yes when you have to say no - சிறுகதை

கடவுள், பேய்களுக்கு அடுத்தபடியா சுவாரசியமானது தற்கொலை !!கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் முதலிரண்டைப் போல அல்லாமல் தற்கொலையை பரிட்சித்துப் பார்க்க முடியும். என்னுடைய இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடைவெளி இதோ இன்னும் சில அடிகள்தான்,அப்படியே இங்கே இருந்து பால்டிக் கடலில் குதித்தால் சில மூச்சுத்திணறல்களுக்குப் பின்னர் இந்த வேதனையில் இருந்த்து ஒரேயடியாகத் தப்பித்துவிடலாம். அப்படி எனக்கு என்ன வேதனை என கேட்கிறீர்களா? அட கழுதை கெட்டால் குட்டிச்சுவர், காதல் தோல்வி தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஞானம் ஒரே இரவில் வந்து, அடுத்த ஜென்மத்தில் சேர்வோம் என வழக்கமான வசனத்தை, அம்மு அழுதுகொண்டே ஒப்பித்துவிட்டு தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டாள்.

அம்மு இல்லாமல் வாழ முடியாது என்பற்காக இந்த முடிவு அல்ல, அவளின்றி இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்னுள் இருக்கும் வன்முறையாளன் விசுவரூபம் எடுக்கின்றான். என்னுடைய தியாக உள்ளத்தை சமாதனப்படுத்துவதற்காக, கல்யாணத்திற்கு முன் அவளுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விட வேண்டும். அவளுக்குப் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை அம்முவைக் கைவிட்டுவிட வேண்டும், இப்படியாக ஒரு விபரீதக் கற்பனை. அடுத்து எதிர்காலத்தில் அவள் விதவையாகி குழந்தையுடன் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இப்படி எல்லோருக்குமே தோன்றும் என நினைக்கிறீர்களா !! மாபியா ரேஞ்சிற்கு ஒன்று யோசித்தேன், சொன்னால் என் மேல் பரிதாபப்பட மாட்டீர்கள், நீங்களே வந்து என்னைத் தள்ளிவிட்டு விடுவீர்கள். கூலிப்படையை வைத்து அம்முவின் குடும்பத்தையே ஒழித்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணம் குரூரத்தின் உச்சத்தைத் தொட்டவுடன் எடுத்த முடிவு தான் இது.

அட, சாகப்போற நேரத்துல என்ன இது ஒரு எஸ்.எம்.எஸ், அம்முவாக இருக்குமோ !!இல்லை அவளிடம் இருந்து வரவில்லை. இந்த எஸ்.எம்.எஸ் பத்தி கடைசியாச் சொல்றேன். சரி என் கதையைக் கேளுங்க. தோனி பத்து சிக்சர்கள் அடித்து இலங்கையை ஓட ஓட விரட்டுன ஆட்டம் ஞாபகம் இருக்கா, அன்றைக்குத்தான் திருப்பரங்குன்றம் சன்னதித் தெருவில், வைரமுத்துவின் கவிதைப் போல ஆறு டிகிரியில் அவள் தலைச் சாய்த்து செய்த புன்னகையில் மெல்ல படிப்பிலும் வாழ்விலும் எழ ஆரம்பித்த நான், வெறும் நட்போடு நிறுத்தி இருந்தால் இந்நேரம் மெரினா கடற்கரையில் என் முறைப்பெண்ணை மனைவியாக்கி சுண்டல் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பேன்.


"நோ" என்பதற்குப் பதிலா "எஸ்" னு சொல்லுவது இப்படித்தான் நிர்க்கதியா மூலையில போய் உட்கார வைத்துவிடும். எனது நான்காம் ஆண்டு தொடக்கத்தில்,

"கார்த்தி, நீ என் அத்திம்பேர் மாதிரி பாரின்ல பி.எச்.டி பண்ணனும், அதுக்கு முதல்ல நீ மாஸ்டர்ஸ் படிக்கனும்"

"நான் படிச்சி என்னப் பண்ணப்போறேன், கேம்பஸ் ல வேலைக் கிடைச்சிடுச்சின்னா, ஜம்முன்னு செட்டிலாயிடலாம்னு இருக்கேன்"

"இல்லடா, அப்போதான் என் வீட்டுல பேசமுடியும்"

"நீ எதுக்காக வீட்டுல பேசனும்" சொல்லி முடிப்பதற்குள் பொறித் தட்டியது. பெண்கள் தங்களைக் காதலைச் சொல்லும் அழகே அழகு. முன்ன ஒரு தடவை 'அடுத்த ஜென்மத்தில உன்னோட அத்தைப் பொண்ணா பொறக்கனும்'அம்மு சொல்லியபொழுது ஏதோ விளையாட்டாகச் சொல்கிறாள் என்றுதான் நினைத்தேன். மீசையை முறுக்கும் அப்பா, மாநிறத்திற்கும் சற்றுக்குறைவான நிறத்தில் இருக்கும் முறைப்பெண் எலலாரும் நினைவுக்கு வந்தனர்.

