Saturday, January 10, 2009

முத்தம் - ஒரு நிமிடக்கதை

"கைபேசி மீது எனக்குக் கோபம்
நீ கொடுக்கும் முத்தத்தை எடுத்துக்கொண்டு
சத்தத்தை மட்டும் எனக்கு அனுப்புவதால்
"

என் நண்பன் எனக்கு அனுப்பி இருந்த கவிதையை வாசித்துக்கொண்டிருந்த பொழுது,

"டேய் கார்த்தி, கார்ல்ஸ்க்ரோனாவுக்கு நீ கிளம்பலியா!!! மச்சா கிளம்புடா, நியு இயர் அன்னக்கிதான்டா சுவீடன்ல கொண்டாட்டமா இருக்கும், செம பிகர்ஸுங்க ,ஓவ்வொருத்தியும் சும்மா பத்து நமீதாவுக்கு ஈகுவலா இருப்பாளுங்க.. சும்மா தகதகன்னு " கிருஷ்ணமூர்த்தி குளிரைத்தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு என்னையும் கிளம்ப சொன்னான்.

மடிக்கணினியில் நேரத்தைப் பார்த்தேன். சுவீடன் நேரம் 8, இந்திய நேரம் 12.30 யைக் காட்டியது. கீர்த்தனாவைக் கூப்பிட்டு வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் கூப்பிட முடியாது, அவள் வீட்டில் பெற்றோருடன் இருக்கும்பொழுது நான் அவளைத் தொடர்பு கொள்ளக்கூடாது, குறுந்தகவல் கூட அனுப்பக்கூடாது என்பது அவளின் உத்தரவு. புதுவருட ஆரம்பம் என்பதால் வீட்டில் இருந்தாலும் எப்படியாவது கூப்பிடுகிறேன் என ஊருக்குப்போகும் முன் உறுதி அளித்திருந்ததால் எங்கேயும் வெளியேப் போகவேண்டாம் வீட்டிலெயே இருக்கலாம் என்ற முடிவை சுவிடீஷ் பெண்களைப் பற்றிய விவரணையினால் மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி.

"போன வருஷம் , நான் நாலு சுவீடிஷ் பிகர்களை கிஸ் அடிச்சேன்... " அதற்குப்பின் அவன் சொன்னவற்றை நான் காதில் வாங்கிக் கொள்ள விருப்பம் இல்லை.

"டேய் போறதுன்னா போய் தொலைடா!!! உயிரை வாங்காதே" எனக்கு ஒரு பயம், எங்கே அவன் விவரணையினால் மனம் மாறிப்போய்விடுமோ என.

"மச்சான், வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்த மாதிரி சான்ஸ் கிடைக்கும், மேக்ஸிமம் எஞ்சாய் பண்ணனும்"

போகலாமா!! போகலாம் என எனக்குள் இருந்த என்னுடைய எதிர்மறை பாத்திரம் என்னை உசுப்பியது. ஆனால் ஒருவேளை கீர்த்தனா அழைத்தால், திரும்ப அழைக்க கைபேசியில் போதிய அளவு இருப்பு இல்லையே.,, குழப்பமாக இருந்தது. கீர்த்தனாவின் பாந்தமான முகம் நினைவுக்கு வர, கிருஷணமூர்த்தி வர்ணித்து இருந்த சுவிடீஷ் பெண்களின் உருவம் காணாமல் போனது.

கிருஷணமூர்த்தி போனது, அறைக்கதவைத் தாளிட்டு தூங்கிப்போனேன். "மழைக்கால மேகமொன்று" எனப்பாடல் காதில் இரண்டாவது முறை ஒலிப்பது போல இருந்ததும் எழுந்து கைபேசியைப் பார்த்தேன். கீர்த்தனா 5 முறை அழைத்திருக்கிறாள். திரும்ப அழைத்தபோது, எனக்கான வாழ்த்துகளைக் கொடுத்துவிட்டு கைபேசியை வைக்கும் முன் "கார்த்தி ஒரு நிமிஷம்" என சொல்லி கைபெசியில் முத்தம் கொடுத்தாள். சத்தம் மட்டும் தான் எனக்கு வந்தது. ஆனால் அந்த சத்தத்தின் ஆனந்தம் முத்தத்தை விட பேரானந்தமாகத் தோன்றியது.

மறுநாள் கிருஷ்ணமூர்த்தி தான் எத்தனை சுவிடீஷ் பெண்களை முத்தமிட்டான் விவரித்துக் கொண்டிருந்தது எனக்குப் பெரிய விசயமாகப் படவில்லை.

"வெறும் சத்தமாக வந்தால் கூட
உன் முத்தத்தை ஏந்தி வருவதால்
கைபேசியையும் பிடிக்கும்"

நண்பனின் கவிதைக்குப் பதில் கவிதையை அனுப்பி வைத்தேன்.

16 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாழ்த்துக்கள் நணபா!

கதை அருமை.

said...

இது தான் காதலுக்கு மரியாதையோ!!! அருமையான கதை நண்பரே
படித்தேன், ரசித்தேன்,.........,
காதலை காதலித்தேன்.
வாழ்த்துக்கள் வணக்கம்

said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் கதை...நல்லாருக்கு வினையூக்கி...
அன்புடன் அருணா

said...

மிக அருமையான கதை...
வாழ்த்துக்கள்...!

Anonymous said...

நல்ல காதல் தாங்க........

said...

அருமை :)

said...

செல்வா... அருமை...

காதலினால் மொழி அழகு,
மொழியினால் காதல் அழகு..

said...

உங்க கற்பனைக்கு உடம்பெல்லாம் மச்சம்... எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ?

"கவிதை என்னோடது இல்லப்பா!"
இக்கவிதை உங்க்ள் கதைக்கு சமர்ப்பணம்...

http://karuveli.blogspot.com/2008/07/blog-post_27.html

said...

//போகலாமா!! போகலாம் என எனக்குள் இருந்த என்னுடைய எதிர்மறை பாத்திரம் என்னை உசுப்பியது.//
கிகிகிகி

said...

வாவ்....எப்படிங்க இப்படிலாம்! கவிதையும் சரி கதையும் சரி...மெய் சிலிர்க்க வைக்கின்றன:)

said...

வினையூக்கி, வழக்கம் போல ஒரு திகில் முடிவை எதிர்ப்பார்த்து படிச்சதுல் கொஞ்சம் ஏமாற்றம் :)

கதை கவிதை ரெண்டு சூப்பரோ சூப்பர்.. :)

இனிய தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

said...

Atlast I am started reading your stories, it is really nice. You have a powerful writing in your hands.

best of lunch sorry best of luck..(this is the lunch time for me)

how to write comments in tamil?

said...

:-) நல்லாருக்கு!!

said...

நல்லாருக்கு வினையூக்கி...

அன்புடன்
வெங்கடேஷ்
http://www.thiratti.com

said...

நல்ல இருக்குங்க..

said...

கைபேசி முத்தம் மாதிரி இருந்துச்சுங்க உங்க கதை..