என் கல்லூரியின் கதாநாயகியே என்னிடம் வந்து கேட்கும்பொழுது என்ன செய்வது, "ஆமாம், அப்போதான் வீட்டுல ஒத்துக்குவாங்க, படிப்பு பெரிய ஈக்வலைசர்".

ஜீ.ஆர்.இ, டோஃபல், ஐஈஎல்டிஎஸ் தேர்வுகளுக்காக ஹாக்கி, கலாச்சார விழாக்கள், கவிதைக் கிறுக்கல்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. 60
விழுக்காடுகளில் இருந்த நான், சொன்னால் நம்ப மாட்டீர்கள் கடைசி இரண்டு செமஸ்டர்களில் 85 விழுக்காடுகளைத் தொட்டேன். சுவீடன் பல்கலைகழகம் கூட அம்முவின் தேர்வுதான். அவளுக்காக என்னுடைய சுயசிந்தனையை சமரசம் செய்து கொண்டு, அவள் எனக்காக எல்லாமுமாக இருப்பாள் என நம்பிக்கொண்டிருந்தபொழுது, இப்படி நட்டாற்றில் விட்டுவிட்டுப் போனால் நடுக்கடல் தானே முடிவு. அவள் கடைசியாக எனக்கு அனுப்பி இருந்த ஆங்கில மின்னஞ்சலின் தமிழாக்கம் இதுதான்

"திக்கற்ற காட்டில் இருந்த உன்னை, உன்னை வழிநடத்தி இத்தனைத்தூரம் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன், இதோ உன் படிப்பு இனிமேல் விளக்காக
வழிகாட்டட்டும். என்னைவிட பாக்கியசாலி ஒருத்தி வந்து உன்னை வழிநடத்திச் செல்வாள்.உன்னை நல்லதோர் வீணையாக்கி விட்டேன், இனி உன் பொறுப்பு"

பொறுப்பாம் பொறுப்பு !!வெறும் பானையில் விளக்கெண்ணெய் கூட வாராது. நெருப்புத்திரியும் எண்ணெயும் இல்லாமல், வெறும் தூண்டுகோலினால் விளக்கு எரியாது. இவளின் சுயலாபத்திற்கு என்னைத் தீண்டி, தூண்டிவிட்டு நல்லதோர் வீணையாக்கி அதை நடுமண்டையில் அடித்து உடைத்து விட்டுப் போய்விட்டாள். அவ்வளவுதான் என் கதை முடியப்போகுது. இறந்துப்போனவர்களில் நல்லவர்கள் சாமியாகவும் கெட்டவர்கள் பேயாகவும் மாறிடுவாங்கன்னு எங்க பாட்டி ஒரு கதை சொல்லி இருக்காங்க. நான் பேயாகத்தான் ஆவேன். பாண்டிச்சேரி போய் அவளைப் பயமுறுத்தனும்.

பார்த்துக் கொண்டே இருங்க , குதிக்கப் போறேன். என், த்வோ, த்ரே, ஃபியரா... அடச்சே இன்னொரு எஸ்.எம்.எஸ்

"ப்ளீஸ் டோண்ட் டு எனிதிங் சில்லி, நுவ்வு வொஸ்தானெண்டே நேனு ஒத்தண்டானா"

தெலுங்கை அப்படியே ஆங்கிலத்தில் வாசுகி அனுப்பித்து
இருந்தாள்.படித்து முடிப்பதற்குள் மற்றுமொரு எஸ்.எம்.எஸ்

"எவரு வெல்லிப்போயினா, நேனு நா ஜீவிதம் நீதொனி உண்டானு, ஐ லவ் யூ" .

வாசுகி ரெட்டி விசாகப்பட்டினத்து பொண்ணு, என் கூடத்தான் படிக்கிறாள். அம்முவிற்குப் பின் தன்னைத் தான் பிடிக்க வேண்டும் என சமீபகாலமாக என் பின்னாடியே வருபவள், என் மரணவாக்குமூலத்தை கைப்பட ஆங்கிலத்தில் எழுதி சரியாக 4 மணிக்குப் படி என அவளிடம் தான் கொடுத்து வந்திருந்தேன். அவசரக்குடுக்கை முன்னமே படித்துவிட்டு இதோ கைபேசியில் அழைக்கிறாள். மரணப்படுக்கையில் உன் நினைவுகள் மறக்காது என அல்லவா அம்முவிடம் சொல்லி இருந்தேன். ஆனால் அம்முவிட்ட இடத்தில் வாசுகியைத் தொடர வைக்கலாமா என சபலம் அல்லவா தட்டுகிறது. வாசுகியின் காதலுக்கு சம்மதம் சொல்லிடவா !! சம்மதம் சொன்னால் இன்றைக்கு பால்டிக் கடல் முனையில் நிற்பது போல, நாளைக்கு வங்காள விரிகுடாவில் நிற்க வாய்ப்புகள் அதிகமே. அட அதை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். அப்படி ஒன்றுநடந்தால், அங்கேயும் வாங்க, இதைவிட சுவாரசியாமாக வாசுகி கதையையும் சொல்றேன்!! இப்போ என் வாசுகிகிட்ட பேசனும், நீங்க கிளம்புங்க.
13 பின்னூட்டங்கள்/Comments:

said...

கதையாயிருக்கும் பட்சத்தில் கலக்கல் கதை!

said...

கதை ரொம்ப நல்லா இருக்கு :)

தலைப்பு கொஞ்சம் டிங்கரிங் செஞ்சு இருக்கலாமோனு தோணுது.

said...

செம்ம நகைச்சுவை!!!!!!!!!!!!!!
ஒரு காமெடி படம் எடுக்கலாம் போல இருந்தது.

said...

அருமையா இருந்துச்சு..
ஒரு மேனேச்மெண்ட் வாசகத்துக்கு இப்படியொரு விளக்கம் தர முடியுமுனு நான் நினைக்கலை...

நன்று...

said...

asathal ,cant help laughing, ponnunga love solrathu break pandrathu ellam alaghu than

said...

தலைவா நீங்க படிக்கும்போதும் campus interview இருந்ததா? எந்த college ?
உங்களுக்கு அத்தை பொண்ணு வேற இருக்கா? சொல்லவே இல்ல!!!
4 வருசத்தக்கு , ஒரு பொண்ணு மாட்டிடுது உங்களுக்கு. எப்படி தலைவா அது?
திருப்பரங்குன்றத்தில் எப்ப தலைவா 6 degreeவந்துச்சு,
அம்மு சில கதைகளுக்கு முன் கூட வேலை செய்ற பொண்ணு சொன்னீங்க,உங்க கல்லூரி ராஜகுமாரியா எப்ப ஆனாங்க!!!

said...

டேய் , அப்ப இந்த தடவையும் நீ சாகலயா????
மகனே இன்னொரு தடவ சாகறேன்னு மேல போறது கடலுக்கு போறது அப்புறம் பதிவு போட்டு ஏய்க்கறது,எதுவும் இருக்க கூடாது , மீ தி டேல்லிங்!!!

said...

இந்தக் கதையை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்

said...

//இப்போ என் வாசுகிகிட்ட பேசனும், நீங்க கிளம்புங்க.
//

பாத்து கடலை போடுங்க

said...

"நோ என்பதற்குப் பதிலா எஸ் னு சொல்லுவது இப்படித்தான் நிர்க்கதியா மூலையில போய் உட்கார வைத்துவிடும்"
பாத்து வார்த்தையை யூஸ் பண்ணுங்க.என்ன தப்பு பண்ணுனயோ அந்த புள்ள(அம்மு) உன்ன கழட்டி உட்டுட்டு.இந்த புள்ள(வாசுகி)யாவது நல்லாயிருக்கட்டும்.அம்மா அப்பாகிட்ட சாட மாடயா சொல்லி கல்யாணத்த சீக்கிரமா முடிக்க வழிய பாரு.என்ன நாஞ்சொல்றது வெளங்குதா?.

said...

idhu kadai ha, illa yarachum unmailiyae pick up ayacha...
:)

said...

மீ த கிளம்பிங், யூ த டாக்கிங் டு வாசுகி.

கதை நல்லா இருக்கு...

//சம்மதம் சொன்னால் இன்றைக்கு பால்டிக் கடல் முனையில் நிற்பது போல, நாளைக்கு வங்காள விரிகுடாவில் நிற்க வாய்ப்புகள் அதிகமே.//

;-)

said...

"சம்மதம் சொன்னால் இன்றைக்கு பால்டிக் கடல் முனையில் நிற்பது போல, நாளைக்கு வங்காள விரிகுடாவில் நிற்க வாய்ப்புகள் அதிகமே"

- Writer's punch